கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

எல்லாச் சாமியும் ஒண்ணுதானா ?

கடவுள் பற்றிய பல கருத்துக்கள் பல தரப்பட்ட மக்களாலும் அறிவு ஜீவிகளாலும் எல்லாக்காலக்கட்டத்திலும் சொல்லப் பட்டே வருகிறது ,இப்போது நம் இணைய ஊடகத்திலும் விரிவாக பலர் விவாதித்து உள்ளனர். நானும் என்னுடைய பார்வையை பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் தொடங்கிவிட்டேன் ..

கடவுள் பற்றி எனக்கு தெளிவான தொரு அபிப்ராயம் கிடையாது என்பதே உண்மை.அப்படி ஒருவர் இருக்கிறாரா என்பது சந்தேகம் தான் ஆனாலும் ஒரு உலக ரட்சகன் இல்லை என்பதயும் பெரிதாக நிரூபிக்க முடியாது ,கடவுள் என்பவன் இல்லை என்பதை நீருபிக்க முடியாது என்பது எவ்வுளவு உண்மையோ அந்த அளவுக்கு அவர் இருப்பதையும் நிருபிக்க முடியாது..

அதனால் தான் ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெரும் சண்டை ,என்னை மாதிரிஇரண்டும் கெட்டான்கள் எல்லாத்தயும் படித்து விட்டு முடியை பிய்த்துக் கொள்கிறார்கள்.

யார் கடவுள்---சிவன் நம்ம சாமியா ,இல்ல பெருமாளா அல்லது இயேசுவா அல்லாவா..இல்ல எல்லாம்ஓண்ணு தானா ? எல்லா சாமியும் ஒண்ணுதான்னா ஏன் இவ்வுளவு பெரிய சண்டை ..

இதையெல்லாம் பற்றி விவாதித்தால் சிந்தித்தால் நம்முடைய சிந்தனையிலும் விவாதங்களிலும் ஒரு சார்பு தன்மை வந்து விடும் ,என்னத்தான் rationala சிந்திப்பவன் என்று சொன்னாலும் நாம் சார்ந்துள்ள மதத்தின் அல்லது மார்க்கத்தின் /நம்ப்பிக்கையின் மேது ஒரு பரிவும்அதன் தவறுகளுக்கு சப்பைக் கட்டு ஆதாரத்தையும் தூக்கிப் பிடித்து நிற்போம் ..ஆனால்அடுத்த மதங்களின் நம்ப்பிக்ககளைப் பற்றி சீராக எடைப் போட்டு அவர்கள் ஏன் அதை உணர வில்லை என்று ஆதங்கப் படுவோம் ஆத்திரப்படுவோம்...அடுத்த மதத்தைப் பற்றி சிந்திக்கயில் மட்டும் பகுத்தறிவு பகலவன்களாக இருப்போம் ,தன் முதுகு அழுக்கு யாருக்கும் தெரிவதில்லை ..

இல்லை எல்லா சாமியும் ஒன்றுதான் ன்னு சொன்னாலும் அது சும்மா மத நல்லிணத்துக்கு சொல்லுறதுக்குத் தான் ,ஒரு தீவிரமான விவாதத்தில் நடுநிலை என்பதே கிடையாது..

கடவுள் என்னும் கருத்தாக்கம் உலகம் தொடக்கம் முதல் இருந்துருக்க வேண்டும் ,இயற்கயையும்விலங்குகளையும் வணங்கிய ஒரு சமூகம் இருந்தது ,உலகெங்கும் உள்ள சிறுபான்மை தொல்குடிமக்களில் இன்னமும ்இருந்து கொண்டுதான் இருக்கிறது .பெரும்பாலும் அவர்களின் கடவுள் இயற்கையை பற்றிய பயத்தால் தோன்றிய வழிபாடுகள் தான் ..நடுகல் வழிபாடு முன்னோர்களை வணங்குதல் என்பதும் எல்லா நாகரிகங்களிலும்இருக்கிறது..
இன்றைய நவீன உலகில் முன்னோர் வழிபாடு /கன்னி வழிபாடு/தர்கா வழிபாடு போன்றவைகள் மக்களிடம் இருந்தாலும் அறிவுசார்ந்த ஒருஅலசலில் இதுவெல்லாம் கேலிக் கூத்தாகவே முடியும் ..அதே சமயம் முறைப்படுத்தப் பட்ட மதங்களின் செயலகளைப் பற்றிவிவாதத்தை பல தளங்களில் அறிவு ஜீவியாகப் பட்டவர்கள் வாதம் பண்ணத் தயங்குவதே இல்லை

ஆனால் இன்று இந்து /கிருத்துவ /இஸ்லாம் /பெளத்த /ஜைன மதங்களில் ஒரு ஆதார நம்ப்பிக்கையை கொண்டே இயங்குகிறது ..பெரும்ப்பாலும் எல்லா மதங்களும் ஒன்றையே சொல்வது என்கிறார்கள் ,ஆனால் ஒரு மத நம்ப்பிக்கயாளனின் முக்கியமான நம்ப்பிக்கை மற்ற மதக்காரர்கள் ஒப்புவதாக இல்லை ..அடிப்படையில் தப்பு என்றால் எப்படி எல்லா மதமும் ஒன்றாக இருக்க முடியும்..

இந்து/பெளத்த/ஜைன மதங்களை ஒரு பக்கத்திலும் யூத/கிருத்துவ/இஸ்லாமை ஒரு பக்கத்திலும் வைத்து வாதம் செய்வதும் /அதற்கான ஒற்றுமைகளை வேற்றுமைகளை பார்க்க இந்த எல்லா மதங்களிலும் கடுமையானப் பயிற்சி இருக்க வேண்டும் .. ஒரு விதத்தில் ஒருவன் எல்லா மதங்களிலும் பல ஆண்டுகளாக இருந்து பார்த்து தான் ஆராய வேண்டும் புத்தகங்களை படித்து மார்க்கத்தை புரிந்து கொள்ள முடியுமா என்ன ?
உலகில் ஒருவரும் எல்லா மதங்களையும் புரிந்து கொண்டு எழுத முடியும் என்பது என்பது நடக்காத ஒன்று ..ஆதலால் எல்லா நண்பர்களுக்கும் சில கேள்விகளை கேட்டு என் சிந்தனைகளையும் எழுதுகிறேன்.

எல்லா ஆத்திகர்களுக்கும்
1.கடவுள் என்பவரது இருப்பை எப்படி உணருவீர்கள் ..
ஏழையின் சிரிப்பில்/மழலையின் சிரிப்பில் /மங்கையின் அன்பில்/தாயின் அன்பு போன்ற வழக்கமாய் சொல்லும் பொய்களை சொல்லாதீர்கள்அவர்களுக்கு யாரும் கோவில் கட்டுவதில்லை..இந்த பதில்கள் ஒரு மெகா சைஸ் பொய்
தர்க்கப் படி ஒருவருக்கு மழலையின் சிரிப்பென்றால்மற்றவருக்கு மங்கையின் மஞ்சம் /மதுவின் சுவை ..வாதப்படி இதுவும் கடவுள் தான் ,இன்பம் தான் கடவுள் என்றால் துன்பம் யார் ..சிற்றின்பம் /பேரின்பம்என்றெல்லாம் சொல்வது ஏமாத்து வேலை ..இன்பத்தின் அளவு கோல் ஏன் தம் குழந்தையின் சிரிப்பில் ஏன் அதிகமாகிறது ?

2. கடவுளைப் பற்றிச் சொல்ல ஏன் எப்பொழுதும் தூதுவர்கள் வர வேண்டும் (அல்லது அவராகவேஅவதாரமாக வர வேண்டும்)
இப்ப சமீபத்தில் யாரும் வராததால் ..தலை தூங்கிடுச்சுன்னு வைய்த்துக் கொள்ளலாமா ? கடவுள் ஏன் இந்துக்களுக்கு இந்தியாவில் அவராகும் ..யூதர்களுக்கும் /அரேபியர்களுக்கு தூதுவ்ராகவும் வந்து அறிவுரை சொல்ல வேண்டும் ..அப்ப வெள்ளைக் காரங்களுக்கும் / சீனர்களுக்கும் /ஆப்பிரிக்கர்களுக்கும் சாத்தானின் பிள்ளைகளா ?

3. கடவுளின் அவதாரம் /தூதர் இப்போது இருந்தால் கண்டுபிடிக்க முடியுமா ? அப்படின்னு ஒருவர் சொன்னால் ஒத்துக் கொள்வோமா ? லூசுப் பயன்னு சொல்ல மாட்டீங்க ,கடவுளின் அவதாரம் /தூதுவர் அற்புதங்கள் செய்ய வேண்டுமா...

4. உலகம் தட்டையானது / சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற கடவுள் ( அப்படித் தானே கடவுள் அருளிய வேதம் சொல்லுகிறது ) பூமியை மையமாக வைத்துத் தான் சிந்தித்திருப்பாரா ? அப்ப நம்ம கடவுள் சந்திரனுக்கும் புதனுக்கும் கடவுள் இல்லையா அவர் பூமிக்கான குறு நில மன்னர் தானா ?

5. ஆன்மிகத்திற்கு மதம் என்ற அமைப்புத் தேவையா ?

6. சுவர்க்கம் /மறுமை /நரகம் போன்றவைகள் நம்பத் தகுந்ததா ?


நாத்திகர்களுக்கும் என்னிடம் தீவிரமான கேள்விகள் உண்டு ..நான் கேட்ட கேள்விகள் பொதுவான எல்லா மத நம்ப்பிக்கை யாளர்களுக்கானது ..

Labels: , ,

14 Comments:

At August 23, 2006 1:50 PM , Anonymous Anonymous said...

Ella Saamiyum Onnuthaan....Surely.

And spiritual experience is the one which you should feel for yourself by practising prayer....till that time you will not be satisfied with anyone's answer...

this is my humble opinion....

 

At August 23, 2006 3:32 PM , Anonymous Anonymous said...

எங்க சாமி தான் சரி ..மத்தவங்க எல்லாம் நரகத்துக்குத் தான் போவீங்க ..

 

At October 09, 2006 11:06 PM , Anonymous Anonymous said...

Mr. Raj,
"Ella sammiyum onnuthaan.... Surely" Do you people allow one Muslim people to enter into one Hindu temple "Karuvarai" ?? In thirupathi or in Kanji madam?? If he claims all GODs (man created) are one. Or do muslim people allow Kanji periyavar in to their masque ? Then why so much fights keep going?

"And spiritual experience is the one which you should feel for yourself by practising prayer" Along with your feelings if you start thinking (cinthikka aaranpichal) you will get to know about the actuall GOD and his/her (for god also we have genders, why? for reproduction??) existance.

Balaji S

 

At October 09, 2006 11:09 PM , Anonymous Anonymous said...

Hi Koothaadi
Nice name. First time am reading your blogs. Post your questions for anthist. I will try to give my answer.

regards
Balaji S

 

At October 25, 2006 2:56 AM , Blogger bala said...

//இப்ப சமீபத்தில் யாரும் வராததால் ..தலை தூங்கிடுச்சுன்னு வைய்த்துக் கொள்ளலாமா ? //

யார் சொன்னது சமீபத்தில் அவர் வரவில்லையென்று..

என்னைப் பொருத்தவரை சமூக நீதி காத்து தமிழகத்தை படுகுழியிலிருந்து காப்பாற்றிய தந்தை பெரியார் ஒரு அவதாரமே..

பாலா

 

At December 16, 2006 2:15 AM , Anonymous Anonymous said...

Aarampichchittangaiyaa...!

periyaaraiyum 'avaa' thaarama aakkittaaLaa! uruppattappoolaththaan.

 

At December 16, 2006 7:28 PM , Blogger நாமக்கல் சிபி said...

அடுத்தவர்க்குத் துளியும் துன்பம் தராத
எந்தஒரு செய்கையிலுமே
இறைவனைக் காணலாம்!

அதனால்தான் கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று கூறுகிறோம். ஏழையின் சிரிப்பு -> இதில் அவனுக்குத் தேவையான ஏதோ ஒரு அடிப்படைத் தேவை நிறைவேறிய நிம்மதி தெரியும். இதுவும் பிறர்க்குத் துன்பம் தராத ஒன்றே.

தாயின் அன்பு -> தன்னலமற்ற, எதிர்பார்ப்புகளற்ற, நிபந்தனைகளற்ற அன்பு ஒரு தாய் தன் குழந்தை மீது வைப்பது. இதுவும் யாருக்கும் துன்பம் தருவதில்லை.


அடுத்தவரின் துன்பம் கண்டு பதைக்கும் உள்ளம்தனிலும் இறைவனைக் காணலாம்!

இதுபோன்ற இறைவனுக்குக் கோவில் அவசியமில்லை! தூய்மையான உள்ளமே நான் உறையும் இருப்பிடம் என்கிறான் இறைவன்.

//ஏழையின் சிரிப்பில்/மழலையின் சிரிப்பில் /மங்கையின் அன்பில்/தாயின் அன்பு போன்ற வழக்கமாய் சொல்லும் பொய்களை சொல்லாதீர்கள்அவர்களுக்கு யாரும் கோவில் கட்டுவதில்லை//

இது போன்ற நிறைய இறைவனின் இருப்பிடங்கள் நம்மைச் சுற்றியே நாம் காண முடியும். இவற்றுக்கெல்லாம் கோவில் கட்ட முனைந்தால் குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வீடும் கோவிலாகத்தான் இருக்க முடியும்.
ஏழைகள் இருக்கும் ஒவ்வொரு தெருவும் ஒரு கோவிலே! தாய்மார்கள் இருக்கும் ஒவ்வொரு இடமும் கோவிலே!

 

At December 17, 2006 12:06 AM , Blogger ramachandranusha(உஷா) said...

சிபி, கொஞ்சம் மாற்றி யோசியுங்க
ஒவ்வொரு முறையும் உலகில் நடக்கும் பல அநியாங்களைப் பார்க்கும்பொழுதும், கேட்கும்பொழுது மட்டுமே எனக்கு கடவுள் பற்றிய நினைவு வரும் :-))

 

At December 17, 2006 2:07 AM , Blogger கூத்தாடி said...

சிபி /உஷா வுக்கு நன்றி..

சிபி
என்னுடைய கேள்வி மதவாதிகளை நோக்கித்தான் ..நீங்களே உங்களை உணர்ந்து இருந்தால் நீங்களும் சாமிதான்..

எல்லா சாமியும் ஒண்ணேதான்னு கேடபதின் காரணம் ..கடவுளின் கார்ப்பரேட் மதங்கள் ஏன் இத்தனை முரண்பாட்டோடு காணப் படுகிறது என்பது தான் ..மதங்கள் இல்லாவிட்டால் நம்முடைய ஆன்மீகம் முடங்கி விடுமா ? நம்முடைய கடவுள் அறிவு எல்லாமே நிறுவனப்ப்டுத்தப் பட்ட அல்லது பாகன் மதங்களின் பாதிப்புத் தானே ..சுயசிந்தனையில் நம்மால் இறையை புரிந்துக் கொள்ள முடியாதவரை மதங்களை ஒதுக்கித் தள்ளவும் முடியாது ..புத்தனும் அதற்கு முன் உள்ள வேத கால மதத்தையும் சமண மதத்தையும் கற்றத் தேர்ந்தவர் தான் ..

//அடுத்தவர்க்குத் துளியும் துன்பம் தராத
எந்தஒரு செய்கையிலுமே இறைவனைக் காணலாம்//

உங்கள் எண்ணம் புரிகிறது ..மதம்/ஆன்மீகம் பற்றி ஒருப் பதிவு எழுதலாமே

 

At December 17, 2006 2:10 AM , Blogger கூத்தாடி said...

சிபி, கொஞ்சம் மாற்றி யோசியுங்க
ஒவ்வொரு முறையும் உலகில் நடக்கும் பல அநியாங்களைப் பார்க்கும்பொழுதும், கேட்கும்பொழுது மட்டுமே எனக்கு கடவுள் பற்றிய நினைவு வரும் :-)) //

:-) சரிதான் நம்ம பாதி சாமியாருங்களைப் பார்க்கும் போதும் எனக்கு கடவுள் நினைவு வரும்

 

At December 17, 2006 8:53 AM , Blogger தருமி said...

கடவுளின் கார்ப்பரேட் மதங்கள் ஏன் இத்தனை முரண்பாட்டோடு காணப் படுகிறது ..//

கடவுளைக் காரணம் சொல்லாதீர்கள்; அவர் பாவம்!
மனிதர்கள்தான் மதங்களை கார்ப்ரேட்டுகளாக உருவாக்கிக் கொண்டு, கடவுளை பார்ட்னராக, (இன்னும் சில பல ரோல்கள் உண்டு) ஆக்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

 

At December 17, 2006 7:03 PM , Blogger நாமக்கல் சிபி said...

//கடவுளைக் காரணம் சொல்லாதீர்கள்; அவர் பாவம்!
மனிதர்கள்தான் மதங்களை கார்ப்ரேட்டுகளாக உருவாக்கிக் கொண்டு, கடவுளை பார்ட்னராக, (இன்னும் சில பல ரோல்கள் உண்டு) ஆக்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன்.
//

தருமி அவர்கள் சொவதே சரியெனப் படுகிறது. இதற்கு கடவுள் பொறுப்பல்ல!

 

At December 17, 2006 7:41 PM , Blogger ramachandranusha(உஷா) said...

கடவுளைக் காரணம் சொல்லாதீர்கள்; அவர் பாவம்!
மனிதர்கள்தான் மதங்களை கார்ப்ரேட்டுகளாக உருவாக்கிக் கொண்டு, கடவுளை பார்ட்னராக, (இன்னும் சில பல ரோல்கள் உண்டு) ஆக்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன்.//
athu:-)

 

At December 18, 2006 11:11 AM , Blogger கூத்தாடி said...

சரிதான் தருமி .வருமானம் இல்லாத கார்ப்பரேட் பார்ட்னராக இருக்கிறார் போலும் ..

எல்லாம் அறிந்தவனாக இருக்கும் கடவுள் ஏன் எந்த லிட்டிககேசனும் போடாமல் இருக்கிறார் ? கடவுளுக்குத் தேவை ஒரு நல்ல லாயர் ..பேப்பரிலும் டிவியிலும் அவர் பெயரை உபோகிப்பவர்களைப் பற்றி ஒரு அறிவிப்பாவது கொடுக்கலாம் இல்லையா -:)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home