கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

மலையாளப் படத்தில் பிடித்தது

தமிழ் படங்களோடு மலையாள படங்களையும் பார்ப்பது உண்டு .ஓரிரு படங்கள் அல்ல ,நிறையவே பார்ப்பேன். பொதுவாக மலையாளப் படத் தரம் பற்றி நம் தமிழ் மக்களுக்கு நல்ல மதிப்பு உண்டு ,ஆனால் சமீப காலங்களில் வரும் பெரும்பான்மையானப் படங்கள் தமிழ் ,தெலுங்கு படங்களுக்கு ஒத்த மலையாளப் படங்கள் தான் .இப்போதல்லாம் மோகன்லால் படங்கள் ஹீரோவிசம் படங்கள் தான்.மம்மூட்டி கூட சமீபத்தில் அப்படிப் பட்ட சினிமாக்களில் தான் அதிகம் நடிக்கிறார் . சமீபத்தில் திலீப் சில நல்ல காமடிப் படங்களில் நடித்து இளையத் தலைமுறை ஹீரோவாக பரிமளித்து வருகிறார். சூர்யா நடித்த பேரழகன் அவர் நடித்த பட்த்தின் மறு உருவாக்கம் தான். மீரா ஜாஸ்மின் நடித்த பல ஹீரோயின் oriented படங்கள் இன்னமும் மலையாள திரை உலகில் ஓடத்தான் செய்கிறது. மீராவின் நடிப்பை அவர் தேசிய விருது வாங்கிய "பாடம் ஒன்னு ஒரு விலாபம்" என்றப் படத்தில் அவரின் humble preformance யைப் பார்க்கும் போது தமிழ் திரை இந்த நடிகையை பயன் படுத்தாதன் குறையை உணரலாம்.

பாடம் ஒன்னு படம் பார்த்தவுடனையே ஒரு பதிவு போடணும்ன்னு நினைத்து எழுதாம விட்டுவிட்டேன் . சமீபத்தில் பார்த்த இரண்டு நல்ல படங்களைப் பற்றி மறப்பதற்கு முன் எழுதிவிடலாம் ன்னு நினைச்சது தான் இந்த பதிவு.

ஒன்று - கதாவிசேஷன் - திலீபன் நடித்து டிவி சந்திரன் இயக்கியப் படம் . இயக்கியவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது , தீலிபன் இருக்கிறாரே என்று தான் எடுத்தேன் . படத்தின் முதல் காட்சியிலேயே தீலிபன் தற்கொலை செய்து கொள்கிறார் ,முதல் காட்சியிலேயே வழக்கமான தீலிபன் பண்ணும் காமடி படம் இல்லை என்று புரிந்துவிட்டது .ஆனாலும் படம் பார்க்கலாம் என தொடர்ந்தது நல்லது ,இல்லைன்னா ஒரு நல்லப் படத்தை தவற விட்டிருப்பேன்.

கதையில் தீலிபன் , கோபிநாதன் என்பவராக நடித்து இருக்கிறார் ,அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என அவர் பெண் பார்த்து சென்றிருந்த பெண் ,கதைகள் எழுதும் பெண் கண்டுப்பிடிக்க முயற்சிப் பது தான் கதை. ரேணுகா மேனன் ( நடிகைப் பெயர் ஜொதிர்மை என்று நினைக்கிறேன் ) என்ற அந்த பெண்
கோபி பற்றித் தெரிந்தவர்களை சந்தித்து அவர்கள் சொல்வதாகவே படம் செல்லுகிறது .படம் பெரும்பாலும் டாக்குமெண்ட்ரி மாதிரி தான் செல்லுகிறது ,கலர் fullஆக படம் பார்த்து பழகியவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம்தான் .ஆனால் கதை சொல்லுபவர்கள் பலர் ,கோபியின் அக்காள் ,அவரின் பால்ய நண்பர் ஸ்கூல் மாஸ்டர் ,அவர் விரும்பிய அத்தை மகள் ,அவரின் தெலுங்கு ,தமிழ் பெங்காலி நண்பர்கள் ,பொலிஷ் ,திருடன் என விரிகிறது . எல்லா உறவு களிடமும் உன்னதமான செயல்கள் மூலம் மறக்க முடிய நினைவுகளை விட்டுச் சென்றிருக்கும் கோபி ஏன் தற்கொலை செய்தான் என்பதைப் பற்றி எவருக்கும் எந்த விளக்கம் கொடுக்க முடியவில்லை .நம் பாண்டிய ராஜன் வந்து காரணத்தைக் கூறி படத்தை முடிக்கிறார்.

கோபி அநியாயம் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு protogonist .அந்தப் பாத்திரமாகவே திலீபனை பார்க்கமுடிந்தது.

கோபி - தெலுங்கு நண்பருடன் குடும்பதோடான உறவு ,அவர் மகள் மேதான கோபியின் பாசம் , குழந்தையின் பிணத்தோடு ஆந்திராவின் லாட்ஜில் உட்கார்ந்து இருப்பது போன்ற காட்சிகள் எதார்த்தம் , நம்மில் சிலருக்கு இதை ஒத்த அனுபவங்கள் இருக்கக்கூடும் .

பெங்காலில் ,பெற்றோரை தவறவிட்ட குழந்தையை வீடு சேர்ப்பதார்க்கான அவரின் முயற்சிகள் , குழந்தையை சேர்ப்பித்தவுடன் அவர்களிடன் வாங்கிய அடியுடன் தப்பி ஓடும் போதும் கூட கோபியின் சந்தோசம் ஒரு வாழ்க்கையின் ஹீரோ இப்படித்தான் இருக்கவேண்டும் என எண்ணம் தோன்றியது .

அஹமாதபாத்தில் கோபி,பாண்டிய ராஜன் ,தெலுங்கு நண்பர்களின் அங்குள்ள manson care taker பெண்ணுக்குரிய உறவு ,பாசத்தை யாதார்த்துடன் சொல்லி ,
ஒரு நாள் போதையுடன் வரும் கோபி ,பாண்டியராஜன் அந்த பெண்ணுடன் விளையட்டுவதை தவறாக பாண்டி அவரை பாலியல் தொந்தரவு செயவாதாக எண்ணி சண்டை போட்டு தூங்கி போய்விடும் கோபி , மறுநாள் காலை நண்பனுடன் மன்னிப்புக் கோரியப் போது சொல்லுவது "அவள் தங்கச்சி போல அல்ல ,தங்கச்சிதான் ..அவளை யாரவது தொந்தரவு பண்ணுவதை எப்படி சகிச்சுக்க முடியும் " .அந்தப் பெண் குஜராத்திப் பேசும் ,இவனால் ஒழுங்காக communicate பண்ண முடியாத பெண் தான் , ஆனால் கோபி யாருக்கும் அநியாயம் நடப்பதைப் பொறுக்கமுடியாத உணர்ச்சிகரமான் இளைஞன்.

கடைசியாக அன்று காலை எழும் கோபி , அன்றைய பேப்பரில் குஜராத் வன்முறயில் 13 பேர் கற்பழித்து க் கொல்லப்பட்ட அந்தப் பெண் படத்தைப் பார்த்து அழுதவாறு தற்கொலை கொள்கிறான் "Shame to live " என்ற வாக்கியங்களுடன் படம் முடிகிறது.

இந்த உலகத்தில் கோபி மாதிரியான் சுத்த ஆத்மாக்களுக்குள்ள புழுக்கத்தைப் பற்றிய கதை.குஜாரதில் நடந்த கலவர காட்சிகளுக்கு shame to live or shame to be indian என்று தோன்றுவது இயல்பே.

பல சமயங்களில் நடக்கும் அநியாங்களை தடுக்க முடியாமல் ,பார்க்காதது மாதிரி தாண்டிப் போகும் நமக்கு கோபி நம்மில் உள்ள மனிதத்தை ,அறச்சீற்றத்தை சிறிது தூண்டிப் பார்க்கிறது. அது சிறிது நேரம் தான் ,சன் டிவியில் அசினின் இடுப்பை பார்க்கும் போது கோபியாவது மண்ணாவது ..போய்க்கொண்டே இருப்போம் .

கோபி மாதிரி நபர்களை நம் வாழ்க்கையில் சந்திக்கக் கூடும் ,அவர்களை பெரும்பாலும் சண்டைக்காரன் ,குடிகாரன் என்று சொல்லி மலம் எனத் தாண்டித் தான் போயிருப்போம். மரத்து விட்ட மனம் கொண்ட நமக்கு ,இவர்கள் மனநிலை பிறழ்ந்தவர்கள் தான் .

மலையாளப் படதிலும் நிறைய குப்பைப் படங்கள் வருவதுண்டு ,ஆனால் திலீபன் ,மம்மூட்டி ,மோகன்லால் போன்ற மல்லு சூப்பர் ஸ்டார்கள் இதைப் போன்ற படங்களில் நடிப்பது அவர்கள் நல்ல கலைஞர்களாக இருப்பதார்க்கான அடையாளம். நம்ம ஊரில் கலைச்சேவை என்பது கோடிகளை குவிப்பதற்கு எந்த எழவில் வேண்டுமானலும் நடிப்பது மட்டுமே , இந்த மாதிரியானப் படங்கள் நம் சூப்பர் ஸ்டார்களின் இமேஜ் க்கு சரிவராது .இமேஜ் இருந்தாதான ஒரு நாள் CMஆக முடியும் .எம்ஜியாரு தான CM ஆனாரு ,சிவாஜியா ஆனாரு ..MGR is bad influence in our cinema industry .

மலையாளிகள் குஜராத் கலவரத்தை இப்படி ஒரு பார்வையுடன் பார்ப்பது நம்மில் ஒரு வெட்கத்தை உருவாக்குகிறது . அதனால் தான் என்னவோ கருணாகரன் மத்தியுலும் ஒரு அந்தோணியும் ,உம்மன் சாண்டியும் இருக்கிறார்கள் . நமக்கு ஜெயலலிதாவும் விஜய காந்தும் தான் கிடைப்பார்கள் .

அடுத்தப் படம் காழ்ச்சா ,இதைப் பற்றி திண்ணயில் ஏற்கனவே யாரோ எழுதியிருந்தார்கள் . கண்டிப்பாக அதைப் பற்றி அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

Labels:

5 Comments:

At December 01, 2005 5:26 PM , Blogger Radha Sriram said...

Dear koothadi,

nice review........it is been long since i watched malayalam movies...the review has made me go and get some....


cheers
Radha

 

At December 01, 2005 7:35 PM , Anonymous Anonymous said...

Dear

very good thoughts. what you are telling about malayalam film industry is right.

still all mallu mega stars are acting such nice movies.

see our tamil cinema except Kamal and some directors. our media taste is also totaly different.

not only cinema. media also have a responsibility.(but unfortunately they are very busy to write rajini 'hype's' and vijay)

keep write good things.

 

At December 01, 2005 9:36 PM , Anonymous Anonymous said...

Dear Koothadi

I am also a great fan of good Malayalam movies. You may see my comments on Kazhcha here http://www.maraththadi.com/article.asp?id=2777

Thanks for your revew on Dilip's movie will certainly watch it soon. Yesterday I saw the movie Akale. Please write about that film too if you've seen it already.

Thanks
S.Thirumalairajan

 

At December 02, 2005 10:05 AM , Blogger கூத்தாடி said...

ராதா - நன்றி .நல்ல மலையாளப் படம் பார்த்து நீங்களும் எழுதுங்க உங்க கருத்தை

நாஞ்சில் ஸ்டீபன் - சொந்த ஊரு நாஞ்சில் நாடா எந்த ஊரு

திரு - உங்கள் review படித்தேன் .சூப்பர்.
akale இன்னும் பார்க்கவில்லை vhs/dvd இன்னும் வந்த மாதிரி தெரியவில்லை

 

At December 02, 2005 6:44 PM , Anonymous Anonymous said...

Akale is available in Fremont Cocounut hill. They keep a large collection of Malayalam movies. Pl. checm my personal mail too.

S.T.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home