யாதும் ஊரே யாவரும் கேளிர்
முதல் பதிவாகையால் என்ன எழுதுவது என்று குழப்பத்தில் கூத்தாடி முழித்து கொண்டு இருப்பதால் ,எனக்கு பிடித்த கணியம் பூங்குன்றனாரின் கவிதையை திருடிப் போடுவதில் இருந்து கூத்து தொடங்குகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே , வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே , முனிவின்
இன்னாது என்றலும் இலமே , மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
முதல் இரண்டு வரிகளும் ,நமது அரசியல் மேடைகளிலும் Sun Tv பட்டிமன்றங்களிலும் , கமல் போன்றோர் அவ்வம் போது தமிலக மாக்களுக்கு வழ்ங்கும் அற உரைகளின் வழியாக எழுந்த ஆர்வத்தால் முழு கவிதை வாசித்த போது தோன்றிய வியத்தல் "இலம்" எனப் போதிலும் வியக்கவில்லை என்பது அதனி்னும் இலமே .
Labels: இலக்கியம்
1 Comments:
உங்கள் 'போடா'வுக்குப் போனால் 'போடா' என்கிறது."ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே!
சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??" - இது மட்டும் (இதையும் எங்கேயோ பாத்தது மாதிரி இருக்கு..இனொமீனோ...? இது ஒரு புதிரா?)தான் அங்கே இருக்கிறது.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home