கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

வாழ்க்கை நெறியா இந்து மதம்

வாழ்க்கை நெறியா இந்து மதம்
==========================
இந்து மதம் குறித்த விவாதங்களில் ஒரு சமயம் மாற்று மொழி நண்பர் ஒருவர் சொன்னது பிரபலமான சுப்ரீம் கோர்ட் வசனத்தை " இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி (way of life) என்று சொன்னார் இதை பல இடங்களில் நானும் சொல்லியிருக்கிறேன் ,பல முறை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் . ஆனால் இப்ப சொன்ன நண்பர் தீவிர இந்துவத்துவ வாதி எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் முஸ்லீம்களை இழுக்காமல் இருக்க மாட்டார் , நான் எப்பொழுதும் தீவிரமாக எதிர் வினையாற்றுவேன் .

என்னுடைய கேள்வி - அப்படின்னா என் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள முஸ்லீம் /கிருத்துவ நண்பர்களும் ஒரே மாதிரி தானே வாழ்கிறோம் அவங்களையும் இந்துன்னு சொல்லலாமா ?

பதில்: அப்படிச் சொல்ல முடியாது ,அவங்க எல்லாம் மாமிசம் / மாடு சாப்பிடுவார்கள் .

நான்: நானும் தான் சாப்பிடுவேன் ,நான் இந்துவா இல்லையா ?

பதில் : ஆனா அவங்கள்ளாம் மாமிசத்த சாமிக்கு படைபாங்க இந்துக்கள் பண்ண மாட்டாங்க

நான் : அப்படியா ..அப்ப மாமிசத்த சாமிக்கு படைக்கிற மக்கள் எல்லாம் இந்து இல்லையா ?

பதில் : அப்படின்னு வச்சிக்கலாம்

நான் : ஓ அப்படின்னா இந்தியா இந்துக்கள் அதிகமாக இருக்கும்ன்னு சொல்லுவது தப்பில்லையா ..எங்க ஊர்லேல்லாம் பழய காலத்தில் ஆடு /கோழி வெட்டுறப் பழக்கம் நிறைய இருந்தது அவங்கள்ளெல்லாம் இந்து இல்லைன்னா சொல்லுறீங்க

பதில்: ம்ம் அவங்க கணபதிக்கும் /கிருஷ்ணனுக்குமா படைக்கிறார்கள்

நான் : நீங்க சொல்வது கணபதியும் கிருஷ்ணனும் தான் இந்து தெய்வங்களா

பதில்: நாங்கள்ளாம் அவங்களதான் கும்புடுறோம் ,பெரும்பாலோனார் அப்படிதான் கும்பிடுறாங்க ..

இப்படியாக வாதம் தொடர்ந்து கொண்டிருந்ததில் வழக்கம் போல் எந்த முடிவும் இல்லாமல் பை பை சொல்லி எந்திருத்துப் போய் விட்டோம் ..

ஆனால் பொதுவாக நம்முடையே இந்த குழப்பம் இருப்பதைப் பார்க்க முடியும் . பொதுவாக இந்து என்பது வாழும் வழிமுறை என்று சொல்லுவது பொருந்துமா ?


அப்படி என்றால் இந்து மதம் வாழும் வழி என்பது ஒத்துக்கொள்ள முடியுமா .ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி சொன்னதற்காக அதையே தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோமா ?

அப்படியே அவர் சொன்னது சரியானது என்றால் எந்த விதத்தில் வாழ்வது இந்துமத வாழ்க்கை ?

இந்துக்கள் என்ப்படுவோர் எல்லோரும் ஒரே மாதிரியாகவா வாழ்கிறார்கள் அவர்களின் பிறப்பு ,திருமண ,இறப்புச் சடங்குகள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? சனாதான தர்மம் தான் இந்து மதமா ?

சாதி என்பது மட்டுமே இந்து மதத்தின் தன்மையெனில் இந்திய கிருத்துவத்தையும் இந்து மத்தோடு சேர்த்துக் கொள்ளலாமா ?


இந்துக்கள் என்பது யார் என்பது சரியாக வரையறுப்பது கடினம் . இந்து மதம் எல்லாச் சமயங்களிலும் இருந்த கருத்துக்களை எடுத்துக் கொண்டதாகக் கூறுவார்கள் .பெளத்தமும் சமணத்திலிருந்து எடுத்துக் கொண்டதுதான் ஊன் உண்ணாமை என்பதற்கு வேதங்களில் இருக்கும் சாட்சிகளே அதிகம் .புததர் எதிர்த்ததே இந்துக்களின் சடங்குகளையும் பரிகாரங்களயும் அதைச் செய்யும் புரோகிதர்களையும் தான் .புத்தரை கொல்ல முயற்சித்தவர்கள் அனைவரும் அக்கால வேத வழிவந்தவர் களே . இந்து மதம் செய்து கொண்ட சமரசமே இந்து மதத்தை இவ்வளவு நாளும் இந்தியாவில் விட்டு வைத்து இருப்பதாகக் கொள்ளலாம் .புத்த மதம் இந்தியாவில் சமரசம் செய்து கொள்ளாததே புத்த மதம் இந்தியாவில் அழிந்ததற்கானக் காரணம் என்பது ஒஷோ வின் கூற்று.

ஒரு வகையில் சமணர்களும் ,பெளத்தர்களும் இந்து மதத்தின் ஆணி வேரை எதிர்த்து வந்த மதங்கள் தான் .சமணர்களிடமும் ,புத்தரிடமும் கடன் வாங்கியது தான் புலால் உண்ணாமை என்று சொல்கிறார்கள் .கொழ்சம் போல் இருக்கும் சமணர்கள் இன்று சமரசம் செய்து கொண்டு தீவிர இந்துத்துவ வாதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பது காலம் மதங்களின் மேல் செய்யும் விந்தைக்கு உதாரணம்.

இந்துக்கள் என்பவர்கள் பல தரப்பட்ட கலாச்சாரத்தில் தானே வாழ்கிறோம் ..
சைவ / வைணவ மதத்தின் இணைப்பு தான் இந்து மதம் என்று சொல்ல முடியாது ..சொடலை மாடன் /வண்டி மலச்சி அம்மன் / சாத்தா வழிபாடு / ஐய்யனார் போன்ற நாட்டார் வழிபாடு முறைகளயும் இந்து மதத்தின் கூறுகளாகத் தானேப் பார்க்கிறோம் அந்த் வகையில் கிருத்துவமும் /இஸ்லாமும் /பெளத்தமும் /சீக்கியமும் இந்து மத்த்தின் பிரிவு தான் என்று ஒத்துக்கொள்ள முடியுமா ? அவர்கள் (இந்து மதமல்லாதவர்கள்) இதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை ? முதலில் இந்துக்கள் ஒத்துக் கொள்ளுவார்களா ?

எல்லா இறையும் ஒன்றுதான் என்று கொள்பவர்கள் ஒத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு மதமமென்பது கிடையாது .

பெரும்பாலோனோர் மதம் என்பதே do & donts தான் .சைவன் நெற்றியில் திருநீறு /வைணவன் திருமண் /இஸ்லாமியர்களுக்கு ஹராம் / ஹலால் / கிருத்துவருக்கு ஞான்ஸ்தானம் போன்றவைகள் தான் அவர்களை மத ரீதியாக வைத்துள்ளது .

கிருத்துவர்களுக்கும் /முஸ்லீம்களுக்கும் அசைவம் உண்ணுவது பற்றி ஒரு தடையும் இல்லை .இந்துக்கள் மாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் அவர்களில் பெரும்பான்மையோர் திருவிழா சமயங்களிலும் கோவில் செல்லும் போதும் உண்பதில்லை , மாட்டு மாமிசம் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை ?

இப்படி சிந்திக்கும் போது தோன்றுவது என்னவென்றால்

மதம் என்பதே எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்வதும் எப்படி இறைவனை வணங்க வேண்டும் என்பதைத் தான் மதங்கள் சொல்லுவதாகப் படுகிறது அதற்கு ஒரு சட்டப் புத்தகம் போதாது ? சாப்பிடுவதும் எப்படி உடைகள் உடுத்துவதும் தான் மதமா என்ன ?

அப்படித் தான் மதமே உடைகள் உடுப்பதையும் எதைச் சாப்பிடுவதும் தான் மதமென்றால் எல்லா மதமுமே வாழும் வழிமுறை தான் .

24 Comments:

At October 03, 2006 5:50 PM , Anonymous Anonymous said...

எனக்கு மதம் மேல் வெறுப்பில்லை.
ஆனால் அதை எப்போதும் தூக்கி வைத்துக்கொண்டு அல்லாடுவது தான் பிடிக்கவில்லை.
ஒரு வயது வரை என்ன சொல்கிறார்கள் என்று அவரவர்கள் மத புத்தகத்தை படிக்கவேண்டும் பிறகு சொந்த புத்தியை உபயோகித்து முன்னேறவேண்டும்.
ஒவ்வொரு நடவடிக்கைகும் அந்த புத்தகத்தை புரட்டினால்-அவனுள் இருக்கும் புத்திக்கு என்ன வேலை இருக்கும்?
நான் சொல்வது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.மதம் என்ற சட்டையை எப்போதும் போட்டுக்கொள்ள ஆசைபடும் மனிதர்களுக்கு அல்ல!!
திரும்பவும் நான் தாங்க!!அனானியாக.
தப்பா எதுவும் சொல்லலேயே??

 

At October 03, 2006 5:59 PM , Blogger VSK said...

//மதமே உடைகள் உடுப்பதையும் எதைச் சாப்பிடுவதும் தான் மதமென்றால் எல்லா மதமுமே வாழும் வழிமுறை தான் .//

அப்டி போடு அருவாளை!

பெற்றோர் என்றால் உடலின்பம் காண்பதும் குழந்தை பெறுவதும் என்பதால் எல்லாருமே உங்கள் அப்பா அம்மாக்கள் தான்.!

பானம் என்றாலே தாகம் தணிப்பதும், திரவ உருவில் இருப்பதும் என்பதால், நீர் மோரும், கோக்கா கோலாவும் ஒன்றுதான்!

உணவு என்றாலே வயிற்றை நிரப்புவதும் சுவையாய் இருப்பதும் என்பதால், இட்லியும், பூரியும் ஒன்றுதான்!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

நீங்க அடிச்சு ஆடுங்க சாமி!

வுடாதீங்க இவனுகளை!

 

At October 03, 2006 6:01 PM , Blogger Sivabalan said...

நல்ல இடுக்கை..

நன்றி

 

At October 03, 2006 9:01 PM , Blogger VSK said...

என் மறுமொழி வராததேனோ?
:)

 

At October 04, 2006 9:46 AM , Blogger கூத்தாடி said...

அனானியாக வந்து பின்னூட்டம் கொடுத்தவருக்கு நன்றி ..அனானி யா வந்து கெட்ட வார்த்த எழுதுறவந்ங்க மேலத் தான் கோபம் உங்க மேல் இல்ல..

உங்கள் கருத்து சரியானது
//மதம் என்ற சட்டையை எப்போதும் போட்டுக்கொள்ள ஆசைபடும் மனிதர்களுக்கு அல்ல!!//

இப்ப இது பேசன் ஆகி விட்டது அதான் பிரச்சினை

 

At October 04, 2006 9:49 AM , Blogger கூத்தாடி said...

Sk - நன்றி .

நீங்க வாதத்திற்காக வைத்து இருக்கும் க்ருத்துக்களை ரசித்தேன்

/ானம் என்றாலே தாகம் தணிப்பதும், திரவ உருவில் இருப்பதும் என்பதால், நீர் மோரும், கோக்கா கோலாவும் ஒன்றுதான்!//

நான் பீரும் மோரும்ன்னு ஒன்னுதான்னு சொல்லுறேன் சாமி

 

At October 04, 2006 9:49 AM , Blogger கூத்தாடி said...

நன்றி சிவபாலன்

 

At October 04, 2006 10:25 AM , Blogger ஜடாயு said...

கூத்தாடி அவர்களே,
உங்கள் கேள்விகள் பலராலும் கேட்கப்பட்டு விவாதிக்கப் பட்டிருக்கின்றன. உலகில் அற்புதமான பல விஷயங்களைப் போல இந்து மதம்/தர்மம்/நெறி ஒரு ஆழங்காண முடியாத மகா சமுத்திரம்.

இது பற்றி இன்னும் சீரியஸாக படித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினால், அறிஞர் Koenraad Elst
எழுதிய Who is a Hindu என்ற புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன். புத்தகம் முழுதும் ஆன்லைனாக இணையத்திலேயே உள்ளது -
http://www.voiceofdharma.com/books/wiah/

நன்றி.

 

At October 04, 2006 10:27 AM , Blogger VSK said...

பீரும் மோரும் ஒண்ணாகாது , கூத்தாடி!
முன்னது தாகத்தைத் தணித்தாலும் உள்ளே போய் ஒரு ஆட்டம் போட்டுத்தான் அடங்கும்
மோர் அப்படி அல்ல.
சாதுவாய் தாகத்தை மட்டும் தணித்து அடங்கிரும்!

:)

 

At October 04, 2006 3:13 PM , Blogger வஜ்ரா said...

//அந்த் வகையில் கிருத்துவமும் /இஸ்லாமும் /பெளத்தமும் /சீக்கியமும் இந்து மத்த்தின் பிரிவு தான் என்று ஒத்துக்கொள்ள முடியுமா ? அவர்கள் (இந்து மதமல்லாதவர்கள்) இதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை ? முதலில் இந்துக்கள் ஒத்துக் கொள்ளுவார்களா ?
//

சீக்கியர் மதம் கூட ஒத்துக் கொள்வார்கள்...ஏன் என்றால்...இந்து மதம்/வாழ்க்கை முறை/மதங்களுக்கு எல்லை வரயருக்கப் பட்டால் அது, அகண்ட பாரதத்தில் தோன்றி, அதன் புனித ஸ்தலங்கள் பாரத மண்ணில் இருக்கும் எல்லா மதங்களும் இந்து மதங்கள் என்றே சொல்லவேண்டும்... (பாரத மண்ணில் மட்டுமே என்று சொல்பவர்கள் இந்துத்வா வாதிகள், உங்கள் முட்டள் நண்பர் அல்ல).

இந்த வகையில் கிருத்துவம், இஸ்லாம் இரண்டும் வராது...இருந்த போதிலும் இந்துக்கள் ஏற்றுக் கொண்டாலும் எத்தனை கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும் தாங்கள் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெறுமை கொள்வார்கள்?

பூஜை ரூமில் ஜீசஸ் படத்தையும், மக்கா படத்தையும் கொண்ட இந்துக்கள் வீடு ஏராளம்..

எத்தனை கிருத்தவர்கள் வீட்டில் பிள்ளையார் சிலை பார்க்கமுடியும்?

 

At October 04, 2006 3:19 PM , Blogger சிறில் அலெக்ஸ் said...

இதில் எது மோர் எது பீர் என்பதில் பிரச்சனை வருகிறதே?

பீர் மோர் எதிரெதிர் அதனால மோர் இளநீர் எனச் சொல்லலாம்.

மோரோ இளநீரோ அவனவனுக்கு எது சாத்தியமோ பிடிக்குதோ அதச் சாப்பிடலாம். தாகம் அடங்கினா சரி.

ஜெயமோகனின் 'இந்துமதத்தின் ஆறுதரிசனங்கள்' இதைப் பற்றி ஆராய்கிறது.

இந்திய கலாச்சாரம் 'முழுவதும்' இந்துக் கலாச்சாரமா எனும் கேள்வியையும் (நேரடியா) எழுப்பியிருக்கலாம்.

வரையறைகளற்றிருப்பதே இந்து மதத்தின் சிறப்பு. தனிமனிதனுக்கு அத்தனை சுதந்திரம் உள்ளது. கண்டிப்புக்களும் சட்டங்களும் நிச்சயம் இருக்குது ஆனா அதை சிலரே வருந்திப் பழகுகிறார்கள்.

 

At October 04, 2006 5:21 PM , Blogger கூத்தாடி said...

ஜடாயு
//இந்து மதம்/தர்மம்/நெறி ஒரு ஆழங்காண முடியாத மகா சமுத்திரம்.//

இந்து தர்மம் மகா சமுத்திரம் என்கிறீர்கள்,என்னுடையக் கேள்வியே இந்து சமயம் என்பது எத்தனை சமயங்களை உள் வாங்கியது ..இந்து சம்யத்தின் தற்போதையக் கருத்துக்களில் பிறச் இந்தியச் சமயங்களுக்கும் பங்களிப்பு இல்லையா

சமுத்திரம் என்பது சரிதான் ஒரு வகையில் பல கடல்கள் இணைந்தது தானே சமுத்திரம்

அடிப்படயில் சமணத்துக்கும் ,புத்த மதத்தின் கோட்பாடுகளுக்கும் சமண/புத்த சமயக் காலக்கட்டத்தின் நிறைய வித்தியாசங்கள் இருந்திருக்கக் கூடும் இல்லையெனில் அந்த மதங்கள் தோன்றியிருக்கவேத் தேவையில்லை .

என் கவலை என்பது இப்போது இந்து மதத்தை கட்டமைக்க முயற்சி செய்யும் இந்து அமைப்புக்கள் சில இந்து மதம் அது இது எனச் சொல்லி இந்து மதத்தை ஒரு do & Donts யாக முயற்சிக்கிறார்கள் அது நீங்கள் சொல்லும் சமுத்திரத்திற்கு எதிரானதாகவேத் தெரிகிறது .

பசு வதை சட்டம் என்பதை நான் அப்படி ஒரு முயற்சியாகவேப் பார்க்கிறேன் ..

இப்போது இந்து மதம் ஒரு மதமாகவே என்க்குக் காட்சியளிக்கிறது (do & Donts ) அதனால் தான் அது வாழ்கை நெறி என்ற சொல்லுக்குள் இப்போதைய இந்து மதம் வராது என்பதாலயே இந்தப் பதிவு

இந்திய /இந்துத் தத்துவங்கள் எத்தனை இந்துக்களுக்குத் தெரியும் ..நானும் பல விளக்கங்களையும் ஞானிகளின் ஆக்கங்களையும் படித்திருக்கிறேன் படித்துக் கொண்டும் இருப்பேன் ..தத்துவ ரீதியாக ஆன்மீக ரீதியாக நான் இஸ்லாமிய சூபிக்களிடமும் இந்து ஞானிகளிடமும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை ஆதலால் அது வேறு இது வேறு

அடிப்படையில் என் கேள்வியே இந்து மதமும் do & Donts தானா ..இன்றைக்கு எனக்கும் அப்படித்தான் படுகிறது

 

At October 04, 2006 5:25 PM , Blogger கூத்தாடி said...

ஜாடயு
உங்கள் link கிர்கு நன்றி ..படிக்க முயற்சிக்கிறேன் ..already bookmark பண்ணிவிட்டேன் ..
கண்டிப்பாய் பயன் உள்ளதாக இருக்கும்

 

At October 04, 2006 5:42 PM , Blogger கூத்தாடி said...

//சீக்கியர் மதம் கூட ஒத்துக் கொள்வார்கள்...ஏன் என்றால்...இந்து மதம்/வாழ்க்கை முறை/மதங்களுக்கு எல்லை வரயருக்கப் பட்டால் அது, அகண்ட பாரதத்தில் தோன்றி, அதன் புனித ஸ்தலங்கள் பாரத மண்ணில் இருக்கும் எல்லா மதங்களும் இந்து மதங்கள் என்றே சொல்லவேண்டும்... (பாரத மண்ணில் மட்டுமே என்று சொல்பவர்கள் இந்துத்வா வாதிகள், உங்கள் முட்டள் நண்பர் அல்ல).//

என்னால் எல்லா இந்திய மதங்களும் ஒற்றை மதம் என்று சொல்ல முடியாது.அவரவருக்கு தனியாக அடையாளங்கள் இருக்கிறது .தனித் தனியாக மதங்கள் தோன்றுவதற்க்கானக் காரணங்கள் இருக்கின்றப் போது எப்படி எல்லாம் ஒரே மதம் என்று சொல்ல முடியும் ..

உங்கள் வாதப் படி யூத/கிருத்தவ/இஸ்லாமையும் ஒரே மதம் என்று சொல்லிவிடலாமே ..


//இந்த வகையில் கிருத்துவம், இஸ்லாம் இரண்டும் வராது...இருந்த போதிலும் இந்துக்கள் ஏற்றுக் கொண்டாலும் எத்தனை கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும் தாங்கள் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெறுமை கொள்வார்கள்?//

இந்துக்கள் எத்தனைப் பேர் ஏற்றுக் கொள்வார்கள் ?ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சிதான்

//பூஜை ரூமில் ஜீசஸ் படத்தையும், மக்கா படத்தையும் கொண்ட இந்துக்கள் வீடு ஏராளம்..//
நீங்கள் சொல்வது சரிதான் ..நமக்குத் தான் நிறைய சாமிகளாச்சே அதனால் பத்தோட பதினொண்ணு ..ஆனால் அவர்களைப் பாரட்டத்தான் வேண்டும் ஆன்மீகத்தில் முதல் படியே நாம் எல்லோரும் என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் .

 

At October 04, 2006 5:48 PM , Blogger கூத்தாடி said...

//பீரும் மோரும் ஒண்ணாகாது , கூத்தாடி!
முன்னது தாகத்தைத் தணித்தாலும் உள்ளே போய் ஒரு ஆட்டம் போட்டுத்தான் அடங்கும்
மோர் அப்படி அல்ல.
சாதுவாய் தாகத்தை மட்டும் தணித்து அடங்கிரும்!//

SK சும்மா காமடிக்காகத் தான் பீர்ன்னுப் போட்டேன் ..

அது சரி நீங்க எதை பீர்ன்னு சொல்லிறீங்க எத மோருன்னு சொல்லுறீங்க ..சும்மாத் தெரிஞ்சுக்கத்தான் ..

//மோரோ இளநீரோ அவனவனுக்கு எது சாத்தியமோ பிடிக்குதோ அதச் சாப்பிடலாம். தாகம் அடங்கினா சரி.
//

சிறில் சொன்ன மாதிரித் தான் நானும் நினைக்கிறேன் ..தாகம் அடக்கிற விசயத்தில் எல்லாம் ஒண்ணுதான்னு சொல்வதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்ன்னு நினைக்கிறேன்

Ps: பீர் குடிச்சாத்தான் நம்ம தாகம் அடங்கும் ..கால்கரிப் பதிவில் சில பியர் போட்டாப் பாத்துகிட்டு அதல்லாம் தேடிக்கின்னுத் தான் இருக்கிறேன் ..

 

At October 04, 2006 5:59 PM , Blogger கூத்தாடி said...

//ஜெயமோகனின் 'இந்துமதத்தின் ஆறுதரிசனங்கள்' இதைப் பற்றி ஆராய்கிறது.//

படித்து இருக்கிறேன் .இன்னொரு புத்தகமும் இதைப் பற்றி ஆராய்ந்து எழுதிய்ருக்கிறது ..ஆசிரியர் பேர் மறந்து விட்டது ..வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டுப் பதில் போடுகிறேன் ..

//இந்திய கலாச்சாரம் 'முழுவதும்' இந்துக் கலாச்சாரமா எனும் கேள்வியையும் (நேரடியா) எழுப்பியிருக்கலாம்.//

இல்லைன்னு தான்னு நினைக்கிறேன் ,
கிருத்தவ ,இஸ்லாம விட்டாக் கூட சமண ,பெளத்த ஆதிக்கம் இன்றைய இந்துத் தத்துவதிலும் கலாச்சாரத்திலும் உண்டு ..எல்லாத்தையும் இந்துக் கலாசாரம்ன்னு சொல்ல முடியாது..

நாகர் கோவிலில் உள்ள நாகராஜா கோவில் கூட சமணர் கோவில் என்று ஒரு கருத்து உண்டு..


//வரையறைகளற்றிருப்பதே இந்து மதத்தின் சிறப்பு. தனிமனிதனுக்கு அத்தனை சுதந்திரம் உள்ளது. கண்டிப்புக்களும் சட்டங்களும் நிச்சயம் இருக்குது ஆனா அதை சிலரே வருந்திப் பழகுகிறார்கள்.//

சட்டங்கள் தான் இந்து மதம் என சிலர் ஆக்கப் பார்க்கின்றனர் ..அது கொஞ்சம் கஷ்டமா இருக்கு ..

சாமி இல்லைன்னு சொல்லுறது கூட ஒரு இந்து மதக் கூறுன்னு ஜெயமோகன் சொல்லுறாரு ..ஒரு வகையில் சரிதான் ..

 

At October 04, 2006 6:09 PM , Blogger சிறில் அலெக்ஸ் said...

//சாமி இல்லைன்னு சொல்லுறது கூட ஒரு இந்து மதக் கூறுன்னு ஜெயமோகன் சொல்லுறாரு ..ஒரு வகையில் சரிதான் ..//

சித்தர்கள் எந்த வகையில் வர்வார்கள்

 

At October 04, 2006 10:38 PM , Blogger கூத்தாடி said...

//சித்தர்கள் எந்த வகையில் வர்வார்கள//

என்னைப் பொறுத்தவரை சித்தர்கள் பெரும் பான்மை மக்கள் பின்பற்றும் இந்து சம்ய வழிபாடுகளை எதிர்த்து வந்தவர்களாக இருந்துள்ளனர் ..அவர்களின் போக்கே அலாதியானது

நட்ட கல்லை சுற்றி வந்து
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ

இவர்களை எப்படி இந்து மதத்தோடு சேர்ப்பது ..இன்னமும் இந்துக்கள் நட்ட கல்லுக்குத் தானே பாலாபிசேகம் பண்ணிகொண்டு இருக்கின்றனர் .சிலர் இதற்கு அறிவியல் உண்மையும் தேடுகின்றனர் ..


முந்தையப் பின்னூட்டத்தில் நான் சொன்னப் புத்தகம்
"இந்திய தத்துவ ஞானம் -கி லக்ஷ்மணன்"

திரும்பப் படிக்க வேண்டும் ..இப்பமாவது எதாவது புரியுதான்னுப் பாக்கணும்

இவர் புத்தகத்தைப் பார்த்து தான் ஜெயமோகன் காப்பி அடித்தார் என சிலர் சொல்லுவர் ,நான் அப்படி நினைக்க வில்லை ..ஜெய மோகன் கண்டிப்பாய் படித்திருப்பார் ஆனால் அவரின் விஷ்ணு புரத்தில் அவர் உழைப்புத் தெரியும் .

 

At October 04, 2006 11:45 PM , Blogger ஜயராமன் said...

கூத்தாடி அவர்களே,

/// நான் பீரும் மோரும்ன்னு ஒன்னுதான்னு சொல்லுறேன் சாமி ///

சர்தான். எங்கள் ஊரில் ஒரு சொல் உண்டு. மோர் கூவிக்கூவி தெருவெல்லாம் விற்கவேண்டும். ஆனால், கள்ளு ஊர் மூலையில் மறைந்திருந்தே விற்றுவிடுகிறது என்று. அதைத்தான் நாம் பார்க்கிறோம்.

எல்லா மதங்களும் "வாழ்க்கை நெறிகள்" ஆக ஆக வேண்டுமானால், எல்லா மதங்களும் மாறுதலுக்கு தயாராக வேண்டும். ஏனென்றால், "வாழக்கை நெறிகள்" மாறிக்கொண்டே வரும்.

அவ்வாறு இருக்கிறதா?

என் மார்க்கமே சிறந்தது. அது 1500 வருஷம் ஆனாலும், ஒரு வரிகூட மாறாது. என் இறைவன் சொர்க்கத்தில் இருந்து இது "என் குழந்தைகள்", இது "வேற்று குழந்தைகள்" என்று பிரித்து பேசுவான் என்று சொல்லும் மார்க்கங்கள் எவ்வாறு வாழ்க்கை நெறியாகும்?

நீங்கள் சொன்னதை நான் எதிர் மறையாக அறிகிறேன். வாழ்க்கை பாதைகள் மாறலாம். ஆனால், போகும் முடிவு ஒன்றுதான். இதுதான் இந்துமத்த்தின் அடிப்படை உண்மை. உன் வழி வேறு, என் வழி வேறு ஆனால் நாம் பெறும் உண்மை ஒன்றே. அதனால்தான், தங்களுக்கு விவகாரத்தில் இந்து மதம் பலப்பலவாகி தெரிகிறது. எல்லோருக்கும் ஒரே மருந்தும், எல்லா வேளைக்கும் ஒரே சாப்பாடும் போடும் மதம் இந்துமதம் அல்ல. புத்தன் கண்டதும், சங்கரர் கண்டதும் ஒரே தலை உண்மையை. அதை புத்தன் சூனியம் என்றான். சங்கரனோ, அதை குணம், உருவமற்ற ப்ரும்மம் என்றான். சத்தியம் என்றும் மாறுவதில்லை.

ஆனால், சுடலையும், சுதர்சனமும் வெவ்வெறு மூர்த்திகளை வணங்கலாம். ஒரே சக்திதானே உக்ரத்தில் காளியாகவும், சாந்தத்தில் பவானியாகவும் இருப்பதாக ராமகிருஷ்ணர் பார்த்து சொன்னது. இந்து மதம் அடிப்படை உண்மையை சொல்கிறது, ஆனால், நீயே யோசித்து, தியானித்து, உணர்ந்து கொள் என்று சொல்கிறது. இந்த மதம் நம் மீது திணிக்கப்படும் கோட்பாடு அல்ல. நமக்கு சுதந்திரம் கொடுத்து இறை நமக்கு கொடுத்த அறிவை பயன்படுத்தி நம்மை ஆராய்ந்து பார்க்கசொல்லும் மதம். அதுவே இதன் தனிச்சிறப்பு. தனிமனிதனை "என்னை புறக்கணித்தால் தலையை வெட்டுவேன்" என்று பயமுருத்தி இருக்கச்சொல்லும் மதம் அல்ல. என் வேத்த்தை பார். நீ உணர்ந்து கொள். உன் வழியை நீயே வகுத்துக்கொள். என்று போதிக்கும் மதம்.

அதனால்தான், இங்கு நான் உணர்ந்த இறை நீ உணர்ந்த இறையிலிருந்து உணர்வு பூர்வமாக மாறுகிறான்.

தங்கள் பதிவுக்கு நன்றி

 

At October 04, 2006 11:53 PM , Blogger ஜயராமன் said...

"I consider everybody to be a Hindu until they say they are not."


Swami Dayanand Saraswati

 

At October 05, 2006 12:12 AM , Blogger ஜடாயு said...

// இந்து சமயம் என்பது எத்தனை சமயங்களை உள் வாங்கியது ..இந்து சம்யத்தின் தற்போதையக் கருத்துக்களில் பிறச் இந்தியச் சமயங்களுக்கும் பங்களிப்பு இல்லையா //

உள்வாங்கியிருக்கிறது, ஏராளமாகக் கொடுத்தும் இருக்கிறது. பௌத்த, சமண சமயங்களின் துறவு, தியானம் பற்றிய சிந்தனைகளின் முன்னோடி உபநிஷத தத்துவங்களே.

பௌத்த, சமண புராணங்களில் இந்திரன், தேவர்கள், யட்சர்கள், நாக லோகம் எல்லாம் உண்டு.. ஆனால் சிவன், சக்தி, விஷ்ணு பற்றிச் சொன்னால் மட்டும் அதை எதிர்த்தார்கள். ஏனென்றால் சைவ, வைணவ, சாக்த சமயங்களின் ஏறக்குறைய ஸ்தாபனப் படுத்தப்பட்ட, அதே சமயம் ஆன்மீகத் தேடலுக்கும் அற்புதமான களம் அமைத்துத் தந்த கருத்துக்கள் இந்த சமயங்களை விழுங்கிச் சாப்பிட்டு விடும் போல இருந்ததால்.

// சமுத்திரம் என்பது சரிதான் ஒரு வகையில் பல கடல்கள் இணைந்தது தானே சமுத்திரம் //

சரிதான். வைணவம் என்ற ஒரு சமயத்தை எடுத்துக் கொண்டாலே அதில் கடல் அளவு விஷயங்கள் உண்டு. சைவம், யோகம், தத்துவம் போன்ற விஷயங்களும் அப்படியே.

// என் கவலை என்பது இப்போது இந்து மதத்தை கட்டமைக்க முயற்சி செய்யும் இந்து அமைப்புக்கள் சில இந்து மதம் அது இது எனச் சொல்லி இந்து மதத்தை ஒரு do & Donts யாக முயற்சிக்கிறார்கள் //

இங்கு நான் வேறுபடுகிறேன். சமய, சமுதாய அளவில் இத்தகைய கட்டமைப்பு முயற்சிகள் இன்றைய சூழலில் இந்து மதத்திற்குக் கட்டாயத் தேவை.

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இந்து எழுச்சிக்கு ஆதார சிந்தனையை முன்வைத்தவர்கள் சுவாமி விவேகானந்தர். ஸ்ரீ அரவிந்தர், ராஜா ராம் மோகன் ராய் போன்றவர்கள். பின்னர் வந்த டாக்டர் ஹெக்டேவார், குருஜி கோல்வல்கர் போன்றவர்கள் இதை ஆர்.எஸ்.எஸ். போன்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி எடுத்துச் சென்றார்கள்.

கருத்தளவில் இந்த இயக்கங்கள் இந்து மதத்தின் எல்லா கூறுகளையும் ஒப்புக்கொள்கின்றன - நாத்திகம் உட்பட. வீர சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

// நீங்கள் சொல்லும் சமுத்திரத்திற்கு எதிரானதாகவேத் தெரிகிறது .//

இல்லை. தேசிய, சமூக அளவில் ஒன்றுபட்ட ஆனால் ஆன்மீக, தத்துவ அளவில் வேற்றுமையின் அழகை உணர்ந்து அனுபவித்து அதைப் பேணிக்காக்கும் அவசியத்தை உணர்ந்த ஒரு மக்கள் சக்தி உருவாகவேண்டும் என்று தான் நினைக்கிறேன். இதுவே இந்து தர்மத்திற்கும், இந்தியாவிற்கும், உலகத்திற்கும் நல்லது.

// பசு வதை சட்டம் என்பதை நான் அப்படி ஒரு முயற்சியாகவேப் பார்க்கிறேன் ..//

இந்து அமைப்புகள் பசு வதைத் தடையை ஓவர் எம்பஸிஸ் செய்வதை இதை உணர்ந்தே நிறுத்தி/மெதுவாக்கி விட்டன. ஆனால், ஓவராக பசுக்களை இதற்காகக் கொன்று தின்றால், நம் நாட்டின் கால்நடைச் செல்வங்கள் அழிந்து பாலுக்குத் திண்டாடுன் நிலை வரும். இந்துப் பெரும்பான்மை இந்தியா வெண்மைப் புரட்சி செய்ததற்கும், முஸ்லீம் பங்களாதேஷ் பசுக்களைக் கொன்று தின்றுவிட்டு இன்று பாலுக்குக் கஷ்டப் படுவதையும் எண்ணிப் பாருங்கள். பொருளாதார நிபுணர்கள் கூட தடைச் சட்டம் இதற்கு ஓரளவு உதவியதாக ஒப்புக் கொள்கிறார்கள்.

 

At October 05, 2006 12:08 PM , Blogger கூத்தாடி said...

//எல்லா மதங்களும் "வாழ்க்கை நெறிகள்" ஆக ஆக வேண்டுமானால், எல்லா மதங்களும் மாறுதலுக்கு தயாராக வேண்டும். ஏனென்றால், "வாழக்கை நெறிகள்" மாறிக்கொண்டே வரும்.

அவ்வாறு இருக்கிறதா?//

நானும் அதேயேத் தான் கேக்குறேன் ..இந்துமதமும் அப்படி இருக்கிறதா ?

அப்ப எதற்கு இந்த மாட்டுக் கறி பிரச்சினை ,ராமர் கோவில் பிரச்சினை,மடாதிபதிகள் அவர்களுக்குச் செய்யும் பொன் அபிசேகம் போன்றவைகள்

//என் மார்க்கமே சிறந்தது. அது 1500 வருஷம் ஆனாலும், ஒரு வரிகூட மாறாது. என் இறைவன் சொர்க்கத்தில் இருந்து இது "என் குழந்தைகள்", இது "வேற்று குழந்தைகள்" என்று பிரித்து பேசுவான் என்று சொல்லும் மார்க்கங்கள் எவ்வாறு வாழ்க்கை நெறியாகும்?//

என்னுடையப் பதிவே இந்துமதம் பற்றியது ..என் கேள்வி இந்து மதம் வாழ்க்கை நெறியான்ன்னுதான் ..என் கரூத்து இல்லைன்னு ..ஆப்ராக்மிய மதங்கள் வாழ்க்கை நெறின்னு நான் சொல்லவில்லை ..உங்க அளவு கோல் படி இந்து மதம் வாழ்க்கை நெறின்னா எல்லா மத்மும் கூடத்தான் ..

//அதை புத்தன் சூனியம் என்றான். சங்கரனோ, அதை குணம், உருவமற்ற ப்ரும்மம் என்றான். சத்தியம் என்றும் மாறுவதில்லை. //



புத்தன் அன்று வேறுபடுவதற்குப் பலக் காரணம் உண்டு ..இரண்டு பேரும் ஒண்ணையே சொன்னாங்ன்னா ஏன் சங்கரர் புத்த மதத் தவர்களைத் துரத்தணும் ..சம்ணர்கள் ஏன் கழுவேறினார்கள் அல்லதி ஏற்றப் பட்டார்கள் ..

உங்கள் கருத்து இரண்டும் ஒண்ணுதான்னா எனக்கௌம் அது சம்மதம் தான் ..அப்ப ஏன் இந்து மட்டும் ஸ்பெசல் ..பெளத்தர்களாகவே இருந்திருக்கலாமே ..நீங்க உங்க லிஸ்ட்லெ முகமதுவையும் ,ஏசுவையும் கூடத்தான் சேர்த்துக் கொள்ளலாம் ..


//உன் வழியை நீயே வகுத்துக்கொள//

இதற்கு எதற்கு மதம் தேவை ..நிறுவனப்படுத்தப் பட்ட மதம் தேவையே இல்லையே ..இந்து மதம் நிறுவனப் படுத்தப் பட்டது தான் ..வேணுமின்னா loosly bounded ன்னு சொல்லலாம்

 

At October 05, 2006 12:11 PM , Blogger கூத்தாடி said...

//"I consider everybody to be a Hindu until they say they are not."
//

I consider everybody to be a Human Being until they say they are Hindu or Christian ,Muslim or etc..

 

At February 03, 2007 11:17 AM , Blogger Thamizhan said...

இந்து மதம் சுருக்கமாகப் பார்த்தால் வேத மதத்தினர் இந்தியா வந்தபோது அங்கிருந்த பல பழக்க வழக்கங்களை ஏற்று தங்களை மாற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்தனர்.சோமபானம்,பசு மிருக யாகங்கள் நீக்கி புலால் உண்ணாமை போன்றவை போற்றப் பட்டன.மதம் ஒரு அரசியல் கருவியாக மாற்றப்பட்டது.
மதம் மந்திரம் மூலமாக உழைக்காமல் வாழவும் அரசாட்சி செய்வோரை எந்த வகையினாலும் சூழ்ச்சி செய்து கைக்குள்ளே போட்டுக்கொள்வதற்கு மதமும் மந்திரமும் கடவுள்களும் புராண இதிகாசங்களும் உண்டாக்கவும் ,இருந்தவை மாற்றி அமைக்கவும் பட்டன.ஆரியக் கோட்பாடுகள் கேள்வியே கேட்கப்படக்கூடாதப் புனிதத்தன்மையாக்கப்ப்ட்டன்.
ஆரியர்களின் அடிமைக் கட்டுப்பாட்டிற்குள் எல்லாவிதமான மத எண்ணங்களும் கொண்டுவரப்பட்டன.
திருமால்,சைவம் முருகன் எல்லாமும் ஆரியப் படுத்தப்ப்ட்டன.
அந்தக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்க எல்லாவிதமான ஏற்பாடுகளும் அரச உதவியுடனேயே பரப்பப்பட்டன.அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி ஆயினர்.
பிற்கால்த்தில் புத்தர் சீக்கியர் எவராக இருந்தாலும் நாத்திகர்களாக இருந்தாலும் இந்து மததிற்குள்ளே உள்ளவர்கள் என்று அவர்களுடைய எதிர்ப்புக்களை மறைத்து அழித்தனர்.இந்து மதத்திலே உள்ள கெட்டவற்றை மாற்ற முயற்சி செய்த ஆரிய சமாஜம்,விவேகானந்தர் முதல் மகாத்மா காந்திவரை அனைவரையும் அடக்கி பார்ப்பனீய உயர்வகுப்புக்கு எப்போது இடர் வந்தாலும் அதை எப்படியாவது மாற்றி அழித்து இந்துமதம் என்பதே பார்ப்பனீய ஆரிய மதந்தான் என்று சைவர்கள்,சீக்கியர்கள்,சமணர்கள் என்று இசுலாமியரும் கிருத்துவர்களுந்த்தவிர மற்ற அனைவரும் இந்து மதத்தினர் என்று சட்டத்திலேயே ஏற்றிவிட்டனர்.இந்துமதப் பழக்கங்கள் இசுலாமிய கிருத்துவ மதமாற்றங்கள் செய்தவர்கட்கும் சாதி போன்றவை வருமளவுக்கும்,இந்துக்களிலே பார்ப்பனர் அல்லாத பல மனிதர்கள் படித்திருந்தாலும் பட்டங்கள் பதவிக்ளில் இருந்தாலும் மந்திரம் சொல்பவன் உய்ர்ந்தவன் கடவுளின் நேரடி ஏஜண்ட் என்று நம்பும் அளவுக்கச் சுயசிந்தனை இல்லாத இந்துக் களாக வாழ்கின்றனர்.இந்து என்பதே பார்ப்பனீயத்திற்கு மட்டுமே சொந்தமாக்கப்பட்டுவிட்ட மந்திரத்திற்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை என்பதுதான் பெரும்பாலான இந்துக்களின் வாழ்க்கை நெறியாகிவிட்டது!இதற்கு எந்தவிதமான ஆபத்து வந்தாலும் உடனே இந்துக்களே ஒன்று படுங்கள் முகமதிய கிருத்துவர்கள் நம்மை அடக்கப்பார்க்கிறார்கள் என்று சொல்வார்கள்.ஆனால் இந்து மதத்திலே ஏதாவது மனிதாபிமான் மாற்றங்கள் அனைவரும் சமம் ஆணும் பெண்ணும் சமம் என்று உலகே ஏற்றுக் கொள்ளும் எதையும் கடைப்பிடிக்க மாட்டார்கள்.பார்ப்பனரல்லாத மற்ற இந்துக்கள் தாங்கள் பார்ப்பனீயத்திற்கு அடிமையல்ல என்று நினைத்தால்தான் இந்து மதம் வாழ்க்கை நெறியாக முடியும் அதுவரை அடிமை நெறிதான் !

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home