கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

இந்து என்னும் அடையாளம்

ஸ்ரீ ஸ்ரீ பற்றிய என் பதிவில் வந்த ஜடாயுவின் பின்னூட்டத்தில் ஸ்ரீ ஸ்ரீ எழுதிய Hindu Identity பற்றிய கட்டுரையை பதிவு செய்திருந்தார் .

ஸ்ரீ ஸ்ரீ சொன்னது ஒரளவு நிஜம் என்றாலும் ஹிந்து ஐடெண்டி இல்லாமல் இருப்பது ஒரு வகையில் முட்டாள்தனம் என்றும் , சாதி யை ஹிந்துக்கள் தன் ஐடெண்டியாக வைத்திருப்பதும் ஒரு வகையில் இதற்கு காரணம் என்றும் சொல்லி இருந்தார் . அவர் கருத்தை ஆமோதிக்காமலும் அதே சமயம் மறுக்கமாலும் எனக்குத் தோன்றிய சிந்தனைகள் .

ஐடெண்டி என்பது பல சமூக காரணங்களால் ஒரு சம்சாரிக்குத் தேவைப் படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் .சாமியாருக்களுக்கேத் தேவைப்படுகிறது சம்சாரி எம்மாத்திரம் .

சமூகத்தில் ஐடெண்டியோடு இருப்பதால் பல நன்மைகள் இருக்கிறது , எப்படியிருந்தாலும் நமக்கு ஒரு அடையாளம் தேவையானதாகவே இருக்கிறது , ஹிந்துவாகவோ , பிராமணர்களாகவோ , தலித்துவாகவோ, கம்யூனிஸ்டாகவாகவோ ஏதோ ஒரு அடையாளத்துடன் இருக்கவே பிரியப்படுகிறோம். அதில் சில நம் சமூக அமைப்பில் வளரும் பருவத்திலேயே சாதி ,சமயம் ,மொழி என்று திணிக்கப் படுகிறது . சில அடையாளங்களை நாமே நம் மேல் ஏற்றி வைத்துக் கொள்கிறோம் பெரியாரிச்ட்,கம்யூன்ஸ்ட்,லிபரல் ,வலதுசாரி போன்றப் பிரிவுகளை நாமே நம் சிந்தனையால் நம் மேல் ஏற்றி வைத்து கொள்ளும் அடையாளங்கள் .

சரியோத் தவறோ அடையாளங்கள் இல்லாமல் வாழ முடியாது நமக்கும் நம் இகோவிற்கும் தீனிப் போடும் அடையாளங்களை விட்டு விட்டுப் போவது என்பது சாதரணப் பட்டவர்களால் முடியாது என்பது உண்மையே .

அடையாளம் என்று வந்து விட்டால் அவரவற்குத் தேவையான அடையாளங்களுடன வாழ்வதை எப்படித் தவறென்றுச சொல்ல முடியும் .ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தை விட உயர்ந்ததா என்ன ?

பொதுவாக பெரும்பாலோனர் தம் அடையாளங்களை இடம் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் . கிராமத்தில் நம் தெருவில் இன்னாரின் மகன் /மகள் மற்ற சாதித் தெருக்களில் இந்த சாதி பையன் (செட்டித்தெருப் பையன் /கோனாருப் பையன் )கொஞ்சம் வெளியே வ்ந்தால் கிராமப் பெயரே நம் அடையாளம . மற்ற மதக் காரர்களுக்கு -ஹிந்து நண்பர் ,முஸ்லீம் நண்பர் , மற்ற மொழிக்காரர்களுக்கு -தமிழ் நண்பர் ,தெலுங்கு நண்பர் வெளியே வந்து விட்டால் - இந்தியன் , அமெரிக்காவில் -தேசி / சவுத் ஏசியன் என்பது துணைக்கண்டத்தவரை குறிக்கும் சொல் (இந்திய/பாக்கிஸ்தான்/பங்களாதேஷ்/ஸ்ரீலங்கா )

புஷ் யை ஆதரித்தால் -வலது , ஒரின திருமணத்தை ஆதரித்தால் -இடது ,அல்ரா லிபரல் இப்படி வசதிக்காகத்தான் அவரவர்கள் தன் அடையாளங்களை வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு ஹிந்துவிடம் ஹிந்து என்று அடையாளப்படாமலா இருக்கிறார். நமக்கே பேரைப் பார்த்தாலும் மற்ற அடையாளங்களிலும் ஹிந்து வென்று தெரிந்து விடுவதால் சாதி பற்றி யோசிக்க ஆரம்ப்பித்து விடுவார்கள் .

அதிலும் சிலர் பேரைக் கேட்டாலே சாதியை சொல்லிவிடுவார்கள், பேச்சை வைத்தும் சாதி கண்டுபிடித்து விடுவார்கள்.

சிவா ,சண்முகம் ,அவினாஷ் என்று யார் பேர் வைத்துக் கொள்கிறார்கள் ஹிந்துக்கள் தானே . தமிழ்செல்வியும் , புகழேந்தியும் கூட தமிழ் ஹிந்துக்கள் தான் வைத்திருப்பார்கள் .

பெரும்பால ஹிந்துக்கள் ஹிந்து அடையாளங்களோடு தானே வாழ்கிறார்கள் ,ஏதோ முஸ்லீம்கள் மட்டும் தான் மத அடையாளங்களோடு வாழ்கிறார்களா என்ன ? திரு நீறு, குங்குமம்,சந்தனக் குறி ,பூணூல் போன்றவை ஹிந்து அடையாளங்கள் இல்லையா என்ன ?

ஹிந்து அடையாளம் இல்லாத எதாவது இடத்தை இந்தியாவில் காட்டுங்கள் . இதை தவிர ஹிந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறார் ஸ்ரீ ஸ்ரீ என்றுத் தெரியவில்லை .

ஸ்ரீ ஸ்ரீ சொன்ன மாதிரி சாதி ,மூட நம்ப்பிக்கைகளும் தானே ஒரு சாதாரண ஹிந்துவுக்கு அடையாளங்களாக இருக்கிறது. எந்த ஹிந்து பிரயாணமத்தையும் தியானத்தையும் பார்த்தான் .

வேண்டுமானால் இப்படிச் சொல்லாம் ஹிந்து என்ற அடையாளத்தை உரக்கச் சொல்ல இந்திய படித்த ஹிந்துக்க்கள் கூச்சப் படுகிறார்களாக இருக்கலாம் ? இந்து என்பவன் ,தான் ஒரு இந்து என்பதிற்கு பதில் மொழியாலும் , சாதியாலும் பிளவு பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார் போலும் .

மொழியாலும் ,சாதியாலும் பிளவு பட்டுக் கிடப்பது தவறு தான்,ஆனால் ஹிந்து என்று சொல்வதாலும் தான் பிளவு ஏற்படும். அடையாளம் தேவை என்றால் அவரவர்க்கு தேவையான அடையாளங்களைத் தான் தேர்ந்து எடுப்பர் . அதை தவறு இந்த அடையாளம் தான் உனக்கு சரி எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை .

தமிழன்,கன்னடன் எண்று சொல்லாதே இந்தியன் என்ரு சொல் என்று வற்புறுத்துவது கூட ஒரு வகையில் வன்முறை தான் .அது போலத் தான் நீ இந்து என்று சொல் என்று வற்புறுத்துவதும் ஒரு வகையில் வன்முறை தான் .

மேலும் இங்கு ஒன்றும் இந்துக்கள் invisible ஆக ஒன்றும் இல்லை உரக்கச் சொல்வதற்கு , சொன்னாலும் சொல்லா விட்டாலும் இந்து என்பவன் அவன் அடையாளங்களோடு தான் வாழ்கிறான் ,கடவுள் இல்லை என்று சொல்லுகிற கருணாநிதி வீட்டில் கூட இந்து அடையாளங்கள் தான் .நம் சமூகத்தில் கம்யூனிஸ்டுகள் கூட மத அடையாளம் இல்லாமல் இருந்ததில்லை உதாரணம் சுர்ஜித் சிங் , இதில் யாரைப் போய் குறை சொல்ல .

சுயம் அழித்தலே உண்மையில் ஆன்மீகத்தின் உச்சம் என்று திரும்ப திரும்ப நம் இந்திய தரிசனங்க்கள் உணர்த்தினாலும் சுயம் அழித்தல் ஒன்றும் சுலபமல்ல ,சம்சாரிக்கு மட்டுமல்ல இங்கு ஞானிகளாக காட்டப் படுபவர்களுக்கும் கூட .

7 Comments:

At February 28, 2007 5:55 PM , Blogger எழில் said...

நல்ல பதிவு. ஆழமான கேள்விகள்.

தொடருங்கள்...

 

At February 28, 2007 10:50 PM , Blogger வஜ்ரா said...

மிக நல்ல பதிவு.


//
ேண்டுமானால் இப்படிச் சொல்லாம் ஹிந்து என்ற அடையாளத்தை உரக்கச் சொல்ல இந்திய படித்த ஹிந்துக்க்கள் கூச்சப் படுகிறார்களாக இருக்கலாம் ?
//

இந்த சுய ஏளனம் (அதாவது சுயத்தை உரக்கச் சொல்ல வெட்கப்படுதல் தான் திம்மித்தனம் என்கிறேன்.

//
து போலத் தான் நீ இந்து என்று சொல் என்று வற்புறுத்துவதும் ஒரு வகையில் வன்முறை தான் .
//

இந்து என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படாதே என்று தான் சொல்கிறார்கள். இந்து என்று சொல் இல்லையென்றால்... ! என்று யாரும் மிரட்டவில்லை !

அதே போல் இல்லாததையெல்லாம் சொல்லிக்கவும் வேண்டாம். யாருக்கும் கட்டாயம் இல்லை. இருப்பதை நிராகரிக்கவேண்டாம் என்று தான் சொல்கிறார்கள்.

//
சுயம் அழித்தலே உண்மையில் ஆன்மீகத்தின் உச்சம் என்று திரும்ப திரும்ப நம் இந்திய தரிசனங்க்கள் உணர்த்தினாலும் சுயம் அழித்தல் ஒன்றும் சுலபமல்ல ,சம்சாரிக்கு மட்டுமல்ல இங்கு ஞானிகளாக காட்டப் படுபவர்களுக்கும் கூட .
//

உண்மைதான்.

ஆனால், சம்சாரிகளுக்கான கடமைகள் முடித்தபின்னரே சுயத்தைத் தேடி அழிக்கவேண்டும் என்றும் சொல்யுள்ளர் பெரியோர்.

இன்றய சம்சாரிக்கான கடமைகளில் ஒன்று சுய ஏளனச்சிந்தனைகளிலிருந்து வெளிவந்து சிந்திப்பது. அதற்கு சுய அடையாளம் மிக முக்கியம்.

 

At February 28, 2007 10:51 PM , Blogger வஜ்ரா said...

This comment has been removed by the author.

 

At February 28, 2007 10:57 PM , Blogger வஜ்ரா said...

This comment has been removed by the author.

 

At March 01, 2007 1:28 AM , Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

சாதி, மூடநம்பிக்கை மட்டும்தான் இந்துவின் அடையாளங்களா? என்ன சொல்கிறீங்க? எதை மூடநம்பிக்கை என்கிறீர்கள்? விக்கிரக வழிபாட்டையா? அல்லது தலையில் தேங்காய் உடைப்பதையா? "ஓ நீங்கள் இந்துவா உங்கள் பேவ்ரிட் சூப்பர்ஸிடிஷன் என்ன" என்று யாராவது உங்களிடம் கை குலுக்கி கேட்டார்களா? இந்து என்பதற்கு மற்றொரு அடையாளம் இருக்கிறது ஐயா. "இந்துக்க எல்லா கோவிலுக்கும் போவாங்க. எல்லா சாமியையும் கும்பிடுவாங்க. எல்லா கோயில்லையும் கும்பிடுறது ஒரே சாமியைதான்" அப்படீம்பாங்க. ரோஜா படத்தில் அந்த கதாநாயகி அப்பாவி முகத்துடன் காஷ்மீர் கோவிலுக்கு முன் கைகூப்பி "அப்பத்தா சொல்லும் எல்லா சாமியும் ஒரே சாமிதான்" என்று அதுதாங்க இந்து-தன்மை. 'மதம் மாறின' பிறகு கூட அது விடாத இருக்கும் போது முஸ்லீமோ கிறிஸ்தவரோ அவங்களுக்கும் இந்து தன்மை வந்துடுதுங்க. செவ்வாய் கிழமை வேட்டாளி அம்மன் கோவில்ல பிரசாதம் வாங்கி நெத்தியில் இட்டுக்கிற கத்தோலிக்கர்களை பார்த்திருக்கிறேன். எங்க பஜார் தெருவில் புகை போடுற பாய் தவறாம முதல் புகை தெரு சந்தி பிள்ளையாருக்கு காட்டித்தான் ஆரம்பிப்பாரு. "ராமேஸ்வர மசூதி நமாஸும் ராமநாத சாமி கோவில் பூஜையும் ஒரே கடவுளுக்குதான் செய்யப்படுது" அப்படீன்னு சொல்ற அப்துல் கலாம் இந்து மண்ணுலதாங்க பார்க்க முடியும். சவூதி அரேபிய வகாபிக்கு அப்படிப்பட்ட கலாமிய பார்வை சுட்டுப்போட்டாலும் வராதுங்க. கடந்த ஒரு நூறு வருசமா பெரிய பெரிய இறையியல் வல்லுநர்கள் எல்லாம் ரோம்ல கூடி கத்தோலிக்க சபையில சேராதவங்களுக்கு ரட்சிப்பு உண்டா கிடையாதா அப்படீன்னு விவாதிச்சுட்டுருக்காங்க. உண்டுன்னு இரண்டாம் வத்திகான் மாநாட்டுல சொன்னாங்க. இப்ப கார்டினல் ராட்சிங்கர் (அதுதான் நம்ம போப் பெனடிக்ட் 16) இல்லை கத்தோலிக்க சர்ச்சுக்கு வெளியே ரட்சிப்பு கிடையாது அப்படீன்னுட்டாருங்க. விவேகானந்தர்,, ராமகிருஷ்ண பரமஹம்சர், நேதாஜி, காந்திஜி எல்லாருக்கும் நரகம்தான். ஆனா சுசீந்திரம் கோவில் தெருவுல பூவிக்கிற அய்யாம்மா பாட்டி தெளிவா சொல்லிருவாங்க ஸ்ரீ நாராயணகுரு சொன்னத "மதம் ஏதாயிலும் மனுசன் நல்லவானாயிருந்தா மதி" அப்படீன்னுட்டு. இந்த எண்ணம் இந்துங்க. இதுதான் இந்து தருமத்தோட defining character, என்னதான் சாதீயம் அது இதுன்னு இந்து தருமத்தை demonise பண்ணினாலும்.

 

At March 02, 2007 3:09 AM , Blogger சீனு said...

//சுசீந்திரம் கோவில் தெருவுல பூவிக்கிற அய்யாம்மா பாட்டி தெளிவா சொல்லிருவாங்க ஸ்ரீ நாராயணகுரு சொன்னத "மதம் ஏதாயிலும் மனுசன் நல்லவானாயிருந்தா மதி" அப்படீன்னுட்டு.//

அந்த பூ விக்கிற பாட்டிக்கு தெரிந்தது கூட நம்மள மாதிரி ஆளுங்களுக்கு தெரியலையே :( அதான் வேதனையே...

 

At March 02, 2007 8:27 AM , Blogger வஜ்ரா said...

என்னங்க உங்க பதிவெல்லாம் வந்து பின்னூட்டம் போடக்கூடாதுன்னு தமிழ்மணத்துல ஏதாவது ஃபத்துவா போட்டுருக்காங்களா ?

நீங்க ஒண்ணும் இந்து என்று சொல்லிக் கொள்ளும் ஆளில்லையே?!! அவிங்களத்தான் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைப்பார்கள் "லிபரல்" சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் !!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home