கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

அமெரிக்க அடிவருடி

அமெரிக்கா என்பது இந்தியாவின் அறிவு ஜீவி வட்டத்தில் ஒரு ஏதேச்சாதிகார மையமாகவும் ஆட்சி கவிழ்ப்பு அரசியல் கொலைசெய்யும் ஒரு நாடாகவே இருந்து வந்தது ,அதில் பேரளவு உண்மை இருந்தாலும் அமெரிக்காவின் மறுபக்கமான ஜனநாயகம், திறமைகாரர்களை எங்கு இருந்தாலும் அமெரிக்கா வர ஊக்குவிக்கும் அரசும் , கனிவான மக்களும் உள்ள ஒரு நாட்டையும் காட்டத் தவறியது.

ஆனால் சோவியத்தின் நிறைகளை மட்டுமே பார்த்து குறைகளை பார்க்க மறுத்த ஒருப்பார்வை இடது சாரி சார்ந்த பார்வையாளர்களால் உருவாக்கப் பட்டிருந்தது.

இந்தப் பாரபட்ச பார்வை பார்வை எல்லா தர மக்களிடமும் ஒரு விதத்தில் அமெரிக்க பற்றிய வெறுப்பை கொடுத்து வந்தது சமீபத்திய காலம் வரை நடந்து வந்ததொரு யாதார்த்தம் .கேரள சேட்டன்மார்கள் பருவ மழை வரவில்லா விட்டாலும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் சதி செய்து விட்டதாக பேசுவார்கள் . சோவியத் ரஷ்யா நமக்கு நண்பர்களாகவே அடையாளம் காட்டப் பட்டோம் , சாதாரண மக்களிடத்திலும் கூட ரஷ்யா பாசம் இருந்ததிற்கு காரணம் அன்றைய பலத் தலைவர்கள்சோவியத் ரசிகர்களாக இருந்ததும் ஒரு காரணம் .ஏகாதிபத்தியம் என்பது ஏதோ அமெரிக்கா மட்டும் பண்ணுகிற விசயம் போல் பேசும் இவர்கள் சோவியத் நடத்திய நாடு பிடிக்கும் அநியாயங்களின் மேல் ஒரு விமர்சனத்தையும் சொல்வதில்லை . இன்னமும் கூட சோவியத் விசயத்தை விமர்சனம் செய்தால் நல்லதொரு அர்ச்சனை கிடைக்கும்.

சோவியத் நமக்கு பல இக்கட்டான விசயங்களில் உதவியிருக்கிறது , அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து சில பல நமக்கெதிராய் செய்து உள்ளது , அதை நான் இல்லை என்று சொல்ல நான் முட்டாள் ஒன்றும் இல்லை.

ஆனால் இன்றைய மாறி வரும் உலகச் சூழலில் நடு நிலைப் பார்வையில் சோவியத்தின் தவறுகளையும் ,அமெரிக்காவின் வெற்றிக்கானக் காரணங்களையும் நாம் பார்க்கத் தவறினால் அது ஒருவருடைய புரிதலின் குறைபாடே அன்றி வேறல்ல , இது அமெரிக்க அதரவு /சோவியத் எதிர்ப்பு என கண் மூடித் தனமாய் பேசுபவர்களுக்கும் பொருந்தும் .

இன்றையக் காலச்சூழலில் அமெரிக்கா என்பது தேவைப்படுகின்ற ஒரு ரவுடி. அமெரிக்க உணர்வுகளைப் பொறுத்தே இன்றைய உலகத்தின் எல்லா நாட்டு அரசியலும் நடக்குகிறது ,வரும் காலங்களில் அதன் பலம் சைனா , ஐரோப்பா ,இந்தியா வளர்ச்சிகளால் ஒரளவுக்கு மாறலாம் என்றும் கூட இது தான் நிதர்சனம் இன்று.அமெரிக்கா அடாவடியாக செய்யும் பல காரியங்கள் அமெரிக்கர்களிலேயே பாதி பேருக்கு ஒப்புமை கிடையாது .

அமெரிக்காவில் நான் அறிந்த வரையில் கற்றுக் கொள்ள வேண்டியது அதன் தனி மனித சுதந்திரம் பற்றிய கொள்கை மற்றும் Dynamic ஜனநாயகம் . ஜனநாயகம் அருமையாக இங்கு வேலை செய்கிறது . யாரோ இணையத்தில் புளோரிடா விவகாரத்தை மட்டும் சொல்லி அமெரிக்காவின் ஜனநாயகம் கேலிக் கூத்து என்று கருத்துத் தெரிவித்திருந்ததைப் படித்த போது சிரிப்பு தான் வந்தது.

அமெரிக்காவில் ஷெரிப்பில் இருந்து பப்ளிக் அட்டெர்னி வரைக்கும் தேர்ந்தடுக்கப் படுபவர்கள் தான் .சும்மா உடன் பிறப்புகளுக்கும் , ஜால்ராக்களுக்கும் கொடுக்கும் பதுவி அல்ல .அதனால் தான் அவர்கள் தங்களை தேர்ந்த எடுக்கப் பட்டவர்களின் மன நிலையை புரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,சான் ப்ரான்ஸ்கோவில் அல்ரா லிபரலும் ,டெக்சாசில் இவாஞ்சுவலிஸ்டும் பதவியில் வருகிறார்கள்.மக்களின் மனோ நிலையை பிரதிபலிக்கும் ஒரு தலைமை ,அது தானே சரியான ஜனநாயகம்.


அது மட்டுமல்ல அருமையான பெடரல் அமைப்பு அது .மாநிலங்களுக்கு அதிகாரங்கள் அதிகமே , நிறைய விசயங்கள் மத்தியஅரசு தலையிட முடியாது .அது போல் சிட்டிக்களுக்கும் ( நம்ம பஞ்சாயத்து போல்) அவர்களுக்கான பட்ஜெட்டுகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப் படுவது போல் அருமையான விசயம் எதுவும் இல்லை . நாம் செலுத்தும் வரி எப்படி செலவழிக்கப் படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொருவனுக்கும் உரிமை இருக்கிறது . வீட்டில் இருந்த படியே இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் .

தொழிலாளர் உரிமைகள் கண்டிப்பாய் நம்ம ஊர்களை விட அதிகமே .ஸ்டிரைக் பண்ணுவது மட்டும் தான் தொழிலாளர் உரிமையா என்ன ,அது கூடப் பண்ணலாம் அதற்காக பொதுச் சொத்தையோ ,தனியார் சொத்தையோ சேதப் படுத்த முடியாது.

கோர்டில் பொய் சொல்வது தான் பெரிய குற்றம் ,நம்ம ஊரில் எங் கையெழுத்து இல்லை என முதலமைச்சரே சொல்லலாம் .கோர்டும் சும்மா இருக்கும் .கிளிண்டன் விவகாரத்தில் அவர் பொய் சொன்னது தான் அவரை நாற அடித்தது .

இன்றைக்கு இராக் விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு குரல் வந்தது இங்கிருத்தும் தான். நைஜர் விவகாரத்தில் ஜனாதிபதி சொன்னது தவறு என்று சொல்ல வைக்க இங்குள்ளவர்களால் முடிந்தது. காங்கிரசில் ஈராக்குக்கு அதிகம் காசு கொடுக்க முடியாது என்று ஆப்பு வைக்க முடிந்தது , ஒரு ஜனநாயக நாட்டில் ஒருவர் அதிகாரத்தை தவறாய் பயப் படுத்தினால் இப்படி அடுத்த எலெக்ஸனில் தான் காட்ட முடியும் .அமெரிக்கா செய்ததற்கு வக்காலத்து வாங்கும் முயற்சில்லை என் பதிவு .

என்னுடைய எண்ணம் என்ன வென்றால் ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .அல்குவைதா டிரேட் சென்ரர் தாக்குதல் நடக்காதிருந்தால் புஷ் ஈராக் மேல் படையெடுக்க காங்கிரஸ் /செனட்டில் இருந்து பெற்றிருக்கவே முடியாது . தங்களின் மேல் குண்டு விழக் காரணம் ஈராக் தான் என்று சொல்லப் படும் போது எந்த மனிதன் தான் சும்மா இருப்பான் , அதனால் தான் மக்களின் ஆதரவும் செனட்டர்களின் ஆதரவும் இருந்தது . சொன்னது எல்லாம் தவறு என்று தெரிந்தது என்றதும் மக்கள் ஆதரவு குறைந்தது தேர்தலில் சரியான அடி வாங்கினார்கள் . இது ஒரு ஜனநாயக நிகழ்வா இல்லையா . சோவியத்தில் இன்னமும் என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியவில்லை . புடின் புஷ் யை விட மோசமாய் தான் நட்ந்து கொள்கிறார்.சைனா நடத்தும் அநியாங்களை கேட்கவே ஆளில்லை.

ஆனால் இன்றையச் சூழலில் அமெரிக்க எதிர்ப்பு பாலஸ்தீனிய பிரச்சினையை மையம் கொண்டே உள்ளது , இராக் விவகாரத்தில் அமெரிக்காவின் மேல் தார்மீகக் கோவம் உலகத்தில் முஸ்லீம்களுக்கு இருக்கிறது.

ஆனால் இணைய இஸ்லாம் நண்பர்கள் இஸ்லாம் நாடுகளில் இருக்கும் எல்லா விசயங்களும் பாலஸ்தீனிய பிரச்சினை யை மட்டுமே மையமாகப் பார்க்கிறார்கள். அமெரிக்காவை மட்டும் அனல் கக்கும் விழியுடன் விசம் கக்கும் அவர்கள். அவர்களே ஆதர்ச நாடுகளான சவுதி அரேபியாவும் ஜோர்டனும் அமெரிக்க ஆதரவு நாடுகளாக இருப்பதைப் பற்றி எந்த விமர்சனமும் நான் இணையத்தில் பார்த்ததே இல்லை. நியாயமாய் அவர்களைத் தானே இவர்கள் திட்ட வேண்டும். அமெரிக்கா மற்ற நாடுகள் விசயத்தில் எப்படி யிருந்தாலும் அவர்களின் சொந்த மக்களை சந்தோசமாய் தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த இஸ்லாமிய நாடுகளின் மக்கள்எவ்வுளவு சந்தோசமாய் இருக்கிறார்கள். நம்முடைய பாகிஸ்தான் நண்பர்களில் எல்லா பணம் உள்ள நண்பர்கள் எல்லாரும் அமெரிக்காவில் வாழ்வதையே விரும்புகிறதற்குக் காரணம் என்ன ? எல்லோரும் அமெரிக்க வாழ்க்கையை விரும்பினாலும்டெஸ்பரேட்டாக இருப்பது யார் ?
எல்லா விசயங்களிலும் சும்மா அமெரிக்காவை மட்டுமே குறை சொல்லாதீர்கள் .

அமெரிக்கா செய்வதற்கெல்லாம் வக்காலத்துவாங்கவில்லை நான் . நம் நாட்டில் உள்ள மக்களும் அரசியல் தலைவர்களும் ஒழுங்காய் இருந்தால் ஏன் அமெரிக்கா பிரச்சினை பண்ண முடிகிறது . ஒற்றைப் பார்வையில் எல்லாவற்றிற்கும் விளக்கம் சொல்ல முயற்சிக்காதீர்கள் சன்னலை திறந்து கொஞ்சம் வெளியேயும் பாருங்கள்.

PS

தலைப்பு உதவி -கால்கரி சிவா. அவரிடம் இருந்து சுட்டது

Labels: ,

5 Comments:

At February 27, 2007 4:37 AM , Blogger மாசிலா said...

உங்களது இந்த பதிவு என் மனதில் சில தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மத பிரச்சினையாக ஆக்கி முடித்து இருக்கிறீர். ஏமாந்து போனேன்.

 

At February 27, 2007 10:02 AM , Blogger கால்கரி சிவா said...

//தலைப்பு உதவி -கால்கரி சிவா. அவரிடம் இருந்து சுட்டது//

நன்றி.

ஜனநாயகம் என்பது அடிவேர் வரை ஊறி உள்ளது இங்கே.
மேலும் கருத்துகள் பிறகு

 

At February 27, 2007 11:27 AM , Blogger கூத்தாடி said...

மாசிலா
//கொஞ்சம் கொஞ்சமாக மத பிரச்சினையாக ஆக்கி முடித்து இருக்கிறீர். ஏமாந்து போனேன்//

மதம் இங்கு பிரச்சினையாக நான் கருத வில்லை .மதக் கண்ணோடு மட்டுமே எல்லவற்றைய்ம் பார்க்க வேண்டாம் என்று தான் நான் கேட்கிறேன் .இன்று அமெரிக்கா மேல் வரும் விமர்சனங்களில் பாதிக்குப் பாதி அவதூறு அதுவும் மதக்கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு கூட்டம் .மதம் மட்டும் தான் அவர்களை விமர்சிக்க சொல்கிறது ,இல்லையெனில் அமெரிக்கா தென் அமெரிக்க நாடுகளை சூறை ஆடிக் கொண்டிருந்ததை யாராவது பேசுகிறார்களா என்ன ? பாலஸ்தீனப் பிரச்சினை யில் பாலஸ்தீனர்களுக்கு தார்மீக உரிமை இருப்பதை மறுக்க வில்லை ,ஆனால் அது மட்டுமே வைத்தி இஸ்லாமியத் தீவிரவாதிகள் அமெரிக்க எத்ர்ப்பு செய்வது நியாயம் இல்லை .இது என் ஆதங்கம் மட்டும் தான் . இந்திய இஸ்லாமிய நண்பர்கள் mis guided இருப்பது குறித்து தான் என் கவலை

 

At February 27, 2007 6:50 PM , Blogger வஜ்ரா said...

//
து என் ஆதங்கம் மட்டும் தான் . இந்திய இஸ்லாமிய நண்பர்கள் mis guided இருப்பது குறித்து தான் என் கவலை
//

அவர்கள் சரியான guiding ல் தான் இருக்கிறார்கள்.

ஹூகோ ஷாவெஸ் மாதிரி புஷ் ஒரு சைத்தான் என்று சொல்லிவிட்டு தன் நாட்டில் மீடியாக்களை அமுக்குவது போன்ற காரியங்கள் செய்கிறார்.

The bane of this ideology whether its communism or islam is it blames their enemies for all their woes.

உங்களுக்குத் தெரியுமா, க்யூபாவில் கம்ப்யூட்டர் வாங்கத் தடையாம்.!!

human rights, Freedom of expression என்று எல்லா வித அடிப்படை உரிமையிலும் அமேரிக்கா எந்த ஒரு தென் அமேர்க்க கம்யூனிச நாட்டைவிட சிறப்பாகவே செயல் படுகிறது.

All the more, huma rights விஷயத்தில் அமேரிக்காவை குறை சொல்ல எந்த நாட்டுக்கும் அருகதை இல்லை.

 

At February 27, 2007 10:55 PM , Blogger மாசிலா said...

நீங்கள் அமெரிக்காவின் உள் இருந்து வாழ்ந்துகொண்டு உங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர். ஆனால், நான் விளக்க முயல்வது அதாவது சராசரி இந்தியன் என்கிற பார்வையில், அமெரிக்காவின் ஆதிக்க சக்திகள் உலகத்திற்கு தன் நாட்டை பற்றி தரமுயலும் "முகப்பு" பற்றியது. நான் இரஷ்யாவிற்கு ஆதரவாளனும் அல்ல. இதுபற்றிய வஜ்ராவின் கூற்றுகளுடன் நான் ஒத்துப் போகிறேன்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home