கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

தேடலின் இயல்பு -2

போனப் பதிவில் எனக்குப் பிடித்த சில ஆன்மீகப் பெருசுகளைப் பற்றி சொல்லியிருந்தேன் .அதில் ஸ்ரீ ஸ்ரீ பற்றி எழுதாதது ஏன் என்று ஒருவர் கேடிருந்தார்.அவரைப் பற்றி ஏற்கனவே விமர்சித்திருந்தாலும்
எனக்கு அவரின் சுதர்சன் கிர்யாபற்றி நல்ல அபிப்ராயமே உண்டு .அனுபவப் பட்டவர்கள் பலர் அதனைப் பற்றி நல்லதாகவே சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அவர் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் அதற்காக அவர் சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல விசயத்தை மறுக்கக் கூடாது , நஷ்டம் அவருக்கல்ல நமக்குத்தான் .அவரின் கிரியா கோர்ஸ்யில் சேர வேண்டும் என எண்ணிக் கொண்டு இருக்கிறேன் .கண்டிப்பாய் இந்த வருடம் கற்றுக் கொள்வேன்.

இவர்களைத் தவிர எனக்குப் பிடித்தவர்களின் முக்கியமானவர்கள் ஓஷோ ,ஜேகே மற்றும் ரூமி .இவர்களை எழுத்தின் வழியாக மட்டுமே தெரிந்தாலும் இவர்களின் ஆளுமை அலாதியானது .

ஜேகே யின் பலப் புத்தகங்கள் படித்து இருக்கிறேன் ,பல சமயம் திரும்ப திரும்ப படித்து தான் சில விசயங்களை புரிந்து கொண்டு இருக்கிறேன் .ஜே கே பற்றி நான் எழுதிஒன்றும் தெரிய அவசியமில்லை .தீவிரமானத் தேடலின் ஒரு ஆரம்பம் ஜே கே வாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள்அதிகம்.

ஓஷோ வைப் பற்றி செக்ஸ் சாமியாராகத் தான் நம் "மதிப்பிற்குரிய" பத்திரிகைகள் அறிமுகப் படுத்தின.ஆனால்அவரைப் பற்றியப் புரிதல்கள் அவரைப் படித்தபின் வந்தது .அவர் ஒரு விதத்தில் தவறாக அறியப்பட்ட அருமையானஆன்மீகத் தலைவர்.அவர் எந்த விசயத்தைப் பற்றியும் பேசத் தவறியதே இல்லை ,ஒரு முறை "Fuck " வார்த்தையை வைத்து ஒரு அருமையான உரையை தந்து இருப்பார் .you tube இல் இருக்கிறது
http://www.youtube.com/watch?v=6D7rWLzloOI

பாருங்கள்.இவர் இது போலப் பேசியதில் பல பேர் இவரை திட்டிக் கொண்டு இருக்கிறார்கள் .மேலும் அவர் பேரில்உள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நான் அறிவேன் .அவர் ஒரொகனில் ஆசிரமத்தில் நடநதப் பிரச்சினைகளையும்இயந்திர துப்பாக்கி பாதுகாப்பில் ஒரு பெரிய கல்டுகளின் நடுவே அவர் இருந்த நாட்களையும் .ஊர் ஊராக துரத்தி அடிக்கப் பட்டு இந்தியாவில் புனேயில் அரசாங்க கட்டுப் பாடுகளில் அவர் இருக்க நேர்ந்தமைக்கானக் காரணம் அவரிடம்காணப்பட்ட அதீத கிண்டல் கூடக் காரணமாயிருக்கலாம் .அவர் ஒரு வழக்கமான இந்தியச் சாமியார் இல்லை.

எனக்குப் பிடித்தது அவரின் அருமையானச் சொற்பொழிவுகள் .அவரின் பகவத் கீதைக்கான உரையும் ,பதஞ்சலி யோகசூத்திரத்தின் உரையை அவர் பாணியில் வெறும் மொழிபெயர்ப்பை போல் அல்லாமல் அவரின் கருத்தை வைத்திருப்பார்.ஒரு விதத்தில் கீதையை அவரைப் போல் தான் அணுக வேண்டும் .

அவரைப் பற்றி வரும் பல அவதூறுகளைப் படிக்கும் போது எதிர் வினை ஆற்றத் தோன்றும் ஆனால் செய்வதில்லைஎதிர் வின ஆற்றுவது முட்டாள்தனமானதும் கூட .புரிந்து கொள்ளாதவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள் அது மட்டுமில்லை ஒஷோ வின் புகழ் பாடுவது அல்ல என் நோக்கம் அவர் சொல்வதை புரிந்து கொள்வதுமட்டுமே .

என்னுடைய நண்பர் ஒருவரால் அறிமுகப் படுத்தப் பட்ட இன்னொரு சூபி ஜலாவுதீன் ரூமி.

Lovers have a religion all of their own Their only creed is Love

என்று எழுதிய கவி அவர் .பால்க் ,ஆப்கானிஸ்தானில் பிறந்தவர் டமாக்கஸ் ,பெர்சிய பகுதிகளில் சூபி யிசத்தைபற்றி கற்பித்து ஆன்மீக ஆசானைத் திகழ்நத 1207-1273 வரை வாழ்ந்து இன்றும் தன் கவிதைகளால் வாழ்கிறவர்.இவரைப் பற்றிய அறிதல் இன்னும் ஒரு முறை மதங்கள் என்னும் மடமையில் இருந்து கடந்து வருவதற்கான காரணங்களை உறுதி செய்தது .ஆங்கிலம் மூலமாகத் தான் இன்னமும் படித்து வருகிறேன் , தமிழில் யாராவதுஇவரைப் பற்றி எழுதியிருந்தால் எனக்குச் சொல்லவும் படிக்க ஆவலாய் இருக்கிறேன். இவரைத் தொடர்ந்து பல இஸ்லாமிய சூபிக்கள் பற்றி படித்து வந்திருக்கிறேன் .ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு கவிதை ,அவர்களின்ஆன்மீக பலம் வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் .யாராவது இஸ்லாமிய நண்பர்கள் இவர்களைப்பற்றி தொடர் எழுதலாம் ,சூபி அல்லது ரசூல் எழுதினால் சந்தோசப் படுவேன்.நாகூர் ரூமி திராட்சைகளின்இதயம் என்று ஒரு சூபிக் கதை எழுதியிருந்தார் ,அவர் ஜலாவுதீன் ரூமி பற்றி எங்கோ கூறியதை படித்ததாய்ஞாபகம் .அவர் ரூமியைப் பற்றி எழுதலாம் .

எனக்கேவான ஒரு ரூமியின் கவிதை

Wisdom repeated like a Parrot
flies away when most need it

I am telling you Mr Clever - Clever
even if you write it down in your liitle book
and brag about how well read you are
it will escape from this cage
Forget about what other people have said
just show Wisdom some love and affectionand
she will becaome a pet Bird
whose perch is your open Palm

இன்னொன்று

When you say to a thirsty man,
Over here ! there's water in this cup
does the thirsty man reply
that is only your opinion
where is the evidence to subsataniate
your assertionthat this is an aqueous liquid ?

மஜ்னபிக்கு என் வணக்கத்தோடு இன்னமும் நான் இவர்களைப் பற்றி சரியானப் புரிதல்களோடு எழுதுவேன்என்ற நம்பிக்கையோடு

Allah Says,

"You can't carm me in to a Jar.
Heaven and Earthare too cramped to contain me
I live only on the Loving expanses of a lover's heart
Look for me there "

அன்பின் வழியாக அல்லாவையோ சிவனையோத் தேடி ......

2 Comments:

At March 04, 2007 8:38 AM , Blogger கால்கரி சிவா said...

//அது மட்டுமில்லை ஒஷோ வின் புகழ் பாடுவது அல்ல என் நோக்கம் அவர் சொல்வதை புரிந்து கொள்வதுமட்டுமே .
//

சரியாக புரிந்து கொண்டீள்ளீர்கள். புரிந்து கொண்டு மாறவும் வேண்டும்

 

At April 17, 2007 4:12 PM , Blogger குலவுசனப்பிரியன் said...

Youtube தொடுப்புக்கு நன்றி. அவருடைய பல புத்தகங்களையும், ஒலி நாடாக்களும் வைத்திருக்கிறேன். இந்த உரையைக் கேட்டது இல்லை. இப்போது அவருடைய பல புத்தகங்கள் தமிழாக்கப்பட்டு மக்களுக்கு அவருடைய நேரடியான அறிமுகம் கிடைக்கிறது. அமெரிக்காவில் சில கோவில்களில் கூட விற்பனைக்கு இருந்ததைப் பார்த்திருக்கிறேன். நான் ஓஷோவைப் பற்றி ஸ்ரீ ஸ்ரீ யின் பயிற்சி வகுப்பில்தான் சரியான தகவல்கள் கிடைக்கப்பெற்றேன்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home