கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

சாதியும் நாமும்

தமிழ் நாட்டில் எல்லா சாதி பற்றிய வாதங்களிலும் ஒரு ஒற்றை வார்த்தை கண்டிப்பாய்யிருக்கும் அது பாப்பான் ..சாதிப் பெயர் சொல்லித் திட்டுவது அநாகரியம் என்பதை பெரும்பான்மயோர் ஒத்துக் கொண்டாலும் பிராமணர்களை "பாப்பான்" என்றும் முஸ்லீம்களை துலுக்கன் என்று சொல்வதற்கு படித்தவர்கள் கூட கூச்சப் படுவதில்லை .நம் தமிழ் மணத்தில் கூட இது மாதிரி திட்டுவது அநாகரிகம் படித்தவர்கள் அறிவு ஜீவிகளாக தம்மைச் சொல்லிக்கொள்ளும் ஒருக் கூட்டத்தின் உள்முகம்..

நம் சாதிப் பிரிவினகளுக்கு பிராமணர்கள் மட்டுமா காரணம் ..மனு மீது பழி போட்டு கொண்டே எத்தனை நாட்களுக்கு இருப்பது ...மனுவைத் தூக்கி கடாசி விட்டு போய்க் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு சிலரை மட்டுமே குறை சொல்லிக் கொண்டு வந்தேறிகள் என்று சொல்லிக் கொண்டு இருப்பது நாம் நம்முடையக் குறைகளுக்கு அடுத்தவரைக் காரணம் சொல்வது போல் தான்.

பலருக்கு தன் சாதிப் புகழை சரித்திரத்தில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.வெட்கமாயிருக்கிறது திண்ணயில் நடந்த சண்டையைப் பார்த்து .

நாம் எல்லோரும் ஒருக் கேள்வியை நம்மை நோக்கிக் கேட்டுக் கொள்ள வேண்டும் ,நம்முடைய முன்னோர்கள் பணம் படைத்தவர்களாக இருப்பதற்கோ அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதற்கோ யாருடைய உழைப்பத் திருடாமல் இருந்திருப்பார்களா ..எல்லா ஆதிக்க சாதிகளும் கீழ்ச் சாதிகளை சுரண்டியவர்கள் தான் .சரண்டியவர்களின் சந்ததியர்கள் தான் குலப் பெருமைத் தேடித் திரிகின்றனர்.


பாப்பம்பட்டி /கீரிப்பட்டி யில் நடப்பதையும் கண்டதேவிப் பிரச்சினைக்கும் பிராமணர்களை குறை சொல்லித் தப்பிக்க முடியாது..

சமீபத்தில் பசும் பொன் ரிசர்வ்டு தொகுதியாக ஆக்கப்பட்டதுப் பற்றி மக்கள் கொந்தளித்ததாக ஜீவி வெளியிட்டது ..எங்கேப் போய் கொண்டு இருக்கிறோம் நாம் ..இதற்கெல்லாம் மனு மீது பழி போட்டுத் தப்பி போகாதீர்கள் .இதைப் பற்றி பதிவு போட வேண்டும் என எண்ணியிருந்தேன் ..தமிழ் மணத்தில் யாரும் பேசுவாரே இல்லை

பிராமணர்க்ளுக்கும் அவர்கள் கொண்டுள்ள் சாதி அபிமானம் /வெறிக்கு நான் இங்கு வக்காலத்து வாங்கவில்லை ,நான் சொல்ல வருவது நம்மைப் போல் தான் அவாகளும் .சாதி பற்றிய பெருமிதம் இல்லாத எந்த so called உயர் சாதி என்று சொல்லுவோரும் ,பிற்படுத்தப் பட்ட சாதியினரும் இருப்பதாக என்க்குத் தெரியவில்லை.பிராமணர்களைத் திட்டுபவர்கள் தான் நம்மூரில் அதிகமாக இருக்க்கின்றனர் ஆனால் பிற சாதிப் பெருமைப் பேசுபவர்களை திட்டுவது என்பது குறைவு .

பிராமணர்கள் இல்லாத கிராமங்கள் தான் இங்கு அதிகம் ..ஆனா எல்லா இடத்திலும் ஆதிக்க சாதிகளின் ஆட்டம் அதிகம் தான் .ஊர்களில்ப் போய்ப் பாருங்கள் அவர்கள் வாயில் புழங்கும் வார்த்தைகளை (அம்பட்டன் ,வண்ணான் ,சக்கிலியன் ..)

சோபா சக்தி இலங்கையில் நடக்கும் வெள்ளாள சாதி வெறி பற்றி எழுதியும் பேசியும் வருகிறார் அவருக்கு நம்முடைய சாதி எதிர்பாளர்கள் எந்த வித ஆதரவையும் குடுப்பதாகத் தெரியவில்லை ,மாறாக அவர் குற்றம் சாட்டும் புலிகளுக்கு ஆதரவாகத் தான் நம் வீரமணிகளும் திருமாவளவனும் இருக்கிறார்கள். ஈழ்த்தில் பிராமண சாதி ஆதிக்கமேக் கிடையாது ,வெள்ளாள சாதி வெறிதான் அதிகம் ..நம் நண்பர்களுக்கு இதைப் பற்றித் தெரிந்தாலும் அமுக்கமாய்த் தான் இருப்பார்கள் .

ஆக நம் சாதி உயர்ந்தது ,சாதி பற்றி எழுதலாம் பேசலாம் பாப்பன்களைத் திட்டலாம் ,முஸ்லீம் நண்பர் இல்லா விட்டால் துலுக்கப் பசங்க மத வெறிண்ணு சொல்லலாம் ஆனா நம்ம சாதி உயர்ந்த சாதி எங்களுக்கெல்லாம் சாதி வெறின்னல்லாம் கிடையாது ..எல்லாத்துக்கும் அரசியல் வாதி தான் காரணம் ன்னு சொல்லி ஜல்லி அடிக்காதீங்க ..நம்ம எல்லாரும் ஒரு வகையில் சாதி வெறியர்கள் தான் ..மொதல்ல அதை ஒத்துக் கோங்க பின்னாலப் பேசலாம் புடலங்கா மனுவைப் பத்தி
தவறை ஒத்துக்கல்லையின்னா திருத்த முடியாது

Labels:

6 Comments:

At September 29, 2006 5:57 PM , Blogger SP.VR. SUBBIAH said...

எங்கேயில்லை சாதியென
ஏற்றமுடன் சொன்னீர்
நன்றுசொன்னீர் நண்பரே
நன்நெஞ்சம்கொண்டீர் வாழ்க!

 

At September 29, 2006 6:09 PM , Anonymous Anonymous said...

அந்த கடைசி வரி..
அது தான் பன்ச்!!
சாதி பற்றி எழுதும் எந்த பதிப்புக்கும் பின்னூட்டும் இடுவதில்லை என்று எனக்கு நானே விதித்துக்கொண்டதை சற்று விலக்கி,அனானியாக போடுகிறேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.

 

At September 29, 2006 9:45 PM , Anonymous Anonymous said...

நல்ல விடயமாதான் சொல்கிறீர்கள். மனுனா பெட்டிசனு மட்டும் தெரிஞ்சவன் கூட சாதியை விடறதில்லை. வெளிநாடு போனாலும் சங்கம் வைச்சு சாதி வளர்கிறார்கள். சாதி எல்லா இடத்திலும் இருக்கிறது. சாதியால் ஆதாயம் கிடைக்கும் வரைக்கும் யாரும் அதை விட போவதில்லை. ஆனால் வெளிப்படையா அதை ஆதரிப்பதாக சொன்னால் அறிவுஜிவி வேடம் கலைந்து விடும். அதனால் கலையாம இருக்க தன் சாதியை இருக்க கட்டிக் கொண்டு எப்போதும் பார்பனரை திட்டி முடித்துக் கொள்கிறார்கள். பார்ப்பனர் சாதிய அமைப்பில் ஒரு பகுதியே. அவர்களையும் தாண்டி பல நிலைகளில் சாதி உண்டு.


தாழ்த்தப்பட்டவரிலும், பிற்படுத்தபட்டவரிலும் எத்தனை சாதீய அடுக்குகள் உண்டு. பார்பனர்தான் சாதியத்தை படைத்தார்கள் என நிறுவதில் அறிவாளி பெருந்தகைகள் நிற்கிறார்களே தவிர அதை களைவதற்கு எதுவும் செய்வதில்லை. எதுவும் செய்திருந்தால் இன்றைக்கு பெரியார் மறைவிற்கு பின் பார்ப்பனர்,பார்ப்பனர் அல்லோதார் என இரண்டு சாதிகளே இங்கு இருந்திருக்க வேண்டும். அப்படியா இருக்கிறது? யாருக்கும் அப்படி ஒரு நிலை வருவதில் அக்கறை இருக்கிறதா? அதற்கு யாரும் முயற்சிதான் எடுக்கிறார்களா? நாளுக்கு நாள் புதுக் கட்சிகளும், அமைப்புகளும்தான் சாதிய அடிப்படையில் உருவாகுகிறன.

எந்த பிரிவிலும் எல்லோரும் எல்லோருக்கும் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை. ஆனால் அதையெல்லாம் சொல்ல யாருக்கும் முதுகெழும்பில்லை.

எங்க அரிப்பு வந்தாலும் ஒரே இடத்தில் சொரிந்து கொண்டு அரிப்பு போகவில்லையென சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அரிப்பும் சிலருக்கு சுகம்தான். அதை போக விட மனம் வருவதில்லை.

 

At September 30, 2006 2:09 AM , Blogger கூத்தாடி said...

வருகைக்கு நன்றி சுப்பய்யா .
சாதி அழிவதற்கு மனம் வேண்டும் ...சாதி என்பது மனிதனுக்குள் இருக்கும் ஒரு மிருகம்

 

At September 30, 2006 2:33 AM , Blogger கூத்தாடி said...

நன்றி நண்பரே அனாமியஸ் பெயரில் வந்து அசிங்கமாய் பேசுபவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் .உங்களை வெளிபடுத்துவதும் அனானிமி யாக வருவதும் உங்களின் உரிமை ..

//சாதி பற்றி எழுதும் எந்த பதிப்புக்கும் பின்னூட்டும் இடுவதில்லை என்று எனக்கு நானே விதித்துக்கொண்டதை சற்று விலக்கி,அனானியாக போடுகிறேன்.//

சாதி பற்றி இங்கு வரும் பதிவுகளைப் பற்றி வந்தக் கோபத்தில் தான் இந்தப் பதிவை எழுத ஆரம்ப்பித்தேன் ..

உங்கள் கொள்கையை தளர்த்தி கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

 

At September 30, 2006 4:53 AM , Blogger கோவி.கண்ணன் [GK] said...

//"சாதியும் நாமும்" //

இன்னும் இருக்கிறது ஆதாயம் !

நாமெல்லாம் ஒரே இனம்,
ஆனால் எதையும் என் குலம்
அல்லாதவர்க்கு விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

நாமெல்லாம் இறைவனின் பிள்ளைகள்
ஆனால் என்கடவுளே உயர்ந்தவர்,
என்மதத்தை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

அரசியல் வாதிகள் எல்லோரும் ஊழல் செய்பவர்கள்
ஆனால் என் கட்சியே சிறந்தது
என் தலைவரை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

எல்லா மொழியும் சமமானது
ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home