கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

இழப்பின் வலிக்கான மருந்தென்ன ?

பிறந்த எல்லோரும் ஒரு நாள் இறந்து தான் தீர வேண்டும் என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் சாவை எதிர் கொள்ள பயம் நம் எல்லோருக்கும் .அதிலும் நம்அன்புக்குப் பாத்திரமானவர்களின் மரணம் நம்மை உணர்ச்சிமயமாக்கும் , பெரும்பாலும் நம்மால் இறந்தவர் நம் மேல் வைத்திருந்த அன்பும் நாம் அவர் மேல் வைத்திருந்த அன்பே அவர்களின் இழப்பிற்காக நாம் அழுவதற்கான பெரும் காரணம் .

எங்கள் ஊரில் பெரியவர்கள் சொல்லுவார்கள்பிள்ளை தலை மேல் ஏறி போக வேணும் அதுவே சந்தோசம்ன்னு ,எனக்கு சின்ன வயசில் புரிந்ததில்லை. ஆனால் இப்போது யோசிக்கும் போது பெரியவர்/பெற்றோர் இருக்க பிள்ளைகளை அவர்கள் இழப்பது பெரும் கொடுமை அது அவர்களை எவ்வுளவு பாதிக்கும் என்பதை. அதிலும் சாவு துர்மரணமாய் சம்பவிக்கும் போது வரும் வலி ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. சுனாமி போன்ற பேரிழப்புகளில் பிள்ளைகளை இழந்தவர்களின் வலியை நம்மால் உணரவே முடியாது . சுனாமி போன்ற இயற்கை அழிவிற்கு விதி என்று பெயரிட்டாவது நம்மை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் , ஆனால் ஏழு வருடங்களுக்கு முன் ஜெ தண்டனைக்கு எதிர்ப்பு என்றுசொல்லி எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளின் இழப்பை அவர்கள் பெற்றோர் தாண்டி வருவது மிகக் கடினம் . அவர்களின் பெற்றோரில் ஒரு அம்மாவுக்கு மன நோய் வந்து விட்டது என்றும் மற்றொருவர் அடிக்கடி தன்னையே சுட்டுக் கொள்கிறார் என்பதை வார இதழ்களில் படிக்கும் போது அவர்களின் வலி நமக்குத் தெரிகிறது. அதுவும் செய்திகள் என்றப் பெயரில் நீயூஸ் சேனல்களின் விசுவல் வன்முறை கொஞ்சம் அதிகம் ,சம்மந்தப் பட்டவர்கள் அதனைப் பார்ப்பவர்களுக்கு எவ்வுளவு வலி இருக்கும் என்பது செய்தி உடகங்களுக்கு புரியா விட்டாலும் நமக்குப் புரியும் . இந்த இழப்பு சாதாரணமானது அல்ல ,எதோ விதி என்று சொல்ல நோயில் யாரும் இறக்கவில்லை போர் சூழலிலும் இல்லை ,தனிப் பட்ட கோவமோ ,விபத்தோ இல்லை . யாரோ சில முட்டாளின்அரசியல் ஆசையால் வந்த வினை.

இழப்பின் வலியைக் எந்த ஒரு தீர்ப்பும் கொடுக்க முடியாதுஎன்றாலும் கொலைகளுக்கு ஒரு நீதி கிடைத்தால் அது அவர்களுக்கு ஒரு சமாதானத்தைக் கொடுக்கும். வந்திருக்கிற நீதி 3 பேர்க்கு மரணத்தையும் மற்றோருக்கு சிறையையும் விதித்திருக்கிறது . கொலைசெய்தவனுக்கு மரணம் என்பதே சரி என்று எல்லோருடைய வாதமும் .நீதிபதி Rarest of the Rare கேசுகளில் இதுவும் ஒன்று என்கிறார். ஆனாலும் தூக்குத் தண்டனை எந்த விதத்திலும் யாருக்கும் கொடுக்கப் படுவதை தர்மம் என்று சொல்ல முடியாது .இறந்தவர்களின் வலிக்கு எந்த விதத்திலும்குறைந்ததல்ல குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டால் அவர்களின் குடும்பத்தார்க்கும் கிடைக்கும் வலியும் வேதனைகளும். அதுவும் குற்றவாளிகளின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உள்ள சமூக இழிவுகளின் வலி பெரியது . கொளுத்திப் போட்டு மாணவிகளைக் கொன்றவன் மனம் வருந்தியிருப்பானா இப்போது , இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் இது மாதிரியான விசயத்தை பண்ணுவானா என்பதும் கேள்விக்குறியே ? அதில் சந்தேகம் என்றாலும் பெயிலில் வர முடியாத ஆயுள் தண்டனைப் போது மானது இல்லையா ? அப்படி செய்வதின் மூலம் அவன் தவறை அவன் எண்ணி வருந்த அவனுக்கொரு நீண்டஆயுளைக் கொடுப்பது சரியானதில்லையா ? சமூகத்தில் இந்த மாதிரியானக் குற்றங்களை தடுப்பதற்கு இது போல் செய்பவர்களுக்கு ஒரு பயம் வர செய்ய வாவது இது போல் ஒரு மரண தண்டனையை கொடுக்கவேண்டும் என்பதும்ஒரு வாதம் ,அரபு நாடுகளில் அதனால் தான் பொது இடத்தில் தண்டனையை கொடுக்கிறார்கள்ஒரு பயத்தை ஏற்படுத்த .

பயம் கொண்டு எல்லாக் குற்றத்தையும் தடுக்க முடியாது .அதுவும்இந்த விசயத்தில் கொளுத்தி கொலை செய்தவர்கள் மட்டுமா நடந்த சம்பவத்திற்கு காரணம் .நடந்த அரசியலில் தன் பலத்தைக் காட்ட இது மாதிரி செய்வதைப் பாரட்ட இருக்கும் அரசியல்தலைவர்கள் ஒரு காரணம் . ஒரு தலைவனின் பலம் என்பதே அவர்களின் தொண்டர்களால் நடத்த முடிகின்ற வன்முறையின் பலத்தைப் பொறுத்தது என்றிருக்கும் மனப் பான்மை காரணம்.

நம் வீட்டில் எரியாதக் கூரைக்காய் எதற்கு தண்ணீர் விட வேண்டும் என்று டிவி பார்த்துக் கொண்டுவெறும் உச் கொட்டும் நம் சுயநலம் ஒரு காரணம் , இந்த குற்றவாளிகள் யாரும் வானத்தில்வந்து குத்திது விட வில்லை நம்மில் ஒருவரே ..ஒரு விதத்தில் அவர்களும் விக்டிம்களே .ஞாபகம் இருக்கட்டும் இந்த எரிப்பு நடந்து அடுத்து வந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர் யார் ? அதன் பின் நடந்த சாட்சிகளின் பல்டிகள் , தொலைந்து போன அரசு ரெக்காடுகள் என்று நடந்த பல கூத்துக்களை மெளனசாட்சிகளாய் தானே பார்த்துக் கொண்டிருந்தோம் .இப்படிப் பட்ட அரசியல் விசயங்களை பார்த்தும் வளர்ந்தும் வருகின்ற ஒரு அரசியல் ஆசையுள்ள முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு என்ன வழி ,காட்டுகின்றவழி எப்படியாவது தலைவனை காக்கா பிடிப்பது , அதற்கு யார் தாலியை அறுத்தாலும் பரவாயில்லை என்பது தானே ? அரசியலில் இதை விட முன்னேறுவதற்கான ஒரு பாதையை நீங்கள் காட்ட முடியுமா ? சாதிக்கும் சில சில்லறைக் கோவங்களுக்கும் ,கவர்ச்சி பேச்சுகளுக்கும் உங்கள் உரிமையை ஓட்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒத்த சமூக அக்கறை தானே கொலை செய்தகுற்றவாளிக்கும் இருக்கும் . அவன் ஒரு மந்திரியாவதற்கான வாய்ப்பை இழந்து இன்று தூக்கு மரத்திற்காய் காத்திருக்கிறதிற்கு காரணம் ,

ஒன்று கொலை செய்வதை மாட்டிக் கொள்ளாமல் செய்யத் தெரியாதது.

இரண்டு முட்டாள் மக்களை சரியா தெரிந்து கொள்ளாதது ? பல சமயம் முட்டாள் தன் இயலாமையை மறைக்க மாட்டுபவர்களை தண்டிப்பது ?
நிறைய இடங்களில் புருசன் பொண்டாட்டி மேல் வீரம்காட்டுவதை போன்றது .

அப்சலானாலும் /நளினியானாலும் /நெடுஞ்செழியனுக்கோ சட்டம் தூக்குத் தண்டனை கொடுப்பதைஎதிர்க்கத் தான் வேண்டும் ,கொலை என்பது யார் செய்தாலும் தவறே அதை அரசாங்கம் மக்கள்ஆதரவில் கொல்வதை நியாமாக பார்ப்பது மனிதத்தின் தத்துவத்தை புரியாயதே .இது எந்த விதத்திலும்இற்ந்து போனவர்களுக்கு செய்யும் அகெளரவமாக கருதவில்லை.அவர்கள் ஆத்மா சாந்தி அடையாது என்றும் சொல்வதற்கில்லை ,உயிர் விடுவதின் வலி என்பதை தெரிந்தவர்கள் அவர்களின் ஆத்மாக்கள்.

காலம் எல்லோருடைய வலியையும் சரி பண்ணும் என்ற நம்பிக்கையில் மன்னிப்போம் .

Labels: ,

11 Comments:

At February 26, 2007 12:52 AM , Blogger மாசிலா said...

அச்சச்சோ...
கூத்தாடி, உங்களுக்கு என்ன ஆச்சு?
இந்த வயசுலேயே பயம் கண்டுபோச்சா? சரியா போச்சு!

சாவெல்லாம் இயற்கையப்பா. இதெற்கெல்லாம் ரொம்ப அலட்டிக்க கூடாது.

ரொபவும் சீரியசா எல்லாம் எழுதாதெ கூத்து ஐயா. அப்புறம் உண்மையிலே அழுதுபுடுவேன்!!!

***நல்ல கருத்தாழம் உள்ள உணர்ச்சி பூர்வமான விழிப்பூட்டும் அருமையான பதிவு.***

நன்றி.

 

At February 26, 2007 2:17 AM , Blogger சுந்தரவடிவேல் said...

நல்ல பதிவு. யாராயினும் மரண தண்டனை கூடாதென்பதே என் எண்ணமும். அடிப்படை மனமாற்றங்களையும் அரசியல் திருத்தங்களையும் செய்வதன் மூலமே இத்தகைய குற்றங்களைத் தடுக்கமுடியுமேயன்றி, கடுந்தண்டனைகளால் தடுத்துவிடமுடியாது.

 

At February 26, 2007 6:02 AM , Blogger சிவபாலன் said...

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்..

 

At February 26, 2007 11:28 AM , Blogger மாசிலா said...

//பெற்றோரில் ஒரு அம்மாவுக்கு மன நோய் வந்து விட்டது என்றும் மற்றொருவர் அடிக்கடி தன்னையே சுட்டுக் கொள்கிறார் என்பதை வார இதழ்களில் படிக்கும் போது அவர்களின் வலி நமக்குத் தெரிகிறது.//

மனதை கசக்கி, நின்றவை.

 

At February 26, 2007 12:52 PM , Blogger கால்கரி சிவா said...

கூத்தாடி, நட்சத்திர வார வாழ்த்துக்கள். நல்லதொரு வாரத்தை எதிர்பார்க்கிறேன். விபாசன தியானம் மற்றும் உங்களின் பாரகீட் பறவைகளின் படத்தையும் எதிர்ப்பார்க்கிறேன்

 

At February 26, 2007 2:50 PM , Blogger செல்வநாயகி said...

நல்ல பதிவு

 

At February 26, 2007 4:00 PM , Blogger கூத்தாடி said...

மாசிலா

//ூத்தாடி, உங்களுக்கு என்ன ஆச்சு?
இந்த வயசுலேயே பயம் கண்டுபோச்சா? சரியா போச்சு!

சாவெல்லாம் இயற்கையப்பா. இதெற்கெல்லாம் ரொம்ப அலட்டிக்க கூடாது.

ரொபவும் சீரியசா எல்லாம் எழுதாதெ கூத்து ஐயா. அப்புறம் உண்மையிலே அழுதுபுடுவேன்!!!//

இயற்கைதான் ஆனால் சாவை எதிர் கொள்ளும் பக்குவம் எளிதல்ல ,நம் சாவை விட நமக்குப் பிடித்தவர் சாவின் மேல் வரும் வலி அதிகமானதே ..

அழுங்க சார் ,பரவாயில்லை இன்னொருப் பதிவுல எதாவது கவர்ச்சியா போட்டுறேன் ..

 

At February 26, 2007 4:01 PM , Blogger கூத்தாடி said...

சுந்தர் /செல்வநாயகி/சிவபாலன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

At February 26, 2007 4:03 PM , Blogger கூத்தாடி said...

//கூத்தாடி, நட்சத்திர வார வாழ்த்துக்கள். நல்லதொரு வாரத்தை எதிர்பார்க்கிறேன். விபாசன தியானம் மற்றும் உங்களின் பாரகீட் பறவைகளின் படத்தையும் எதிர்ப்பார்க்கிறேன்//

வாங்க சார் ..பாப்போம் என்ன எழுத முடியும்ன்னு ..ஆன்மிகத் தேடல் பத்தி என்னோட அனுபவத்தை எழுதிப் போட்டிருக்கென் ..

விபாசானா பத்தி எழுத முயற்சிக்கீறேன் ..முடியல்லன்னே இன்னொரு தடவை கண்டிப்பாய் ..

 

At February 26, 2007 4:50 PM , Blogger வடுவூர் குமார் said...

எனக்கென்னவோ இப்படி தோனுகிறது.
மரணதண்டனை கூடாது,ஓகே!ஆயுள் தண்டனை கொடுத்தாச்சு.
பசங்க பெரிதாகிறார்கள்,பெண் கேட்டு/கொடுக்க வருகிறார்கள்.
"அப்பா என்ன பண்ணுகிறார்?"- இதற்கு பதில் சொல்பவரின் வலி,மரணதண்டனை விட அதிகமாக இருக்கும்.
அப்ப அவர் குழந்தைகளின் எதிர்காலம்?
கேள்விகள் அதிகம்,மிகச்சரியான பதில் யார் யாருக்கு கொடுப்பது?

 

At February 26, 2007 11:51 PM , Anonymous Anonymous said...

"நம் வீட்டில் எரியாதக் கூரைக்காய் எதற்கு தண்ணீர் விட வேண்டும் என்று டிவி பார்த்துக் கொண்டுவெறும் உச் கொட்டும் நம் சுயநலம் ஒரு காரணம்"

"இந்த குற்றவாளிகள் யாரும் வானத்தில்வந்து குத்திது விட வில்லை நம்மில் ஒருவரே"

"அரசியலில் இதை விட முன்னேறுவதற்கான ஒரு பாதையை நீங்கள் காட்ட முடியுமா ?"

இவை எல்லாம் உண்மையே எத்தனையோ விஷயங்களில் சமூகம் என்ற போர்வையில் நாமும் காரணமாய் உள்ளோம்

தண்டனை என்பது குற்றவாளிகளின் அடிப்படை மனமாற்றத்தை எற்படுத்துவதாய் இருக்கவேண்டும்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home