கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் பேட்டி ஆனந்த விகடனில் படித்த பொழுது எனக்கு அவர் மேல் இருந்த எனக்கு இருந்த மதிப்பை மறு சிந்தினைக்கு உள்ளாக்க வேண்டி வ்ந்தது .அதன் தாக்கம் தான் இந்தப் பதிவு.
ரவிசங்கர் வாழும் கலை அமைப்பு மூலம் செய்து வந்தப் செயல்களின் மேல் ஒரு மதிப்பு இருந்தது அவர் ஒரு கார்ப்பரேட் சாமியார் மேல் தோற்றம் அழித்தாலும் அவர் மேல் இருந்த ஒரு சில தீவிரமான விமர்சனங்களையும் நான் கண்டு கொண்டதில்லை .
அவரின் இந்தப் பேட்டியில் குறிப்பிட்ட சில விசயங்கள் அவசியமில்லாதவை .கலாசேத்திரா பொறுப்பாளர் அவங்க மாணவர்களை இவருடைய நிகழ்ச்சிக்கு அனுப்பாததும் அதற்கான அவர் சொன்னக் காரணம் சரியானதல்ல தான்.பரதம் இந்து மதத்தைக் சார்ந்தக் கலைதான் ,இன்னமும் பரதத்தில் இந்து மத கடவுள்களை நோக்கித்தான் அவர்களின் நாட்டியம் இருக்கிறது .அதனால் ஒரு இந்து மத விழாவில் கலந்து கொள்ள மறுப்பதாக சொன்னது முட்டாள்த் தனமாக இருக்கிறது .
ஆனால் இந்த விஷ்யத்தை ரவிசங்கர் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகையில் சொல்லியிருக்க வேண்டியதில்லை ,அதிலும் அவர் கிறிஸ்த்துவர் எனபதல்லாம் தேவையில்லாதது .
அதுவும் ரவிசங்கர் ஒரு இந்து சாமியாராக மேற்கு நாடுகளில் அடையாளம் காட்டிக் கொள்பவர் அல்ல.அவரின் வாழும் கலை அமைப்பு இந்து மத சாயல்களைக் கொண்டு இருந்தாலும் அவர்கள் சொல்லிக்குடுக்கும் பிராயண்மத்தயும் சுதர்சன் கிரியையும் ஒரு பயிற்சியாக சொல்லிக் கொடுப்பது போன்று தான் இருந்தது .அவரின் இந்த கோர்ஸ்களில் பல கிருத்துவ ,யூத ,இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றிருக்கிறார்கள் .அது தான் எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது மேற்கில் ஒரு முகமும் இந்தியாவில் இந்து முகமுகவா இருக்கிறார் ?
பரதமும் ,பிராயாணமும் ,யோகாவும் இந்து மத அல்லது இந்தியத் தரிசனங்களின் வழியாக வந்தது தான் ஆனால் யோகா இன்று உலகம் முழுவதும் இந்து மதச் சாயலின்றி எல்லா மக்களாலும் பயிலப்படுகிறது .ஓரு நல்ல விசயம் எப்படியாவது பலர் பின்பற்றினால் நல்லது தானே .யோகா இந்தியாவுக்கும் இந்து மதம் மேலும் நல்ல மதிப்பைத் தந்துள்ளது ,நாம் நம்பும் விசயம் உலகத்திற்கு உதவும் என்றால் மற்ற மதத்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் செய்ய முடியும் என்றால் மதத்தை தூக்கி குப்பையில் போடுவது தான் சரி. நல்லதைச் சொல்லவும் நல்லதைச் செய்யவும் மதம் தேவையில்லாதது.
அது தான் சரியான ஆன்மீக வாதியின் அடையாளம் ஆன்மீக வாதிகள் மதம் தாண்டி இருப்பது தான் சரி ,இவரும் அப்படிப் பட்டவராகத் தான் தெரிந்தார் .இல்லை என அதேப் பேட்டியில் சொல்லுகிறார் ,இந்து மதத்தில் தீவிரவாதம் வளர்வதுக்குக் காரணம் சிறுபான்மையோரின் இது மாதிரியான நடைவடிக்கைத் தான் என்கிறார் ..இது ஒரு அரசியல் தலைவருக்கானப் பேச்சு ..ஆன்மீகவாதிக்கானது அல்ல ...தொடர்ந்து மத மாற்றம் பற்றி சொல்லுகிறார் ,நாகலாந்தின் கிருத்துவத் தன்மையும் அவர்களின் தனிநாடுப் போரட்டத்தையும் மத மாற்றத்திற்கு முடிச்சுப் போடுகிறார் ..மதமாற்றம் நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு எதிரானது என்பதாகத் தான் அவரின் பேட்டி இருக்கிறது .காஷ்மீர் பிரச்சினைக் கூட அப்படிபட்டது போன்றுப் பதில் சொல்லியிருக்கிறார் ...பாலீஷான இந்துதுவப் பேட்டி..
இவர் அடிக்கடி வந்து அமெரிக்க மக்களை உய்விக்க நட்த்தும் கோர்ஸ்களுக்கு சதன் பாப்டிச்டுகள் இந்த மாதிரி எதிர்ப்பு கொடுத்தால் இவர் அப்ப என்ன சொல்லுவார்ன்னு தெரியல்ல ?
அமைதிக்கு வழி வாழ்வதற்கு வழி என்று சொல்லிக் குடுப்பவர்களுக்கே இந்த் மாதிரியான் சிந்தனையென்றால் எங்கப் போய் முட்டிக் கொள்வது ?

Labels:

51 Comments:

At December 16, 2006 3:21 AM , Blogger மணியன் said...

உண்மைதான், மதங்களுக்கப்பாற்பட்ட ஆன்மீகத் தேடல்களுக்கும் நமது பாரம்பரிய நன்னெறி வாழும் கலைக்கும் ஒரு வழிகாட்டியாக இருப்பார் என்ற நம்பிக்கையை சிதைத்து வருகிறார்.

 

At December 16, 2006 10:17 AM , Anonymous Anonymous said...

ஸ்ரீ ஸ்ரீ அவர் ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். நான் ஸ்ரீ ஸ்ரீக்கு ஆதரவாளன் அல்ல. ஆனால் கிருத்தவர்களும் முகமதியர்களும் இந்து மத நம்பிக்கையை ஒரு எதிரியின் கண்ணோட்டத்திலேயெ பார்க்கிறார்கள் என்பது உண்மையே. அதைத்தான் கலாசேத்ரா இயக்குனர் செய்திருக்கிறார். அது அவரின் குற்றமில்லை. அவர் சார்ந்துள்ள மதத்தின் குற்றம்.

 

At December 16, 2006 10:17 AM , Anonymous Anonymous said...

ஸ்ரீ ஸ்ரீ அவர் ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். நான் ஸ்ரீ ஸ்ரீக்கு ஆதரவாளன் அல்ல. ஆனால் கிருத்தவர்களும் முகமதியர்களும் இந்து மத நம்பிக்கையை ஒரு எதிரியின் கண்ணோட்டத்திலேயெ பார்க்கிறார்கள் என்பது உண்மையே. அதைத்தான் கலாசேத்ரா இயக்குனர் செய்திருக்கிறார். அது அவரின் குற்றமில்லை. அவர் சார்ந்துள்ள மதத்தின் குற்றம்.

 

At December 16, 2006 7:56 PM , Anonymous Anonymous said...

உண்மை நிறம் வெளியே வருகிறது.இவர்
பள்ளி வயதிலே தஞ்சை பாபநாசம்
அருகே இருந்து பங்களூர் பக்கம் ஓடிய பார்ப்பனர்.பின் என்ன செய்தார் என்ற விவரங்கள் இப்போதுதான் வர ஆரம்பிக்கின்றன.இவரை அனைத்துப் பார்ப்பனர்களும் அடுத்த சங்கராச்சாரி போல கொண்டுவரும் முயற்சி நடக்கிறது.அரசியலில் காருத்து சொல்ல ஆரம்பித்து அரசிய்ல்வாதிக்ளையும் மடக்க முயற்சிகள் நடக்கின்றன.முதலில் பணம்,புகழ் பின்னர் அரசியலும் ஆதிக்கமும்.இதுவே திட்டம்.ம்ற்றவர்கள் மயங்காது உண்மையை விசாரித்துத் தெளிய வேண்டும்.

 

At December 16, 2006 11:33 PM , Anonymous Anonymous said...

பார்ப்பனர்களின் திறமை அது. நல்ல பிள்ளையாகக் 'காட்டி'க்கொள்வார்கள்.
மற்றவர்களுக்கு இத்தனை திறம் சாத்தியமில்லை என்றில்லை. ஆனால் வெளிப்படையாக சொல்லி மாட்டிக்கொள்வார்கள்.

 

At December 16, 2006 11:40 PM , Anonymous Anonymous said...

அன்பையே பேசுவதாகச் சொல்லிக்கொண்டு பிறர் மீது வெறுப்பையே உமிழும் பதிவர் ஒருவரை நினைவுபடுத்துகிறார். சீச்...'சி'

 

At December 17, 2006 2:17 AM , Blogger கூத்தாடி said...

மணியன்
நானும் அப்படித் தான் எதிர்பார்த்தேன் ..எமாத்தத்தில் தான் இந்தப் பதிவு ..இன்னமும் அவர் மேல் இருக்கின்ற சாப்ட்கார்னர்னால் தான் கடுமையாக விமர்சிக்கவில்லை.

 

At December 17, 2006 2:24 AM , Blogger கூத்தாடி said...

ராமச்சந்திரன்
ஆதங்கம் /கோபம் எல்லாம் எல்லோருக்கும் வரக் கூடியது தான் ..ஆனால் ஒரு ஆன்மீக குருவாகப் ப்ட்டவர் அல்லது ஆக்கப்ப்ட்டவர் சில ஆதங்கங்களை அடக்கத் தெரியாவிட்டால் என்ன பயன் ..
இவரின் இந்த மாதிரியான ஒரு கமெண்டினால் ஸ்ரீ ஸ்ரீ யின் ஏராளமான அவரின் பக்தர்/சீடர்களுக்கு கலாசேத்திரம் மீதும் கிருத்தவர்கள் மீதும் ஒரு துவேஷ்த்தை தூண்டி உள்ளார் ..இது அவ்ர் சொல்லிக் கொடுக்கும் பயிர்ச்சிக்கு உகந்ததா ,நீங்களேச் சொல்லுங்கள் .

எதிரியின் கண்ணோட்டதில்தான் எல்லா மதங்களிலும் உள்ள மதத்தலைவர்களும் பெரும்பான்மையானவர்களும் பார்க்கின்றனர் ,இந்து மதமும் அதற்கு விதி விலக்கு அல்ல என்பதற்கு ஸ்ரீ ஸ்ரீ யின் மதமாற்றம் /நாகலாந்து /காஷ்மீர் பற்றிய பேட்டியின் கருத்துக்களே சாட்சி.

 

At December 17, 2006 2:27 AM , Blogger கூத்தாடி said...

வருகைக்கு நன்றி சிவா ..

தமிழன்
//இவரை அனைத்துப் பார்ப்பனர்களும் அடுத்த சங்கராச்சாரி போல கொண்டுவரும் முயற்சி நடக்கிறது.அரசியலில் காருத்து சொல்ல ஆரம்பித்து அரசிய்ல்வாதிக்ளையும் மடக்க முயற்சிகள் நடக்கின்றன.முதலில் பணம்,புகழ் பின்னர் அரசியலும் ஆதிக்கமும்.இதுவே திட்டம்.ம்ற்றவர்கள் மயங்காது உண்மையை விசாரித்துத் தெளிய வேண்டும்.
//

அப்படித்தான் போலிருக்கிறது ..அரசியல் கட்டியே தேவலாம் போல இருக்கிறது.

 

At December 17, 2006 2:30 AM , Blogger கூத்தாடி said...

முதல் அனானி
பார்பனர் என்று குற்றம் சாட்டி நாமும் சாதித் துவேஷ்த்தை வளர்க்க வேண்டாமே ..என்னுடய வருத்த்மே சாதி மதத்திற்கு அப்பால் ஆன்மீகத்தலவர்கள் இல்லையே என்பது தான் ..

2வது அனானி

//அன்பையே பேசுவதாகச் சொல்லிக்கொண்டு பிறர் மீது வெறுப்பையே உமிழும் பதிவர் ஒருவரை நினைவுபடுத்துகிறார். சீச்...'சி' //

யாரை ? சீ ச் சீ இந்தப் பழம் புளிக்கும் தானே

 

At December 18, 2006 11:16 AM , Anonymous Anonymous said...

கிருத்துவ்னயும் மூஸ்லீமௌயும் சொன்னால் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு பொத்துகிட்டு வந்துருமே .அவர் சொன்னதுல என்னத் தப்பு .ஒரு அநியாயத்தை சொன்னதில் என்ன குறை கண்டீர் ?

 

At December 18, 2006 11:55 AM , Blogger கால்கரி சிவா said...

கூத்தாடி சார்,

அவர் சொன்னதில் தவறில்லை என்பது என் அபிப்ராயம்.
மிக மிக சகிப்புத் தன்மை கொண்ட இந்து மதத்தினர் வாழும் இந்தியாவில் இருந்தும்கூட இவர்கள் நாம் வேறு இந்துக்கள் வேறு என்று நினைத்து பிரிக்கிறார்கள்.

நல்லவர்களுடன் சேர்ந்து நல்லவர்களாக மாறாமல் நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றத்தூண்டுவது இந்த ஆப்ராகாமிய மதத்தினர்தான்.

யோகம், பரதம், ப்ரணாயாமம் இவை எல்லாமே இந்து தத்துவங்கள், கலைகள்தான்.

மேலும் ஸ்ரீஸ்ரீ தன்னை இந்து என்பதை வெளிப்படையாகவும் சொல்லுவார் இருந்தும் கிறித்தவர்களையும் இஸ்லாமியரையும் மதிக்கிறேன் என்றுதான் சொல்லுவார். அவருக்கு எம்மதமும் சம்மதம் என்பதை வெளிப்படையாக சொல்லுவார்.

யோகாவிற்கும் ப்ராண்யாமத்திற்கும் அமெரிக்காவில் எதிர்ப்பா இல்லை? இருக்கிறது. அந்த எதிர்ப்பை இந்த கலையினால் கிடைக்கும் பலன் தூக்கியடிக்கிறது என்பது உண்மை.

ஓம்கார மந்திரத்தை உச்சரிக்கும் கூட்டம் அதிக்கரிக்கிறது. அவ்வாறு உச்சரிப்பவர்கள் தாங்களாகவே உண்மை அறிய உச்சரிக்கிறார்கள். பணத்திற்காகவோ சுவன கன்னிகளுக்காவோ அல்ல.

கடைசியாக...வலைப்பதிவு அறிவுஜீவிகள் இதை சொல்லி ஜல்லியடிப்பார்கள்:

"சிறுபான்மையினர் வன்முறையில் ஈடுபட காரணம் பெரும்பான்மையினரின் ஆதிக்கமே"

அதே வழியில்

"ஸ்ரீஸ்ரீ போன்ற அமைதியானவர்கள் கூட மனம் வெம்பும் படி செய்ய காரணம் இந்த ஆப்ரகாமிய மத ஆதிக்க எண்ணமே"

 

At December 18, 2006 12:38 PM , Anonymous Anonymous said...

கூத்து!! பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வளர்க்கப்பட்ட யோகா
கலை பொது சொத்து.

இந்த பொது சொத்துக்கு இன்று மவுசு
இருப்பதால் இவர் இதற்கு முன்பு சுதர்சன என்று ஒரு பெயரை
மட்டும் சேர்த்து 'சுதர்சன க்ரிய யோகா' என்று இவர்தான் யோகாவை
கண்டுபிடித்தது போல patent பண்ணி வைத்திருக்கிறார்.

இது மா.. பெரும் ப்ராடு. மஞ்சளையும், பாஸ்மதியையும்
சிலர் தங்கள் பெர்யரில் பேடந்த் செய்தது போன்ற ப்ராடு.

 

At December 18, 2006 1:35 PM , Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஸ்ரீ ஸ்ரீ கூறியதில் தவறென்ன? காஷ்மீர் பண்டிட்கள் இருபது வருடங்களாக வாழும் நிலை என்ன? திரிபுராவில் ஜமாத்தியாக்கள் எப்படி வாழ்கிறார்கள்? பாப்டிஸ்ட் சர்ச்சால் உருவாக்கப்பட்ட NLFT அங்குள்ள ஜமாத்தியாக்களை கூட்டமாக கொன்றும் கிறிஸ்தவ கட்டுப்பாடுகளை அவர்கள் மீது திணித்தும் வருகிறதே! அதனை குறைந்த பட்சம் எதிர்கொள்ள யாருக்காவது தோன்றியுள்ளதா? ரியாங்குகள் இன்றைக்கும் அகதிகளாக மிஸோக்களால் துரத்தப்பட்டு வாழ்ந்து அணு அணுவாக மடிந்துகொண்டிருக்கிறார்களே அந்த தலித் வனவாசிகளுக்காக குரல் கொடுத்து உச்சநீதி மன்றம் வரை போய் வாதாட ஆர்.எஸ்.எஸ்ஸின் வனவாசி கல்யாண் கேந்திரா தவிர வேறு எந்த கூத்தாடிக்கு நேரமிருந்தது? பண்டிட்களும், ரியாங்குகளும், ஜமாத்தியாக்களும் இன்றைக்கு படும் பாடு அவர்கள் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்ததால் ஏற்பட்ட நிலை அல்லவா? ஆனால் இவர்களை பற்றியெல்லாம் சிந்திக்க நம் போலி செக்யூலர் கூத்தாடிகளுக்கு நேரமிருக்காது. ஸ்ரீ ஸ்ரீ இரண்டு பக்கம் மதமாற்றத்தை கண்டித்துவிட்டாராம் உடனே வந்துவிட்டதையா ஆவேசம்.
NLFT பயங்கரவாத அமைப்புக்கு பாப்டிஸ்ட் சர்ச் உதவி செய்வது குறித்து திரிபுரா மார்க்சிய அரசு விசனப்படுவது BBC, April 18, 2000 வந்துள்ளது. (http://news.bbc.co.uk/2/hi/south_asia/717775.stm)
இந்த மதமாற்ற-பயங்கரவாத முயற்சிகளுக்கு எதிராக வனவாசிகள் ஒருங்கிணைந்ததிருப்பது குறித்த செய்தி (http://www.rediff.com/news/2001/aug/02trip.htm) மகர சங்கராந்தி திருவிழாவிற்காக சந்தைக்கு சென்றவர்களை சுட்டுக்கொன்ற செய்தி: PTI, January 13, 2002 NLFT மகரசங்கராந்தி போன்ற கிறிஸ்தவமற்ற திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. ஆக இத்தனை இரத்தகளறிக்கும் வாய் மூடி மௌனிக்கும் கூத்தாடி ஸ்ரீ ஸ்ரீ க்கு எதிராக கூத்தடிப்பது கீழ்த்தரமான நேர்மையற்ற கூத்து அல்லாமல் வேறில்லை.

 

At December 18, 2006 2:09 PM , Blogger வஜ்ரா said...

//
அமைதிக்கு வழி வாழ்வதற்கு வழி என்று சொல்லிக் குடுப்பவர்களுக்கே இந்த் மாதிரியான் சிந்தனையென்றால் எங்கப் போய் முட்டிக் கொள்வது ?
//


அவர் சொன்னதில் எதேனும் பொருள் குற்றம் கண்டீரா அல்லது அவர் தப்பைச் சுட்டிக்காட்டுவதே தப்பா ?

யார் வேண்டுமானாலும் இஸ்லாமிய தீவிரவாதம், கிருத்துவ மதமாற்று உத்திகள் பற்றி பேசலாம் ஆனால் இந்துக்கள் முக்கியமாக வாழும் கலை சொல்லும் ஸ்ரீ ஸ்ரீ பேசக்கூடாது என்பது போல் உள்ளது.

சொன்னாலும் சொல்லவிடிலும் வடகிழக்குப்பிராந்தியத்தில் பிரச்சனைக்கு மூல காரணம் கிருத்தவ அடிப்படைவாதம்.

உலகெங்கும் வெவ்வேறு தேசங்களில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம் இன்னுமொரு பிரச்சனை.

வாழும் "கலை" தான் உலகப் பொதுச் சொத்து. ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு இந்து. அவர் சுயமரியாதையுள்ள இந்து. சுயத்தை வெறுக்கும் திம்மி இந்து அல்ல.

 

At December 18, 2006 3:33 PM , Blogger கூத்தாடி said...

சிவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//மேலும் ஸ்ரீஸ்ரீ தன்னை இந்து என்பதை வெளிப்படையாகவும் சொல்லுவார் இருந்தும் கிறித்தவர்களையும் இஸ்லாமியரையும் மதிக்கிறேன் என்றுதான் சொல்லுவார். அவருக்கு எம்மதமும் சம்மதம் என்பதை வெளிப்படையாக சொல்லுவார். //

அவர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் ..அதனால் வ்ந்தல்க் கேள்வி தான் இது.எம்மதமும் சம்மதம் என்பவருக்கு மத மாற்றம் பற்றி என்னக் கவலை.

அவரின் இந்தப் பதிலைப் பாருங்கள்

//You said the need of our times is secular spiritualism. What is secular spiritualism?

India is full of different cultures, and different sects within a religion. Many religions follow different things. So what is the thread that can weave them all without disturbing and creating a conflict with their faith or belief system? That's what I call secular spirituality. It is a spirituality that unites, promotes harmony in diversity, and that makes people appreciate and honestly pray from their heart.


//

பதில் எப்படி இருக்கிறது ..சரியாகப் பேசியிருக்கிறார்.இதைப் போல பலவற்றைப் படித்து விட்டு நான் புரிந்து வைத்திருந்த ஸ்ரீஸ்ரீ விகடன் பேட்டியில் இல்லை என்பதே என் ஆதங்கம் ..

Q: The dialogue on secularism is conducted largely within the political framework. Are there political parties that are not secular?

It is difficult to say who is really secular. Even those who claim to be secular don't seem to be secular anywhere anymore.

ஆம் ..அவரே அப்படித்தான் போலிருக்கிறது ..
அவர் web site இல் இருந்து

Sri Sri Ravi Shankar has gone beyond the identity of his religion by uniting various traditions of the world and has inspired humanity to identify one self as a member of a One World Family

இப்படி யான ஒரு விசயத்தை விகடனில் சொல்லியிருந்தால் அது பல லட்சம் விகடன் வாசகர்களுக்கு ஒரு சரியானதைச் சொல்லிக் குடுத்து இருக்கும் .

நீங்கள் சொன்ன மாதிரி

//நல்லவர்களுடன் சேர்ந்து நல்லவர்களாக மாறாமல் நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றத்தூண்டுவது இந்த ஆப்ராகாமிய மதத்தினர்தான்.//

நல்லவர்கள் கெட்டவர்களாக் மாறுவதற்கு அவர்களே காரணமாகட்டும் ..நீங்களும் நானும் கெட்டவர்களாக மாற்றம் அடையலாம் ..நம்முடைய ஆன்மீக குருவுமா அந்த அளவுக்கா நாம் பல்வீனமாக இருக்கிறோம் !!

 

At December 18, 2006 3:36 PM , Blogger கூத்தாடி said...

அனானி

//கூத்து!! பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வளர்க்கப்பட்ட யோகா
கலை பொது சொத்து.//

Agree .அதே சமயம் அதை பரப்புவதற்கு ஸ்ரீஸ்ரீ செய்த சேவைகளை under estimate பண்ணக் கூடாது ..அவர் பல நல்ல விசயங்கள் செய்து வருகிறார் என்பதில் எனக்கு கருத்து வேறு பாடு கிடையாது ..அவர் பேட்டர்ன் பண்ணி வைத்து இருக்கிறாரா இல்லையா எனப்து மேல் என்க்கௌ அக்கறையும் இல்லை ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 

At December 18, 2006 3:46 PM , Blogger கூத்தாடி said...

வஜ்ரா & நீலகண்டன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

சிவாக்கு சொல்லியப் பதிலிலே என் விளக்கம் இருக்கிறது ..

நீலகண்டன் - நீங்கள் பேசுவது அரசியல் ..என் வருத்தமே ஸ்ரீஸ்ரீ யும் அரசியல் பேச ஆரம்ப்பித்து விட்டாரே என்பது தான் .அதற்கு என் அதீத எதிர்பார்ப்பும் காரணம் இருக்கலாம் .

அவர் பெரும்பாலான் முஸ்லீம் / கிருத்தவ குருக்கள் மாதிரி இவரும் இந்து குருவாக இருந்து விட்டுப் போகட்டும் இழப்பு மதமற்ற ஆன்மீகத்திற்கு தான் ..

என் வீட்டுப் பிரச்சினை யை நான் சுட்டிக் காட்டும் போது ,நீங்கள் சொல்லுவது அடுத்த வீட்டு பிரச்சினையைச் சொல்லி அப்போதல்லாம் சும்மா இருந்தியே இப்போதும் சும்மாக் கிட என்பது போல் சொல்லியிருக்கிறீர்கள் ..எல்லா வற்றுக்கும் பதில் சொல்வதும் கருத்துச் சொல்வதற்கும் எனக்கு நேரமும் அறிவும் பத்தாது ..

//வாழும் "கலை" தான் உலகப் பொதுச் சொத்து. ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு இந்து. அவர் சுயமரியாதையுள்ள இந்து. சுயத்தை வெறுக்கும் திம்மி இந்து அல்ல//

சுயம் அழித்தலே இந்து மதத்தின் ஆன்மீகம் ..சுயம் வளர்த்தலா ஆன்மீகம்..

 

At December 18, 2006 10:01 PM , Anonymous Anonymous said...

சுயம் அழித்தலே இந்து மதத்தின் ஆன்மீகம் ..சுயம் வளர்த்தலா ஆன்மீகம்.

கூத்தாடி நீங்கள் விவரமான கூத்தாடிதான். மேலே நீங்கள் பாரதீய ஞானமரபின் சாரத்தைச் சிக்கென்று பிடித்துச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இந்த 'சுயம் அழிக்கும்' சித்தாந்தத்தின் ஏற்பும் பரப்பும் தொடர்ந்து தழைக்க வேண்டும் என்றால் அது நாம் இந்துக்களாய் இருக்கும் வரைதான் சாத்தியமாகும். மேலே நண்பர்கள் சொல்ல வருவதும் அதுதான். சுயம் அழித்தலே ஆன்மிகம் என்று பிற மதத்தவரிடம் போய் சொல்லிப் பாருங்கள். இதைச் சொன்ன சூபிக்களுக்க்கும், catherகளுக்கும் என்ன மாதிரி தண்டனையை இஸ்லாமும் கிறித்துவமும் தந்தன என்பதையும் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.

 

At December 18, 2006 10:12 PM , Anonymous Anonymous said...

கூத்தாடி என்று cathar கூகிளிட்டுப் பாருங்கள். 'சுயத்தை' அழித்தது யார் என்று தெரியும்.

 

At December 18, 2006 10:20 PM , Anonymous Anonymous said...

நீங்கள் சொல்வதுபோல் சுயம் அழித்து அனால் ஹக் என்று அறிவித்த சுபி மன்ஸூர் அல்ஹலாஜுக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்:

http://en.wikipedia.org/wiki/Mansur_Al-Hallaj
http://en.wikipedia.org/wiki/Anal_Haq

 

At December 19, 2006 12:31 AM , Blogger வஜ்ரா said...

//
சுயம் அழித்தலே இந்து மதத்தின் ஆன்மீகம் ..சுயம் வளர்த்தலா ஆன்மீகம்..
//


முதலில் கூறை ஏரி கோழி புடிங்க அப்புறமா வானம் ஏரி வைகுந்தம் போகலாம். சுயத்தை முதலில் தேடுங்கள் பிறகு அதை அழித்து பரப்பிரம்மத்தை அடையலாம்.

//
எம்மதமும் சம்மதம் என்பவருக்கு மத மாற்றம் பற்றி என்னக் கவலை.
//

எம்மதமும் சம்மதம் என்பதற்கு மாற்று மதங்களும் அதே பரம்பொருளை நோக்கிச் செல்லும் ஒரு பாதையாகப் பார்க்கும் பார்வை (its a view point not a life style).

அதன் பொருள் எல்லா மதமும் சரி என்றால் இந்துக்கள் ஏன் மதம் மாறக்கூடாது என்று கேட்பதற்கு கொடுக்கப்படும் சர்டிபிக்கேட் அல்ல.

எம்மதமும் சம்மதம் என்று சொல்லும் ஒரு கிருத்தவப் போப், இஸ்லாமிய முல்லா இருந்தால் (ஒரு வேளை இருக்கலாம்) அவர் இஸ்லாத்தைவிட்டு, கிறுத்தவத்தைவிட்டுச் செல்ல ஊக்கமளிப்பாரா ?

எம்மதமும் சம்மதம் என்று சொல்லி உங்கள் பெண் வளர்க்கப் பட்டு அவள் ஒரு இஸ்லாமியர் இல்லை கிருத்தவரை மணக்க ஆசை கொண்டால் ? (ஒரு கிருத்தவனை மணக்க கிருத்தவத்தை தழுவவேண்டும்)

அவள் கேட்பாள், எம்மதமும் சம்மதம் என்று நீங்கள் தானே சொல்லி வளர்த்தீர்கள் என்று ?


இந்த அர்த்தத்தில் தான் சுயம் அழித்தல்/வெறுப்பு என்று சொன்னேன்.

இஸ்லாமியரும் கிருத்தவரும் "எம்மதமும் சம்மதம்" என்று பெரும்பான்மை இந்துக்கள் போல் வாழ்வதில்லை என்பது நடைமுறை உண்மை.

பெரும்பான்மை இந்துக்கள் இவர்களுக்கு எம்மதமும் சம்மதம் என்று அளிக்கும் ஒரு நல்லெண்ணத்தை வைத்துக்கொண்டு ஆன்மா அறுவடை செயபவர்கள் இவர்கள்.

"உண்டவீட்டுக்கு ரெண்டகம்"

இவர்கள் அத்தகய நல்லெண்ணத்திற்கு லாயக்கிலாதவர்கள்.

ஸ்ரீ ஸ்ரீ யின் கவலை ஞாயமான கவலை.

நீங்கள் என் கேள்வி ஒன்றுக்கு பதில் தரவில்லை.

//
அவர் சொன்னதில் எதேனும் பொருள் குற்றம் கண்டீரா அல்லது அவர் தப்பைச் சுட்டிக்காட்டுவதே தப்பா ?
//

இதுவரை நீங்கள் சிவாவிற்கு அளித்த பதிலில் அவர் அப்படிச் சொல்வது தவறு. வாழும் கலை சொல்லிக் கொடுத்துவிட்டு எம்மதமும் சம்மதம் என்று சொல்பவர் மதம் மாற்றம் பற்றி கவலை கொள்ள எந்த அருகதையும் இல்லை என்பதே. சரியா ?

 

At December 19, 2006 12:42 AM , Blogger கூத்தாடி said...

//. ஆனால் இந்த 'சுயம் அழிக்கும்' சித்தாந்தத்தின் ஏற்பும் பரப்பும் தொடர்ந்து தழைக்க வேண்டும் என்றால் அது நாம் இந்துக்களாய் இருக்கும் வரைதான் சாத்தியமாகும்//

இந்துக்களாய் இருந்து விட்டுப் போங்களேன் யார் வேண்டாம் எனச் சொல்லுகிறார்கள் ..

//நீங்கள் சொல்வதுபோல் சுயம் அழித்து அனால் ஹக் என்று அறிவித்த சுபி மன்ஸூர் அல்ஹலாஜுக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்:
//

அவருக்கு ஆனக் கதி எனக்கு நன்றாகத் தெரியும் ..சுயம் அழித்தலே ஆன்மீகம் எனத் தொன்று தொட்டு சொல்லி வரும் நம் நாட்டிலேயே இந்துமதத்தை ஒப்புக் கொள்ளும் நீங்களே "அவர்கள்" அப்படி இருக்கிறார்கள் என்று நாமும் அப்படி இருக்க முடியாது என்று இருக்கும் போது மன்ஜீருக்கு ஆயிரம் வருசத்திற்கு முன் நடந்ததில் அதுவும் "அனல் ஹக்" எனபதில் நம்ப்பிக்கை இல்லாதவர்கள் அவரை கொன்றதில் என்ன ஆச்சிரியம் இருக்க முடியும் ?

நான் நம்பிக்கை கொண்ட உங்களிடமும் உங்கள் ஆன்மீக குருவிடமும் தானேக் கேட்கிறேன் ஏன் நீங்க follow பண்ணக் கூடாது என்று..

அடுத்த மதத்தவர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக அதேத் தவறை நாமும் செய்வோம் என்பதில் என்ன ஆன்மீகம் இருக்க முடிய்யும் ? மீண்டும் கேட்கிறேன் நம்முடைய ஆன்மீகப் பலம் அவ்வளவு பலகீனமானதா ?

ஸ்ரீஸ்ரீ யின் பொறுமை after all 40 பரத நாட்டியப் பெண்களுக்காகவும் ஒரு கிருத்துவரின் சிறுபிள்ளைத் தனமானச் செயலுக்குமா பலியாகி விட்டது ?

 

At December 19, 2006 12:46 AM , Blogger வஜ்ரா said...

//
இழப்பு மதமற்ற ஆன்மீகத்திற்கு தான்
//

இதற்கு முன்னர் இருந்த மதமற்ற ஆன்மீகவாதிகள் பட்டியல் தர முடியுமா ?

Secular spitituality.

Its a mockery of any spirituality.!

Like anyother thing that has secular in its name it can be hijacked by powerful faith based monotheists and can be used against the very foundation of which it stands on.

இந்த மதமற்ற ஆன்மீகம் என்பதெல்லாம் தான் "ஆழம் தெரிந்தே காலை விடுவது" என்பது. அழிவுக்கு வழி.

 

At December 19, 2006 1:05 AM , Blogger கூத்தாடி said...

//Secular spitituality.

Its a mockery of any spirituality.!

Like anyother thing that has secular in its name it can be hijacked by powerful faith based monotheists and can be used against the very foundation of which it stands on.//

என்னுடைய வார்த்தைகள் அல்ல Secular sprituality ஸ்ரீஸ்ரீ யின் வார்த்தைகள் :-(

நான் அவரின் இந்தக் கருத்தை ஆதரிப்பவன் எனபதால் நீங்கள் எனக்குப் பதிலிறுப்பதாகவேக் கொள்கிறேன்.
நீங்கள் சொல்லும் எல்லாக் காரணங்களும் திரும்ப திரும்ப "அவர்கள்" என்பதை நோக்கித் தானே இருக்கிறது ,,இதில் எங்கே சுயம் இருக்கிறது ..

உங்களின் சுயம் அடுததவரைச் சார்ந்தது தானா ? உங்களின் சுயம் புரிதலுக்கு ஏன் ஆபிராமைக மதங்கள்த் தேவை ..சுயம் புரிதலுக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் ?

இந்து மத்தில் யாருமே இல்லாமல் வஜ்ரா மட்டுமே இருந்தாலும் அது உங்கள் சுயம் தேடுதலுக்கும் பின் அழித்தலுக்கும் ஏதாவது ஊறு விளைவிக்குமா ?
அப்படி எனில் நம் ஆதமபலம் பலவீனமாக இருக்கிறது என்று பொருள் .நாம் நம் ஆன்மீகத்தை பலப் படுத்துவோம் ..எண்ணிக்கையல்ல ..

இல்லை "அவர்கள்" நிறுத்தாத வரை நாமும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்றால் "அவர்களுக்கும் " நமக்கும் எந்த வித்தியாசம் இல்லை .

வஜ்ரா
நீங்கள் பேசும் அரசியல் எனக்குப் புரிகிறது ,அரசியலுக்கு ஆயிரம் ஆட்கள் இருக்கிறார்கள் ?ஸ்ரீஸ்ரீ க்கு எதற்கு என்பது தான் என் ஆதங்கமே .

 

At December 19, 2006 1:31 AM , Blogger வஜ்ரா said...

//
மீண்டும் கேட்கிறேன் நம்முடைய ஆன்மீகப் பலம் அவ்வளவு பலகீனமானதா ?
//

நம்முடைய ஆன்மீக பலம் பற்றியது அல்ல இந்த மதமாற்ற விஷயம்.

தேசிய ஒருமைப்பாட்டைக் குலைத்து பிரிவினைக்கு வித்திடும் வழிமுறைகள்.

//
நீங்கள் பேசும் அரசியல் எனக்குப் புரிகிறது ,அரசியலுக்கு ஆயிரம் ஆட்கள் இருக்கிறார்கள் ?ஸ்ரீஸ்ரீ க்கு எதற்கு என்பது தான் என் ஆதங்கமே .
//

ஸ்ரீ ஸ்ரீ சுயமாக ஆனந்த விகடன் ஆபீசுக்குப் போய் தன் பேட்டியை அச்சேற்றுமாறு வேண்டிக் கொண்டாரா.

அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் பதில் அளித்தார்.

அது அவர் கருத்து என்பதை உங்களால் பார்க்க முடியவில்லையா ?

மத மாற்றம் என்பது விஷ விதை. அது தழைப்பது நாட்டிற்கு நல்லதல்ல.

When he sounds politically incorrect you cry. When he says "secular spirituality" you say "excellent" and second his view.

உங்களுக்கு இந்துவாக இருக்கப் பிடிக்கவில்லை ஆகவே செகுலர் என்றவுடம் ஒத்துக் கொள்கிறீர்கள். அதே ஆள் கிருத்தவ மதத்தவரின் intolerance பற்றிச் சொன்னால் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. நீங்கள் இந்து என்ற சுயத்தை அழித்து "secularist" என்ற சுயத்தை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இதுவா உண்மையான சுய அழிப்பு ? சுய வெறுப்பு இது. சுய அழிப்பு அல்ல.


//
நீங்கள் சொல்லும் எல்லாக் காரணங்களும் திரும்ப திரும்ப "அவர்கள்" என்பதை நோக்கித் தானே இருக்கிறது ,,இதில் எங்கே சுயம் இருக்கிறது ..
//

இங்கே எனது ஆன்மீகத்தேடலை நான் செய்யவில்லை. நான் இந்து, இந்து என்பதில் பெருமை கொள்ளும் இந்து.

அதற்காக அடுத்தவரை குறை சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் (இந்துக்கள்) மேல் குறை சொல்லி தன் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ளும் கொள்கையினால் பாதிக்கப் படுவது எல்லோருமே என்பதால் தான் "அவர்கள்" பற்றி பேச வேண்டியுள்ளது.

 

At December 19, 2006 3:30 AM , Blogger Madhu Ramanujam said...

பின்னூட்டத்தை எழுத ஆரமிக்கும்போது என்னமோ சின்னதாத்தான் இருந்தது. போகப் போக அதை ஒரு தனி பதிவாவே வெளியிடணும்னு ஒரு எண்ணம். அதனால கொஞ்சம் சிரமம் பாராம கீழ கொஞ்சம் சொடுக்குங்களேன்...

ஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா?

 

At December 19, 2006 4:07 AM , Anonymous Anonymous said...

//. ஆனால் இந்த 'சுயம் அழிக்கும்' சித்தாந்தத்தின் ஏற்பும் பரப்பும் தொடர்ந்து தழைக்க வேண்டும் என்றால் அது நாம் இந்துக்களாய் இருக்கும் வரைதான் சாத்தியமாகும்//

இந்துக்களாய் இருந்து விட்டுப் போங்களேன் யார் வேண்டாம் எனச் சொல்லுகிறார்கள் ..


கூத்தாடி என்னத்தைச் சொல்ல!

உங்களுக்காக ஒரு கவிதையை சமர்ப்பணம் செய்து விட்டு நான் ஜூட்.

ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக
எம் குரல்வளை அறுக்கப்படும் நாள்வரை!

 

At December 19, 2006 4:22 AM , Blogger Krishna (#24094743) said...

கூத்து அவர்களே: உங்களுடைய அடிப்படை புரிதலை கொஞ்சம் விளக்கவும்.

"மதமாற்றம் எவ்வாறு 'அரசியல்' விஷயமாகும்?" - அதுவும் மூச்சுக்கு முன்னூறு தடவை செக்யூலர் என்று பிதற்றும் இந்திய அரசியலில், மதமாற்றத்திற்கு எப்படி இடம் வரும்? இதைச் செய்பவர்கள் அரசியல்வாதிகளா இல்லை மிஷனிரிகளா? செய்பவர்கள் ஒரு மத வெறியர்கள். அதை பாதிக்கப்பட்ட மதம் சார்ந்த பெரியவர் ஒருவர் கண்டிப்பதில் என்ன தவறு கண்டீர்கள்? இது எப்படி அரசியலாகும்? அடிப்படையான உங்கள் விளங்குதலே தவறு எனப் படுகிறது.

 

At December 19, 2006 5:47 AM , Anonymous Anonymous said...

///கடைசியாக...வலைப்பதிவு அறிவுஜீவிகள் இதை சொல்லி ஜல்லியடிப்பார்கள்:

"சிறுபான்மையினர் வன்முறையில் ஈடுபட காரணம் பெரும்பான்மையினரின் ஆதிக்கமே"

அதே வழியில்

"ஸ்ரீஸ்ரீ போன்ற அமைதியானவர்கள் கூட மனம் வெம்பும் படி செய்ய காரணம் இந்த ஆப்ரகாமிய மத ஆதிக்க எண்ணமே"
///

அப்போ நீங்களும் ஜல்லி அடிக்கிறீங்க. அப்படித்தானே? அடிங்க அடிங்க.

 

At December 19, 2006 7:01 AM , Anonymous Anonymous said...

ஸ்ரீ ஸ்ரீ அவர்களுடய கருத்துகளில் ஒரு துளியும் தவறு இல்லை. அவர் இந்த மாதிரி உன்மை கருத்தை தைரியமாக கூருவார் என்று நான் யெதிர் பார்கவில்லை. அவரும் முகமுடி அநிண்து எம் மதமும் சம்மதம் என்ரு சொல்லி popularity தெடுவார் என நினைத்து இருந்தேன். இப்பொது அவர் உன்மைக்காக தயக்கமில்லாமல் பெசக்குடியவர் என தெரிண்ததும் அவர் மிதான மதிப்பு பல மடங்கு கூடி உள்ளது. அவர் மத மாட்றத்தை பட்ரி குறி உள்ள ஒவ்வொரு வார்தையும் உன்மை.

Im learing to type in Tamil for the first time. So pls dont bare with me.

 

At December 19, 2006 9:52 AM , Blogger கால்கரி சிவா said...

//அப்போ நீங்களும் ஜல்லி அடிக்கிறீங்க. அப்படித்தானே? அடிங்க அடிங்க//

அவங்க அடிச்ச ஜல்லியை எடுத்து அவர்கள் மூஞ்சியில் திருப்பி அடிக்கிறேன்.

நான் சொல்லியே ஜல்லி அடிக்கிறேன். அவர்கள் ஜல்லி அடித்து அறிவுஜீவி அரிதாரம் பூசி கொண்டார்கள்

பதிவிற்கு சம்பந்தமாக ஒன்று.

கூத்தாடி சார், நான் செக்குயூலர்தான் என் கூட வருபவர்களையும் செக்யூலர் என்றுதான் நான் பார்க்கிறேன். ஆனால் அருகில் உள்ளவர் அப்படியில்லை.

"நீ என்னதான் சொன்னாலும் என் கருத்துப்படி தான் நான் இருப்பேன். உன் பேச்சை கேட்கும் ஆட்களையும் என் கருத்திற்கு மாற்றுவேன் ஏனென்றால் நீ எல்லா கருத்துகளையும் ஏற்றுக் கொள் என உன் ஆட்களுக்கு கற்றுதந்துள்ளாய். உன் ஆட்கள் எல்லாரும் என் கருத்தை ஏற்றுக் கொண்டவுடன் நீ இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன" என்ற மனநிலையில் உள்ளார்.

தலைவலி வந்தால் சிறிது பொறுத்துக் கொள்ளலாம் அதே தலைவலி 10 மாதங்களாக தொடர்ந்தால் தலையில் டியூமர் இருக்க வாய்ப்புள்ளது. அந்த டியூமரை வெட்டி எரிவதுதான் உடலுக்கும் உயிருக்கும் நல்லது.

அந்த தலைவலி டியூமராக இருக்குமோ என சந்தேகம் தான் ஸ்ரீஸ்ரீக்கு வந்துள்ளது.

அனானிமஸின் கவிதை அருமை அதை மீண்டும் சொல்லி

"ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக
எம் குரல்வளை அறுக்கப்படும் நாள்வரை!
"

 

At December 19, 2006 4:52 PM , Blogger கூத்தாடி said...

மது
உங்கள் க்ருத்துக்கு நன்றி..

//நம்ம வீட்ல ஏம்மா பேய் பிசாசு படமெல்லாம் வெச்சி பூஜை பண்ரோம்? எல்லாத்தையும் எடுத்திட்டு ஜீசஸ் படம் மட்டும் வைங்க. ஜீசஸ் மட்டும்தான் கடவுள்னு எங்க ஸ்கூல்ல சொல்லிக் குடுத்தாங்க...”//

அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் ? அவர்கள் தவறாக சொல்லுகிறார்கள் என்பதற்கு நீங்களும் சொல்லலாமே ஜீஸசும் பேய் என்று தான் என்று ..

நம்முடைய தமிழ்நாட்டில் பல லட்சம் இந்துக்கள் மிசினரி பள்ளிகளில் படித்தவர் தாம் ..எத்தனை பேர் கிருத்துவராய் மாறி விட்டார்கள் ?

என்னுடய வாதம் ,நான் ஸ்ரீ யை இதற்கெல்லாம் அப்பார்பட்ட ஒரு ஆன்மீகத் தலைவர் என்று எண்ணியிருந்தேன் அது தவறு என உங்கள் பதில்கள் தெரிவிக்கிற்து.

 

At December 19, 2006 5:09 PM , Blogger கூத்தாடி said...

//ம்முடைய ஆன்மீக பலம் பற்றியது அல்ல இந்த மதமாற்ற விஷயம்.

தேசிய ஒருமைப்பாட்டைக் குலைத்து பிரிவினைக்கு வித்திடும் வழிமுறைகள்.//

வஜ்ரா
தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் என்ற நிலைப்பாடு இந்துத்துவம் பேசுபோர் ,ஏலும் சொல்லாம் . மாற்றுக் கருத்துக்களுக்கு எதிர் வைக்கும் வாதம் அனேகமாக தேசியத்தில் போய்த் தான் முடியும் .
இஷ்கான் இயக்கம் /ஓசோ போன்றோர் மேலும் மேற்கு நாடுகளில் இதே போன்ற் ஒரு குற்றச்ச் சாட்டை வைக்கலாம் ..

2 வர்டம் முன்னால் ஸ்ரீ யோ அல்லது ஒரு இந்து ஆன்மீகத் தலைவர் வந்து அமைதி பற்றிப் பேசி இராக் போருக்கு எதிராய் பேசியிருந்தால் அமெரிக்காவின் தேசியத்திற்கு எதிர் என துரத்தியிருந்தால் அது சரியா ?

மத மாற்றம் தேசியத்திற்கு எதிர் என்று சொல்ல முடியாது .ஆத்ம பலம் ஒழுங்காய் இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை ..

உங்களின் ஒவ்வொரு வாதமும் otheres பார்வை கொண்டதே ..நான் என்னில் தான் மாற்றத்தை தொடங்க எண்ணுகிறேன் ..நானும் என் மதமும் சரியாக இருந்தால் போதுமானது ..அது சரியானதாக இப்போதய காலக் காட்டத்தில் இல்லை என்பது என் கருத்து ..others யை திருத்தப் போகிறேன் என்று அவர்கள் பாதையையே தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள் ..

ஒரு வகையில் சொன்னால் எனக்குத் தான் இந்திய பாரம்பரியத்தின் அதீத நம்ப்பிக்கைப் போலும் ..நீங்கள் இந்து மதமும் இந்தியப் பாரம்பரியமும் அழிந்து போய் விடும் என எண்ணுகிறீர்கள் ..இந்து மதம் கடந்து வந்த பாதையை மறந்து விட்டீர்கள் ..இதற்கு முன்னால் இல்லாதப் பிரச்சினையா ?
யாரும் யாரையும் காரணம் இல்லாமல் மத மாற்றம் செய்ய முடியாது .
பணம் தான் என்று ஒருவர் மாறி விட்டால் போகட்டுமே என்ன இப்ப ?
ஒருவரின் மதம் சொந்த விவகாரம் என்றால் யாருக்கும் அவன் எங்கு போகிறான் என்று சொல்லத் தேவையில்லை ..

 

At December 19, 2006 5:11 PM , Blogger கூத்தாடி said...

//கூத்து அவர்களே: உங்களுடைய அடிப்படை புரிதலை கொஞ்சம் விளக்கவும்.

"மதமாற்றம் எவ்வாறு 'அரசியல்' விஷயமாகும்?" - அதுவும் மூச்சுக்கு முன்னூறு தடவை செக்யூலர் என்று பிதற்றும் இந்திய அரசியலில், மதமாற்றத்திற்கு எப்படி இடம் வரும்? இதைச் செய்பவர்கள் அரசியல்வாதிகளா இல்லை மிஷனிரிகளா? செய்பவர்கள் ஒரு மத வெறியர்கள். அதை பாதிக்கப்பட்ட மதம் சார்ந்த பெரியவர் ஒருவர் கண்டிப்பதில் என்ன தவறு கண்டீர்கள்? இது எப்படி அரசியலாகும்? அடிப்படையான உங்கள் விளங்குதலே தவறு எனப் படுகிறது.//

மதம் என்ற கொள்கையே அரசியல் தான் ..மத மாற்றம் என்ன ஆன்மீகமா ?

மதமார்றம் ஆன்மீகம் என்றால் அதன் எதிர்ப்பும் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்கிறேன் ?

மதமாற்றம் அரசியெலினில் அதன் எதிர் கருத்தும் அரசியலே

 

At December 19, 2006 5:14 PM , Blogger கூத்தாடி said...

//ஸ்ரீ ஸ்ரீ அவர்களுடய கருத்துகளில் ஒரு துளியும் தவறு இல்லை. அவர் இந்த மாதிரி உன்மை கருத்தை தைரியமாக கூருவார் என்று நான் யெதிர் பார்கவில்லை. அவரும் முகமுடி அநிண்து எம் மதமும் சம்மதம் என்ரு சொல்லி popularity தெடுவார் என நினைத்து இருந்தேன். இப்பொது அவர் உன்மைக்காக தயக்கமில்லாமல் பெசக்குடியவர் என தெரிண்ததும் அவர் மிதான மதிப்பு பல மடங்கு கூடி உள்ளது. அவர் மத மாட்றத்தை பட்ரி குறி உள்ள ஒவ்வொரு வார்தையும் உன்மை.

Im learing to type in Tamil for the first time. So pls dont bare with me.//

அனானி
தமிழ் டைப் பண்ணப் படித்து ஒரு பதிவு தொடங்கி எழுதுங்கள் ..வருகைக்கு நன்றி

மற்றபடி சிவா /வஜ்ரா/மது /கிருஷ்ணன் சொன்னதை தான் நீங்கள் சொல்லிய்ருக்கிறீர்கள் ..உங்களுக்கு சரியெனப் படுவது எனக்கு தவறெனப் படுகிறது அவ்வுளவு தான்

 

At December 19, 2006 5:22 PM , Blogger கூத்தாடி said...

////அப்போ நீங்களும் ஜல்லி அடிக்கிறீங்க. அப்படித்தானே? அடிங்க அடிங்க//

அவங்க அடிச்ச ஜல்லியை எடுத்து அவர்கள் மூஞ்சியில் திருப்பி அடிக்கிறேன்.

நான் சொல்லியே ஜல்லி அடிக்கிறேன். அவர்கள் ஜல்லி அடித்து அறிவுஜீவி அரிதாரம் பூசி கொண்டார்கள்
//

சிவா
யாராவது உங்களை இப்படித்தான் வம்புக்கு இழுப்பார்கள் ..விட்டு விடுங்கள் உங்கள் எனர்ஜி தான் வேஸ்டாகும்..

//கூத்தாடி சார், நான் செக்குயூலர்தான் என் கூட வருபவர்களையும் செக்யூலர் என்றுதான் நான் பார்க்கிறேன். ஆனால் அருகில் உள்ளவர் அப்படியில்லை.//

ஒத்துக் கொள்கிறேன் .அடுத்தவர்கள் அப்படி இருப்பதற்காக நாமும் மாறுவது விவேகமா ? நான் உங்களை கேள்விகள் கேட்காமல் இருக்கச் சொல்லவில்லை ..கேளுங்கள் ..

என்னைப் பொறுத்த வரை ஸ்ரீ போன்றவர்கள் மக்களுக்கு இன்னமும் ஆன்மீக ரீதியாக உதவி செய்வதை விட்டு விட்டு இந்த மாதிரி விசயங்களில் செயல் வடுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை ..

எனக்கு அவர் பேட்டி ஒரு உடனடி கோபத்தில் வந்த விளைவு தான் என எண்ணுகிறேன் ..வரும் காலங்களில் அவரின் செயல்கள் சொல்லும் ..

அடுத்த வருசம் ஸ்ரீ ஸ்ரீஇ கால்கரி வ்ந்தால் முடிந்தால் அவருடன் ஒரு பேட்டி எடுங்களேன் ..அதில் அவர் இதையே அவ்ரிடம் கேளுங்களேன் ..

 

At December 19, 2006 8:41 PM , Blogger doondu said...

அடுத்தவன் குடியை கெடுத்தே பழக்கப்பட்டவன் பாப்பான். உழைக்காமல் ஊண்டு வயிறு வளர்க்கும் ஜென்மம் ஒன்று இந்த உலகத்திலுண்டு என்றால் அது பாப்பான். அப்படி ஒரு கேடுகெட்ட இழிபிறவியான அவர்களைப் பேச எனது நாக்கு இடம் கொடுக்கவில்லை.

 

At December 19, 2006 11:29 PM , Blogger சீனு said...

B-)

 

At December 20, 2006 2:13 AM , Blogger ஜடாயு said...

கூத்தாடி,

இது பற்றி சில கருத்துக்களையும், ஸ்ரீஸ்ரீ அவர்களே இது பற்றிக் கூறியதையும் இந்தப் பதிவில் போட்டிருக்கிறேன்.

http://jataayu.blogspot.com/2006/12/blog-post_20.html

 

At December 20, 2006 3:15 AM , Blogger Hariharan # 03985177737685368452 said...

//எம்மதமும் சம்மதம் என்பவருக்கு மத மாற்றம் பற்றி என்னக் கவலை.//

எம்மதமும் சம்மதம் என்பது இறைவனை அடைகின்ற மார்கங்களில் Plurality-ஐ ஒத்துக் கொள்வது. இதற்காக மத மாற்றத்தின் மூலம்
இந்தியகலாச்சாரத்துக்கு சம்பந்தமே இல்லாத அந்நிய மதத்தினரின் வாழ்க்கை நெறிகளை இந்தியாவில் பல்கிப் பெருகவிடுவது பற்றி அக்கறையே இல்லாமல் இருப்பது என்பதல்ல!

//மதம் என்ற கொள்கையே அரசியல் தான் ..மத மாற்றம் என்ன ஆன்மீகமா ?//

இந்து மதம் என்பது பூகோள இந்தியாவில் வாழ்கின்ற வாழ்வியல் நெறி! இந்துமதத்தில் என்றைக்கும் மதம் மாற்றுவது என்கிற கான்சப்ட் இல்லை.

மதமாற்றும் ஆன்மீகம் என்பது இந்திய மண்ணுக்குச் முற்றிலும் சம்பந்தமில்லாத சுயநல அந்நியர்களின் வாழ்க்கை நெறி!

//மதமார்றம் ஆன்மீகம் என்றால் அதன் எதிர்ப்பும் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்கிறேன் ?//

மதமாற்றம் ஆன்மீகமே அல்ல! மதமாற்ற எதிர்ப்பு என்பது ஆன்மீகம் இல்லைதான். ஆனால் இந்திய கலாச்சாரமும் , பண்பாடு, கலை போன்ற இந்தியப் பாரம்பரிய தொன்மையான வாழ்வியல் நெறிகள் பாமியான் புத்தர்சிலைகள் உடைக்கப்பட்டமாதிரி, ரோமபுரி கலாச்சாரம் அழிக்கப்பட்ட் எகிப்து, கிறித்துவம் அழித்த கிரேக்க கலாச்சாரம்மாதிரி மியூசியத்தில் வைக்கப்பட்ட உயிரற்ற வாழ்வியல் கலாச்சாரமாய் இந்திய வாழ்வியல் நெறி ஆகிவிடக்கூடாதே என்று வரலாற்றில் இருந்து அறிவதால் வரும் சமூக அக்கறை இது!

//மதமாற்றம் அரசியெலினில் அதன் எதிர் கருத்தும் அரசியலே //

மதமாற்ற அரசியல் யார் உலக அளவில் செய்கிறார்கள்? மறுகாலனியாக்கத்திற்காக கிறித்துவமும் ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே மூர்க்கமாக இசுலாமும் செய்வது மதமாற்ற அரசியல்.

இந்து மதம் மதமாற்றத்தின் மூலம் எங்கு அரசியல் எப்போது செய்தது?
இன்றைக்கு மதமாற்ற எதிர்ப்பு செய்வது இந்திய பாரம்பர்ய கலாச்சார, பண்பாடுகள் முற்றிலும் இந்த மதமாற்ற அரசியல் மூலம் அழிந்து போய் விடக்கூடாதே என்பதால் தான்!


//சுயம் அழித்தலே இந்து மதத்தின் ஆன்மீகம் ..சுயம் வளர்த்தலா ஆன்மீகம்..//

 

At December 20, 2006 4:20 AM , Blogger வஜ்ரா said...

//
நான் ஸ்ரீ யை இதற்கெல்லாம் அப்பார்பட்ட ஒரு ஆன்மீகத் தலைவர்
//

ஸ்ரீ ஸ்ரீ ஒரு ஆன்மீகத்தலைவர். அவர் இதற்கெல்லாம் அப்பார்பட்டவர் என்றே இருக்கட்டும். ஆனால் எந்த மதம் இவர்களை உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் ?

எவ்வளவு தான் ரோம், க்ரீஸ் என்று சுற்றுப் பயணம் செய்து ஸ்ரீ ஸ்ரீ வாழும் கலையைச் சொல்லிக் கொடுத்தாலும், போப் ஸ்ரீ ஸ்ரீ யை பழுத்த ஆன்மீகத்தலைவர் என்று ஏற்றுக் கொள்வாரா ?

நிச்சயம் இல்லை. ஆனால் இந்து மக்கள் ஏற்றுக் கொள்வர். அது தான் இந்து மதம்.

இது தான் நம் வீடு. இதை நிராகரித்துவிட்டு இதைத் தாண்டிய ஆன்மீகம் வேண்டும் என்றால் அது இப்போதைக்கு முடியாது.

(என்று வெறுப்பின் அடிப்படையில் இயங்கும் கொள்கைகள் இந்த மண்ணிலிருந்து போகிறதோ அதன் பின் தான் அத்தகய ஆன்மீகம் மலரும்)

அடிக்கடி "மதம் தாண்டி சகோரதத்துவம்" என்று பேசும் செக்குலரிஸ்டுகள் பேச்சைக் கேட்டுக் கேட்டு அதே போல் யோசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் செகுலர் ivory tower ல் இருந்து இறங்கி சாமானியரையும் பாருங்கள்.

 

At December 20, 2006 5:45 PM , Blogger கூத்தாடி said...

ஜடாயு
//ஆனால், இன்றைக்கு உலக அரங்கில் இந்திய அரசியல்வாதிகள் பலர் கடைப்பிடிக்கும் போலி மதச்சார்பினமை வாதமும், இந்து விரோத சக்திகளும் "இந்து" என்ற சொல்லுக்குக் கட்டமைத்திருக்கும் பிம்பம் கொஞ்சம் எதிர்மறையான பொருளையே அளிப்பதாக உள்ளது. இந்த துரதிர்ஷ்டமே "இந்து துறவி" என்ற சொல்லை அவரது இயக்கத்தினர் அடிக்கடி உலக அளவில் பயன்படுத்தாததற்குக் காரணம்.//

அதனால் தான் எனக்குத் தெரியல்லை போலும் .அது என் பிழையே ..அவரை இந்து சமயத் துறவியாக பார்க்க முடியாதற்கு அவரைப் பற்றிய என் புரிதலின் குறைபாடுதான் .

உங்கள் பதிவுக்கு நன்றி .

அது எனக்கு அவரைப் பற்றிய சந்தேகங்களை சரி செய்ய உதவியது ..
எனினும் என் கருத்தில் மாற்றம் ஒன்றுமில்லை .

இந்து மத உணர்வு ஆன்மீகமா என்பது விவாததுக்கு உரியது ..அவர் சொன்ன identity பற்றி எனக்குள் பலக் கேள்விகள் உண்டு .அது பற்றிய கேள்விகளை ஒரு தனி விவாதமாக வைக்க முயற்சிக்கிறேன் ..

 

At December 20, 2006 6:07 PM , Blogger கூத்தாடி said...

//ஸ்ரீ ஸ்ரீ ஒரு ஆன்மீகத்தலைவர். அவர் இதற்கெல்லாம் அப்பார்பட்டவர் என்றே இருக்கட்டும். ஆனால் எந்த மதம் இவர்களை உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் ?//

எதற்கு மதம் ஏற்றுக் கொள்ள வேண்டும் ?

இந்து மதத்தில் மட்டுமே ஆன்மீகம் இருக்கிறது என்பது போல் பலர் வாதங்களை வைத்து இருக்கிறார்கள் ..

இந்து மதத்தில் ஆன்மீகமும் இன்ன பிற தேவையில்லாததுகளும் இருக்கின்றன..இந்து என்று நிறுவனப் படுத்தப் பட்டு விட்டால் எல்லா வற்றையும் ஒத்துக் கொள்ள வேண்டும் ..
கிருத்துவமும் ,இஸ்லாமும் இப்படிப் பட்ட சிக்கலில் தான் இருக்கின்றது ..

ஆன்மீகம் என்பது வரையறுக்கப் பட்ட மத்த்தில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை ..மதத்திலும் இருக்கலாம் அது இந்து மதம் மட்டுமல்ல யூதம் /இஸ்லாம் /கிருத்துவத்திலும் இருக்கலாம் ..

//கொஞ்சம் செகுலர் ivory tower ல் இருந்து இறங்கி சாமானியரையும் பாருங்கள்.//

சாமானியருக்கு என்னப் பிரச்சினை ...

தினமும் சாமி கும்பிட்டு கடவுள் காபாத்துவன் என்று நம்ப்பிக்கையுடன் சொல்லும் அம்மாவுக்கும்

தினமும் தொழுது இன்ஷா அல்லா என்று சொல்லும் ப்க்கத்து வீட்டு அப்துலின் அம்மாவுக்கும்

என்ன வித்தியாசம் ..முறைதான் வேறு ..
இருவரிடமும் அதே அளவு அன்பையும் அதே அளவு முட்டாள்த் தனத்தையும் கண்டியிருக்கிறேன் ..

சொல்லுங்கள் இவர்கள் சமானியரில்லையா ?

//இது தான் நம் வீடு. இதை நிராகரித்துவிட்டு இதைத் தாண்டிய ஆன்மீகம் வேண்டும் என்றால் அது இப்போதைக்கு முடியாது.//

நான் நிராகரிக்க வில்லை ..கொஞ்சம் சுத்தம் பண்ணச் சொல்லுகிறேன் ..

என் வீடுதான் சுத்தம் மத்தெல்லாம் குப்பை என்று சொல்லாமல் இருக்கச் சொல்லுகிறேன் ..

 

At December 20, 2006 6:11 PM , Blogger கூத்தாடி said...

ஹரி

//இந்து மதம் மதமாற்றத்தின் மூலம் எங்கு அரசியல் எப்போது செய்தது?
இன்றைக்கு மதமாற்ற எதிர்ப்பு செய்வது இந்திய பாரம்பர்ய கலாச்சார, பண்பாடுகள் முற்றிலும் இந்த மதமாற்ற அரசியல் மூலம் அழிந்து போய் விடக்கூடாதே என்பதால் தான்!//

அரசியல் மூலம் அழிந்து விடுமா என்ன ? அப்படிப் பார்த்தால் இங்கு முசல்மானகளும் ..கிருத்துவரும் அல்லவா இருந்திருக்க வேண்டும் ..

எப்படி இன்னமும் இந்துக்கள் இருக்கிறார்கள் ?

இந்து மதத்தை யாரும் காக்க வேண்டாம் ..காக்க முயற்சிப்பதாய் சொல்லுபவர்கள் ஆப்ராமிய மதங்கள் செய்த அதே தவறை செய்கிறார்கள் ..

 

At December 20, 2006 6:18 PM , Blogger கூத்தாடி said...

மதுவின் பதிவில் போட்ட பின்னூட்டம்

//வணக்கம் கூத்தாடி,

நான் சொல்ல வரும் விஷயம் இதுதான். ஒரு பிரச்சினையைப் பற்றி கருத்து கேட்கையில் தனது நிலையை தெளிவு படுத்தி இருக்கிறார். இதில் வருத்தப்பட எதுவும் இருப்பதாய்த் தோன்றவில்லை. பலரிடத்திலும் காணப்படும் ஒரு குறைபாடு நம் இருவரிலும் இருக்கிறது என்பது தான் உண்மை. இவர் இப்படித்தான் என்ற ஒரு "எதிர்பார்ப்பு" தான் அது. we just assume things about a person & his personality. இந்த எதிர்பார்ப்பு பொய்க்கையில் இது போன்ற பதிவுகள். :)

//
விகடனில் அவரே சொன்னது மாதிரிதான் போட்டிருந்தார்கள் .Any way ஜடாயு அவர்கள் பதிவு பண்ணியிருந்த article இல் அவர் எண்ணமும் புரிந்தது ..அவரின் எண்ணததை புரிந்து கொள்ளாதது என் தவறே ..
நான் அவர் இங்கு வரும் போது சொல்வதை மட்டுமே கவனத்தில் கொண்டேன் அது தவறுதான் ..

 

At December 20, 2006 6:25 PM , Blogger கூத்தாடி said...

மது பதிவில்

//கூத்தாடி எது ஆன்மீகம் எது அரசியல் என்றெல்லாம் தெளிவாக வரையறை செய்து பார்க்கிறார். 'கர்த்தரை நம்பி உன் குடும்பத்தை எரிப்பேன்' என ஜமாத்தியா வனவாசியை NLFT காரன் ஏகே 47 காட்டி மாற சொல்லுகிற போது ஒரு ஆன்மிகத்தலைவர் என்ன செய்ய வேண்டும்? ஐயா கூத்தாடி, காஷ்மீர் இந்துக்களுக்காக குரல் கொடுத்து மதமாற்றத்தை எதிர்த்து தன் தலையை கொடுத்து தர்மத்தை காப்பாற்றிய குரு தேஜ்பகதூரின் தியாகத்தை உங்கள் மொழியில் என்ன சொல்வீர்கள்? அரசியல் என்றா? ஆன்மிகம் என்றா? //

குரு தேஜ்பகதூர் பற்றி எனக்குத் தெரியாது ..அவர் தனது இறை கொள்கைக்காக உயிர் கொடுத்து இருந்தால் அது ஆன்மீகமாக அடையாளப் ப்டுத்தப் படலாம் ..உயிர் கொடுத்தௌ மட்டுமே வைத்து அவர் ஆன்மீகவாதியா என்று சொல்ல முடியாது ?

//ஜமாத்தியா வனவாசியை NLFT காரன் ஏகே 47 காட்டி மாற சொல்லுகிற போது ஒரு ஆன்மிகத்தலைவர் என்ன செய்ய வேண்டும்?//

ஏகே 47 எடுக்க வனவாசியை தூண்ட வேண்டும் என சொல்லுகிறீர்களா ?

 

At December 20, 2006 6:34 PM , Blogger கூத்தாடி said...

ஜடாயு பதிவில்

//சமுதாயம் எக்கேடோ கெட்டு போகட்டும். தலித் மதமாற்றப்பட்டால் எனக்கென்ன வனவாசி துப்பாக்கி முனையில் மதம் மாறினால் எனக்கென்ன. என் வீடு என் குடும்பம் என் பூசையறை என் தியானம் என்று இருக்கும் போலி ஆன்மிக-செக்யூலர் வாதிகளுக்கு சரியான சூடு. விழித்துக்கொண்டால் சரி//

தலித் மத மாற்றம் என்பதை வெறும் மாற்று மதக் காரர்களின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் பார்வை இது ..நம்மில் உள்ளப் பிரச்சினைக்கு என்ன செய்திருக்கிறிர்கள் ?

தலித்துக்கள் இன்று யார் ப்க்கம் நீங்கள் சொல்லும் போலிகள் ப்க்கமல்லவா இருக்கிறார்கள் ?

போலி ஆன்மீக செக்யூலரிஸ்டுகள் ..ம்ம் பெயர் நல்லாத் தான் இருக்கிறது ..இது மாதிரி திம்மிகள் ,அடிவருடிகள் என்று பெயர் வைப்பது மட்டும் தான் எழுதிக் கொண்டு இருக்கிறோம் ..

விவாதம் நான் சொன்னக் கருத்தை விட்டு எங்கோ போய் கொண்டு இருக்கிறது ?

இன்னொருப் பதிவில் சந்திப்போம்..

 

At December 21, 2006 1:43 AM , Blogger வஜ்ரா said...

//
இந்து மதத்தில் ஆன்மீகமும் இன்ன பிற தேவையில்லாததுகளும் இருக்கின்றன..இந்து என்று நிறுவனப் படுத்தப் பட்டு விட்டால் எல்லா வற்றையும் ஒத்துக் கொள்ள வேண்டும் ..
கிருத்துவமும் ,இஸ்லாமும் இப்படிப் பட்ட சிக்கலில் தான் இருக்கின்றது ..
//


1. இந்து மதன் என்று நிறுவனப் படுத்தப் பட்டுவிடால் எல்லாவற்றையும் ஏற்கவேண்டும் என்று யார் சொல்வது ?

2. நிருவனப்படுத்தப் பட முடியாதவிஷயம் இது. வெவ்வேறு dinomination இன்று இருப்பது போல் தான் இருக்கிறது, இருந்தது. ஆனால் ஒரே common identity யுடன். அதன் பெயர் நான் "இந்து" என்கிறேன். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்வேன்.

3. அதில் கெட்ட விஷயங்கள் உள்ளது என்பதை இந்துக்கள் இந்துக்களுக்குச் சுட்டிக் காட்டி தான் மாற்ற முடியும். அவ்வாறே நடந்தும் வந்துள்ளது. இந்து இல்லை என்று சொல்லிக் கொள்வதனால் அந்த கெட்டவிஷயத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொண்டால் அதைவிட முட்டாள்தனம் இருக்க முடியாது.

நம் வீட்டை நாம் தான் சுத்தம் செய்யவேண்டும். என் தந்தை குடித்துவிட்டு அம்மாவைப் போட்டு அடிக்கிறார் என்றால் நாம் தான் அந்த ஆளைத் திருத்தவேண்டும். வீட்டைவிட்டுவிட்டு ஓடிப்போய்ப் பக்கத்துவீட்டுக்காரனை அப்பா என்று அழைக்க முடியுமா. அவர் நல்லவரோ கெட்டவரோ !

நான் சொல்வதெல்லாம் இந்து என்று இருந்துகொண்டே சாதிக்க முடிவதை "இந்து இல்லை" என்று சொல்லிக் கொள்வதனால் சாதிக்க முடியாது.

//
நான் நிராகரிக்க வில்லை ..கொஞ்சம் சுத்தம் பண்ணச் சொல்லுகிறேன் ..

என் வீடுதான் சுத்தம் மத்தெல்லாம் குப்பை என்று சொல்லாமல் இருக்கச் சொல்லுகிறேன் ..
//

சுத்தம் நம்வீட்டிலிருந்தே அரம்பிக்கவேண்டும். அடுத்தவனைச் சொல்லும் முன் நாம் செய்யவேண்டும்.

---
"என் வீடு தான் சுத்தம், மத்ததெல்லாம் குப்பை" = இஸ்லாம் மட்டுமே தூய மதம் மற்றதெல்லாம் மதமேமல்ல = பரலோகத்தில் இருக்கும் பரம பிதா மட்டுமே கடவுள் மற்றதெல்லாம் சைத்தான் = மார்க்ஸீயமே ஒரே தூய கொள்கை மற்ற அரசியல், சமூகவியல், பொருளாதாரவியல், தாவரவியல், உயிரியல், அவியல் பொறியல் கொள்கைகளெல்லாம் தவறானவை.
---

 

At March 01, 2007 1:01 PM , Anonymous Anonymous said...

//"என் வீடு தான் சுத்தம், மத்ததெல்லாம் குப்பை" = இஸ்லாம் மட்டுமே தூய மதம் மற்றதெல்லாம் மதமேமல்ல = பரலோகத்தில் இருக்கும் பரம பிதா மட்டுமே கடவுள் மற்றதெல்லாம் சைத்தான் = மார்க்ஸீயமே ஒரே தூய கொள்கை மற்ற அரசியல், சமூகவியல், பொருளாதாரவியல், தாவரவியல், உயிரியல், அவியல் பொறியல் கொள்கைகளெல்லாம் தவறானவை.
//
இந்தியா இந்துக்களுக்கே
சமஸ்கிருதம்தான் சாமிக்குப் புரியும்
பிராமணந்தான் ஒசந்தவன்

 

At March 01, 2007 1:03 PM , Anonymous Anonymous said...

டெ

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home