கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

கவித ?

சில கிறுக்குப் பிடித்த நாட்களில் கிறுக்கிய எழுத்துக்கள்,முன்னமே சொன்ன மாதிரி கவிதை மேல் எனக்கு காதல் உண்டு ,எனவே கவிதை என்று என் எழுத்தை சொல்லி கவிதையை கொச்சைப் படுத்த முனைவிதில்லை ..

ஏதோ சந்தர்ப்பத்தில் எழுதிய கவிதைகளுக்கு தலைப்பை இன்று தான் கொடுத்தேன் ,தலைப்பு சரியா அல்லது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு தோதான தலைப்புகளை ..

கடைசி கிறுக்கலுக்கு தலைப்பு வைக்கக் கூட கற்பனை பஞ்சம் ..
உங்களுக்கு ?

எல்லா நாய்க்கும் ஒரு நாள்


திருடனைப் பார்த்து குரைத்தலில்
உயிரை இழக்க சாத்தியம்
வீட்டுக்காரனின் சொந்தத்தை குரைத்தலில்
அடிகிடைக்கும் சாத்தியம்
அவரின் பிள்ளைகளுக்கு ஒரு செல்லக் குரைத்தல்
அம்மாவுக்கோ ஒரு விசுவாச குரைத்தல்
மார்கழி மாசம் பருவக் குரைத்தல்
அதுவும் இப்போ இல்லை
ஆப்பிரேசன் பண்ணியாச்சு
உரத்துக் குரைத்தலே உயர்வு
பார்த்து குரைத்தலே வாழ்வு
எல்லா நாய்களுக்கும் ஒரு நாளுண்டு
அவர்களுக்கேயாய்
அன்று நான் குரைப்பேன்
எனக்குப் பிடித்த மாதிரி
எனக்கு மட்டுமேயான குரைத்தல்

------

புத்தியின் வார்த்தைகள்

எனக்கு உவப்பாயில்லை
ஏகாந்த வேளையில்
கனவுகளாய் நான் ஒரு
கவிதையை எழுதுகையில்
உன் வார்த்தைகளை
தத்துவங்களை எனக்கானக்
கவிதையில்
நீ
திணிப்பது
உவப்பாயில்லை எனக்கு



----
வீசப் படும் குண்டுகளின்
வெப்பத்தையும்
தாண்டி
உன்னை அணைத்த சூடு
இன்னமும் தெரிகிறது
உயிர் பிழைத்தலே பிரதானம்
இன்னொரு முறை உன் சூடு
கிடைப்பதற் காவது

Labels: , ,

5 Comments:

At February 27, 2007 4:54 PM , Anonymous Anonymous said...

யார சார் திட்டுறீங்க நாய்யுன்னு ?

 

At February 27, 2007 7:06 PM , Blogger நிர்மல் said...

கூத்துப்பட்டறையில் எல்லாம் உண்டு போல

 

At February 28, 2007 11:27 AM , Anonymous Anonymous said...

Good ,Not bad at all .Surprise to see the kavithai from you .

Kans

 

At February 28, 2007 11:29 AM , Anonymous Anonymous said...

அவளுக்காக தலைப்பு எப்பிடி இருக்கு

 

At February 28, 2007 2:53 PM , Blogger கூத்தாடி said...

யாரைய்ம் நான் திட்டவில்லை சாரே

நிர்மல்
கூத்துண்ணா சும்மாவஅ

வருகைக்கு நன்றி அனானி ..பேரைப் போட்டிருநதால் சந்தோசப் பட்டிருப்பேன் ,,

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home