கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

தேடலின் இயல்பு -1

மதம் பற்றிய விமர்சனங்கள் பல இருந்தாலும் ,இறை குறித்த தேடல் தொடர்ந்து செய்தே வந்துள்ளேன். ஆன்மீக நாட்டம் அதிகம் ஆக ஆக மதம் குறித்த விமர்சனங்களும் அதிகம் ஆகியது . ஆன்மீக்ம் என்பது கோவிலுக்குச் செல்வதோ அல்லது அவரவர் மதங்களின் பழக்கப் படி கடமையை செய்வதோ அல்ல என்பது
புரிந்தது . கடவுள் மறுப்பு அவர் மேல் வைக்கப் படும் விமர்சனங்களும் கூட ஒரு வகையில் ஆன்மீகமே . மதம் பற்றி பல குற்றச்சாட்டுகள் எனக்கு இருந்தாலும் கோவிலுக்குப் போவது பிடிக்கும் அதற்காக தீபாவளி ,பொங்கல் நாட்களில் கண்டிப்பாய் போகே ஆகி கூட்டத்தில் இடிபட்டு இரண்டு பேரை மனதில் திட்டுவதற்கு கோவிலுக்கே போக வேண்டாம் . அதீத வேசம் கட்டும் பக்தியாளன் நான் இல்லை. ஆனால் இந்தியாவில் குறிப்பாய் தமிழ் நாட்டில் கோவில் பார்க்கவே இன்னுமும் ஆசை , சாமிகும்ப்பிடுவது என்ற சம்பிரதாயம் கடந்து புரிந்து கொள்ளவே கோவில் செல்வேன் . இங்கே அமெரிக்காவில் கோவில் செல்வது சம்பிரதாயம் மட்டுமே ,முன்னேல்லாம் சாப்பிடவே செல்வேன் .
இப்போது மனைவிக்காகவும் ,நண்பர்களுக்காகவும் .

ஆனால் தேடுதலை ஆன்மீக குருக்களை கவனித்தலையும் அவர்களின் கருத்துக்களை படிப்பதும் மூலமாக தொடர்ந்து வந்தேன். ஆனநத விகடனில் மனசே ரிலாக்ஸ் புகழ் சுகபோனந்தா வின் பகவத்கீதை லெக்சர்களுக்கும் ,இரண்டு தடவை அவரின் LIFE கோர்ஸ் போயிருக்கிறேன் .அவரின் பேச்சுத் திறமை எனக்குப் பிடிக்கும் .லைப் புரோகிராமில் தியானம் ,சில விளையாட்டுக்கள் , கலந்துரையாடல் ,நடனம் என்று ஒரே மிக்ஸ் யாய் இருக்கும் நன்றாகவே இருக்கும் . ஆனாலும் தீவிரமான ஒரு புரிதலும் ஏற்படவில்லை .அவர் பலவற்றை அறிவு பூர்வமாகவும் ,தர்க்க பூர்வமாகவும் விளக்க முயற்சி செய்த்தை நான் புத்த்கங்கள் வழியாகவே செய்து கொண்டிருந்தேன் . சுகபோனந்தா ஒரு அறிவு ஜிவியாகவும் ,வேதங்களையும் பல புத்தகங்களை நன்கு படித்த தர்க்க ரீதியான ஒரு சாமியாராகத் தான் பார்த்தேன். இருந்தாலும் இன்னமும் அவரின் பேச்சுக்களை கேட்கப் பிடிக்கும் ,அவர் இங்கு வந்தால் அவரின் பகவத் கீதா லெக்சர்களுக்கு போய் வர முயற்சிப்பேன்.

ஐந்து வருடங்களுக்கு முன் கோயம்பத்தூரில் கோவைக் குற்றாலம் சென்று வரும் வழியில் கார் ஓட்டுனர் வெள்ளியங்கரி மலையில் உள்ள தியான மண்டபம் பற்றி சொல்லியதால் அங்கு சென்று வந்தேன் .தியான லிங்கத்தின் சுற்றியிருக்கும் ஒரு தியான அறையில் இருந்து தியானம் செய்ய முயற்சி செய்த போது ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது ,ஆனால் என்னுடன் வந்திருந்த அம்மா,அப்பா அக்கா ஆகியோரை அதிகம் நேரம் காக்க வைக்க விரும்பாமல் சில புத்த்கங்கள் மட்டும் வாங்கி விட்டு திரும்பி விட்டேன் .புத்தகங்களை படித்த போது ஜக்கி மேல் ஒரு பிரியம் உண்டானது .அவரின் பல பதில்கள் சுகர் கோட் இல்லாமல் தெளிவாக இருக்கும் .அவர் பக்தி பற்றி சொல்லிய கதைகள் சிந்திக்க வைத்தது. அவரும் தியான வகுப்புகள் நடத்துகிறார் என்று நண்பர்கள் சொல்லித் தெரியும் . ஜக்கி ஒரு குருவுக்கான எல்லாத் தகுதியும் உள்ளவர் என்பது என் எண்ணம் . அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் எனக்குத் தெரியும் ,ஆன்மீகப்பாதையில் உள்ளவர்கள் மேல் நம் மதிப்பீடுகளை சொல்ல வேண்டுமென்றால் ஆன்மீக ரீதியாக ம்ட்டுமே வைக்க வேண்டும் . விருப்பம் இல்லாமல் அவர் யாரையும் சாமியாரக்க முடியாது .

என் நண்பரின் வழியாக நித்யானந்த சுவாமிகளின் லெக்சர் கேட்டிருக்கிறேன் ,அவர் அருமையாக பல விசயங்களில் பேசியிருக்கிறார் .அவரும் சீரியசான சில தியான கோர்ஸ்கள் நடத்துகிறார்.என் நண்பரின் அனுபவம் நன்றாகவே இருந்ததாகவே சொன்னார்.சிறிய வயதில் அவர் பல விசயங்களைப் பற்றி நன்றாகவேப் பேசுகிறார்.ஆனாலும் என் பகுத்தறிவு மயக்கம் அவ்வுளவு எளிதாய் எல்லோரையும் நம்ப மறுக்கிறது .நித்யானந்தரிடம் நானும் எனர்ஜி தரிசனம் வாங்கி இருக்கிறேன் ,ஒரு மாதிர்யாக இருந்தது ,கொஞ்ச நேரம் போதையாக அவ்வுளவு தான் .விபாசனா தியானம் பண்ணிக் கொண்டு இருந்ததால் குழப்ப வேண்டாம் என்று இவரின் தியானத்திற்கு நான் செல்ல வில்லை .

அம்மா என்கின்ற அமிர்தானந்த மையி ,இவர்கள் போட்டோ எங்கள் வீட்டில் 90களின் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது ,என் தாத்தா பாட்டி இவர்களை கேரளாவில் சந்தித்து பக்தர்களாகி விட்டிருந்தனர். அப்போதல்லாம் நான் இவரை
அதிகமாய் கிண்டலடித்து கொண்டு ஆச்சியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பேன். அதன் பிறகு அம்மா தமிழ் நாட்டிலும் பாப்புலர் ஆகி வந்ததை தொடர்ந்து கவனித்து வந்தாலும் அவ்வுளவாக அக்கறை காட்டவில்லை .எனக்கு அவரின் பகதர்கள் அம்மாவின் மேல் வைத்திர்க்கும் பக்தியை நான் அவ்வுளவாக ரசிக்க வில்லை ,அது ஆன்மீகம் அல்ல என்பது அப்போதைய நிலைப்பாடு .
அதன் பிறகு விபாசான சென்றிருந்த போது யோசிமெட்டியில் இருக்கும் ஒரு யோகா ஆசிரியர் (வெள்ளைக்காரர் தான்) அம்மாவைப் பற்றி புகழ்ந்த படி இருந்தார். அம்மாவைப் பார்க்க அவரும் அவர் நண்பர்களும் தொடர்ந்து 3 நாட்களாய் 200 மைல் வண்டி ஓட்டி வந்திருந்தார்களாம் . அப்படி அவர் சொன்ன போது அப்படி என்ன இருக்கிறது என்று தோண அந்த வருடம் அம்மா இங்கு வந்த போது போயிருந்தேன் . ஓ அது ஒரு பக்தி கல்டின் பெரும் கூட்டம் ,பெரும்பாலும் அமெரிக்கர்களை மட்டுமே நான் பார்த்தேன் ,இந்தியர்கள் குறைவு தான். கண்ணீரில பஜன் செய்யும் கூட்டத்தையும் ,அம்மாவை கட்டிப்பிடித்து பீறிடும் அழுகையை அடக்கி கொண்டு வரும் நபர்களைப் பார்க்கும் பொழுது எனக்குக் கொஞ்சம் பயமாய் தான் இருந்தது. அந்த பஜன் கூட்டத்தில் நாங்களும் சேர்ந்து இருந்த போது உணர்ச்சிகள் கொந்தளிப்பதை தாங்க முடியாமல் நான் எந்திருத்து வெளியே வந்து மற்றவர்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.பல கதைகள் பலர் என்கிருந்தோ வந்து 10 நாட்கள் அம்மாவைப் பார்க்கவே என்று வந்து அருகாமை ஹோட்டல்களில் தங்கி இருக்கிறார்கள் ,பலர் Mid west ,Canada இல் இருந்தும் சிலர் Europe இல் இருந்தும் வந்து தங்கிருந்ததைப் பார்த்து எதற்காக இப்படி என்று தோன்றியது ,இது ஒருவித கல்டோ என்ற தயக்கம் கூட இருந்தது ( என் புத்தி அப்படி ) .ஆனால் சிலரையும் அவர்கள் அம்மாவிம் மேல் வைத்திருந்த நம்ப்பிக்கையும் பார்த்த போது அவர்கள் வாழ்க்கையின் துவளும் சமயம் இந்த நம்பிக்கைகள் அவர்களை காப்பாற்றியதாக சொல்வதை கேட்ட போது ..கல்டாக இருந்தாலும் என்ன நல்லதே என்று தோன்றியது . அம்மா வந்திருக்கும் எல்லோரையும் அணைப்பார் வந்திருக்கும் எல்லோரையும் அது பலருக்கு வெடித்து கிளமபும் உணர்ச்சியின் அழுகைகளாக இருந்தது ஆச்சிரியம் . எனக்கு நிஜமாய் பயமாய் இருந்தது அழுது விடுவோமோ என்று .அப்படித் தான் இருந்தது எப்படியோ கட்டுப் படுத்திக் கொண்டு வந்துவிட்டேன் ( புத்தியின் சாரம் அப்படி ஆன்மீகமும் புத்தியும் நேரதிர் , நம்மைச் சரணடைய வைக்க முடியாத புத்தி )
இதை எழுதும் போது கூட அந்த நாளின் உணர்ச்சிகள் சிலிர்க்க வைக்கிறது.

சரணடைதல் என்ற உயரியத் தத்துவமே எல்லா பக்தி சார்ந்த மதங்களுக்கும் காரணம் ,இந்திய மதங்களின் பிரதானமே அது தான் . இராம கிருஷ்ண பரமகம்ஷரின் அடிப்படையே அது தான் . ஆனால் என்னைப் போன்றவர்கள் புத்தி அவ்வுளவு எளிதில் அதை செய்ய விடுவதில்லை . பெரும்பாலானோர் அப்படித் தான் , நான் கொஞ்சம் மோசம் ,என்னை விட மோசமானவர்களையும் பார்த்து இருக்கிறேன் , சூப்பர் ஈகோ உள்ளவர்கள் தேடுவது வேறொன்றை பக்தியை அல்ல .சரணடையத் தெரிந்தவர்களுக்கு எந்த மதமாயினும் பிரச்சினையில்லை இல்லாதவர்கள் தான் என் மதம் ,என் வழி ,என் குரு என்று சண்டை இட்டுக் கொண்டு இருப்போம் . எனக்கும் புரிந்தது நான் தேடுவது வேறு எதையோ என்று ,அல்லது சரணடைய இன்னமும் பக்குவப் படவில்லை என்று .

தேடலின் தேவையே நம்மப் பற்றிப் புரிந்து கொள்ளத் தான் ,என் மற்ற அனுபவங்களையும் பிடித்த படித்த ஆன்மீக குருக்களைப் பற்றி அடுத்தப் பதிவில் எழுதுகிறேன் .

Labels: ,

11 Comments:

At February 26, 2007 4:40 PM , Blogger வடுவூர் குமார் said...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.
தேடுதல் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறதா?
இதற்கு முடிவில்லை நம் மூளை யோசிக்கும் திறன் இழக்கும் வரை.
கோவிலுக்கு சாப்பிட மட்டும் போனீர்களா?அது ஒன்றும் அதிசியமில்லை.சிங்கை கோவில்களிலும் இது நடந்துகொண்டிருக்கிறது.
அவ்வபோது மலேசியாவிலும் பார்த்திருக்கிறேன்.

 

At February 26, 2007 7:12 PM , Blogger நிர்மல் said...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள். உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.

 

At February 26, 2007 9:49 PM , Blogger பொன்ஸ்~~Poorna said...

உங்களின் தேடல் ஆழமாக இருக்கிறது.. யோசிக்க வைப்பதாகவும்..

ஸ்ரீ ஸ்ரீ பற்றிய உங்கள் பதிவைப் படித்த நினைவிருக்கிறது. அவரை ஏன் இங்கே சேர்க்கவில்லை?

ஜக்கி மீது ஏதோ குற்றச்சாட்டு இருக்கிறது என்கிறீர்களே, அதுபற்றி எங்கே அறியலாம்?

 

At February 26, 2007 10:15 PM , Blogger தருமி said...

//சரணடைதல் என்ற உயரியத் தத்துவமே எல்லா பக்தி சார்ந்த மதங்களுக்கும் காரணம்//
// நம்மைச் சரணடைய வைக்க முடியாத புத்தி .. //

நல்ல வார்த்தைகள்; ஆழமான பொருள்.
கொஞ்சம் புரிந்தது என்றே நினைக்கிறேன். ந்ன்றாயுள்ளது.

 

At February 26, 2007 11:15 PM , Blogger ramachandranusha(உஷா) said...

ம்ம்ம்.. நான் எதிர்பார்த்த பாதையில் போய் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கைக்கு காரணமாய் நான் நினைப்பது பயம், ஆசை, எதிர்ப்பார்ப்புகள், கனவு இவையெல்லாம் சொல்லலாமா? வந்ததை எதிர்க் கொள்ளும்
தைரியம் இருந்தால்,இந்த உணர்ச்சிவசப்படுதல் மாறிவிடுமில்லையா? வாழ்க்கை மிக அழகானது, ஒவ்வொரு நாளும் ரசனையுடன் அனைத்தையும் ரசிப்பதால் கடவுள் என்ற கான்செப்ட் இன்னும் புரியவில்லை.

 

At February 26, 2007 11:17 PM , Blogger கூத்தாடி said...

வடுவூர் குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//தேடுதல் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறதா?
இதற்கு முடிவில்லை நம் மூளை யோசிக்கும் திறன் இழக்கும் வரை.//

ஆம் ,தேடுதல் ஒரு வகையில் வாழ்க்கையோ ..என்னத் தேடுகிறோம் என்று தெரியாமல் தேடுவது போல் தோன்றுகிறது.


//கோவிலுக்கு சாப்பிட மட்டும் போனீர்களா?அது ஒன்றும் அதிசியமில்லை.சிங்கை கோவில்களிலும் இது நடந்துகொண்டிருக்கிறது.
அவ்வபோது மலேசியாவிலும் பார்த்திருக்கிறேன். //

ஆமாங்க பேச்சுலராக இருக்கும் சமயம் நல்ல சாப்பாடுக்கு கோவில் போகிறது ஒரு வழி ,இப்பக் கூட போன உடன்
லட்டு கிடைக்கும் இடம் நோக்கித் தான் என் கண் போகும் ,லட்டு இருக்கா இல்லையான்னு பார்த்துக்கிட்டு தான்
எந்நாடுடைய சிவனுக்கே ஹாய் சொல்லுறது

 

At February 26, 2007 11:21 PM , Blogger கூத்தாடி said...

நன்றி நிர்மல்

பொன்ஸ் வருகைக்கு நன்றி

//ஸ்ரீ ஸ்ரீ பற்றிய உங்கள் பதிவைப் படித்த நினைவிருக்கிறது. அவரை ஏன் இங்கே சேர்க்கவில்லை?//

சேர்க்க கூடாது இல்லை என்றில்லை ,அவரின் சேவை மேல் எனக்கு பாராட்டே ஆனால் அவர்
அரசியல் அதிகமாய் பேசுவதாய் எண்ணம் அது தான்

அடுத்த பதிவில் எழுத எண்ணியுள்ளேன்

தருமிக்கு வந்தனம்

//// நம்மைச் சரணடைய வைக்க முடியாத புத்தி .. //

இதே போல் ஒரு கருத்தை உங்களின் ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இட்டதாக ஞாபகம் .தெளிவாய் தெரியவில்லை

 

At February 26, 2007 11:21 PM , Blogger கூத்தாடி said...

நன்றி நிர்மல்

பொன்ஸ் வருகைக்கு நன்றி

//ஸ்ரீ ஸ்ரீ பற்றிய உங்கள் பதிவைப் படித்த நினைவிருக்கிறது. அவரை ஏன் இங்கே சேர்க்கவில்லை?//

சேர்க்க கூடாது இல்லை என்றில்லை ,அவரின் சேவை மேல் எனக்கு பாராட்டே ஆனால் அவர்
அரசியல் அதிகமாய் பேசுவதாய் எண்ணம் அது தான்

அடுத்த பதிவில் எழுத எண்ணியுள்ளேன்

தருமிக்கு வந்தனம்

//// நம்மைச் சரணடைய வைக்க முடியாத புத்தி .. //

இதே போல் ஒரு கருத்தை உங்களின் ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இட்டதாக ஞாபகம் .தெளிவாய் தெரியவில்லை

 

At February 27, 2007 9:00 AM , Anonymous Anonymous said...

நல்ல பதிவு கூத்தாடி. நல்ல கருத்துக்கள் - உண்மையான தேடல். யதார்த்தமாருக்கு.
என் தேடலில்:
நித்யானந்தா பேச்சு நல்லாருந்தது, அவரோட Practical Demo பாக்க Guts இல்ல - பகுத்தறிவு படுத்திருச்சி, So, வந்திட்டோம் பாக்காம.
ஜக்கி தியான உலகை உள்ள கொஞ்ச தூரம் வரைக்கும் போய் பாத்தாச்சு - விநோதமாருக்கு ப்ராக்டிஸ் எல்லாம் - ஆனா நல்ல பேச்சாளர் அவரும் அது உண்மை. சக்கரம் எல்லாம் கொஞ்சம் ஆடுனதுல பயந்து க்ரியா வேணாம்னு பதுங்கீட்டேன். :) போதை தான் அவரும் சொல்றாரு - உங்க நித்யானந்த அனுபவம் அது போலதான் போல.
அம்மா சுத்தி எப்பவும் அழுகை அதனால அந்த ஏரியாவே போறதில்லை நான் :)

விபாசனான்னா புத்தர் வழி தியானமா (based on my google search now!)? நான் இதுக்கு முன்னாடி கேள்விப்படலையே இது பத்தி? யாரு நடத்துறாங்க விபாசனா இந்தியாவுல?

 

At February 27, 2007 11:16 AM , Blogger கூத்தாடி said...

மதுரா
வருகைக்கு நன்றி .நீங்களும் இதே பாதையில் செல்வது மகிழ்ச்சி .

விபாசனா பற்றி ந்ன் பதிவை படியுங்கள்.அது புத்தர் சொல்லிக் கொடுக்கப் பட்டதாக சொல்லப்படும் தியானப் பயிற்சி.கோயங்கா என்பவரின் விபாசனா பயிற்சி மஹாராஸ்டிடாவில் உள்ளது அங்கு ஒரு பெரிய பகோடா உள்ளது.

சென்னையிலும் அவர்களின் கோர்ஸ் இருக்கிறது ,தேவையென்றால் ச்சொல்லுங்கள் விசாரித்து சொல்லுகிறேன் .

 

At February 27, 2007 12:06 PM , Blogger கூத்தாடி said...

//ம்ம்ம்.. நான் எதிர்பார்த்த பாதையில் போய் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கைக்கு காரணமாய் நான் நினைப்பது பயம், ஆசை, எதிர்ப்பார்ப்புகள், கனவு இவையெல்லாம் சொல்லலாமா? வந்ததை எதிர்க் கொள்ளும்
தைரியம் இருந்தால்,இந்த உணர்ச்சிவசப்படுதல் மாறிவிடுமில்லையா? வாழ்க்கை மிக அழகானது, ஒவ்வொரு நாளும் ரசனையுடன் அனைத்தையும் ரசிப்பதால் கடவுள் என்ற கான்செப்ட் இன்னும் புரியவில்லை.//

மாடரேசன் குழப்பத்தில் உங்க கருத்தை இப்பத்தான் பார்த்தேன் .

நன்றி உஷா

//வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கைக்கு காரணமாய் நான் நினைப்பது பயம், ஆசை, எதிர்ப்பார்ப்புகள், கனவு இவையெல்லாம் சொல்லலாமா? //

சொல்லலாம் ,வாழ்க்கையில் ஆசை இல்லா விட்டாலு பயமும் கிடையாது.
கடவுள் என்கின்ற கருத்துருவாக்கம் பல்லாயிரக் கணக்கான உயிர் களை கொன்றுள்ள போதிலும், தேடல் குறைந்த பாடில்லை ..

தேடலே உண்மையான ஆன்மீகம் ,உண்மையை தேடுதலே ஆன்மீகம் என்றால் அறிவியல் கூட ஆன்மீகம் தான் ..

//ாழ்க்கை மிக அழகானது, ஒவ்வொரு நாளும் ரசனையுடன் அனைத்தையும் ரசிப்பதால் கடவுள் என்ற கான்செப்ட் இன்னும் புரியவில்லை.///

புரியமும் தேவை என்று அவசியம் இல்லை ,வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொண்டால் கடவுள் என்பவர் தேவைபட் மாட்டார் ,ஏனெனில் நீங்களே கடவுளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ..மற்றவர்கள் வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம் ..

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home