கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா

சதாம் தூக்கிலபட்டது பற்றி அறிவிக்கப் பட்டவுடன் அவரைப் பற்றிய தொலைக்காட்சியில் தொடர்ந்து வரும் விவாதங்களையும் தொடர்ந்து பார்த்த போது தோன்றியவைப் பற்றிய ஒரு அவசரப் பதிவு .

தூக்கிலடப்பட்ட சதாம் ஒன்றும் புனிதர் இல்லை ,அவர் செய்த அரசியல் கொலைகள் கணக்கிலடங்காதது .அதற்கான தண்டனைதான் இது ,அது நியாயத்தின் தர்மத்தின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்ளலாமா ?

அப்படித்தான் அவரால் பாதிக்கப் பட்ட ஷியாக்கள் இராக்கில் சந்தோசாமாகக் கொண்டாடுகிறார்கள் .பாதிக்கப் பட்ட மக்களிடமிருந்து அப்படிப் பட்ட கொண்டாடங்களைத் தான் எதிர்பார்க்க முடியும் .

மாறாக ,யார் தான் கொல்லவில்லை ,புஷ் கூடத் தான் இராக்கில் கொல்கிறார் ,அவரும் தண்டிக்கப் படுகிறவரே ? என்று அவர் மேல் ஒரு தியாகிப் பட்டத்தையும் ,அமெரிக்காவை எதிர்த்ததாலே யே அவர் செய்த தவறுகளை மன்னிக்கத் தாயாராக இருக்கும் பார்வையும் உண்டு.

இந்த இரண்டு பார்வைகளும் தவறானவை என்றேப் படுகிறது .சதாம் ஒன்றும் புனிதர் அல்ல ,அவர் தண்டிக்கப் பட வேண்டியவரே ? தூக்குத் தண்டனை நாகரிக உலகில் தேவையில்லாதது என்ற கருத்தாக்கம் கொண்ட நான் அவர் தூக்குத் தண்டனையை ஆதரிக்க முடியவில்லை.

குர்திஷ் மக்களுக்கு அவர் பண்ணிய தூரோகம் மன்னிக்க முடியாதது தான் ,என்றாலும் இன்றைய சூழலில் அவர் கொல்லப் பட்டது பழிக்கு பழி வாங்கும் மோகமும் ,ஷியா /சுன்னி அரசியலும் தான் .

சதாம் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் எங்காவது அடைக்கலம் வாங்கி தப்பியிருக்கலாம் ,அவர் முட்டாளாகவும் ,மாறி வரும் உலகச் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமதுமே அவரின் முடிவுக்குக் காரணம் .ஜோசப் ஸ்டாலின் விசிறியும் ,அவரைப் போலவே ஆள முயற்சியும் செய்த சதாம் ஸ்டாலின் இந்தக் காலக்கட்டத்திற்கு ஒத்து வராதவர் என்பதை உணரவில்லை.

சோவியத் விழுந்தப் பின்னரும் உணராதது அவர் கண்ணை மறைத்த அதிகார வெறியும் அளவு கடந்த நம்ப்பிக்கையும் தான் .

அவர் ஆண்ட போது ஒடுக்கப் பட்ட ஷியாக்கள் இன்று அரசில் பலம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.இராக் பிரதம மந்திரி அலுவலகம் முழுக்க முழுக்க ஷியாக்களின் ஆதிக்கத்தில் தான் இருப்பதாக வந்த செய்திகள் வரும் நாடகளில் இராக்கில் இனக் கலவரங்களைத் தான் கொண்டு வரும். சுன்னிக்கள் பழிவாங்கவேப் படுவார்கள் . இராக் மக்களுக்கு விடிவு காலம் அருகில் இல்லை எனத் தான் படுகிறது.

மேலும் சதாம் மேல் நட்ந்த விசாரணை கேலிக் கூத்தாகத்தான் இருந்தது.சதாமுக்கு ஆஜரான வக்கீல்கள் கொல்லப் பட்டதும் ,நீதிபதிகள் மாற்றப் பட்டதும் ,நீதிபதிகளின் தனிப்பட்ட கோவங்களும் விசாரணையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவது.நீதிபதிகள் கூட அமெரிக்கர்களிடம் தான் இரண்டு வாரம் crash கோர்ஸ் எடுத்துக் கொண்டார்களாம் .

சதாம் தூக்கிலப் பட்டதில் நேரடி சம்பந்தம் இல்லாதது போல் புஷ் விட்ட அறிக்கை இன்னுமொரு கேலிக் கூத்து.

மேலும் ஏன் இந்த அவசரம் என்றும் புரிய வில்லை ,2006க் குள் முடித்து விட வேண்டும் என எண்ணி இருப்பார்கள் போல.அதுவும் இன்று ஏதோ சுன்னி ஈத் திருவிழா என்றும் CNN இல் சொன்னார்கள்.அதில் எதாவது அரசியல் இருக்குமா என்றுத் தெரியவில்லை.

என்னுடையப் பார்வையில் சதாமே இன்னும் கொஞ்ச நாட்களில் இறந்திருப்பார் ,வயசு 69 ,எத்தனை நாள் தான் இன்னமும் இருப்பார்.அதுவும் 35 வருடங்கள் ராஜாவாக இருந்த்தவர் ,ஒரு சாதாரணச் சிறையில் சாதாரணக் கைதியாக அவரை நடத்தி இருந்து அவர் பலருக்கு மறுத்த உயிர் வாழ்வதற்கானக் கருணையை அவருக்கு அளித்து ,யாருமே இல்லாமல் பிள்ளைகளும் இறந்த ஒருவர் வாழுவதின் வலியை உணர்த்தியிருக்கலாம். அமெரிக்கப் போன்ற நாடு நினைத்திருந்தால் இதைப் பண்ணியிருக்க முடியும் .சதாமின் சாவு இப்படி ஒரு விடயமாய் உலக மக்களுக்கு அவர் மேல் ஒரு சாப்ட் கார்னரை உண்டாக்காமல் ஒரு சாதாரணமாய் இருந்திருக்கும்.அதுவே அவருக்குத் தேவையானத் தண்டனை .இப்போது கொடுத்தது உலகத்தின் பார்வையில் பழி வாங்கலாகவும் ,கண்டிக்கப் படுவதாகவும்த் தான் பார்க்கப் படும்.

வரும் காலங்களில் சுன்னிக்களும் ,ஷியாக்களும் அடித்துக் கொள்வது அதிகமாகலாம்.அமெரிக்கர்கள் சீக்கிரம் வெளியே வர வேண்டியதன் அவசியம் அமெரிக்க மக்களின் நவம்பர் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிவதால் ,பிரச்சினைகள் அதிகமாகவே ஆகலாம்.ஈராக் ஒரே நாடாகவாகவே இருக்குமா என்பதே சந்தேகமாகவே இருக்கிறது.
இராக் மக்களுக்குத் தேவை இப்போது பொறுமையும் ,மறதியும் ,எதிர் காலத்தின் மேதான நம்ப்பிக்கையுமே.

Labels:

17 Comments:

At December 30, 2006 8:56 AM , Anonymous Anonymous said...

Good one! Unbiased. Keep it up.

 

At December 30, 2006 12:21 PM , Blogger Thamil said...

தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.

தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது, உண்மையில் முஸ்லீம்கலின் உணர்வு இந்த வகையானதே இது பொதுவாக அனைத்து முஸ்லீம்கலிடமும் கானப்படும் மனநிலை , உண்மையை உராய்ந்து பார்க்கவேண்டும் சதம் நல்லவனா? கெட்டவனா? அவன் கெட்டவன் கெட்வன் அழிக்கப்படவேண்டியவனே, மற்றப்படி அமெரிக்க நீதி வழங்கியதுதான் தவறு, அதற்காக கெட்டவனை மன்னிக்கமுடியாது.

 

At December 30, 2006 8:55 PM , Anonymous Anonymous said...

நியாமான அலசலாக இருக்கிறது உங்கள் பதிவு - அந்த வகையில் நான் படித்ததில் முதலானதும் கூட!

புஷ் - சதாமின் முடிவு தனது ஆட்சிக் காலத்திற்குள் நிறைவேற வேண்டும் - அதுவே தனக்கு பெருமை என நினைத்திருக்கலாம்.

வன்முறையை எடுத்துக்கொண்டவர்களுக்கு, அதனாலேயே முடிவு என்றும் கொள்ளலாம்.

 

At December 30, 2006 8:59 PM , Anonymous Anonymous said...

ஒரு நாட்டின் அதிபர் அதிகாரத்தில் இருக்கும் போது நாட்டைக் காப்பதற்காக எடுக்கும் எந்த முடிவையும் பின் வரும் அரசுகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தீர்ப்பு வழங்குமானால், உலகின் அத்தனை தலைவர்களும் தூக்குமேடைக்குப் போக வேண்டியவர்களே.. இதை முதலில் உணரவேண்டும். கொடுங்கோலன் என்று சொல்பவர்கள் ஒருநிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்ன கொடுங்கோல் இழைக்கப்பட்டது சொல்பவர்களுக்கு.. CNN-ம் BBC-ம் கொடுங்கோலன் என்று சித்தரித்தால் நம்பிவிடக்கூடியவர்கள் தமது சிந்திக்கும் திறனை அடகு வைத்து விட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். அமெரிக்காவிற்கு இன்றைக்கு சதாம் எதிரியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு சதாம் செய்த உதவிகள் ஏராளம். மன்மோகன் சிங் அரசு ஒரு சிங்க அரசாக இந்தத் தண்டனைக்கு எதிராக கொஞ்சம் உரக்கவே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

 

At December 30, 2006 11:07 PM , Blogger கூத்தாடி said...

நன்றி அனானி..

தமிழ்
செத்தவன் கெட்டவன் என்று தானே சொல்லுகிறேன் . நீங்கள் சொல்லுவது ஒரு ரவுடி இன்னொரு ரவுடியைக் கொல்வதை வேடிக்கைப் பார்க்கச் சொல்லுகிறீர் .இப்படி மனப்பான்மை யிருந்தால் பழிக்குப் பழி செய்பவர்கள் தொடர்ந்து செய்தால் சாதாரணமாய் தெருவே நாறிவிடும் .ஒரு தெருவுக்கே இந்த நிலைமை என்றால் ,நாட்டிற்குத் தேவையான பொறுமை புஷ் போன்றவர்களின் வெட்டி பழியுணர்ச்சி எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது.


//தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது, உண்மையில் முஸ்லீம்கலின் உணர்வு இந்த வகையானதே இது பொதுவாக அனைத்து முஸ்லீம்கலிடமும் கானப்படும் மனநிலை , உண்மையை உராய்ந்து பார்க்கவேண்டும் சதம் நல்லவனா? கெட்டவனா? அவன் கெட்டவன் கெட்வன் அழிக்கப்படவேண்டியவனே, மற்றப்படி அமெரிக்க நீதி வழங்கியதுதான் தவறு, அதற்காக கெட்டவனை மன்னிக்கமுடியாத//

தமிழ் முஸ்லீம்கள் எங்கு வந்தார்கள் இங்கு ..அமெரிக்க நீதி வழங்கியது தவறு என நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்..

 

At December 31, 2006 1:54 AM , Anonymous Anonymous said...

நான் பொதுவான முஸ்லீம்களின் மனநிலையை சொன்னேன்.

தனது நாட்டுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும், அதற்காக தனது நாட்டு மக்களையே விசவாயு அடித்து கொன்ற ஒரு கொடூரனுக்காக குரல் கொடுப்பது மடமைத்தனம், அந்த குழந்தைகளும் சதாமுக்கு எதிராக சதி செய்தார்கள் என்பது மடமையிலும் மடமை. எந்த ஒரு இனத்தை அழிக்கும் சர்வாதிகாரிக்கும் இதுதான் முடிவு. முஸ்லீம்களுக்காக இந்தியா குரல்கொடுக்கப்போய் சொந்த செலவில் சூனியம் வங்கிக்கொள்ளாது என நம்புவோம். ஏனெனில் முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை

விசவாயு அடித்துகொல்லப்பட்டது திரிபு என்பது, மனிதாபிமானமற்ற செயல், ஏனெனில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். சதாமின் சமுதாயத்தை சேர்த ஒருவனும் என்னுடன் வேலை செய்கிறான், அவனும் சதாம் செய்தது பிழை என்றுதான் கூறுகிறான், ஆனால் அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனப்பற்று காரனமாக சதாமை ஆதரிக்கிறான், பொதுவான முஸ்லீம்களும் இதேபோக்கு உடையவர்கள்தான். அவர்கள் ஏனோ உன்மையை உராய்ந்து பார்க்கமறுக்கிறார்கள்.

 

At December 31, 2006 2:24 AM , Anonymous Anonymous said...

சதாம் தூக்கிலிடப்பட்டது மாபெரும் தவறு. அதை அமெரிக்கா செய்துவிட்டது. அதற்கான தண்டனை அமெரிக்காவுக்கு விரைவில் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த கால சம்பவங்களே இதற்கு ஆதாரம். மேலும் பின் லாடன் என்பவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்.

 

At January 01, 2007 3:15 AM , Blogger ENNAR said...

தூக்கிலிட்டது தவறுதான் சதாம் பலரை அழித்திருக்கலாம் அது ராஜதர்மம் என்று சொல்வார்கள் தனது பதவியைக் காக்க தனது எதிரியைக் கொள்வதுதான் ராஜ நீதி என்பார்கள் யாரையும் அழிக்காமல் மன்னன் நாடாளமுடியாது என்பார்கள். விவசாயி பல சிற்றுயிர்களை கொல்லத்தான் வேண்டு்ம் பூச்சி

 

At January 01, 2007 9:07 PM , Blogger dondu(#11168674346665545885) said...

அதே ராஜ தர்மத்தின்படி தான் வெற்றி கொண்ட அரசனை கொல்வதுதான் வெற்றியாளனுக்கு பாதுகாப்பு. அது யுத்த தருமமும் கூட.

சதாமை ஜெயிலிலேயே வைத்திருந்தால் அவனைக் காப்பாற யாராவது விமானம் கடத்தியிருப்பார்கள். அதெல்லாம் தேவையா?

ஒரு ரௌடி இன்னொரு ரௌடியைக் கொல்லட்டுமே. அப்படியாவது ரௌடிகளின் எண்ணிக்கை குறையுமல்லவா.

ஆனால் இதனாலெல்லாம் புஷ்ஷுக்கு தூக்கு என்றெல்லா கூறுவது வெறும் wishful thinking தான். ஏனெனில் அவருடைய ஆட்சி 2008-ஓடு க்ளோஸ். அவர் சதாம், சவுதி மன்னர், காஸ்ட்ரோ, ஸ்டாலின் மாதிரியெல்லாம் ஆயுள் அதிபராக மாற அமெரிக்காவில் வழியில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

At January 02, 2007 1:54 PM , Blogger கூத்தாடி said...

//இனப்பற்று காரனமாக சதாமை ஆதரிக்கிறான், பொதுவான முஸ்லீம்களும் இதேபோக்கு உடையவர்கள்தான். அவர்கள் ஏனோ உன்மையை உராய்ந்து பார்க்கமறுக்கிறார்கள//

இருக்கலாம் .உங்களின் பார்வை முஸ்லீம் கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதன் ஊடானப் பார்வை போல இருக்கிறது ..அமெரிக்க எத்ர்ப்புக்கு ஒவ்வொவரிடமும் ஒவ்வொருக் காரணம் இருக்கக் கூடும் ,சில இஸ்லாமிய நண்பர்களிடம் இதை நானும் பார்த்திருக்கிறேன் ,அது சரியானது இல்லை என்பதே என்னுடைய நிலையும் .ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்க செய்த்து சரியில்லை என்பதே என் எண்ணம் .முஸ்லீம்கள் இதை எதிர்க்கிறார்கள் என்பதற்காக என்னால் இச்செயலை ஆதரிக்க முடியாது..

 

At January 02, 2007 1:55 PM , Blogger கூத்தாடி said...

//சதாம் தூக்கிலிடப்பட்டது மாபெரும் தவறு. அதை அமெரிக்கா செய்துவிட்டது. அதற்கான தண்டனை அமெரிக்காவுக்கு விரைவில் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த கால சம்பவங்களே இதற்கு ஆதாரம். மேலும் பின் லாடன் என்பவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்//

மஞ்சூர் ராசா - அப்படி எதுவு நட்க்க கூடாது ,பின் லேடனை ஆதரிக்கவேக் கூடாது ..

 

At January 02, 2007 1:58 PM , Blogger கூத்தாடி said...

//ூக்கிலிட்டது தவறுதான் சதாம் பலரை அழித்திருக்கலாம் அது ராஜதர்மம் என்று சொல்வார்கள் தனது பதவியைக் காக்க தனது எதிரியைக் கொள்வதுதான் ராஜ நீதி என்பார்கள் யாரையும் அழிக்காமல் மன்னன் நாடாளமுடியாது என்பார்கள். விவசாயி பல சிற்றுயிர்களை கொல்லத்தான் வேண்டு்ம் பூச்//

என்னார் - ராஜ நீதி என்பது ஒரு வகையில் கொலைச் செய்வதற்கான நியாயம் கற்பிக்க எழுதப் பட்டது .தன் உயிரைக் காக்க யாரையும் கொல்லாம் என்பதே நீதி ,ஆனால் இவன் என்னைக் கொல்லக்கூடும் என்று எண்ணிக்கூடக் கொல்லாம் ,இது இந்த காலக் கட்டத்திற்கு தேவையில்லாத நீதியே

 

At January 02, 2007 1:58 PM , Blogger கூத்தாடி said...

//ூக்கிலிட்டது தவறுதான் சதாம் பலரை அழித்திருக்கலாம் அது ராஜதர்மம் என்று சொல்வார்கள் தனது பதவியைக் காக்க தனது எதிரியைக் கொள்வதுதான் ராஜ நீதி என்பார்கள் யாரையும் அழிக்காமல் மன்னன் நாடாளமுடியாது என்பார்கள். விவசாயி பல சிற்றுயிர்களை கொல்லத்தான் வேண்டு்ம் பூச்//

என்னார் - ராஜ நீதி என்பது ஒரு வகையில் கொலைச் செய்வதற்கான நியாயம் கற்பிக்க எழுதப் பட்டது .தன் உயிரைக் காக்க யாரையும் கொல்லாம் என்பதே நீதி ,ஆனால் இவன் என்னைக் கொல்லக்கூடும் என்று எண்ணிக்கூடக் கொல்லாம் ,இது இந்த காலக் கட்டத்திற்கு தேவையில்லாத நீதியே

 

At January 02, 2007 2:06 PM , Blogger கூத்தாடி said...

//சதாமை ஜெயிலிலேயே வைத்திருந்தால் அவனைக் காப்பாற யாராவது விமானம் கடத்தியிருப்பார்கள். அதெல்லாம் தேவையா?

ஒரு ரௌடி இன்னொரு ரௌடியைக் கொல்லட்டுமே. அப்படியாவது ரௌடிகளின் எண்ணிக்கை குறையுமல்லவா.//

விமானம் கடத்துவார்கள் என்று சொல்லியே எல்லாவற்றிற்கும் நியாயம் கற்பிப்பது சரியானது அல்ல ..விமானம் கடத்தினால் அதற்குரிய வழிகளைக் கொண்டு தான் கையாள வேண்டும் .சதாமுக்காக யாரும் விமானம் கடத்துபவர்கள் யாரும் இருக்கிறார்கள் என்று நான் நினைக்க வில்லை.

ரெளடிகளை அழிக்க போலிஸ் தேவைல்லை என்கிறீர்கள் ...
இரண்டு ரெளடிகளின் சண்டையில் அப்பாவிகள் மாட்டும் போது இந்த மாதிரியான வாதத்தின் வலி தெரியும் .

//ஆனால் இதனாலெல்லாம் புஷ்ஷுக்கு தூக்கு என்றெல்லா கூறுவது வெறும் wishful thinking தான். ஏனெனில் அவருடைய ஆட்சி 2008-ஓடு க்ளோஸ். அவர் சதாம், சவுதி மன்னர், காஸ்ட்ரோ, ஸ்டாலின் மாதிரியெல்லாம் ஆயுள் அதிபராக மாற அமெரிக்காவில் வழியில்லை.//

ஒத்துக் கொள்கிறேன் .புஷ் யையும் தூக்கில் போட வேண்டும் என்ற வாதமே தவறானது. புஷ்யும் சதாமும் ஒன்றல்ல..வெற்று அமெரிக்க எதிர்ப்புக்கு நான் ஆதரவாளன் அல்ல .

 

At January 02, 2007 10:46 PM , Anonymous Anonymous said...

//புஷ் யையும் தூக்கில் போட வேண்டும் என்ற வாதமே தவறானது. புஷ்யும் சதாமும் ஒன்றல்ல..வெற்று அமெரிக்க எதிர்ப்புக்கு நான் ஆதரவாளன் அல்ல .//

Can U explain?

அநியாயமாக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, பிற நாடுகளின் இறையாண்மையை கிஞ்சித்தும் மதிக்காமல் படையெடுத்து... ஆறு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட புஷ் காரணமா இல்லையா?

ஜனநாயக முகமூடி போட்டுக்கொண்டால் கொலைகளையும் நியாயப்படுத்தலாமா?

ராஜ்வனஜின் பதிவைப் படியுங்கள் ஆரஞ்சுஏஜண்டின் அவலத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

தேசப்பாதுகாப்பு, தீவிரவாதம் என்ற காரணங்களை கணக்கிலெடுக்காமல் பார்த்தால் நிறைய சீக்கியர்களைக் கொன்றவர் என்று இந்திராகாந்தியையும் குற்றம் சொல்ல முடியுமே சார்!

டோண்டு சார் தவறாக எண்ணாவிட்டால்... ஒரு கேள்வி!

சதாம் என்பதற்காகவோ, முஸ்லிம் என்பதற்காகவோ அல்லாமல்... அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்காகவே முஸ்லிம்களும் சதாமின் தூக்கைக் கண்டிக்கும் நிலையில்... அமெரிக்காவை இவ்விடயத்தில் கொண்டாடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருப்பது ஏன்?

வெள்ளையரின கொடுங்கோலன் மிலோசெவிக்கை உலக நீதிமன்றத்திடம் ஒப்படைத்ததைப் போல சதாமையும் ஒப்படைத்திருந்தால்... புஷ்சின் ஜனநாயக முகமூடி கிழிந்துவிடும் என்பதால் தான் அவசராவசரமாக அல்லக்கைகளை வைத்து ஒரு பழிவாங்கல் நடத்தப்பட்டது.

//சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்க்கவில்லை. அதனைச் செய்து முடிக்க கையாண்ட சூழ்ச்சியைத்தான் எதிர்க்கிறோம். // - நல்லடியார் சொன்னது.


சு.வி

 

At January 03, 2007 6:35 AM , Blogger dondu(#11168674346665545885) said...

சதாமை தூக்கில் போட்டதை நான் ஆதரிக்கிறேன். விட்டால் அவன் உலகத்தையே அழித்திருப்பான்.

அவனைப் பற்றி முதலிலேயே அறிந்திருந்த இஸ்ரவேலர்கள் அவனது அணு ஆராய்ச்சி நிலையத்தில் குண்டு போட்டார்களோ, உலகம் பிழைத்ததோ. வெளிப்படையாக இராக்கின் அரசாண்மையை மீறியது என்று பலநாடுகளும் கண்டித்தாலும், மறைவில் இஸ்ரேலுக்கு பாராட்டு தெரிவித்தவர்கள் பலர்.

"அமெரிக்காவை இவ்விடயத்தில் கொண்டாடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருப்பது ஏன்?"
ஷியாக்களைத்தானே கூறுகிறீர்கள்? ஏன் குர்து இன மக்களும்தான் மகிழ்ந்தனர்.:))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

At January 03, 2007 11:34 AM , Blogger கூத்தாடி said...

//Can U explain?

அநியாயமாக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, பிற நாடுகளின் இறையாண்மையை கிஞ்சித்தும் மதிக்காமல் படையெடுத்து... ஆறு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட புஷ் காரணமா இல்லையா?

ஜனநாயக முகமூடி போட்டுக்கொண்டால் கொலைகளையும் நியாயப்படுத்தலாமா?

ராஜ்வனஜின் பதிவைப் படியுங்கள் ஆரஞ்சுஏஜண்டின் அவலத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

தேசப்பாதுகாப்பு, தீவிரவாதம் என்ற காரணங்களை கணக்கிலெடுக்காமல் பார்த்தால் நிறைய சீக்கியர்களைக் கொன்றவர் என்று இந்திராகாந்தியையும் குற்றம் சொல்ல முடியுமே சார்!//

அமெரிக்க செய்தது தவறு தான் ,புஷ் ஒன்றும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது ,செனட்டிலும் அமெரிக்க காங்கிரசிலும் அவர் அதிகாரம் பெற்ற பிறகே அவரால் இராக் மேல் அவரால் போர் தொடுக்க முடிந்தது .அது போல் பிரிட்டன் ,ஸ்பெயின் ,கனடா ,மற்றும் சில ஐரோப்ப நாடுகளின் உதவியும் இருந்தது . சீனாவும்,ரஷ்யாவும் ஏன் இந்தியாவும் வேடிக்கைத் தானே பார்த்தது.

அரபு நாடுகள் அமெரிக்காவின் படைஎடுப்பை ஆதரிக்கவே செய்தது .புஷ் ஆதரவைப் பெற பல வேலைகள் செய்தார் நைஜர் விவகாரமும் அதில் ஒன்று .

ஆனால் இராக் போருக்கும் அதனால் நடைபெற்ற அழிவுக்கும் புஷ்யை மட்டும் குறை சொல்லுவது நியாயம் அல்ல ,எல்லோரும் காரணம் .குறிப்பாக சவுதி ,ஜோர்டன் போன்ற அமெரிக்க ஆதரவு அரபு நாடுகள் காரணம் ,அதைப் பற்றிப் பேசுங்களேன் .

//தேசப்பாதுகாப்பு, தீவிரவாதம் என்ற காரணங்களை கணக்கிலெடுக்காமல் பார்த்தால் நிறைய சீக்கியர்களைக் கொன்றவர் என்று இந்திராகாந்தியையும் குற்றம் சொல்ல முடியுமே சார்!////

சதாம் செய்தது எதுவும் தேசப் பாதுகாப்புக்கு இல்லை . அவரைப் பாதுகாகவே அவர் கொலைகள் செய்தார்.குர்தீஷ் மக்களை கொன்றதை எந்த விதத்தில் நியாயப் படுத்த முடியாது . முன்னே கூறியபடி சதாமை நியாயப் படுத்ததீர்கள் .அவர் தூக்குக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேறு ,அவர் செய்த கொலைகளை நியாயப் படுத்துவது வேறு .

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home