கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

ஈசனுக்கு மறக்குமா அவள் தாட்சாயினி என்பது

கவிதைகளை என்னால் உரைநடை போல் தொடர்ச்சியாய் படிக்க முடிந்ததில்லை .பொதுவாய் கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் தொடர்ச்சியாய் ஒரே பேசு பொருளைக் கொள்ளாம்ல் இருப்பதால் ஒரு கவிதையை முடித்து விட்டு அடுத்தப் பக்கம் வரும் போது முந்தைய கவிதையின் ஹாங் ஓவரிலேயே என் சிந்தனைகள் தறி கெட்டு ஓடிவிடும்.

கவிதை படிப்பதும் புரிந்து கொள்வதும் என்க்குச் சிரமமே .
பல நாள் வாசிப்பில் சில கவிதைகள் பிடிக்கும் புரியும் .கவிதை வாசிப்பு சிரமாவதற்கு காரணமே பேசு பொருள் பற்றிய கவனம் இல்லாததும் ,கவிஞர்களுக்கே உரிய நுண்ணிய உணர்வை புரிந்து கொள்ளாததுமே என் குறைக்குக் காரணம் .கவிஞரின் உணர்வை உணர்வதும் நல்ல வாசிப்பே ,அல்லது கவிதை நமக்கு சில தரிசனங்களை விட்டுச் செல்வது உயர்ந்த வாசிப்பு .ஜெயமோகனின் சொற்களில் எழுத்தாளர் எழுதிய போது உணர்ந்த "மன எழுச்சியை" வாசிப்பவனும் உணர முடிவது எழுத்தாளனின் வெற்றி .ஆனால் என்னைப் போன்ற அரைகுறைகளின் வாசிப்புன் குறைகளும் பெரும்பாலும் ஒரு எழுத்தாளனின் எழுத்தை புரிந்து கொள்ளாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் .

அவ்வாறாக நான் அவ்வம்போது படித்து திரும்ப படித்த புத்தகம் கனிமொழியின் அகத்திணை .அவற்றில் சில என்னைக் கவர்ந்தாக இருந்தது அதைப் பற்றி எழுதத் தொடங்கிய இப்பதிவும் என் வாதிப்பின் நீளம் போல் அதுவும் காத்துக் கிடந்தது சில நாளாய்.

கனிமொழியின் கருவறை வாசனயையும் படித்து இருக்கிறேன் ,சில கவிதைகள் பிடித்து இருந்தன .கனிமொழி அரசியல் காரணங்களால் பரவலாய் அறியப் பட்டிருந்தாலும் அவரின் செயல் பாடுகள் அவரை ஒரு சுய சிந்தனை உள்ளவராக காட்டியிருக்கிறது ,இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவரின் கலைஞர் மகள் என்பது அவர் வைக்க வேண்டிய விமர்சனங்களை வைக்க முடியாமலேப் போகும்,அவரின் செயல்களும் சொற்களும் கூர்மையானக் காதுகளால் கவனிக்கப் படும் ,இவரின் சில அவதானிப்புகள் தந்தையை சங்கடப் படுத்தக் கூடும் என்பதால் அடக்கி வாசிக்கிறார் என நினைக்கிறேன் .

கனிமொழியின் கவிதை கலைஞரின் கவிதையில் இருந்து மாறுபட்டது ,கலைஞர் எழுதுவது கவிதையா என்பது பற்றி எனக்கு மாற்று கருத்துக்கள் உண்டு எனினும் அவர் எழுதிய சில ஆக்கங்களை ரசித்து இருக்கிறேன் ,அவர் இன்னமும் சங்ககாலத்தில் தான் இருக்கிறார் .சங்க காலப் பாடல்களை வசனக் கவிதையாக மாற்றுவது மட்டுமே நல்லக் கவிதை ஆகமுடியாது.அந்த விசயத்தில் மகளின் கவிதைகள் சமகால உணர்வுகளையும்,சிரமத்தையும் ,விமர்சனங்களையும் விட்டுச் செல்கிறது .அவர் யாரன்று அறியாமல் படித்தாலும் தாக்கத்தை உண்டாக்க வல்லது ,

அம்மா என்னும் கவிதையில்

..
நிற்காது ஓடிக்கொண்டு
அவ்வம்ப்போது நிறைய அன்ப் செலுத்தும்
என் அம்மாவைப் பற்றி
எந்தக் கதைகளும் சொல்லுவதே இல்லை

என்பது ஊடக அம்மாக்களுக்கும் நிஜங்களுக்கும் ஆன இடைவளியைச் சொல்லுகிறார் ,மொழி நடையும் அருமை

அடுத்து

....
பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் நேசத்த
ஏன் ஒளித்துவைத்திருந்தாய்
இத்தனைக் காலமாய் ?

இந்த கடைசி வரிகளே ஒரு அப்பா மகள் உறவுகளைச் சொல்லும் ,நீண்ட கவிதையில் இதுவேப் போதுமானது விசயத்தைச் சொல்ல .கவிதைக்கே உரிய சொல்லாடல் உரைநடையில் இதயே நான் சொல்ல வெண்டுமானல் இரண்டு பக்கம் எழத வேண்டும் (ஜெயமோகனுக்கு ஒரு நாவல் )

பாவ விமோசந்த்திற்கு
ராமனுக்குக் காத்திருக்காதே

அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்
ஆழ்ந்திருக்கிறான்
சீசரின் மனைவி என்பதாலேயே
அவள் கறைகளின்
நிழல் கூடப் படியாதவளாய்
இருந்தாக வேண்டும்

இராவணன் கற்புக்கும்
இவளே பொறுப்பு


ஆம் அப்படித்தானே இருக்கிறோம் ஆண்கள் ,ராவணனாய் இருந்தாலும் சீதைகளைத்தானே தேடிக் கொண்டு இருக்கிறோம் .கள்ளக்காதல் கதைகளில் எத்தனை சீதைகளோ ?

...
என் உடையும் முகமும்
உங்கள் ஒப்புதலுக்காகக்
க்கத்திருக்கின்றன
..
என் பெயரென்ன
யாராவது
முடிவுசெய்து சொல்லுங்கள்
சில யுகங்களாய்க்
காத்திருக்கிறேன்

உடையும் நடையும் மாறுவாதினாலேயே நாம் கலாச்சாரம் நாசமாகிவிட்டதாய் கூச்சம் போடுகின்ற நாம் ,வேட்டியில் இருந்து வந்த கதையை நைசாய் மறந்து விடுவோம்

..
எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை

என்றக் கவிதையில் வைத்ததருக்கும் விமர்சனம் ஒரு விவாதமாய் மாறியிருக்க வேண்டும், நம் சமூகத்தில் ஒரு வெகுஜன விவாதமாய் நடப்பது ஆகாதக் காரியம்.அறிவு ஜீவிகள் சொல்வதில் யாருக்கும் அக்கறையில்லை அதனால் இன்னும் இருவது வருசம் போனாலும் இதே கவிதையை வேறு யாரோ எழுதுவர் :-(

புதியவளாய்ப் பிறந்தாள் பார்வதி
ஒற்றைக்காலில் ஓராயிரம் வருடம் தவமிருந்தால்
மறுபடியும் சிவபத்தினி

பாவம்
முக்காலும் உணர்ந்த
ஈசனுக்கு மறக்குமா
அவள் தாட்சாயினி
என்பது

எத்தனை பெண்கள் சிவபத்தினிக்ளாய் மாறி சுயம் அழித்தலை சுகம் காணும் சிவனுக்காய் அவன் பிள்ளைகளுக்காய் செய்கின்றனர் .அவளுக்கே அவள் தாட்சாயினி என்பது தெரியுமா என்பது சந்தேகமே !


அடுக்குமாடியில்
பிள்ளியார் கரைக்க இடமர்ருக்
க்டலுக்கு ஓடும்போது
பூதாகாரமாய் வாளேந்திய
பிள்ளையார்கள் பயமுறுத்துககறார்கள்
என் மகனை

யாதார்த்தம் ,அடுக்கு மாடி வாழ்வின் இழப்பையும் கூறி பிள்ளையார் சதுர்த்தி என்னும் கொண்டாட்டம் அரசியலாவாதையும் குத்தி செல்கிறார் .

வெளிறிய சடலங்களாய்ச்
சமைந்து வெறிக்கின்றன
அடுக்கு மாடி வீடுகள்

காற்றில் அலையும்
துணிகளையும்
எப்போதாவது கூச்சலிடும்
குழ்ந்தைகளையும் தவிர
சந்தடி ஏது ?

கிராமத்தில் வளர்ந்த என்னைப் போன்றோர்க்கு புரியும் அவஸ்தை .கவிமொழி என்பதே ஆராதிக்க கூடியதாகத் தான் இருக்கிறது. நிஜமாய் பொறாமையாய்க் கூட இருக்கிறது எப்படி இந்த கவிதைகளை எழழதுகிறார்கள் என்று .

சுஜாதாவுக்கு அர்பணித்திருக்கும் இந்தப் புத்தகத்திற்கு நஞ்சுண்டன் முகவுரை எழுதியிருக்கிறார் ,வழக்கம் போல் எனக்கும் அவர் அகத்திணை படிமம் பற்றிச் சொல்லியது எதுவும் எனக்குப் புரியவில்லை.

சுமை என்னும் தலைப்பில் எழுதியது தான் எனக்குப் பிடித்த ஆக்கம்

கதவு தட்டி அழைத்துவந்து
என்னை உட்கார வைத்தார்கள்
...
அணிந்திந்த நகைகளுக்காய்
என் குடும்பத்தை அழித்தவன்
போகிறப்போக்கில் என்னைப்
புணர்ந்தவன்

...

இதோ அவனது தலை
வெட்டுப் பாரையிலிருந்து உருள்கிறது
பார்வை என்மீது குத்திட்டு

கணக்குகளைச் சீர்செய்துவிட்டது அரசு

இனிச் சுமக்க வேண்டும்
இவன் கொலைகளோடு
இவன் மரணத்தை.

கொல்லப் படுபவனை பார்ப்பவரின் நுண்ணுணர்வை புரிந்து எழுதியிருக்கிறார். கொல்வதே தண்டனை எனப் புரிதல் கொண்டவர்களுக்கு மனித மனம் புரிவதேயில்லை, பெண் மனம் அப்படட ஒன்று இருக்கிறதா என்ன ?

Labels:

எல்லாச் சாமியும் ஒண்ணுதானா ?

கடவுள் பற்றிய பல கருத்துக்கள் பல தரப்பட்ட மக்களாலும் அறிவு ஜீவிகளாலும் எல்லாக்காலக்கட்டத்திலும் சொல்லப் பட்டே வருகிறது ,இப்போது நம் இணைய ஊடகத்திலும் விரிவாக பலர் விவாதித்து உள்ளனர். நானும் என்னுடைய பார்வையை பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் தொடங்கிவிட்டேன் ..

கடவுள் பற்றி எனக்கு தெளிவான தொரு அபிப்ராயம் கிடையாது என்பதே உண்மை.அப்படி ஒருவர் இருக்கிறாரா என்பது சந்தேகம் தான் ஆனாலும் ஒரு உலக ரட்சகன் இல்லை என்பதயும் பெரிதாக நிரூபிக்க முடியாது ,கடவுள் என்பவன் இல்லை என்பதை நீருபிக்க முடியாது என்பது எவ்வுளவு உண்மையோ அந்த அளவுக்கு அவர் இருப்பதையும் நிருபிக்க முடியாது..

அதனால் தான் ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெரும் சண்டை ,என்னை மாதிரிஇரண்டும் கெட்டான்கள் எல்லாத்தயும் படித்து விட்டு முடியை பிய்த்துக் கொள்கிறார்கள்.

யார் கடவுள்---சிவன் நம்ம சாமியா ,இல்ல பெருமாளா அல்லது இயேசுவா அல்லாவா..இல்ல எல்லாம்ஓண்ணு தானா ? எல்லா சாமியும் ஒண்ணுதான்னா ஏன் இவ்வுளவு பெரிய சண்டை ..

இதையெல்லாம் பற்றி விவாதித்தால் சிந்தித்தால் நம்முடைய சிந்தனையிலும் விவாதங்களிலும் ஒரு சார்பு தன்மை வந்து விடும் ,என்னத்தான் rationala சிந்திப்பவன் என்று சொன்னாலும் நாம் சார்ந்துள்ள மதத்தின் அல்லது மார்க்கத்தின் /நம்ப்பிக்கையின் மேது ஒரு பரிவும்அதன் தவறுகளுக்கு சப்பைக் கட்டு ஆதாரத்தையும் தூக்கிப் பிடித்து நிற்போம் ..ஆனால்அடுத்த மதங்களின் நம்ப்பிக்ககளைப் பற்றி சீராக எடைப் போட்டு அவர்கள் ஏன் அதை உணர வில்லை என்று ஆதங்கப் படுவோம் ஆத்திரப்படுவோம்...அடுத்த மதத்தைப் பற்றி சிந்திக்கயில் மட்டும் பகுத்தறிவு பகலவன்களாக இருப்போம் ,தன் முதுகு அழுக்கு யாருக்கும் தெரிவதில்லை ..

இல்லை எல்லா சாமியும் ஒன்றுதான் ன்னு சொன்னாலும் அது சும்மா மத நல்லிணத்துக்கு சொல்லுறதுக்குத் தான் ,ஒரு தீவிரமான விவாதத்தில் நடுநிலை என்பதே கிடையாது..

கடவுள் என்னும் கருத்தாக்கம் உலகம் தொடக்கம் முதல் இருந்துருக்க வேண்டும் ,இயற்கயையும்விலங்குகளையும் வணங்கிய ஒரு சமூகம் இருந்தது ,உலகெங்கும் உள்ள சிறுபான்மை தொல்குடிமக்களில் இன்னமும ்இருந்து கொண்டுதான் இருக்கிறது .பெரும்பாலும் அவர்களின் கடவுள் இயற்கையை பற்றிய பயத்தால் தோன்றிய வழிபாடுகள் தான் ..நடுகல் வழிபாடு முன்னோர்களை வணங்குதல் என்பதும் எல்லா நாகரிகங்களிலும்இருக்கிறது..
இன்றைய நவீன உலகில் முன்னோர் வழிபாடு /கன்னி வழிபாடு/தர்கா வழிபாடு போன்றவைகள் மக்களிடம் இருந்தாலும் அறிவுசார்ந்த ஒருஅலசலில் இதுவெல்லாம் கேலிக் கூத்தாகவே முடியும் ..அதே சமயம் முறைப்படுத்தப் பட்ட மதங்களின் செயலகளைப் பற்றிவிவாதத்தை பல தளங்களில் அறிவு ஜீவியாகப் பட்டவர்கள் வாதம் பண்ணத் தயங்குவதே இல்லை

ஆனால் இன்று இந்து /கிருத்துவ /இஸ்லாம் /பெளத்த /ஜைன மதங்களில் ஒரு ஆதார நம்ப்பிக்கையை கொண்டே இயங்குகிறது ..பெரும்ப்பாலும் எல்லா மதங்களும் ஒன்றையே சொல்வது என்கிறார்கள் ,ஆனால் ஒரு மத நம்ப்பிக்கயாளனின் முக்கியமான நம்ப்பிக்கை மற்ற மதக்காரர்கள் ஒப்புவதாக இல்லை ..அடிப்படையில் தப்பு என்றால் எப்படி எல்லா மதமும் ஒன்றாக இருக்க முடியும்..

இந்து/பெளத்த/ஜைன மதங்களை ஒரு பக்கத்திலும் யூத/கிருத்துவ/இஸ்லாமை ஒரு பக்கத்திலும் வைத்து வாதம் செய்வதும் /அதற்கான ஒற்றுமைகளை வேற்றுமைகளை பார்க்க இந்த எல்லா மதங்களிலும் கடுமையானப் பயிற்சி இருக்க வேண்டும் .. ஒரு விதத்தில் ஒருவன் எல்லா மதங்களிலும் பல ஆண்டுகளாக இருந்து பார்த்து தான் ஆராய வேண்டும் புத்தகங்களை படித்து மார்க்கத்தை புரிந்து கொள்ள முடியுமா என்ன ?
உலகில் ஒருவரும் எல்லா மதங்களையும் புரிந்து கொண்டு எழுத முடியும் என்பது என்பது நடக்காத ஒன்று ..ஆதலால் எல்லா நண்பர்களுக்கும் சில கேள்விகளை கேட்டு என் சிந்தனைகளையும் எழுதுகிறேன்.

எல்லா ஆத்திகர்களுக்கும்
1.கடவுள் என்பவரது இருப்பை எப்படி உணருவீர்கள் ..
ஏழையின் சிரிப்பில்/மழலையின் சிரிப்பில் /மங்கையின் அன்பில்/தாயின் அன்பு போன்ற வழக்கமாய் சொல்லும் பொய்களை சொல்லாதீர்கள்அவர்களுக்கு யாரும் கோவில் கட்டுவதில்லை..இந்த பதில்கள் ஒரு மெகா சைஸ் பொய்
தர்க்கப் படி ஒருவருக்கு மழலையின் சிரிப்பென்றால்மற்றவருக்கு மங்கையின் மஞ்சம் /மதுவின் சுவை ..வாதப்படி இதுவும் கடவுள் தான் ,இன்பம் தான் கடவுள் என்றால் துன்பம் யார் ..சிற்றின்பம் /பேரின்பம்என்றெல்லாம் சொல்வது ஏமாத்து வேலை ..இன்பத்தின் அளவு கோல் ஏன் தம் குழந்தையின் சிரிப்பில் ஏன் அதிகமாகிறது ?

2. கடவுளைப் பற்றிச் சொல்ல ஏன் எப்பொழுதும் தூதுவர்கள் வர வேண்டும் (அல்லது அவராகவேஅவதாரமாக வர வேண்டும்)
இப்ப சமீபத்தில் யாரும் வராததால் ..தலை தூங்கிடுச்சுன்னு வைய்த்துக் கொள்ளலாமா ? கடவுள் ஏன் இந்துக்களுக்கு இந்தியாவில் அவராகும் ..யூதர்களுக்கும் /அரேபியர்களுக்கு தூதுவ்ராகவும் வந்து அறிவுரை சொல்ல வேண்டும் ..அப்ப வெள்ளைக் காரங்களுக்கும் / சீனர்களுக்கும் /ஆப்பிரிக்கர்களுக்கும் சாத்தானின் பிள்ளைகளா ?

3. கடவுளின் அவதாரம் /தூதர் இப்போது இருந்தால் கண்டுபிடிக்க முடியுமா ? அப்படின்னு ஒருவர் சொன்னால் ஒத்துக் கொள்வோமா ? லூசுப் பயன்னு சொல்ல மாட்டீங்க ,கடவுளின் அவதாரம் /தூதுவர் அற்புதங்கள் செய்ய வேண்டுமா...

4. உலகம் தட்டையானது / சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற கடவுள் ( அப்படித் தானே கடவுள் அருளிய வேதம் சொல்லுகிறது ) பூமியை மையமாக வைத்துத் தான் சிந்தித்திருப்பாரா ? அப்ப நம்ம கடவுள் சந்திரனுக்கும் புதனுக்கும் கடவுள் இல்லையா அவர் பூமிக்கான குறு நில மன்னர் தானா ?

5. ஆன்மிகத்திற்கு மதம் என்ற அமைப்புத் தேவையா ?

6. சுவர்க்கம் /மறுமை /நரகம் போன்றவைகள் நம்பத் தகுந்ததா ?


நாத்திகர்களுக்கும் என்னிடம் தீவிரமான கேள்விகள் உண்டு ..நான் கேட்ட கேள்விகள் பொதுவான எல்லா மத நம்ப்பிக்கை யாளர்களுக்கானது ..

Labels: , ,

The Almond by Nedjma - ஒரு பார்வை

"The sexual awakening of a muslim women" என்ற கவர்ச்சியான அறிவுப்புடன் இருந்த புத்தகத்தை வலையில் படித்த சில விமர்சனங்கள் படிக்கத் தூண்டியது. படித்ததை பகிர்ந்து கொள்ளவும் என் கருத்துக்களை சொல்லவே இந்தப் பதிவு.

மொராக்கோ வின் கிராமத்து பெண் பத்ரா ,அவளுடைய ஒவ்வாத் திருமண பந்ததிலிருந்து தப்பி tangier நகரத்திற்கு அவரின் அத்தை செல்மாவின் வீட்டிற்கு வருவதில் இருந்து கதை தொடங்குகிறது.செல்மாவின் வீட்டில் வாழத் துவங்கும் பத்ராவின் tangier நகர அனுபவங்களும் அவரின் பழைய கிராமத்து வாழ்க்கையை விவரிப்பதுமாக மாறி மாறி தொடர்கிறது நெட்ஷ்மா என்ற புனைப் பெயரில் எழுதும் 50 வயதுக்கு பக்கத்திலுள்ள மொராக்கோ பெண்ணின் எழுத்து.

டிரிஸ் என்ற மேல்த்ட்டு டாக்டரின் தொடர்பின் மூலம் பத்ராவிற்கு எற்படும் பாலியல் விழிப்புணர்வுகளை பக்கம் பக்கமாக விவரித்து porno மொழியில் விவரித்து செல்லுகிறது.ட்ரிஸ்யுடன் ஏற்படும் முதல் புணர்ச்சிக்குப் பின் சொல்லும் பத்ராவின் வார்த்தைகளில் ("The world had suddenly become a caress.the world become a kiss.And I was nothing but a floating lotus flower...and it was not only in love with driss .My genitals,too ,revered him ) பத்ராவின் உணர்ச்சி கொந்தளிப்பை அறியச் செய்பவை.தொடர்ந்து வருபவை ட்ரிஸுடன் கூடிய உறவுகளின் பரிமாணங்களை அவர்களின் பல புணர்ச்சிகளை விவரிப்பதின் மூலமும் ,ட்ரிஸின் பல வித மான பாலியல் பகிர்வுகளின் மூலமும் விவரித்து செல்கிறது.அதே சமயம் பத்ராவின் கிராமத்து குழந்தைப் பருவ வாழ்க்கையயும் அவரின் கிராமத்து பாலியல் அனுபவங்களையும் மாறி மாறி சொல்லி செல்கிறது. பாலியல் அனுபவங்களை விவரித்து சொல்வதில் தான் முக்கால் வாசி நாவல் செல்லுகிறது.

nedjma வின் நேரிடையான கதைச் சொல்லும் எழுத்து சில இடங்களில் கவித்துவமாக மாறுவது ரசிக்க தக்கது . பத்ரா,ட்ரிஸின் முதல் புணர்ச்சிப் பற்றிய எழுத்து கண்டிப்பாக கதைச் சொல்லியின் துணிச்சலான் நடைக்காக ரசிக்கப் படும்.

கிராமத்து அனுபவங்கள் பல மொராக்காவின் வாழ்க்கையும், அங்குள்ள மனிதர்களைப் பற்றிய சில செய்திகளுடன் விமர்சனங்களை சொல்லியவாறே நகர்கிறது . பல பாகங்கள் நல்ல சிறுகதைக்கு ஒத்ததாக இருக்கிறது.எனக்கு பிடித்த நாவல் பகுதி இந்த கிராமத்து பகுதி தான்.

கிராமத்து பத்ராவின் குழந்தைப்பருவம்,அவளின் செல்மா அத்தையுடனான அன்பு, விடலைப் பருவ அனுபவங்கள் ,பத்ராவின் கல்யாணம் போன்றவை tangire அனுபவ தொகுப்பின் இடையே தனித் தனி அத்யாயமாக வருகிறது. சில அத்தியாயங்கள் கறாரான வாசகர் பார்வையில் சிறந்த சிறுகதைகளுக்கான் எல்லா கூறுகளையும் கொண்டது. முழுப் புத்தக வாசிப்புக்கு பிறகு ,தனியாக சிறுகதைப் போல் random ஆக வாசித்துப் பாருங்கள் நான் சொல்லுவது புரியும் .
எழுத்தில் இருக்கும் மெல்லிய நக்கல் ,பகடி வாசித்தலை porno எழுத்த்க்கிடையேயும் ரசிக்க வைக்கிறது.

பத்ராவின் கல்யாணம் பற்றிய பதிவில் 40 வயதான மணமகனுக்கு 3 வது பெண்ணாக பத்ரா பார்க்கப்படுவதும் , மணமகனின் தாயார் ,சகோதரியின் உடல் பரிசோதனைகளும் , கன்னிமை பரிசோதனையும் எளிய நடையில் சில விமர்சனங்களுடன் சொல்லிச் செல்கிறார் .

"They examined from top to bottom,feeling my breasts,my behind,my knees, and finally the curve of my calf. I felt like sheep for relegious holiday of Eid.All that was missing were the feast's ribbons . But ,Knowing the rules and customes ,I left them handle me without bleating.Why interfere with the well-oiled codes that change the hammam into a sok where human flesh is sold at a third of the prise of regular meat ? "

கடைசி வரிகளில் உள்ள கோபம் எல்லா ஊர்ப் பெண்களுக்கும் பொருந்தும். ஆணாதிக்க உலகில் பெண்களுக்கு அவ்வளவு தான் மதிப்பு.

குழந்தைக்காக அதுவும் ஆண் குழந்தைக்காகத் தான் 3 வது திருமணம் ,இது நம் நாட்டிலும் சில காலம் முன் வரை நடந்த ஒன்று தான்.

" A Light skin is a previlage of the rich ,a being blond is of the europeans and central asian turks, secendants of the days , the beys ,...."

என்ற வரிகள் தோல் நிறம் பற்றிய மக்களின் பார்வை கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதற்கான உதாரணம் . இதே மாதிரியான விமர்சனத்தை இணையத்தில் ஒரு சீன்ப் பெண் சொல்வதை வாசித்ததாய் ஞாபகம்.

டிரிஸ் ஒரு intellaxtual & sexual liberal ஆகவும் காட்டுகிறது .நாவலின் பல் பக்கங்கள் அவரின் பல பால் புணர்ச்சி மற்றும் பல பெண் உறவையும் சொல்லிச் செல்கிறது .அதே சமயம் பத்ரா அவரை விட்டுப் பிரிந்து ட்ரிஸ் இன் நண்பரை அழைக்கும் போது ட்ரிஸ்க்கு வரும் கோபம் ,ஆண்கள் எவ்வளவு liberalஆக இருந்தாலும் தன் பெண் தனக்கு மட்டுமே என்ற உணர்வில் தன்னலவாதியாகத் தான் இருக்கிறான்.

இதில் மொராக்கோ பற்றிய செய்திகளில் இருப்பவையின் நம்பகத் தன்மையை தெரிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும் .சொல்லப்படும் tangire யின் மேல்த்தட்டு வாழ்க்கை மேற்கு நாடுகளில் கூட குறைவுதான் ,அது மொராக்காவின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதல்ல.ஆனால் கிராமத்து விவரிப்புகள் பற்றித் தான் என் ஆர்வம்.

இது கதை சொல்லியின் வாழ்க்கையா அல்லது புனைக்கதையா என்பது பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.ஆனால் nedjma வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க கூடும்.

பிரான்ஸிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த இந்த நாவலின் popularity வியக்கவைக்கிறது. எனக்கென்னமோ "முஸ்லீம் பெண்" விடயம்த் தான் இந்த அளவு புத்தகம் விற்பதற்கும் காரணம் எனத் தோன்றுகிறது.தலீபான்,அல் குயாடா பற்றி பேசியே காலம் கடத்தும் அமெரிக்க ஊடகங்களுக்கு முஸ்லீம் பெண் எழுத்தாளரின் பாலியல் புத்தகத்தை உயர்த்தி பிடிப்பது அரசியல் ம்ற்றும் வியாபார தந்திரம் .

Nedjama வின் இந்த நாவல் ஒரு பெண்ணின் அனுபவமே அல்லாமல் அதில் எந்த பெண்ணியமோ அல்லது முஸ்லீம் பெண் விடுதலை பற்றியோ எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எழுத்தாளரின் எண்ணம் கூட அப்படி இருப்பதாக தெரியவில்லை.இதில் மதம் பற்றி எதுவுமே இல்லை.இதில் எழுத்தாளர் முஸ்லீம் என்பதாலும் கதைக் களம் மொராக்கோ என்பதாலும் மட்டுமே இஸ்லாம் இந்த கதையில் வருகிறது.Nedjma விற்கு இஸ்லாமை விமர்சிக்க ஒரு நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.சில இடங்களில் அவர் ரமலான் நோன்பு இருப்பது மட்டுமே அவரின் கடவளுடனான தொடர்பு என்றும் அதையும் ட்ரிஸ் ய்டனான புணர்ச்சியால் ஒழுங்காக நோன்பு இருக்க முடியவில்லை என சொல்லும் போது அவருக்கு கடவுள் மதம் பற்றிய விமர்சனம் எதுவும் இருப்பதாக இல்லை.

ஆனால் இதே நாவல் மேற்கு கிறித்துவ பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தால் அமெரிக்காவில் கண்டிப்பாக இந்த அளவுக்கு கவனிக்கப்பட்டிருக்காது. அமெரிக்க ஊடகங்களைப் பொருத்த வரையில் முஸ்லீம் பெண்கள் வெறும் பர்தா பெண்கள் , அவர்கள் பாலியல் சுதந்தரம் என்பதே இல்லை என்பதாகத் தான் சொல்வார்கள் . "sexual awakening of musilm women" என்று சொல்வதற்கு எதுவும் இல்லை , ஒரு பாலியல் சுதந்தரம் மேல் நாட்டமுள்ள பெண்ணின் அனுபவம் ,முஸ்லீம் என்பது வியாபாரத் தந்திரம் மட்டுமே.

மற்ற படி இந்த நாவல் வாசிப்பு ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.


பின்குறிப்பு: The alomond - தலைப்பு பெண்களின் clitoris யை குறிப்பது என்பதே பெரும்பான்மையோர் எண்ணம் .என்னுடைய கருத்தும் அதுவே.
porno மொழி என்பதை ,விரசம் என்னும் அர்த்ததில் சொல்ல வில்லை . porno literature ஒரு அங்கீகரிக்கப் பட்ட இலக்கியமாகத் தான் கருதுகிறார்கள் ,அந்த அர்த்ததில் தான் எழுதியுள்ளேன் .

Labels:

யாதும் ஊரே யாவரும் கேளிர்

முதல் பதிவாகையால் என்ன எழுதுவது என்று குழப்பத்தில் கூத்தாடி முழித்து கொண்டு இருப்பதால் ,எனக்கு பிடித்த கணியம் பூங்குன்றனாரின் கவிதையை திருடிப் போடுவதில் இருந்து கூத்து தொடங்குகிறது.


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே , வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே , முனிவின்

இன்னாது என்றலும் இலமே , மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே



முதல் இரண்டு வரிகளும் ,நமது அரசியல் மேடைகளிலும் Sun Tv பட்டிமன்றங்களிலும் , கமல் போன்றோர் அவ்வம் போது தமிலக மாக்களுக்கு வழ்ங்கும் அற உரைகளின் வழியாக எழுந்த ஆர்வத்தால் முழு கவிதை வாசித்த போது தோன்றிய வியத்தல் "இலம்" எனப் போதிலும் வியக்கவில்லை என்பது அதனி்னும் இலமே .

Labels: