கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

வருங்கால தமிழக அரசியல் - தகுதிகள் வாய்ப்புகள் -I

வருங்கால தமிழக அரசியல் - தகுதிகள் வாய்ப்புகள் -I

அடுத்த 10 வருடங்களில் ஒருத் தகுதியான தமிழக தலைவரை இந்த தேர்தலில் அடையாளம் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கருணாநிதிக்கு இது கண்டிப்பாய் கடைசித் தேர்தல். ஜெக்கும் அப்படித்தான் மீறிப் போனால் இன்னும் ஒரு தேர்தல்.ஆதலால் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு மற்றவர்களை அலசும் நோக்கத்தில் எழுத ஆரம்ப்பித்துதான் இந்தப் பதிவு.

தமிழ் அரசியல் சூழலில் வரும் தேர்தல் பல அரசியல்வாதிகளின் வருங்கால கனவை நிர்ணயம் செய்வதாய் தோன்றுவதால் பலருக்கும் இது முக்கியமான தேர்தல் . கருணாநிதியின் கூட்டணியிலுள்ள பாமக,மதிமுக மற்றும் வெளியே உள்ள விஜயகாந்த் ,திருமாவளவன் போன்றோரின் அரசியல் பாதையை முடிவு செய்யும் தகுதி இந்த தேர்தலில்உள்ளது .

கேப்டனுக்கும் ,சிறுத்தைக்கும் காலம் உள்ளது,இது வெள்ளோட்டம் பார்த்துக்கொள்ள வசதியாய் இருக்கும்.

ஆனால் வைகோ வுக்கு இது கண்டிப்பாய் முக்கியமான தேர்தல். அவரது முடிவு வரும் காலத்திற்கான படிக்கட்டுகளாய் இருக்க வேண்டும் .ஆனால் கரிசல் சிங்கத்தின் சமீபத்திய தடுமாற்றம் வைகோ மீதான மரியாதயைக் குறைத்துள்ளது.

திமுகவுக்கு ஸ்டாலினை அரியணையில் எற்ற இது தான் கடைசித் தருணம்.

அதிமுக வுக்கு ஆட்சியை தக்க வைப்பது முக்கியம் தான்.ஜெக்கும் வயசகிறது,அடுத்த தேர்தலுக்கு அவரின் உடல் நிலை ஒத்துவருமா என்பது கேள்விக் குறியே.

பாமக - ராமதஸ் சந்தர்ப்ப வாதியாகத்தான் மற்ற சமூகத்தினரால் பார்க்கப் படுகிறார்.ஆனால் அவரும்,திருமாவும் வரும் காலங்களில் வட தமிழகத்தின் பலமான கூட்டணியாக சாத்தியக் கூறுகள் அதிகம்.

விஜயகாந்த் பல கனவுகளுடன் 2011 தேர்தலை நோக்கி செல்கிறார்.அவரின் செயல்பாடுகள் இன்னும் சொல்லிக் கொள்வதாய் இல்லை.இன்னும் சினிமா பாணியில் தான் செயல்படுகிறார். பண்டுருட்டி அவ்ருடன் இருப்பது பலம்.

கலைஞர் அவரின் கூட்டணியை தேர்தல் வரை இழுத்துப் பிடித்து வைத்து இருந்தால் திமுக கூட்டணியே வெல்ல வாய்ப்பு அதிகம்.ஆனால் ஸ்டாலினை அரியணை எற்ற வசதியான பலம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

என்னுடைய எண்ணத்தில் கவனிக்க வேண்டியவர்கள்

திமுகவில் ஸ்டாலின் ,தாயாநிதி ,அழகிரி ,கனிமொழி

வைகோ

ராமதாஸ்,அன்புமணி

திருமா

அதிமுகவில் காளிமுத்து,தினகரன்

வாசன்,சிதம்பரம்,கார்த்திக் சிதம்பரம்

விஜயகாந்த்

கார்த்திக்

இவர்களின் வாய்ப்புகளையும் ,தகுதிகளையும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home