கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

விபாசனா -ஒரு ஆத்ம தரிசனம்

புத்த மதம் பற்றி சில அறிவுகள் இருந்தாலும் ,புத்தரைப் பற்றி ஓஷோ எழுதிய தம்ம பத உரையை படித்த போது புத்தரைப் பற்றி படிக்கும் ஆர்வத்தில் பெளத்தம் பற்றி படிக்க ஆரம்ப்பித்தேன் . புத்தமதத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஒரு நல்ல அறம் சார்ந்த விசயம் (கொல்லாமை /பொய் சொல்லாமை / போதை பொருள் சாப்பிடாமை ..) இவைகளை எல்லா மதமும் தானே சொல்லுகிறது ,மேலும் அது தத்துவ ரீதியாக என்ன சொல்லுகிறது என்பதைத் தேடிக் கொண்டு இருந்த போது அருகாமையில் தைவானைச் சேர்ந்த புத்த மடாலயம் ஒன்றை சன்னிவேலில் திறந்தார்கள் அவர்கள் புத்தமதம் பற்றிய வகுப்பை கேள்விப்பட்டு நானும் சில நண்பர்களும் சென்றோம் .

புத்த பிக்குவாக அங்கு இருந்தவர் Cal tech இல் computer science இல் Doctrate வாங்கியவர் அதன் பின் புத்தமதத்தில் ஈடுபாடு கொண்டு மொனாஸ்டிரியில் சேர்ந்தவர் .அருமையான் பேச்சாளர் ,அவரிடம் இருந்து புத்த மத தியானத்தையும் புத்த மதம் பற்றிய சிறப்பான விளக்கங்களையும் கற்றுக் கொண்டோம் . 30 - 45 நிமிடம் வாரம் ஒருமுறைப் பண்ணும் தியானம் பிடித்திருந்தது ஆனால் வழக்கத்திற்கு வரவில்லை அதற்கு காரணம் என் சோம்பேறித்த்னம் தவிர வேறில்லை.

என் நண்பன் மூலமாக விபாசனா என்னும் புத்தர் கற்றுக் கொடுத்த தியான முறையை கோயங்கர் என்பவர் இந்தியாவில் கற்றுக் கொடுத்த்க் கொண்டு இருக்கிறார் எனவும் அவர்களின் செண்டர் ஒன்று கலிபோர்னியாவில் யோசிமிற்றி பக்கத்தில் இருப்பதாகவும் கேள்விப் பட்டு அவர்களின் web site ல் படித்து தெரிந்து கொண்டாலும் அதன் விதிமுறைகள் பாத்து கொஞ்சம் பயந்து போய் நம்மால் முடியுமா என்று எண்ணி தள்ளி போட்டுவிட்டேன் . கடைசியாக போன் வருசம் பெப்ரவ்ரியில் மனைவி ஊருக்குப் போயிருக்கும் போது துணிந்து போய் விட்டேன் .

சாண்டா கிளாராவில் இருந்து யோசிமிற்றிக்கு வழ்க்கமான பிரஸ்னோ வழிதான் போக எண்ணியிருந்த போது நண்பர் Ca-152 வழியாக back route ஒண்ணு சொன்னார் அதை குறித்துக் கொண்டு கிளம்பியப் பயணம் வெகு அருமை அந்த வருடம் பெய்த மழையினால் வழியெங்கும் பசுமை பெருசா டிராபிக்கும் இல்லாததால் மூன்று மணி நேரப் பயணம் இனிமையாகவே இருந்தது .

North Fork என்ற இடத்தில் இருக்கிறது வட கலிபோர்னியாவின் விபாசனா நிலையம் .போய் இறங்கிய உடன் ஒரு பாரம் எழுதி கையெழுத்துப் போட்டு விட்டு தங்கும் இடத்திற்கு வழி காட்டினார்கள் .அருமையான மலைப் பகுதியில் இருந்தது தியான நிலையமும் (அவங்க தம்மா ஹால்ன்னு சொல்லுவாங்க) அதைச் சுற்றி தங்கும் விடுதிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும்த் தனி தனியாக இருந்தது . எனக்கு டாரிமெண்டிரி ஸ்டையில் பெட் யும் அதில் துணி போட்ட மறைப்புடன் 15 பேர் தங்குவது மாதிரியான 2 Rest Room aka Bath room உள்ள ஒரு பெரிய ஹால் .நான் ஏற்கனவே லேட்டாக வந்ததால் குளித்து விட்டு 8 மணிக்கு தம்மா ஹாலுக்கு சென்று விட்டேன் அங்கு அவர்கள் ஒவ்வொருவராய் கூப்பிட்டு ஒரு இருக்கை கொடுத்தார்கள் ,கிட்டத்தட்ட 100 பேர் இருக்க கூடிய பெரிய ஹால் .ஆண்களும் பெண்களும் சரி பாதியாக இருந்தார்கள் .பெரும் பாலோனோர் வெள்ளைக்காரர்கள் ,சில இந்திய முகங்கள்.நான் சுத்தி முத்திப் பாத்தேன் மருந்துக்குக் கூட புத்தர் சிலையோ அடையாளங்களோ கிடையாது ..இன்னாடா தப்பா எதுக்காவது வந்துட்டமான்னுக் கூட யோசிச்சேன்

துணை ஆசிரியர் எனப்படுபவர் (அங்கு ஆசிருயர் ,துணை ஆசிரியர் தான் ..குரு எல்லாம் கிடையாது ) அந்த 10 நாள் வகுப்பைத் தொடங்குவதற்கு முன் விதி முறைகளை சொல்லி விட்டு ஒரு டிவிடி எடுத்து டிவியில் படம் போட்டார் .அதில் கோயங்கர் (அவர் ஆசிரியர்) என்னப் பண்ணப் போகிறோம் என்ன என்ன Scedule போன்றவற்றை சொல்லி விட்டு கோர்ஸ் தொடங்கினார் .அடுத்த நாள் காலை முதல் சீரியசான தியானங்கள் தொடங்குவதால் கொஞ்சம் நெர்வஸ்யாகத் தான் இருந்தது .இப்படியாக ஆரம்ப்பித்தது .

விதி முறைகளையும் / கால அட்டவணையும் பாருங்கள் http://www.dhamma.org/code.htm

ஐந்து precepts எடுத்துக் கொண்டு தான் வகுப்பு ஆரம்பிக்கும் ..இது புத்த மதத்தின் தலையானக் கோட்பாடு ..இது தான் அவை

1 . to abstain from killing any living creature;

-கொல்லாமை .அங்க தான் சாப்பாடு சைவம் தான் போடுறாங்க அதினால பிரச்சினை இல்ல .வேகன் ஆளுங்களுக்குக் கூட தனியா சாப்பாடு வ்வத்திருந்தங்க.
2. to abstain from stealing;

-திருடாமை .இது ஒரு பெரிய விசயமில்லை.
3. to abstain from all sexual activity

- செக்ஸ் வைத்துக் கொள்ளாமை அல்லது செலிபஸி
அதுவு ஒண்ணும் கஷ்டமில்லை
4. to abstain from telling lies;

- பொய் சொல்லாமை .இது கஷ்டம் அதுனால பேசக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கிறதுனால இதுவும் ஒகே.எப்படி பேசாம இருக்குதான்னு ரொம்ப யோசித்தேன் .
5. to abstain from all intoxicants.

-போதைப் பொருள் உட்கொள்ளாமை

There are three additional precepts which old students (that is, those who have completed a course with S.N. Goenka or one of his assistant teachers) are expected to follow during the course:

6. to abstain from eating after midday;
7. to abstain from sensual entertainment and bodily decoration;
8. to abstain from using high or luxurious beds.


இது பெருசுங்களுக்கு ..old student ன்னா ஒரு தடவை தாக்குப் பிடித்தவர்ன்னு அர்த்தம் .

முதல் நாள் 4 மணியில் இருந்து ஆரம்பித்த தியான வகுப்பு சாயங்காலம் 9 மணிக்கு படுக்க வரும் வரை தொடரும் .சாப்பாடுக்கு மட்டும் தான் ரெஸ்ட்.முதல் நாள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது .ஒரு இடத்தில் இருக்கிறதுக்கே கஸ்டமாகத் தான் இருந்தது. அதிலும் ஆனா பானா என்னும் மூச்சில் கவனம் கொள்ளும் தியானம் ரொம்ப கடினமாகவே இருந்தது .(இது இந்து மத முறைதான் ,இது சித்தார்த்த புத்த காலத்திற்கு முற்பட்டது அவர் குருக்களிடம் இருந்து கற்றுக் கொண்டது )

ஒரு வினாடிக்கு மேல் மனம் ஒரு இடத்தில் இல்லை . நமக்கு ஒரு கணட்ரோலே இல்லை , திரும்ப திரும்ப நம் மனம் சொன்னத கேக்காம அது பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்தி கொண்டு இருந்தது .அதே தியானம் தான் முதல் மூன்று நாட்களுக்கு .மூணாவது நாள் கொஞ்சம் பரவாயில்லை நன்றாகவே முன்னேறியிருந்தேன் ,ஆனாலும் கஷ்டமாத் தான் இருந்தது .

அப்புறம் புத்தரின் பிரத்தீயேக் விபாசனா தியானம் பற்றி சொல்லிக் கொடுத்தனர் ,அதுவே அடுத்த எல்ல நாடகளுக்கும் அதைப் பற்றி அதிகம் விவரிக்க எனக்குத் தெரியாது .படிப்பதால் பெரிய பிரயோசனம் இல்லை அனுபவம் மட்டுமே உதவும்.

என்னுடய அனுபவத்தில் இது என்க்கு அனுபவ பூர்வமாக நம் மனத்திற்கு உள்ள வீச்சுக்களையும் சில புரிதல்களையும் கொண்டு வந்தது . 10 நாள் முடிந்த உடன் சில நாள்களுக்கு ரொம்ப சந்தேசமாகவும் தெளிவான சிந்தனை ஓட்டமும் இருந்தது . என்னை அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியது ,அங்கு நீங்களும் உங்கள் மன்மும் நட்த்தும் போரட்டத்தில் என்னுடய அழுக்குகளை எனக்குத் தெரியாத அழுக்குகளை எடுத்து வீசி என்னைப் பற்றிய என் மதிப்பீடுகளை மாற்றியது .நான் என் மேல் வைத்திருந்த மதிப்பீட்களை கிழித்துப் போட்டு நாயடி பேயடி அடித்து நீயும் ஒரு அசிங்கம் தானடா பெரிய புழுத்தி மாதிரி அறம் ன்னெல்லாம் பேசி திரியாதே என்று போட்டுத்தாக்கி விட்டது .ஆறாம் நாள் ஒடி போயிரலாம என்னு கூட நினைத்தேன் அந்த அளவிற்கு படுத்தி விட்டது .தனிமையில் நம்மைப் பற்றி யோசிப்பது எவ்வுளவு பெரியக் கொடுமைன்னு தெரிஞ்சது .பல நல்ல அனுவங்களும் கிடைத்தது ,முக்கியமானது உடலின் பற்றிய மாயை ,நம்மால் இவ்வுளவு தான் முடியும் என்பது மனம் சொல்வது என்பதை அனுபவம் மூலமாகவே உணர்ந்தேன் .மனம் எவ்வுளவு விசயங்களை ஞாபகம் வைத்து உள்ளது ,சப் கான்சியஸ் மனம் நம் வாழ்க்கயை எவ்வுளவு தூரம் கட்டுப்படுத்துகிறது என்பதை பற்றியும் ஒரு நல்ல புரிதல் இருந்தது .

ஒரு அருமையான அனுபவம் .ஆனால் என்னுடய கெட்டப் பழக்கம் சீரியசா கற்றுக் கொண்டதை வீட்டில் பண்ணுவது கிடையாது என்பது தான் .

அதற்கு அப்புறமும் ஒரு தடவை என் மனைவியை கூட்டிக் கொண்டு போய் வந்து விட்டேன் .அந்த அனுபம் இன்னமும் அருமை ,வாழ்க்கையில் உங்களுக்காக உங்களுக்கு மட்டுமேயானத் தருணங்கள் அவை .நீங்களும் போய் பாருங்கள் அப்ப புரியும் நான் என்ன சொல்லுறேன்னு .


ps:இந்த அனுபவங்களைத் எழுத முயற்சி செய்து அப்படியே டிராப்ட் லயே சில மாதங்களாய் கிடந்தது.இன்னைக்கு அப்படியே போஸ்ட் பண்ணியிட்டேன் ,அதினால அவ்வுளவு கோர்வையாக இருக்காது .மன்னிக்கவும்.புத்தரைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன் .

Labels:

9 Comments:

At October 05, 2006 6:15 PM , Blogger வடுவூர் குமார் said...

சரியான வழியில் தான் போகிறீர்கள்.
மனம் அடங்குவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.பழக பழக கைகூட வாய்ப்பு அதிகம்.
இங்கே பாருங்க "மன்மும் நட்த்தும்" சில புள்ளிகள் அதிகமாக விழுந்திருக்குது.
இது மன ஓட்டத்துக்கு ஒரு உதாரணம்.
தொடருங்கள்-- விடாதீர்கள்.
சும்மா உட்காருவது..
அவ்வளவு சுலபமல்ல.

 

At October 06, 2006 3:13 PM , Blogger கூத்தாடி said...

வடுவூர் குமார் -வருகைக்கு நன்றி ..முன்னால் எழுதியதை கவனாமாய் திருத்தாமல் போட்ட்டது தவறு தான் ..

திருத்தி மீண்டும் பதிவு செய்கிறேன்

சும்மா இருப்பது சுலபமல்ல தான்

 

At October 07, 2006 2:43 PM , Blogger Thekkikattan|தெகா said...

கூத்தாடி அவர்களே,

தாங்களின் சில பதிவுகளை படித்தேன். நன்றாக வந்துள்ளது.

இந்த விபாசனா உங்களுடைய முயற்சி, உண்மையிலேயே பாரட்டபடத்தக்கது. இன்னும் எழுதுங்கள்.

 

At October 07, 2006 2:56 PM , Blogger Thekkikattan|தெகா said...

கூத்தாடி அவர்களே,

தாங்களின் சில பதிவுகளை படித்தேன். நன்றாக வந்துள்ளது.

இந்த விபாசனா உங்களுடைய முயற்சி, உண்மையிலேயே பாரட்டபடத்தக்கது. இன்னும் எழுதுங்கள்.

 

At October 14, 2006 4:18 AM , Blogger சபாபதி சரவணன் said...

கூத்தாடி,

அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

மனம் என்ற நிலையிலிருந்து மேலே உயர்ந்து செயல்படுவதற்கு விபாசனா நல்ல முறை.

onlineல் கூட விபாசனா வகுப்பு நடைபெறுகிறது. ரொம்ப நாட்களுக்கு முன்னர் attend செய்தேன். URL »¡À¸Á¢ø¨Ä. ¡ը¼Â ¸ñ¸¡½¢ôÒõ þøÄ¡Áø கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும் என்ற பக்குவம் உடையவர்களுக்கு online course பயன்தரும். ஆனல் பயிற்சி காலம் 45 நாட்கள். இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் பர்மா நாட்டை சேர்ந்தவர்களுக்கு இலவசம். மற்றவர்களுக்கு கட்டணம் உண்டு.

மனம் என்பதை அடக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டால் அது எக்காலத்திலும் அடங்காது. மாறாக பிரம்மாண்ட வளர்ச்சி பெறும். எட்டி நின்று மனதின் செயல்பாடுகளை ஒரு பார்வையாளனாக கவனிக்க ஆரம்பிக்கும் போது அது மெல்ல மெல்ல இளகி, கரைந்து காணாமல் போய்விடும்.

விபாசனா என்ற இந்த முறையின் மூலமாகத் தான் புத்தர் ஞானோதயம் அடைந்தார். எத்தனையோ முறைகளை முயன்று, கடைசியில் அவராகவே கண்டுபிடித்தது தான் இந்த முறை.

 

At October 18, 2006 2:43 PM , Blogger கூத்தாடி said...

சபாபதி
பிளாகுக்கு வந்து சில நாட்கள் ஆகி விட்டதால் உங்கள் பின்னூட்டத்தை போட நாளாகி விட்டது.

online பற்றி விவரங்கள் எனக்குத் தெரியவில்லை.முடிந்தால் கொடுக்கவும்

ஆனால் ஆன்லைன்யில் நடக்கும் விவகாரம் அல்ல என்பது என் அனுபவம் ..அதன் டேஸ்டையத் தெரிந்து கொள்ள மினிமம் பத்து நாட்கள் கண்டிப்பாய் தேவை என்அ அவர்கள் சொல்லுவதை நான் ஒத்துக் கொள்க்கிறேன் ..

வட அமெரிக்காவில் எங்கும் யாருக்கும் கட்டணம் கிடையாது ..உங்களுக்குப் பிடித்தால் நன்கொடைக் கொடுக்கலாம் ..நன்கொடைகூட ஒரு தடவை கோர்ஸ் எடுத்தவ்ங்க கிட்ட மட்டும் தான் வாங்குறாங்க..நன்கொடை கூட உங்கள் விருப்பம் தான் யாரும் நச்சரிப்பது கிடையாது ..

 

At October 18, 2006 5:27 PM , Anonymous Anonymous said...

என்ன புத்த மதத்துக்கு வக்காலத்து வாங்குறது மாதிரி இருக்கு ?
எனக்கென்னமோ எல்லாம் ஏமாத்து வேலை மாதிரி இருக்கு .என்னமோ போங்க எதையாவது சொல்லி காசு பாக்கிறாங்க வாழட்டும்
தொடர்ந்து எழுதுங்க
நன்றி - குமரன்

 

At October 18, 2006 11:37 PM , Anonymous Anonymous said...

குமரன்
புத்தருக்கு நான் வக்காலத்து ஒண்ணும் வாங்க முயற்சிக்க வில்லை ,இது என் அனுபவம் மட்டுமே .ஏமாத்தா இல்லையான்னு நீங்களேப் போய் பார்த்துச் சொல்லுங்களேன்

 

At October 18, 2006 11:38 PM , Blogger கூத்தாடி said...

குமரன்
புத்தருக்கு நான் வக்காலத்து ஒண்ணும் வாங்க முயற்சிக்க வில்லை ,இது என் அனுபவம் மட்டுமே .ஏமாத்தா இல்லையான்னு நீங்களேப் போய் பார்த்துச் சொல்லுங்களேன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home