கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

வருங்கால தமிழக அரசியல் - தகுதிகள் வாய்ப்புகள் -II

வருங்கால தமிழக அரசியல் - தகுதிகள் வாய்ப்புகள் -I I

இந்தப் பதிவில் திமுகவின் தலைவராக அல்லது பலமான தலைவர்களாக வர வாய்ப்புள்ளவர்களின் பலம்,பலவீனங்களை ஆராய்வோம்.

ஸ்டாலின் - பட்டத்து இளவரசன்

இந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் இவரைப் பட்டம் சூட்ட எல்லா முயற்சிகளும் ,முதல் இரண்டு வருடங்களுக்குள் நடக்கும். அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் , எதிர்ப்பு அரசியல் பண்ணாதவர்களுக்கும் தான் இந்த தேர்தலில் இடம் கிடைக்கும். வரும் தேர்தலில் இவர் முன்னிலைப் படுத்தப்படுவார்.

வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டப்ப்ட்டாலும் ,ஸ்டாலினின் அரசியல் அன்பவமும் .தேர்தல் அனுபமும் அவர் வயதொத்த எந்த அரசியல்வாதியை விடமும் குறைந்ததல்ல. மூன்று முறை MLA ஆகவும் ,சென்னை மேயராகவும்
இருந்திருகிறார்.பல தேர்தல்களை கண்டுருக்கிறார்,அவருக்கென ஒருக் கூட்டத்தை திமுக வில் சேர்த்துவைத்துருப்பது திமுக வில் இவர் கலைஞருக்குப் பின் தலைவராக வருவதற்கான எல்லா வகைகளிலும் உதவி செய்யும்.

தகுதிகளும் பலமும்
தகுதி கலைஞரின் வாரிசாக பல காலம் அறியப்பட்டவராக இருப்பது . மேயராக இருக்கும் போது சில நல்ல காரியங்கள் செய்தது. தமிழகம் முழுதும் அவருக்கென ஆதரவாளர்களை வைத்து இருப்பது. முன்னணி திமுக தலைவர்கள் (அன்பழகன் , துரைமுருகன், ஆர்காற்டு ) மனதளவில் இவரின் தலைமைக்கு ஆதரவாய் அல்லது எதிர்க்காமல் இருப்பது .வாசன் ,அன்புமணியின் வருகை வாரிசு அரசியலில் இவர் மேல் இருந்த விமர்சனங்களை புளித்துப் போக செய்துவிட்டது.

எதிரிகளும் பலவீனங்களும்

கலைஞரின் மகனாய் இருப்பதுவே பலமும் பலவீன்மும் . கலைஞரின் பேச்சாற்றலோ ,இலக்கியத் திறமையோ நிர்வாகத் திறனோ இவரிடம் இருப்பதாக தெரியவில்லை .கலைஞருடன் இவரை ஒப்பிடுவதை தவிர்க்க முடியாது. கருணாநிதியின் ஆளுமையும் ,அனுபவத்துடன் ஒப்பிட்டால் ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை.தந்தையிடம் இருந்து எதுவும் கற்றுக்கொண்டதாயும் தெரியவில்லை.

திமுக விலே யே இவருக்கு இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் எதிர்ப்பு இருக்கிறது .வீரபாண்டி ஆறுமுகம் ,பெரியசாமி , கோசி மணி போன்றொரின் அதிருப்திக்கு ஆளாகிருக்கிறார் . ஸ்டாலின் இன்னமும் முழு கட்சியை அரவணைத்தாய் தெரியவில்லை . தளபதியைச் சுற்றி ஒரு அதிகார வட்டம் இருப்பதால் அவர் எளிதில் அணுக முடியாதவராக இருப்பதாக திமுக வினரே புலம்புவது ஒரு உதாரணம்.

கட்சியில் எதிரிகள் என்றால் வீட்டுக்குள்ளே தான் ,அழகரி தென் மாவட்டங்களில் ஸ்டாலினுக்கு பிரச்சினை கொடுப்பவராகவே இருக்கிறார் . கலைஞர் காலத்திற்குப் பின் உறவுகள் கசப்பாக போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அழகிரியின் அரசியல் அடாவடி அரசியல் படித்த மக்களிடையே வெறுப்பைக் கொடுத்தாலும் ,அவர் தொண்டர்களுக்கு பிடித்தவராகவே மதுரையில் இருக்கிறார் . அழகரியுடன் சமரசம் செய்து கொள்வதால் தென் மாவட்டங்களை அவருக்கு விட்டு கொடுக்க வேண்டும் ,அல்லது அழகரியின் ஆளுமையிலிருந்து தென் மாவட்டங்களை இவர் வசம் கொண்டுவர வேண்டும்.இது ஸ்டாலினால் முடியுமா என்பது சந்தேகமே.

தாயாநிதியின் வரமும் ,குறுகிய காலத்தில் அவர் அடைந்த வளர்ச்சியும் ஸ்டாலினுக்குப் பிரச்சினைத் தான். சன் டிவியின் மீடியாப் பவர் மாறனை முன்னிறுத்து அளவுக்கு ஸ்டாலினை காட்டுவதில்லை. கலைஞர் - மாறன் உறவு போல் ஸ்டாலின் -மாறன்கள் உறவு அமையுமா என்பது சந்தேகம் தான். மாறன்கள் இவருக்கு பிரச்சினைகளை குடுக்கக் கூடும் . அவர்களின் ஊடக ஆளுமை (தினகரன் , தமிழ் முரசு ,சன் ) ஸ்டாலினுக்குத் தேவை ,அதனால் சமரசமாய் டெல்லியை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.

கனிமொழி அரசியலுக்கு வருவாரா என்பது கேள்விக்குரிய விசயமே ,அவரின் இலக்கிய உலகமும் ,கருத்து போன்ற நிகழ்வுகளில் அவர் திமுகவின் stereo type கொள்கைகளில் உடன்பாடு இருப்பதாக தெரியவில்லை.கலைஞருக்குப் பின் அவருக்கு திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் ஆதரவளிக்க எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இவர் அரசியலுக்கு வந்தாலும் பெரியாதாய் எதுவும் செய்ய முடியாது என்பதே ஸ்டாலினுக்கு ஆறுதல்.

வைகோ வின் மதிமுக கலைஞர் அபிமானிகளின் ஓட்டுக்களை பிரித்து விடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருப்பதால் திமுக வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள க்டுமையாய் உழைக்க வேண்டிவரும் .

ஸ்டாலின் ராசா வீட்டு கண்ணுக்குட்டியாக வே இருந்து விட்டதால் இவருக்கு ஜெ யின் தாக்குதலில் இருந்து எப்படி தப்புவார் என்பதை இனி மேல் தான் பார்க்க வேண்டும் .இதுவரை கலைஞர் காப்பாற்றினார். ஜெ இவரை உள்ளே வைக்கவும் முயற்சி பண்ணியது ஞாபகம் இருக்கட்டும். அண்ணாநகர் ரமேஷ் விவகாரம் போன்றவை இவர் vulnurable என்பதைக் காட்டுகிறது .இது நல்ல தலைவர்க்கு அழகல்ல .

காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இவருக்கு ஆதரவு தருவார்கள் என எண்ண முடியாது . கலைஞரின் வெற்றிடத்தை ஆதாயம் பார்க்க எல்லாக் கட்சிகளுமே முயற்சிக்கும் .

பலம் - திமுக ,கலைஞர்,குடும்பம்
பலவீனம் - அனுபவம் இன்மை ,தலைமை பண்பு இல்லாமை
உள்கட்சி எதிரிகள் - அழகிரி ,மாறன்கள்
பிராதான எதிரி - வைகோ
களங்கம் - பாத்திமா ,ரமேஷ் விவகாரம்
வாய்பு - 2006 தேர்தல்

ஆருடம்

வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வர் ஆக பொறுப்பேற்று கருணாநிதி வழிநடத்த நல்லாட்சி கொடுத்தால் எதிர்காலம் உண்டு.ஜெ ஜெயிதால் பிரச்சினைகள் இவரை நோக்கியே வரும் .

மார்க்
நிர்வாகம் - 40
தலைமைப்பண்பு -50
நம்பகத்தன்மை - 30
அரசியல் அனுபவம் - 50
popularity - 40
கட்சி ஆதரவு -60
மக்கள் ஆதரவு - 40

மொத்ததில் பாஸ் மார்க் குடுக்கலாம் .பார்ப்போம் இவர் எப்படி வைகோ ,ஜெ ,விஜய காந்த்தைத் தாண்டி முன்னுக்கு வருகிறாரா என்று பார்ப்போம் .

Labels:

1 Comments:

At March 01, 2006 12:08 PM , Blogger siva gnanamji(#18100882083107547329) said...

good analysis
what is that fathima vivaharam?

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home