கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

அடிமையும் மதமும்

போன நூற்றாண்டில் முக்கியமான சீர்திருத்தமாக நான் கருதுவது அடிமை முறை பற்றி வந்த விழிப்புணர்வு. உலகெங்கும் வெவ்வேறு பெயர்களில் மதங்களில் சொல்லப்பட்டும் செயல் பட்டும் வந்த அடிமைமுறை 19ம் நூற்றாண்டிலும் 20 வம் நூற்றாண்டிலும் மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற அசிங்கத்தை ஒவ்வொருவராக உணர்ந்து திருத்த முயற்சித்தனர், அதன் விளைவாய் இரண்டாம் உலகப் போருக்குப்பின் அனேக நாடுகளில் அடிமை முறை சட்ட விரோதமானது . ஒரு வகையில் எல்லா முன்னேற்றங்களை விட முக்கியமானது தான்.

இது எதனால் ஏற்பட்டது என்பதற்கு பல சமூகக் காரணங்கள் , முதலாவதாக ஐரோப்பாவில் நடந்த தொழிற் புரட்சியின் விளைவால் நடந்த சுபிட்சங்களும் ,அதன் விளைவால் மக்களின் வாழ்க்கை முறை மாறியதும் அவர்களை சிந்திக்க தூண்டியதும் காரணமாய் இருக்கலாம்.அடிமை slavery என்றாலே எதோ வெள்ளைக் காரர்கள் கறுப்பின மக்களை கொடுமைப் படுத்தியகதயை மட்டும் யோசித்து உச் கொட்டி விட்டு அவங்க எல்லாம் அப்படித்தான் நம்ம நாட்டில்இல்லை என்பது போன்ற ஒரு வாதம் இங்குள்ள NRI நண்பரகளுக்கு இருக்கிறது.ரேசிசம் பற்றிப் பேசி பெரிதாய் வெள்ளைக் காரனை குற்றம் சாட்டுவார்கள் . என் கேள்வி அவர்கள் மட்டுமா எனபது தான் ?

அடிமை முறை என்பது எல்லா ஊரிலும் இருந்த ஒரு அழுக்கு,அது இயற்கை என்பதை "வல்லான் வகுத்ததே சட்டம் " என நினைக்கும் ஒரு சமூகக் கூட்டம் அங்கீகரிக்கக் கூடும் .பழையக் காலக் கட்டங்களில்நடந்த பல விசங்கள் இன்று முட்டாள் தனமாயும் அசிங்கமாயும் பார்க்கப் படுவது இயல்புதான்.ஆனால்இதைப் பற்றிப் பேசும் பொழுது நண்பர்கள் அது அந்தக் காலக்கட்டத்திற்கு சரி என்பது போல் வாதிடுவார்கள் .வாதத்திற்கு அப்படி வைத்துக் கொண்டால் அதே லாஜிக்கில் பழைய நம் சரித்திரம் கூட அப்படித்தான் இன்றைக்கு அது பற்றி உயர்வாய் சொல்லுவதும் பழம் பெருமை பேசுவதும்குற்றம் தான் .அதன்படி நம் பல பழக்க வழக்கங்கள் இன்றைக்கு குப்பைத் தொட்டியில் போட வேண்டியதுஅதை இன்னமும் தூக்கிப் பிடுத்து கொண்டு இருக்கிறோம்.கலாச்சாரம் என்பது பழையதை தொடர்ந்து பண்ணி வருவது என்று எண்ணும் பலர் நம்மிடையே உள்ளனர். பெண்கள் புடைவை கட்டுவது தமிழ் கலாச்சாரம் ஜீன்ஸ் போட்டால் கெட்டு விட்டது போல் பேசுபவர் பழையதைப் பிடித்து தொங்குபவர்கள்.அடிமைகள் என்பது இந்தியாவில் பஞ்சமர் என்ற முறையில் வித்தியாசமாய் சாதிய ரீதியாக உரிமைகள் மறுக்கப் பட்டு வாழ்ந்தது ஒரு வகையில் அடிமை முறைதான் .அதன் கொடுமைகள்இன்னமும் ஆங்காங்கே தொடர்வது வருந்த்தக்கது என்றாலும் ,சட்ட ரீதியாக இன்றைக்கு தலித்துக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.சமூகத்தில் மாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத மேல் சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் முனகிக் கொண்டும் ,சதி செய்து கொண்டும் இருந்தாலும் தலித்துகளுக்குஇன்று நிலமை பரவாயில்லை ,இல்லையெனில் அம்பேத்காரின் பிறந்த நாளுக்கு பாம்பே வில் இவ்வுளவுபெரிதாய் கூட முடியாது.உபியில் மாயாவதி ஒரு அரசியல் சக்தியாய் வளர்ந்து இருக்க முடியாது.

இந்த மாற்றத்திற்கு நம் மதமா காரணம் ?இந்து மதம் கண்டிப்பாய் காரணம் இல்லை .கிருத்துவ இஸ்லாமியதாக்கமா காரணம் ? கண்டிப்பாய் இல்லை .ஒரு விதத்தில் இந்த எல்லா மதங்களுமே அடிமை முறையை ஒரு விதத்தில் ஆதரித்தே வந்தது.இந்து மதத்தில் ,போரில் தோற்றவர்களையும் , சூதில் தோற்றவர்களையும் அடிமையாக வைத்திருக்கஅனுமதித்தது.இது எல்லா வர்ணத்தார்கும் பொருந்தும் .ரிக் /அதர்வ வேதங்களில் அடிமை முறையைப்பற்றி இருக்கிறது ,அடிமைகள் அஃறிணையாகவே கருதப்பட்டனர்,மனு சாஸ்திரம் நம் இந்திய அடிமைமுறைக்குச் சாட்சி. மகாபாரத சூதுக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தானே .சுந்தரரை ஆள் கொள்ள வந்த இறைவன் காட்டியதும் அடிமை பத்திரிகையைத் தானே.இதிலிருந்தே நம் சமூக வழக்கத்தில் சாதி,பஞ்சமர் மட்டுமல்லாது நேரடியாகவே அடிமை முறை இருந்ததாகவே கொள்ளலாம் . இந்த லட்சணத்தில் இந்து மதம் என்ற கோடபாடு அடிமை/சாதி முறையை ஒழிக்க உதவியிருக்கும்.

கிருத்துவம் அடிமை முறையை அங்கீகரித்தாகவே விவியலித்தை படித்தவர்கள் சொல்கிறார்கள்.அமெரிக்க சிவில் போரின் போது பிரசிடண்ட் ஜெபர்சன் சொன்ன இந்த கருத்துக்களை படியுங்கள்

"[Slavery] was established by decree of Almighty God...it is sanctioned in the Bible, in both Testaments, from Genesis to Revelation...it has existed in all ages, has been found among the people of the highest civilization, and in nations of the highest proficiency iin the arts." Jefferson Davis, President of the Confederate States of Americaமற்றும்Exodus 21:20-21 "When a man strikes his slave, male or female, and the slave dies under his hand, he shall be punished. But if the slave survives a day or two, he is not to be punished; for the slave is his money." The word "money" in this case means property; it is translated "property" in the Modern Language,.

இல்லை விவியலித்தில் அந்த அர்த்ததில் சொல்ல வில்லை யென்றும் வாதிடுபவர்கள் ,இருக்கிறார்கள்சில ரெவரெண்டுகள் பைபிளில் அடிமை முறை பற்றி இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால்அடிமை முறை பற்றி பல வசனங்கள் பைபிளில் இருப்பதாகவேப் படுகிறது.இங்கு கேள்வி பைபிள்கருணை மிக்க இயேசுவால் அங்கீகரிக்கப் பட்ட பழைய ஏற்பாட்டிலும் ,புதிய ஏற்பாட்டிலும்அடிமை முறை பற்றி இருந்தால் அதை எப்படி அங்கீகரிக்க முடியும் ?ஒன்று பைபிள் இறைவனின் புத்தகம் என்ற நம்பகத்தன்மை பற்றிய கேள்வி எழுப்பலாம் ,காரணம் எல்லாம் தெரிந்த கருணை மிக்க கடவுள் தவறே பண்ணியிருக்க முடியாதில்லையா ?அல்லது அடிமை முறை இறைவன் கூறிய படி சரியானதாய் இருக்க வேண்டும் ,
24 மணிக்கூரில் சாவுறமாதிரி அடிக்காதிண்ங்கப்பா ..

இஸ்லாம் இதற்கெல்லாம் மேல் நபிகள் மெதினாவில் அவர் அரசை அமைத்த பிறகு அவருக்கான அடிமைகளையும் அவர் சார்ந்தவர்கள் அடிமைகளை வைத்திருப்பதையும் ஆதரித்தார்.நான் சொல்லவில்லை அப்பா இஸ்லாம் ஸ்காலர்கள்தான் சொல்லுகிரார்கள் .ஆனால் சூப்பராய் ஒரு சப்பைக் கட்டு அவர்கள் போரில் பிடிபட்ட முஸ்லீம்அல்லாதவர்கள் தானாம் .33:50 - "Prophet, We have made lawful to you the wives to whom you have granted dowries and the slave girls whom God has given you இப்படி பல இறைவசனங்களை திருக்குரானில் இருந்தும் ,ஹதிஸ்களிலும் இருந்தும் எடுக்க முடியும். அடிமைகளுக்கு உரிமை இருந்ததாக பலர் சொல்கிறார்கள் ,கண்டிப்பாய் பாரட்டப் பட வேண்டியதே.கேள்வி என்னவென்றால் மனிதன் எழுதிய புத்தகமாய் ஒழுக்க நூலாய் இருந்தால் அந்த காலக்கட்டத்தில்இந்த அளவிற்கு உரிமை கொடுத்தற்கானப் பாராட்டு . ஆனால் இறைவன் எழுதிய புத்தகம் ,அடிமை முறைகளை ஆதரிக்கிறதா ?இல்லை எனில் ஏன் இறைவன் ,மது குடிப்பது,விபச்சாரம் ,ஒரினச் சேர்க்கை போன்ற வற்றிற்கு தெளிவாய் கூடாது என்பவர் இதை மட்டும் ஏன் மறந்து போனார் ?

இப்படி இருக்குமோ ? கடவுள் நம்மை அடிமையாய் வைத்திருக்கிறார் ,ஆதலால் அவர் நமக்கும் கொஞ்சம் அந்த உரிமையய் தருகிறாரோ என்னவோ ?இங்கு என் கேள்வி இறைவனைப் பற்றியது அல்ல ,ஒரு விசயம் நல்லதா கெட்டதா என்பதற்கு உங்கள் இறைவனின் மறைகளை கேட்க வேண்டியதில்லை ..உங்கள் மனசாட்சியை கேட்டால் போதும். அப்படி கேட்டதன் விளைவால் தான் அமெரிக்க சிவில் வாரில் நிறைய அமெரிக்க வெள்ளைக்காரர்கள்தங்கள் சொந்த மக்களுடன் கறுப்பின மக்களுக்காகப் போராடினார்கள் ,ஜெபர்சன் மற்றும் பல ரெவரண்டுகள் மதத்தை இழுத்தும் அவர்கள் மனதை மாற்றிக் கொள்ளவில்லை ,அன்று சிவில் வாரின் முடிவு வேறு மாதிரியாக இருந்தால் அமெரிக்கா இந்தளவு வளர்ந்து இருக்காது .அது போல் இந்தியாவில் சாதிக் கொடுமையை பல உயர்சாதிக் கொடுமை எதிர்த்தவர்கள் மேல் சாதிக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் காந்தியும் ,நேருவும் ,பெரியாரும் சமூக அமைப்பில் உயர்வாய்கருதப்பட்டவர்கள் தான் .விவேகானந்தர் இந்து மதத்தின் வேதங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டியிருக்கவில்லை .ஆக எல்லா மதமும் ஒரு வகையில் அடிமை முறையை ஆதரித்து தான் இருக்கிறது .எல்லா மதங்களிலும் குறை நிறைகள் இருக்கத் தான் செய்கிறது .

எதற்கோ எழுத ஆரம்பித்து பதிவு தடம் மாறி விட்டது ,அடுத்த பதிவில் நம்மிடம் உள்ள ரேசிசம்பற்றி எழுதுகிறேன்

7 Comments:

At March 02, 2007 10:45 PM , Blogger வஜ்ரா said...

உலகில் உள்ள அனைத்து மதங்களும் விதிவிலக்கிலாமல் அடிமைப் படுத்துதலை ஆதரிக்கின்றன என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கம்யூனிசம் போன்ற செகுலர் தத்துவத்தையும் நான் மதமாகத்தான் பார்க்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அடுத்த பதிவுக்கு இதிலிருந்தும் எடுத்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

At March 03, 2007 12:38 AM , Blogger அப்துல் குத்தூஸ் said...

<< ஆனால் இறைவன் எழுதிய புத்தகம் ,அடிமை முறைகளை ஆதரிக்கிறதா ? >>

போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்ற வரைமுறைகளைக் கூறுங்கள்? மேற் கேட்ட கேள்விக்கு தானாகவே பதில் கிட்டும்.

 

At March 03, 2007 7:00 PM , Blogger கால்கரி சிவா said...

அடிமை முறை என்பது மத்திய் கிழக்கு மதங்களில் ஊறியது.சவூதி அரேபியாவில் 1962 இல்தான் அடிமை முறை ஒழிஅ அரசு சட்டம் இயற்றியது. ஆனாலும் அம்மக்கள் வெளியாட்களை அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள். இது அடிமைகளுக்கு உறைக்காது ஏனென்றால் எஜமான விசுவாசம் கண்ணை மறைக்கும்

 

At March 03, 2007 7:59 PM , Blogger கூத்தாடி said...

வஜ்ரா
உஙகளின் லிங்கைப் படித்தேன் ,இது குறித்து எழுத எண்ணிய பதிவு தான் கருப்பு சிவப்பாய் மாறியது,நான் எழுத நினைத்த ரேசிசம் இன்ன்மும் எழுத முடியவில்லை .இந்த வாரம் முடியாவிட்டலும் இன்னொரு சமயம் எழுத உத்தேசம் உண்டு.

கம்யூனிசமோ ,பாசிசமோ ஒரு வகையில் மதம் தான் கடவுள் இல்லாத மதம் அவ்வுளவு தான் .

 

At March 03, 2007 8:07 PM , Blogger கூத்தாடி said...

அப்துல் குத்தூஸ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
//<< ஆனால் இறைவன் எழுதிய புத்தகம் ,அடிமை முறைகளை ஆதரிக்கிறதா ? >>

போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்ற வரைமுறைகளைக் கூறுங்கள்? மேற் கேட்ட கேள்விக்கு தானாகவே பதில் கிட்டும்.//

புரிய வில்லை .போர் கைதிகளை அடிமையாக நடத்துதல் சரியாகமா .
என் கேள்வியின் அடிப்படையே கடவுள் எழுதிய புத்த்கம் எல்லாக் காலங்களுக்குமான புத்தகமாக அல்லவா இருக்க வேண்டும் ,அப்படி இருக்கிறதாகத் தான் மத அடிப்படை வாதிகளும் ,மத நம்பிக்கையாளர்களும் இருக்கிறார்கள் .

உங்களின் கேள்வியின் படி ,போர் கைதிகளை அடிமைப் படுத்துவது அந்த காலத்திற்கு பொருந்துவதாக இருந்ததாக
வைத்துக் கொண்டாலும் இன்றைக்கு பொருந்துமா ,நீங்கள் ஆதரிக்கிறீர்களா நண்பரே .நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும் என்று எண்ணுகிறேன் .

 

At March 03, 2007 8:14 PM , Blogger கூத்தாடி said...

//அடிமை முறை என்பது மத்திய் கிழக்கு மதங்களில் ஊறியது.சவூதி அரேபியாவில் 1962 இல்தான் அடிமை முறை ஒழிஅ அரசு சட்டம் இயற்றியது. ஆனாலும் அம்மக்கள் வெளியாட்களை அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள். இது அடிமைகளுக்கு உறைக்காது ஏனென்றால் எஜமான விசுவாசம் கண்ணை மறைக்கும்

//

உண்மையே கால்கரி .இன்னமும் அப்படி பார்க்கும் மனப்பான்மை இருப்பது மனதுக்கு வருத்தமான விசயம் .என்ன செய்ய சிவா உலகத்தில் எல்லோரும் உண்மையை உணருவதில்லை .

 

At March 12, 2007 11:25 AM , Blogger தருமி said...

தெளிவான பதிவு. நேரான கேள்விகள். பதில்கள் ... ?

இதற்கும் பதில்கள் கொடுக்கப்படும் ...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home