கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

கருப்பும் சிவப்பும்

நிறம் ஒருவரின் உடலின் உள்ள பிக்மெண்ட் மெலினின் தன்மையை பொறுத்தே ஒருவரின் சருமத்தின் நிறம் அமையும் .ஆனால் நம் சமூக அமைப்பில் நிறத்திற்கான மதிப்பு எவ்வுளவு என்பதை மேட்ரி மோனியல் பக்கங்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் .அழகு என்பது சருமத்தில் தேடுகீற சமூகக் கூட்டம் நாம் .இது உலக அளாவில் இருக்கின்ற ஒன்று என்ற போதிலும் நம் ஊரில் பாதிப்பு கொஞ்சம் அதிகம் . படிக்காத பாமரர்கள் இப்படி இருப்பார்கள் என்று சொல்லி விட முடிவதில்லை .பெரும்பாலும் படித்த மக்களின் மோகம் தான் அதிகம் .

எனக்குத் தெரிந்து எத்தனையோப் பேர் கலர் கம்மி என்று சொல்லியே எத்தனை பெண்களையோ பலர் கல்யாணம் பண்ண மறுத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் சமூக நிலையிலும் ,படிப்பிலும் சிறந்தவர்களா இருப்புதைக் கண்டு தான் எனக்குக் கோபம் ,அதிலும் பெரும் பாலோனவர்கள் கருப்பு நிறம் தான் .ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் கலரானப் பொண்ணு வேண்டும் , பிள்ளைகளாவது நிறமாய் வரட்டுமே என்றுச் சப்பைக் கெட்டு வேறு. நிறமானப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி அப்பாவின் நிறத்தைக் கொண்டு பிள்ளைகள் பிற்ந்த பின் எந்த கலராய் இருந்தால் என்ன என்று சமாதானம் சொல்லிக் கொள்கின்றவர்களைப் பார்க்கும் போது சிரிப்பு வரும்.

அவர்களைப் பார்த்துச் சிரித்தாலும் ,அவர்களின் தாக்கம் எனக்குப் புரியவே செய்தது .முதலில் நம் சமூகம் நிறக் குறைவானவர்களுக்கு கொடுக்கும் மரியாதைக் குறைவு தான் ,அதனால் வரும் தாழ்வு மனப் பான்மை தங்கள் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்று எண்ணுபவர் பலர் ,அதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கருப்பாய் இருப்பது அவமானமாய் இருக்கிறது என்றால் ,நீங்கள் ஏன் இன்னொரு கருப்புக் குழந்தையை உருவாக்கவேண்டும் .சிவப்பு நிறப் பெண்ணைத் திருமணம் செய்தாலும் கருப்பானப் பிள்ளைப் பிறக்க சாத்தியக் கூறுகள்இருக்கிறதே .

சிவப்பு நிறம் மேல் நமக்கு இருக்கும் மோகம் அலாதியானது ,சிவப்பு அழகு கீரிம்கள் நம்ம ஊரில் பட்டி தொட்டி வரை 15 வருசத்துக்கு முன்னே கிடைக்கும் .சிவப்பு நிறம் இல்லாத எந்த நடிகைகளை நாம் கொண்டாடி இருக்கோம் .கருப்பாய் இருப்பவர்கள் அதிகம் இருக்கும் தமிழ் தெலுங்கு மாநிலங்களிலே தான் சிவப்புத் தோலுக்கான மதிப்புஅதிகம் .ராஜிவ் காந்தியை 89இல் பிரச்சாரத்தில் பார்த்து விட்டு எங்கள் ஊரில் வியந்தது இரண்டு விசயத்துக்குத் தான்இன்னமா கலரு ,இன்னொண்ணு அவரே ஜீப் ஓட்டிடு வந்தாரே ..பிளேட்டெல்லாம் ஓட்டுறாராம் .அன்றைக்குஉணர்ந்தேன் ஏன் கவர்ச்சி அரசியல் தமிழ் நாட்டில் ஏன் செல்லுபடியாகிரது என்று.

இந்த நிறம் சம்பந்தமான மனத் தடையை கருப்பாக இருக்கும் நாமே உடைக்காவிட்டால்,எப்படி சமூகம் மாறும் .பிள்ளைகளுக்குப் பெண் தேடும் பெற்றோர் பலர் இந்த சிவப்பு மாயையில் இருந்தாலும் ,அவர்களை விட மயக்கமாய் இருப்பது மாப்பிளைகள் என்பது தான் வருத்தம் .இதில் நன்கு படித்து வேலையில் இருப்பவர்களும் அமெரிக்காவில்இருக்கும் ரேசிசம் பற்றி பேசும் அறிவு ஜீவிகளும் இந்த வரிசையில் முதலாவதாய் இருக்கும் போது தான் எனக்கு அதிகமாய் எரிச்சல் வரும்.

நம் உள் இருக்கும் ஜீன் அவ்வுளவு சிம்பிள் கால் குலேசனில் மாற்ற முடியுமா என்ன .மாற்ற வேண்டுமானால் உங்கள் மூதாதையரைத் தான் மாற்ற வேண்டும் .முதலில் உங்கள் தாழ்வு மனப் பான்மையை விடுங்கள் ,உங்கள் குழந்தைகள் கருப்பானாலும் சிவப்பானாலும் நன்றாகவே வளரும்.

8 Comments:

At March 03, 2007 1:47 AM , Anonymous Anonymous said...

நீங்க கருப்பா சிவப்பா?!

 

At March 03, 2007 10:36 AM , Blogger நிர்மல் said...

nice one.

 

At March 03, 2007 7:55 PM , Blogger கூத்தாடி said...

நன்றி நண்பர்களே .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

விரியும் சிறகுகளில் நண்பர் எழுதிய என்ன தம்பி கறுத்துப் போனாய் யயும் படியுங்கள்

http://viriyumsirakukal.blogspot.com/2007/03/blog-post_03.html

 

At March 03, 2007 8:04 PM , Blogger Machi said...

நன்றாக சொல்லியுள்ளிர். நாம் நிற வெறியர்களே. இது தொடர்பாக பதிவு போட வேண்டும் என்று 1 ஆண்டாக நினைத்துக்கொண்டுள்ளேன் எப்போ எழுதுவேன் என்று தெரியவில்லை.

 

At March 04, 2007 1:43 AM , Blogger Hariharan # 03985177737685368452 said...

சிவப்பாய் இருந்து கூடவே இங்கிலீஷூம் பேசிட்டா தன் பரம்பரையே மேலெழும்பிவிட்ட மாதிரி நினைக்கிறவர்கள் இன்னமும் நிறையவே இருக்கின்றார்கள்.

கிழக்கிந்தியக் கம்பெனி வழியாக இந்தியாவில் வந்த ஆங்கிலேயர்கள் 300 வருடத்தில் இந்தியர்களின் குறிப்பாக்த் தென் இந்தியர்களின் ஜீன் மியூட்டேஷன் மூலம் இவ்வளவுக்குத் தாழ்வு மனப்பான்மையை இன்னும் பரம்பரை பரம்பரையாய் தொடர விட்டிருக்கின்றார்கள்.

வெகுதியானவர்கள் உயர் கல்வி கற்று உலகம் சுற்றி வரும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டால் இது மாறும்.

Y2K bug ஐ இந்தியர்கள் நீக்கியமாதிரி தங்களுக்குள்ளாக் இருக்கும் இந்த தோல்நிறம் சார் தாழ்வு மனப்பான்மையையும் வரப்போகும் 50 ஆண்டுகளில் நீக்கிக்கொள்வார்கள் என நம்பலாம்.

 

At March 04, 2007 4:53 AM , Blogger வஜ்ரா said...

why is your comments status in thamizmanam showing 46, 47 comments while the post has really 4 or 5 comments at the most ?

 

At March 04, 2007 8:54 AM , Blogger கூத்தாடி said...

Vajra
I have n't noticed until I saw your email .I send the email to Thamizmanam .I think there is some issue ,I have seen some other friend also complained about similar thing in Thamizmanam as well.

Thanks for informing me

 

At April 21, 2007 8:00 PM , Blogger S Murugan said...

கருப்பு சிவப்பு அருமை... நல்ல கருத்து....உண்மை நிலவரம் அதுதான்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home