கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

The Almond by Nedjma - ஒரு பார்வை

"The sexual awakening of a muslim women" என்ற கவர்ச்சியான அறிவுப்புடன் இருந்த புத்தகத்தை வலையில் படித்த சில விமர்சனங்கள் படிக்கத் தூண்டியது. படித்ததை பகிர்ந்து கொள்ளவும் என் கருத்துக்களை சொல்லவே இந்தப் பதிவு.

மொராக்கோ வின் கிராமத்து பெண் பத்ரா ,அவளுடைய ஒவ்வாத் திருமண பந்ததிலிருந்து தப்பி tangier நகரத்திற்கு அவரின் அத்தை செல்மாவின் வீட்டிற்கு வருவதில் இருந்து கதை தொடங்குகிறது.செல்மாவின் வீட்டில் வாழத் துவங்கும் பத்ராவின் tangier நகர அனுபவங்களும் அவரின் பழைய கிராமத்து வாழ்க்கையை விவரிப்பதுமாக மாறி மாறி தொடர்கிறது நெட்ஷ்மா என்ற புனைப் பெயரில் எழுதும் 50 வயதுக்கு பக்கத்திலுள்ள மொராக்கோ பெண்ணின் எழுத்து.

டிரிஸ் என்ற மேல்த்ட்டு டாக்டரின் தொடர்பின் மூலம் பத்ராவிற்கு எற்படும் பாலியல் விழிப்புணர்வுகளை பக்கம் பக்கமாக விவரித்து porno மொழியில் விவரித்து செல்லுகிறது.ட்ரிஸ்யுடன் ஏற்படும் முதல் புணர்ச்சிக்குப் பின் சொல்லும் பத்ராவின் வார்த்தைகளில் ("The world had suddenly become a caress.the world become a kiss.And I was nothing but a floating lotus flower...and it was not only in love with driss .My genitals,too ,revered him ) பத்ராவின் உணர்ச்சி கொந்தளிப்பை அறியச் செய்பவை.தொடர்ந்து வருபவை ட்ரிஸுடன் கூடிய உறவுகளின் பரிமாணங்களை அவர்களின் பல புணர்ச்சிகளை விவரிப்பதின் மூலமும் ,ட்ரிஸின் பல வித மான பாலியல் பகிர்வுகளின் மூலமும் விவரித்து செல்கிறது.அதே சமயம் பத்ராவின் கிராமத்து குழந்தைப் பருவ வாழ்க்கையயும் அவரின் கிராமத்து பாலியல் அனுபவங்களையும் மாறி மாறி சொல்லி செல்கிறது. பாலியல் அனுபவங்களை விவரித்து சொல்வதில் தான் முக்கால் வாசி நாவல் செல்லுகிறது.

nedjma வின் நேரிடையான கதைச் சொல்லும் எழுத்து சில இடங்களில் கவித்துவமாக மாறுவது ரசிக்க தக்கது . பத்ரா,ட்ரிஸின் முதல் புணர்ச்சிப் பற்றிய எழுத்து கண்டிப்பாக கதைச் சொல்லியின் துணிச்சலான் நடைக்காக ரசிக்கப் படும்.

கிராமத்து அனுபவங்கள் பல மொராக்காவின் வாழ்க்கையும், அங்குள்ள மனிதர்களைப் பற்றிய சில செய்திகளுடன் விமர்சனங்களை சொல்லியவாறே நகர்கிறது . பல பாகங்கள் நல்ல சிறுகதைக்கு ஒத்ததாக இருக்கிறது.எனக்கு பிடித்த நாவல் பகுதி இந்த கிராமத்து பகுதி தான்.

கிராமத்து பத்ராவின் குழந்தைப்பருவம்,அவளின் செல்மா அத்தையுடனான அன்பு, விடலைப் பருவ அனுபவங்கள் ,பத்ராவின் கல்யாணம் போன்றவை tangire அனுபவ தொகுப்பின் இடையே தனித் தனி அத்யாயமாக வருகிறது. சில அத்தியாயங்கள் கறாரான வாசகர் பார்வையில் சிறந்த சிறுகதைகளுக்கான் எல்லா கூறுகளையும் கொண்டது. முழுப் புத்தக வாசிப்புக்கு பிறகு ,தனியாக சிறுகதைப் போல் random ஆக வாசித்துப் பாருங்கள் நான் சொல்லுவது புரியும் .
எழுத்தில் இருக்கும் மெல்லிய நக்கல் ,பகடி வாசித்தலை porno எழுத்த்க்கிடையேயும் ரசிக்க வைக்கிறது.

பத்ராவின் கல்யாணம் பற்றிய பதிவில் 40 வயதான மணமகனுக்கு 3 வது பெண்ணாக பத்ரா பார்க்கப்படுவதும் , மணமகனின் தாயார் ,சகோதரியின் உடல் பரிசோதனைகளும் , கன்னிமை பரிசோதனையும் எளிய நடையில் சில விமர்சனங்களுடன் சொல்லிச் செல்கிறார் .

"They examined from top to bottom,feeling my breasts,my behind,my knees, and finally the curve of my calf. I felt like sheep for relegious holiday of Eid.All that was missing were the feast's ribbons . But ,Knowing the rules and customes ,I left them handle me without bleating.Why interfere with the well-oiled codes that change the hammam into a sok where human flesh is sold at a third of the prise of regular meat ? "

கடைசி வரிகளில் உள்ள கோபம் எல்லா ஊர்ப் பெண்களுக்கும் பொருந்தும். ஆணாதிக்க உலகில் பெண்களுக்கு அவ்வளவு தான் மதிப்பு.

குழந்தைக்காக அதுவும் ஆண் குழந்தைக்காகத் தான் 3 வது திருமணம் ,இது நம் நாட்டிலும் சில காலம் முன் வரை நடந்த ஒன்று தான்.

" A Light skin is a previlage of the rich ,a being blond is of the europeans and central asian turks, secendants of the days , the beys ,...."

என்ற வரிகள் தோல் நிறம் பற்றிய மக்களின் பார்வை கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதற்கான உதாரணம் . இதே மாதிரியான விமர்சனத்தை இணையத்தில் ஒரு சீன்ப் பெண் சொல்வதை வாசித்ததாய் ஞாபகம்.

டிரிஸ் ஒரு intellaxtual & sexual liberal ஆகவும் காட்டுகிறது .நாவலின் பல் பக்கங்கள் அவரின் பல பால் புணர்ச்சி மற்றும் பல பெண் உறவையும் சொல்லிச் செல்கிறது .அதே சமயம் பத்ரா அவரை விட்டுப் பிரிந்து ட்ரிஸ் இன் நண்பரை அழைக்கும் போது ட்ரிஸ்க்கு வரும் கோபம் ,ஆண்கள் எவ்வளவு liberalஆக இருந்தாலும் தன் பெண் தனக்கு மட்டுமே என்ற உணர்வில் தன்னலவாதியாகத் தான் இருக்கிறான்.

இதில் மொராக்கோ பற்றிய செய்திகளில் இருப்பவையின் நம்பகத் தன்மையை தெரிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும் .சொல்லப்படும் tangire யின் மேல்த்தட்டு வாழ்க்கை மேற்கு நாடுகளில் கூட குறைவுதான் ,அது மொராக்காவின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதல்ல.ஆனால் கிராமத்து விவரிப்புகள் பற்றித் தான் என் ஆர்வம்.

இது கதை சொல்லியின் வாழ்க்கையா அல்லது புனைக்கதையா என்பது பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.ஆனால் nedjma வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க கூடும்.

பிரான்ஸிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த இந்த நாவலின் popularity வியக்கவைக்கிறது. எனக்கென்னமோ "முஸ்லீம் பெண்" விடயம்த் தான் இந்த அளவு புத்தகம் விற்பதற்கும் காரணம் எனத் தோன்றுகிறது.தலீபான்,அல் குயாடா பற்றி பேசியே காலம் கடத்தும் அமெரிக்க ஊடகங்களுக்கு முஸ்லீம் பெண் எழுத்தாளரின் பாலியல் புத்தகத்தை உயர்த்தி பிடிப்பது அரசியல் ம்ற்றும் வியாபார தந்திரம் .

Nedjama வின் இந்த நாவல் ஒரு பெண்ணின் அனுபவமே அல்லாமல் அதில் எந்த பெண்ணியமோ அல்லது முஸ்லீம் பெண் விடுதலை பற்றியோ எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எழுத்தாளரின் எண்ணம் கூட அப்படி இருப்பதாக தெரியவில்லை.இதில் மதம் பற்றி எதுவுமே இல்லை.இதில் எழுத்தாளர் முஸ்லீம் என்பதாலும் கதைக் களம் மொராக்கோ என்பதாலும் மட்டுமே இஸ்லாம் இந்த கதையில் வருகிறது.Nedjma விற்கு இஸ்லாமை விமர்சிக்க ஒரு நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.சில இடங்களில் அவர் ரமலான் நோன்பு இருப்பது மட்டுமே அவரின் கடவளுடனான தொடர்பு என்றும் அதையும் ட்ரிஸ் ய்டனான புணர்ச்சியால் ஒழுங்காக நோன்பு இருக்க முடியவில்லை என சொல்லும் போது அவருக்கு கடவுள் மதம் பற்றிய விமர்சனம் எதுவும் இருப்பதாக இல்லை.

ஆனால் இதே நாவல் மேற்கு கிறித்துவ பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தால் அமெரிக்காவில் கண்டிப்பாக இந்த அளவுக்கு கவனிக்கப்பட்டிருக்காது. அமெரிக்க ஊடகங்களைப் பொருத்த வரையில் முஸ்லீம் பெண்கள் வெறும் பர்தா பெண்கள் , அவர்கள் பாலியல் சுதந்தரம் என்பதே இல்லை என்பதாகத் தான் சொல்வார்கள் . "sexual awakening of musilm women" என்று சொல்வதற்கு எதுவும் இல்லை , ஒரு பாலியல் சுதந்தரம் மேல் நாட்டமுள்ள பெண்ணின் அனுபவம் ,முஸ்லீம் என்பது வியாபாரத் தந்திரம் மட்டுமே.

மற்ற படி இந்த நாவல் வாசிப்பு ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.


பின்குறிப்பு: The alomond - தலைப்பு பெண்களின் clitoris யை குறிப்பது என்பதே பெரும்பான்மையோர் எண்ணம் .என்னுடைய கருத்தும் அதுவே.
porno மொழி என்பதை ,விரசம் என்னும் அர்த்ததில் சொல்ல வில்லை . porno literature ஒரு அங்கீகரிக்கப் பட்ட இலக்கியமாகத் தான் கருதுகிறார்கள் ,அந்த அர்த்ததில் தான் எழுதியுள்ளேன் .

Labels:

4 Comments:

At October 02, 2005 4:17 AM , Blogger Vaa.Manikandan said...

//ஆனால் இதே நாவல் மேற்கு கிறித்துவ பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தால் அமெரிக்காவில் கண்டிப்பாக இந்த அளவுக்கு கவனிக்கப்பட்டிருக்காது.//

ஆனால் ஒரு கிறிச்தவப் பெண் இந்த தலைப்பில் எழுத அனுமதிக்கப்படுவாளா, அல்லது எழுதிய பின் எழும் பிரச்சினைகள் சாதாரணமாகவா இருக்கும்?.

 

At October 04, 2005 3:10 PM , Blogger கூத்தாடி said...

மணிகண்டன்
பல கிறுத்துவ பெண்கள் erotic நாவல்கள் எழுதி இருக்கிறார்கள்.அவர்கள் யாரும் கிருத்துவ பெண்ணாக அடையாளப்ப்டுத்த படுவதில்லை.ஆனால் நெட்ஷ்மா முஸ்லீமாக அடையாள படுத்த படுவது தான் என் விமர்சனம் .

 

At October 05, 2005 3:51 PM , Blogger Mookku Sundar said...

நல்லா எழுதறீங்க...

ஆனா, பதிவோட பேர் கொஞ்சம்
ஆர்வத்தை குலைக்கிற மாதிரி இருக்கு..

காரணம் ( முடிஞ்சா) சொல்லவும். :-)

 

At April 13, 2006 10:44 AM , Blogger கூத்தாடி said...

சல்மா வின் இரண்டாம் சாமம் பற்றி எழுதணுண்னு நினைத்து நாளாகி விட்டது,சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன் .நாகூர் ரூமியின் "அழுகிய முட்டை" பதிவுக்கு என் எதிர்ப்பை பதிவு செய்திருந்தேன் . வருகைகு நன்றி நேசகுமார் .

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home