சரத்குமார் விலகல் -திமுகவின் கெஞ்சல்
சரத் திமுக விலிருந்து விலகியது திமுகவுக்கு இழப்பா ?
சில தென் தமிழக நாடார்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் சரத்துக்கான ரசிகர்கள் அதிகம்.அவர் நாடார் தலைவராக வர முயற்சிக்கிறார்.அதிமுக வில் சேருவாரா? சிவந்தி ஆதித்தன் தீவிரமாக மூளைச் சலைவை செல்வதாக கருத்துக்கள் நிலவுகிறது.
சரத் எவ்வுளவு தூரம் திமுகவுக்கு பலம்.சரத் நாடார் வோட்டுக்களை அறுவடைச் செய்யும் அளவுக்கு பலம் பொருந்தியவரா ? சரத்தை ஒரு நடிகர் என்று தாண்டி அவரின் தீவிர ரசிகர்கள் மற்றும் திமுகவை பிடிக்காதவர்களின் ஓட்டுக் களை வேண்டும் என்றால் அவரால் மாறும்.நாடார்களின் ஒட்டு மொத்த தலைவராக அவரைக் கொள்ள முடியாது.அப்படி என்றால் திருநெல்வேலியில் அவர் தோற்றிருக்க முடியாது. பொதுவாக அண்ணாச்சிகளிடம் சினிமாக் கவர்ச்சி அதிகம் செல்லுபடியாகாது .இன்னமும் காங்கிரஸ்க்கு மதிப்பு இருக்கிறது . கலைஞர் ஏன் அவரிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார் என்பது தெரியவில்லை.ராதிகா factor போலும் .ராதிகாவை இழக்க கலைஞர் யோசிக்கிறாரோ என்னவோ .
சரத் திமுக வில் இருந்து விலகியதற்கு அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வில்லை எனக் கூறுகிறார்கள் .அவர் அமைச்சர் பகுதிக்கு எப்படித் தகுதியாவார் என்றுத் தெரியவில்லை. பாராளுமன்றத்துக்குப் போவதைவிட சூட்டிங் போவதை விரும்பும் எப்படி அமைச்சர் பதவிக் கொடுப்பார்கள். அவருக்கு தீவிர அரசியல் மேல் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் அவர் நடிப்பை குறைத்துக் கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு இருக்க வேண்டும். திமுகவில் இவர் பயன் அடைந்தது தான் அதிகமாக இருக்கும் .சன் டிவி கூட இவரைத் தாங்கியது .
அதிமுகவில் சேருவாரா ?
இப்போதைய நிலமையில் அவருக்கு வேறு வழிகள் குறைவு .புதுக்கட்சி ஆரம்ப்பிப் பதற்கான நேரமும் அதற்கான ரசிகர் மன்ற அமைப்பும் தமிழக அளவில் இருப்பதாக தெரியவில்லை. ராதிகாவின் ராடன் சன் டிவியில் இருந்து துரத்தப் பட்டால் அவர்களுக்கு ஒரு பெரியக் கட்சியின் ஆதரவு கண்டிப்பாய் தேவை. ஆனால் ஜெயலலிதா ஜெயித்து வந்தால் இவர்களை மதிக்க மாட்டார்கள் என்பதும் ,சசிகலா நடராசன் வகையறாவின் good book யில் இவர் இல்லை என்பதும் இவரை யோசிக்க வைக்கும் .
விஜயக் காந்துக்கு இவர் ஆதரவு அளிக்கலாம் ,ஆனால் விசயக்காந்தின் கிச்சன் கேபினட் அதை விரும்புவதாக தெரியவில்லை.தேதிமுக வில் விசயக்காந்தைத் தவிர வேறு பிரபலங்கள் வருவதை அவர் ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள். ஒன்று சரத் இந்த தேர்தலில் அவர் நடிப்பை மட்டும் பார்த்துக்கொண்டு ஒரு அறிக்கை விட்டுக் கொண்டு ஒதுங்க வேண்டும். அல்லது அதிமுக வில் சேர்ந்து அம்மா புகழ் பாடி இருக்கிற Business கெடாமல் இருக்கப் பார்த்துக் கொள்வது .இரண்டாவது option யே சாஸ்வதம் .
அதிமுகவில் சேர்ந்தால் திமுகவுக்கு பாதிப்பு சிலத் தொகுதிகளில் இருக்கும் ,அதுவும் சில ஆயிரம் ஓட்டுக்களில் இழுபறி இருந்தால் மட்டுமே அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.அதிமுகவின் தேவர் ஆத்ரவு அண்ணாச்சி மார்கள் அதிமுக வுக்கு ஓட்டுப் போடுவதை யோசிக்க வைக்கும்.தீவிர ரசிகர்கள் / சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராகவே இருக்கிறார்கள் அந்த விசயத்தில் திமுக இழப்பதற்கு ஒன்றுமில்லை.
திமுகவின் கெஞ்சல் அவர்களின் பலவீனத்தையே குறிக்கிறது.எம்ஜி யார் காலத்தில் தொடர்ந்து தோற்று கொண்டிருந்த போது இருந்த போதிருந்த மனத்திடம் திமுக வின் இல்லை.கலைஞரின வயது அவரை soft யாக மாற்றி விட்டதாகத் தோன்றுகிறது. கலைஞர் யாரையும் விரோதிக்க யோசிக்கிறார் அது அவரின் பெருந்தன்மையாக பார்க்கப் பட மாட்டாது ,பலவீனமாகவே பார்க்கப் படும் .
என் ஆசை
======
1. சரத் அம்மாவிடம் அடைக்கலம் ஆக வேண்டும்
2. ஜெ தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும்
3. அப்புறம் இவருக்கும் வைகோ வுக்கும் ஆப்பு தான்
ஜெக்கு த்தான் இவர்களின் தகுதிக்கு அளவுக்கு மட்டுமே மதிப்புக் கொடுப்பார்,காரியம் முடிந்ததும் மிதிப்பார். அந்த விசயத்தில் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
Labels: அரசியல்
5 Comments:
நண்பரே கூத்தாடி,
உங்கள் கட்டுரையையும் இப்போதுதான் படித்தேன். நன்றாக எழுதி உள்ளீர்கள்.என் கட்டுரையை விட உங்கள் கட்டுரை விளக்கமாக அமைந்துள்ளது.தலைப்பு மிஸ்லீடிங்காக இருந்தாலும் கட்டுரை நன்றாக வந்திருக்கிறது நண்பரே.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
please remove word verification option
கலைஞரின் பலவீனங்களாக நாம் கருதும் சில விஷயங்கள் தான் அவரை எந்த கவர்ச்சி அம்சமும் இல்லாதபோதும் தமிழக அரசியலில் இத்தனை காலம் இருக்க வைத்திருக்கிறது.
வருகை தந்தற்கு நன்றி நண்பர்களே.
//பலவீனங்களாக நாம் கருதும் சில விஷயங்கள் தான் அவரை எந்த கவர்ச்சி அம்சமும் இல்லாதபோதும் தமிழக அரசியலில் இத்தனை காலம் இருக்க வைத்திருக்கிறது.//
பலவீனம் என நான் கருதுவது இந்த நடிகர்களைக்கு அளவுக்கு மேல் மதிப்புக் கொடுப்பதும் ,அவர்களின் தகுதிக்கு மேல் பதவிகள் கொடுப்பதும் .சரத்துக்கு ராஜ்ய சபா பதவிக் கொடுத்ததே நான் தவறு என்றுதான் சொல்லுவேன் .எனக்கு சரத்தை நடிகராகப் பிடிக்கும் ,ஆனால் நடிகர்களின் விருப்பு வெறுப்புக்கள் நாட்டின் விருப்பு வெறுப்புகளாகக் காட்டப்படுவது சகிக்க வொண்ணாதாக இருக்கிறது.
சரத்குமாரின் முடிவு அவருக்கான ஆப்பை ஏற்கனவே இறுதி செய்து விட்டது.
இந்த தேர்தலுக்காக அதிமுகவுடன் இனைவதை விட பேசாமல் இருந்து விட்டு தேர்தல் முடிவுகளுக்கு பின் அய்யாவிடம் சமாதானம் கொள்வதா அம்மாவிடம் சரணடைவதா என நிதானமாக யோசிக்கலாம்.
இது ராடனுக்கும் நல்லது. சரத்துக்கும் நல்லது. ஆனால் செய்திகள் வெளியாவது போல 20 கோடி கடனை அடைக்க என்றால் தன் பெயர் பற்றி கவலைப்படாமல் அம்மாவிடம் சேர்ந்து விடுவது. இப்போதைக்கு அதிமுகவிற்கும் இப்படி ஓரு வெளிச்சம் தேவை என்பதால் பேரம் கூடுதலாகவும் படியலாம்.
//இது ராடனுக்கும் நல்லது. சரத்துக்கும் நல்லது. ஆனால் செய்திகள் வெளியாவது போல 20 கோடி கடனை அடைக்க என்றால் தன் பெயர் பற்றி கவலைப்படாமல் அம்மாவிடம் சேர்ந்து விடுவது. இப்போதைக்கு அதிமுகவிற்கும் இப்படி ஓரு வெளிச்சம் தேவை என்பதால் பேரம் கூடுதலாகவும் படியலாம்.//
வருகைக்கு நன்றி தயா
20 கோடிப் பேரம் எனக்கு தெரியவில்லை. குமுதம் ரிப்போட்டரில் பேரம் பற்றிய தகவல் இப்பத் தான் படித்தேன் ,ஆனால் ஜெ இவர் worth ன்னு யோசிப்பதா எழுதியிருந்தாங்க ..சரத்துக்கு 20 கோடி கிடைக்கும் ன்னா அதிமுகவுக்கு அவர் போறது தான் சரி .
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home