கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

நன்றி

நான் ஸ்டாராகி எழுதத் தொடங்கு முன் பெரிதாக எந்த ஐடியாவும் கைவசம் இல்லை என்ற போதிலும் எப்படியோ இது வரை எழுதி விட்டேன் ,அழுதும் போது பல சிந்தனைகளைத் தூண்டி பல தலைப்புகளை குறித்து வைத்தேன் ஆனால் நேரம் இன்மையால் எழுத முடிய வில்லை.

இந்த வாரம் நான் வேலை பார்க்கும் வேலையில் இருந்து மாறுகிறதால் இந்த வாரம் தான்
கடைசி வாரம் .பல வேலைகளிலும் பேர் வெல் லஞ்சுகளலாலும் ,டின்னர் தண்ணி பார்டிகளாலும்
அவ்வுளவாக எழுத முடியவில்லை .அதற்காக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் எழுத நினைத்த தலைப்புகளில் ஒன்று ,தாய் வழி சமூகமும் நாயர் தறவாடும் .இதை பற்றி யாராவது தெரிந்தால் எழுதலாம் .நானும் எழுத முயற்சிக்கிறேன் .நான் கிற்க்கிய கவிதைகளில் ஒன்றையும் சந்தடி சாக்கில் உள்ளே நுழைத்து விட்டேன் ,கவிதை எழுதுவதில் பயிற்சியின் முக்கியத்தை ஒவ்வொரு நல்லக் கவிதையை படிக்கும் போது உணர்வேன் . வாழ்க்கையில் ஒரு நல்ல கவிதையை எழுத ஆசை உண்டு ,அதை விட கவிதை போல்
வாழ்க்கை அமைய ஆசையும் உண்டு.பார்ப்போம்.

நான் வேலை பார்க்கும் Networking/Security field பற்றி எழுதலாம் என்று இருந்தேன் ,முடியவில்லை.எவ்வுளவு பேருக்கு ஆர்வம் இருக்கும் என்று தெரியவில்லை . மட்டுமல்லாமல் டீச்சர் போல் எழுதுவது கடினம் நான் ஒரு மோசமான ஆசிரியர் வேறு, இன்னொன்று பொழுது போக்கான still photography மற்றும் Nikon கேமரா பற்றி ,அதுவும் முடியவில்லை.எல்லாமே சீரியசான பதிவுகளாகி விட்டது .

Google Analystics இன் படி எழுதியப் பதிவுகளில் அதிகமாய் படிக்கப் பட்டது அமெரிக்காவின் அடிவருடியும் ,கன்னட பிரசாத் ,இந்து என்னும் அடையாளம் போன்ற பதிவுகள் . நான் நன்றாக வந்திருப்பதாய் கருதியது தேடலைப் பற்றியப் பதிவும் ,இழப்பின் வலிக்கான மருந்தும் தான் .உங்களின் கருத்து என்ன

எனக்கு பின்னூட்டம் இட்டு நம்பிக்கை ஊட்டிய வஜ்ரா,தமிழ் நதி, சிவா,மாசிலா,நிர்மல்,உஷா,துளசி,பொன்ஸ் ,முத்துக் குமரன்,அப்துல் குத்தூஸ்,சின்னக் குட்டி ,திரு,தருமி,வடுவூர் குமார்,மதுரா,கார்த்திக் பிரபு,கிஷோர்,எழில் ,ஜிராஜுதீன்,அரவிந்தன் நீலகண்டன்,இந்து,டெஸ்ட்,பொறுக்கி,குறும்பன், சீனு மற்றும் அனானியாக வந்து கருத்து சொன்னவர்களுக்கும் என் நன்றி.


It Does n't Matter whether your Loving is Spritual or Sensual
what Matters is that it leads you to LOVE itself
-Mavlana Jalal Al-Din Rumi

தேடலின் இயல்பு -2

போனப் பதிவில் எனக்குப் பிடித்த சில ஆன்மீகப் பெருசுகளைப் பற்றி சொல்லியிருந்தேன் .அதில் ஸ்ரீ ஸ்ரீ பற்றி எழுதாதது ஏன் என்று ஒருவர் கேடிருந்தார்.அவரைப் பற்றி ஏற்கனவே விமர்சித்திருந்தாலும்
எனக்கு அவரின் சுதர்சன் கிர்யாபற்றி நல்ல அபிப்ராயமே உண்டு .அனுபவப் பட்டவர்கள் பலர் அதனைப் பற்றி நல்லதாகவே சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அவர் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் அதற்காக அவர் சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல விசயத்தை மறுக்கக் கூடாது , நஷ்டம் அவருக்கல்ல நமக்குத்தான் .அவரின் கிரியா கோர்ஸ்யில் சேர வேண்டும் என எண்ணிக் கொண்டு இருக்கிறேன் .கண்டிப்பாய் இந்த வருடம் கற்றுக் கொள்வேன்.

இவர்களைத் தவிர எனக்குப் பிடித்தவர்களின் முக்கியமானவர்கள் ஓஷோ ,ஜேகே மற்றும் ரூமி .இவர்களை எழுத்தின் வழியாக மட்டுமே தெரிந்தாலும் இவர்களின் ஆளுமை அலாதியானது .

ஜேகே யின் பலப் புத்தகங்கள் படித்து இருக்கிறேன் ,பல சமயம் திரும்ப திரும்ப படித்து தான் சில விசயங்களை புரிந்து கொண்டு இருக்கிறேன் .ஜே கே பற்றி நான் எழுதிஒன்றும் தெரிய அவசியமில்லை .தீவிரமானத் தேடலின் ஒரு ஆரம்பம் ஜே கே வாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள்அதிகம்.

ஓஷோ வைப் பற்றி செக்ஸ் சாமியாராகத் தான் நம் "மதிப்பிற்குரிய" பத்திரிகைகள் அறிமுகப் படுத்தின.ஆனால்அவரைப் பற்றியப் புரிதல்கள் அவரைப் படித்தபின் வந்தது .அவர் ஒரு விதத்தில் தவறாக அறியப்பட்ட அருமையானஆன்மீகத் தலைவர்.அவர் எந்த விசயத்தைப் பற்றியும் பேசத் தவறியதே இல்லை ,ஒரு முறை "Fuck " வார்த்தையை வைத்து ஒரு அருமையான உரையை தந்து இருப்பார் .you tube இல் இருக்கிறது
http://www.youtube.com/watch?v=6D7rWLzloOI

பாருங்கள்.இவர் இது போலப் பேசியதில் பல பேர் இவரை திட்டிக் கொண்டு இருக்கிறார்கள் .மேலும் அவர் பேரில்உள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நான் அறிவேன் .அவர் ஒரொகனில் ஆசிரமத்தில் நடநதப் பிரச்சினைகளையும்இயந்திர துப்பாக்கி பாதுகாப்பில் ஒரு பெரிய கல்டுகளின் நடுவே அவர் இருந்த நாட்களையும் .ஊர் ஊராக துரத்தி அடிக்கப் பட்டு இந்தியாவில் புனேயில் அரசாங்க கட்டுப் பாடுகளில் அவர் இருக்க நேர்ந்தமைக்கானக் காரணம் அவரிடம்காணப்பட்ட அதீத கிண்டல் கூடக் காரணமாயிருக்கலாம் .அவர் ஒரு வழக்கமான இந்தியச் சாமியார் இல்லை.

எனக்குப் பிடித்தது அவரின் அருமையானச் சொற்பொழிவுகள் .அவரின் பகவத் கீதைக்கான உரையும் ,பதஞ்சலி யோகசூத்திரத்தின் உரையை அவர் பாணியில் வெறும் மொழிபெயர்ப்பை போல் அல்லாமல் அவரின் கருத்தை வைத்திருப்பார்.ஒரு விதத்தில் கீதையை அவரைப் போல் தான் அணுக வேண்டும் .

அவரைப் பற்றி வரும் பல அவதூறுகளைப் படிக்கும் போது எதிர் வினை ஆற்றத் தோன்றும் ஆனால் செய்வதில்லைஎதிர் வின ஆற்றுவது முட்டாள்தனமானதும் கூட .புரிந்து கொள்ளாதவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள் அது மட்டுமில்லை ஒஷோ வின் புகழ் பாடுவது அல்ல என் நோக்கம் அவர் சொல்வதை புரிந்து கொள்வதுமட்டுமே .

என்னுடைய நண்பர் ஒருவரால் அறிமுகப் படுத்தப் பட்ட இன்னொரு சூபி ஜலாவுதீன் ரூமி.

Lovers have a religion all of their own Their only creed is Love

என்று எழுதிய கவி அவர் .பால்க் ,ஆப்கானிஸ்தானில் பிறந்தவர் டமாக்கஸ் ,பெர்சிய பகுதிகளில் சூபி யிசத்தைபற்றி கற்பித்து ஆன்மீக ஆசானைத் திகழ்நத 1207-1273 வரை வாழ்ந்து இன்றும் தன் கவிதைகளால் வாழ்கிறவர்.இவரைப் பற்றிய அறிதல் இன்னும் ஒரு முறை மதங்கள் என்னும் மடமையில் இருந்து கடந்து வருவதற்கான காரணங்களை உறுதி செய்தது .ஆங்கிலம் மூலமாகத் தான் இன்னமும் படித்து வருகிறேன் , தமிழில் யாராவதுஇவரைப் பற்றி எழுதியிருந்தால் எனக்குச் சொல்லவும் படிக்க ஆவலாய் இருக்கிறேன். இவரைத் தொடர்ந்து பல இஸ்லாமிய சூபிக்கள் பற்றி படித்து வந்திருக்கிறேன் .ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு கவிதை ,அவர்களின்ஆன்மீக பலம் வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் .யாராவது இஸ்லாமிய நண்பர்கள் இவர்களைப்பற்றி தொடர் எழுதலாம் ,சூபி அல்லது ரசூல் எழுதினால் சந்தோசப் படுவேன்.நாகூர் ரூமி திராட்சைகளின்இதயம் என்று ஒரு சூபிக் கதை எழுதியிருந்தார் ,அவர் ஜலாவுதீன் ரூமி பற்றி எங்கோ கூறியதை படித்ததாய்ஞாபகம் .அவர் ரூமியைப் பற்றி எழுதலாம் .

எனக்கேவான ஒரு ரூமியின் கவிதை

Wisdom repeated like a Parrot
flies away when most need it

I am telling you Mr Clever - Clever
even if you write it down in your liitle book
and brag about how well read you are
it will escape from this cage
Forget about what other people have said
just show Wisdom some love and affectionand
she will becaome a pet Bird
whose perch is your open Palm

இன்னொன்று

When you say to a thirsty man,
Over here ! there's water in this cup
does the thirsty man reply
that is only your opinion
where is the evidence to subsataniate
your assertionthat this is an aqueous liquid ?

மஜ்னபிக்கு என் வணக்கத்தோடு இன்னமும் நான் இவர்களைப் பற்றி சரியானப் புரிதல்களோடு எழுதுவேன்என்ற நம்பிக்கையோடு

Allah Says,

"You can't carm me in to a Jar.
Heaven and Earthare too cramped to contain me
I live only on the Loving expanses of a lover's heart
Look for me there "

அன்பின் வழியாக அல்லாவையோ சிவனையோத் தேடி ......

கருப்பும் சிவப்பும்

நிறம் ஒருவரின் உடலின் உள்ள பிக்மெண்ட் மெலினின் தன்மையை பொறுத்தே ஒருவரின் சருமத்தின் நிறம் அமையும் .ஆனால் நம் சமூக அமைப்பில் நிறத்திற்கான மதிப்பு எவ்வுளவு என்பதை மேட்ரி மோனியல் பக்கங்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் .அழகு என்பது சருமத்தில் தேடுகீற சமூகக் கூட்டம் நாம் .இது உலக அளாவில் இருக்கின்ற ஒன்று என்ற போதிலும் நம் ஊரில் பாதிப்பு கொஞ்சம் அதிகம் . படிக்காத பாமரர்கள் இப்படி இருப்பார்கள் என்று சொல்லி விட முடிவதில்லை .பெரும்பாலும் படித்த மக்களின் மோகம் தான் அதிகம் .

எனக்குத் தெரிந்து எத்தனையோப் பேர் கலர் கம்மி என்று சொல்லியே எத்தனை பெண்களையோ பலர் கல்யாணம் பண்ண மறுத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் சமூக நிலையிலும் ,படிப்பிலும் சிறந்தவர்களா இருப்புதைக் கண்டு தான் எனக்குக் கோபம் ,அதிலும் பெரும் பாலோனவர்கள் கருப்பு நிறம் தான் .ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் கலரானப் பொண்ணு வேண்டும் , பிள்ளைகளாவது நிறமாய் வரட்டுமே என்றுச் சப்பைக் கெட்டு வேறு. நிறமானப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி அப்பாவின் நிறத்தைக் கொண்டு பிள்ளைகள் பிற்ந்த பின் எந்த கலராய் இருந்தால் என்ன என்று சமாதானம் சொல்லிக் கொள்கின்றவர்களைப் பார்க்கும் போது சிரிப்பு வரும்.

அவர்களைப் பார்த்துச் சிரித்தாலும் ,அவர்களின் தாக்கம் எனக்குப் புரியவே செய்தது .முதலில் நம் சமூகம் நிறக் குறைவானவர்களுக்கு கொடுக்கும் மரியாதைக் குறைவு தான் ,அதனால் வரும் தாழ்வு மனப் பான்மை தங்கள் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்று எண்ணுபவர் பலர் ,அதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கருப்பாய் இருப்பது அவமானமாய் இருக்கிறது என்றால் ,நீங்கள் ஏன் இன்னொரு கருப்புக் குழந்தையை உருவாக்கவேண்டும் .சிவப்பு நிறப் பெண்ணைத் திருமணம் செய்தாலும் கருப்பானப் பிள்ளைப் பிறக்க சாத்தியக் கூறுகள்இருக்கிறதே .

சிவப்பு நிறம் மேல் நமக்கு இருக்கும் மோகம் அலாதியானது ,சிவப்பு அழகு கீரிம்கள் நம்ம ஊரில் பட்டி தொட்டி வரை 15 வருசத்துக்கு முன்னே கிடைக்கும் .சிவப்பு நிறம் இல்லாத எந்த நடிகைகளை நாம் கொண்டாடி இருக்கோம் .கருப்பாய் இருப்பவர்கள் அதிகம் இருக்கும் தமிழ் தெலுங்கு மாநிலங்களிலே தான் சிவப்புத் தோலுக்கான மதிப்புஅதிகம் .ராஜிவ் காந்தியை 89இல் பிரச்சாரத்தில் பார்த்து விட்டு எங்கள் ஊரில் வியந்தது இரண்டு விசயத்துக்குத் தான்இன்னமா கலரு ,இன்னொண்ணு அவரே ஜீப் ஓட்டிடு வந்தாரே ..பிளேட்டெல்லாம் ஓட்டுறாராம் .அன்றைக்குஉணர்ந்தேன் ஏன் கவர்ச்சி அரசியல் தமிழ் நாட்டில் ஏன் செல்லுபடியாகிரது என்று.

இந்த நிறம் சம்பந்தமான மனத் தடையை கருப்பாக இருக்கும் நாமே உடைக்காவிட்டால்,எப்படி சமூகம் மாறும் .பிள்ளைகளுக்குப் பெண் தேடும் பெற்றோர் பலர் இந்த சிவப்பு மாயையில் இருந்தாலும் ,அவர்களை விட மயக்கமாய் இருப்பது மாப்பிளைகள் என்பது தான் வருத்தம் .இதில் நன்கு படித்து வேலையில் இருப்பவர்களும் அமெரிக்காவில்இருக்கும் ரேசிசம் பற்றி பேசும் அறிவு ஜீவிகளும் இந்த வரிசையில் முதலாவதாய் இருக்கும் போது தான் எனக்கு அதிகமாய் எரிச்சல் வரும்.

நம் உள் இருக்கும் ஜீன் அவ்வுளவு சிம்பிள் கால் குலேசனில் மாற்ற முடியுமா என்ன .மாற்ற வேண்டுமானால் உங்கள் மூதாதையரைத் தான் மாற்ற வேண்டும் .முதலில் உங்கள் தாழ்வு மனப் பான்மையை விடுங்கள் ,உங்கள் குழந்தைகள் கருப்பானாலும் சிவப்பானாலும் நன்றாகவே வளரும்.

அடிமையும் மதமும்

போன நூற்றாண்டில் முக்கியமான சீர்திருத்தமாக நான் கருதுவது அடிமை முறை பற்றி வந்த விழிப்புணர்வு. உலகெங்கும் வெவ்வேறு பெயர்களில் மதங்களில் சொல்லப்பட்டும் செயல் பட்டும் வந்த அடிமைமுறை 19ம் நூற்றாண்டிலும் 20 வம் நூற்றாண்டிலும் மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற அசிங்கத்தை ஒவ்வொருவராக உணர்ந்து திருத்த முயற்சித்தனர், அதன் விளைவாய் இரண்டாம் உலகப் போருக்குப்பின் அனேக நாடுகளில் அடிமை முறை சட்ட விரோதமானது . ஒரு வகையில் எல்லா முன்னேற்றங்களை விட முக்கியமானது தான்.

இது எதனால் ஏற்பட்டது என்பதற்கு பல சமூகக் காரணங்கள் , முதலாவதாக ஐரோப்பாவில் நடந்த தொழிற் புரட்சியின் விளைவால் நடந்த சுபிட்சங்களும் ,அதன் விளைவால் மக்களின் வாழ்க்கை முறை மாறியதும் அவர்களை சிந்திக்க தூண்டியதும் காரணமாய் இருக்கலாம்.அடிமை slavery என்றாலே எதோ வெள்ளைக் காரர்கள் கறுப்பின மக்களை கொடுமைப் படுத்தியகதயை மட்டும் யோசித்து உச் கொட்டி விட்டு அவங்க எல்லாம் அப்படித்தான் நம்ம நாட்டில்இல்லை என்பது போன்ற ஒரு வாதம் இங்குள்ள NRI நண்பரகளுக்கு இருக்கிறது.ரேசிசம் பற்றிப் பேசி பெரிதாய் வெள்ளைக் காரனை குற்றம் சாட்டுவார்கள் . என் கேள்வி அவர்கள் மட்டுமா எனபது தான் ?

அடிமை முறை என்பது எல்லா ஊரிலும் இருந்த ஒரு அழுக்கு,அது இயற்கை என்பதை "வல்லான் வகுத்ததே சட்டம் " என நினைக்கும் ஒரு சமூகக் கூட்டம் அங்கீகரிக்கக் கூடும் .பழையக் காலக் கட்டங்களில்நடந்த பல விசங்கள் இன்று முட்டாள் தனமாயும் அசிங்கமாயும் பார்க்கப் படுவது இயல்புதான்.ஆனால்இதைப் பற்றிப் பேசும் பொழுது நண்பர்கள் அது அந்தக் காலக்கட்டத்திற்கு சரி என்பது போல் வாதிடுவார்கள் .வாதத்திற்கு அப்படி வைத்துக் கொண்டால் அதே லாஜிக்கில் பழைய நம் சரித்திரம் கூட அப்படித்தான் இன்றைக்கு அது பற்றி உயர்வாய் சொல்லுவதும் பழம் பெருமை பேசுவதும்குற்றம் தான் .அதன்படி நம் பல பழக்க வழக்கங்கள் இன்றைக்கு குப்பைத் தொட்டியில் போட வேண்டியதுஅதை இன்னமும் தூக்கிப் பிடுத்து கொண்டு இருக்கிறோம்.கலாச்சாரம் என்பது பழையதை தொடர்ந்து பண்ணி வருவது என்று எண்ணும் பலர் நம்மிடையே உள்ளனர். பெண்கள் புடைவை கட்டுவது தமிழ் கலாச்சாரம் ஜீன்ஸ் போட்டால் கெட்டு விட்டது போல் பேசுபவர் பழையதைப் பிடித்து தொங்குபவர்கள்.அடிமைகள் என்பது இந்தியாவில் பஞ்சமர் என்ற முறையில் வித்தியாசமாய் சாதிய ரீதியாக உரிமைகள் மறுக்கப் பட்டு வாழ்ந்தது ஒரு வகையில் அடிமை முறைதான் .அதன் கொடுமைகள்இன்னமும் ஆங்காங்கே தொடர்வது வருந்த்தக்கது என்றாலும் ,சட்ட ரீதியாக இன்றைக்கு தலித்துக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.சமூகத்தில் மாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத மேல் சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் முனகிக் கொண்டும் ,சதி செய்து கொண்டும் இருந்தாலும் தலித்துகளுக்குஇன்று நிலமை பரவாயில்லை ,இல்லையெனில் அம்பேத்காரின் பிறந்த நாளுக்கு பாம்பே வில் இவ்வுளவுபெரிதாய் கூட முடியாது.உபியில் மாயாவதி ஒரு அரசியல் சக்தியாய் வளர்ந்து இருக்க முடியாது.

இந்த மாற்றத்திற்கு நம் மதமா காரணம் ?இந்து மதம் கண்டிப்பாய் காரணம் இல்லை .கிருத்துவ இஸ்லாமியதாக்கமா காரணம் ? கண்டிப்பாய் இல்லை .ஒரு விதத்தில் இந்த எல்லா மதங்களுமே அடிமை முறையை ஒரு விதத்தில் ஆதரித்தே வந்தது.இந்து மதத்தில் ,போரில் தோற்றவர்களையும் , சூதில் தோற்றவர்களையும் அடிமையாக வைத்திருக்கஅனுமதித்தது.இது எல்லா வர்ணத்தார்கும் பொருந்தும் .ரிக் /அதர்வ வேதங்களில் அடிமை முறையைப்பற்றி இருக்கிறது ,அடிமைகள் அஃறிணையாகவே கருதப்பட்டனர்,மனு சாஸ்திரம் நம் இந்திய அடிமைமுறைக்குச் சாட்சி. மகாபாரத சூதுக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தானே .சுந்தரரை ஆள் கொள்ள வந்த இறைவன் காட்டியதும் அடிமை பத்திரிகையைத் தானே.இதிலிருந்தே நம் சமூக வழக்கத்தில் சாதி,பஞ்சமர் மட்டுமல்லாது நேரடியாகவே அடிமை முறை இருந்ததாகவே கொள்ளலாம் . இந்த லட்சணத்தில் இந்து மதம் என்ற கோடபாடு அடிமை/சாதி முறையை ஒழிக்க உதவியிருக்கும்.

கிருத்துவம் அடிமை முறையை அங்கீகரித்தாகவே விவியலித்தை படித்தவர்கள் சொல்கிறார்கள்.அமெரிக்க சிவில் போரின் போது பிரசிடண்ட் ஜெபர்சன் சொன்ன இந்த கருத்துக்களை படியுங்கள்

"[Slavery] was established by decree of Almighty God...it is sanctioned in the Bible, in both Testaments, from Genesis to Revelation...it has existed in all ages, has been found among the people of the highest civilization, and in nations of the highest proficiency iin the arts." Jefferson Davis, President of the Confederate States of Americaமற்றும்Exodus 21:20-21 "When a man strikes his slave, male or female, and the slave dies under his hand, he shall be punished. But if the slave survives a day or two, he is not to be punished; for the slave is his money." The word "money" in this case means property; it is translated "property" in the Modern Language,.

இல்லை விவியலித்தில் அந்த அர்த்ததில் சொல்ல வில்லை யென்றும் வாதிடுபவர்கள் ,இருக்கிறார்கள்சில ரெவரெண்டுகள் பைபிளில் அடிமை முறை பற்றி இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால்அடிமை முறை பற்றி பல வசனங்கள் பைபிளில் இருப்பதாகவேப் படுகிறது.இங்கு கேள்வி பைபிள்கருணை மிக்க இயேசுவால் அங்கீகரிக்கப் பட்ட பழைய ஏற்பாட்டிலும் ,புதிய ஏற்பாட்டிலும்அடிமை முறை பற்றி இருந்தால் அதை எப்படி அங்கீகரிக்க முடியும் ?ஒன்று பைபிள் இறைவனின் புத்தகம் என்ற நம்பகத்தன்மை பற்றிய கேள்வி எழுப்பலாம் ,காரணம் எல்லாம் தெரிந்த கருணை மிக்க கடவுள் தவறே பண்ணியிருக்க முடியாதில்லையா ?அல்லது அடிமை முறை இறைவன் கூறிய படி சரியானதாய் இருக்க வேண்டும் ,
24 மணிக்கூரில் சாவுறமாதிரி அடிக்காதிண்ங்கப்பா ..

இஸ்லாம் இதற்கெல்லாம் மேல் நபிகள் மெதினாவில் அவர் அரசை அமைத்த பிறகு அவருக்கான அடிமைகளையும் அவர் சார்ந்தவர்கள் அடிமைகளை வைத்திருப்பதையும் ஆதரித்தார்.நான் சொல்லவில்லை அப்பா இஸ்லாம் ஸ்காலர்கள்தான் சொல்லுகிரார்கள் .ஆனால் சூப்பராய் ஒரு சப்பைக் கட்டு அவர்கள் போரில் பிடிபட்ட முஸ்லீம்அல்லாதவர்கள் தானாம் .33:50 - "Prophet, We have made lawful to you the wives to whom you have granted dowries and the slave girls whom God has given you இப்படி பல இறைவசனங்களை திருக்குரானில் இருந்தும் ,ஹதிஸ்களிலும் இருந்தும் எடுக்க முடியும். அடிமைகளுக்கு உரிமை இருந்ததாக பலர் சொல்கிறார்கள் ,கண்டிப்பாய் பாரட்டப் பட வேண்டியதே.கேள்வி என்னவென்றால் மனிதன் எழுதிய புத்தகமாய் ஒழுக்க நூலாய் இருந்தால் அந்த காலக்கட்டத்தில்இந்த அளவிற்கு உரிமை கொடுத்தற்கானப் பாராட்டு . ஆனால் இறைவன் எழுதிய புத்தகம் ,அடிமை முறைகளை ஆதரிக்கிறதா ?இல்லை எனில் ஏன் இறைவன் ,மது குடிப்பது,விபச்சாரம் ,ஒரினச் சேர்க்கை போன்ற வற்றிற்கு தெளிவாய் கூடாது என்பவர் இதை மட்டும் ஏன் மறந்து போனார் ?

இப்படி இருக்குமோ ? கடவுள் நம்மை அடிமையாய் வைத்திருக்கிறார் ,ஆதலால் அவர் நமக்கும் கொஞ்சம் அந்த உரிமையய் தருகிறாரோ என்னவோ ?இங்கு என் கேள்வி இறைவனைப் பற்றியது அல்ல ,ஒரு விசயம் நல்லதா கெட்டதா என்பதற்கு உங்கள் இறைவனின் மறைகளை கேட்க வேண்டியதில்லை ..உங்கள் மனசாட்சியை கேட்டால் போதும். அப்படி கேட்டதன் விளைவால் தான் அமெரிக்க சிவில் வாரில் நிறைய அமெரிக்க வெள்ளைக்காரர்கள்தங்கள் சொந்த மக்களுடன் கறுப்பின மக்களுக்காகப் போராடினார்கள் ,ஜெபர்சன் மற்றும் பல ரெவரண்டுகள் மதத்தை இழுத்தும் அவர்கள் மனதை மாற்றிக் கொள்ளவில்லை ,அன்று சிவில் வாரின் முடிவு வேறு மாதிரியாக இருந்தால் அமெரிக்கா இந்தளவு வளர்ந்து இருக்காது .அது போல் இந்தியாவில் சாதிக் கொடுமையை பல உயர்சாதிக் கொடுமை எதிர்த்தவர்கள் மேல் சாதிக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் காந்தியும் ,நேருவும் ,பெரியாரும் சமூக அமைப்பில் உயர்வாய்கருதப்பட்டவர்கள் தான் .விவேகானந்தர் இந்து மதத்தின் வேதங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டியிருக்கவில்லை .ஆக எல்லா மதமும் ஒரு வகையில் அடிமை முறையை ஆதரித்து தான் இருக்கிறது .எல்லா மதங்களிலும் குறை நிறைகள் இருக்கத் தான் செய்கிறது .

எதற்கோ எழுத ஆரம்பித்து பதிவு தடம் மாறி விட்டது ,அடுத்த பதிவில் நம்மிடம் உள்ள ரேசிசம்பற்றி எழுதுகிறேன்

வாழ்க கன்னட பிரசாத்

வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் பாலியல் தொழில் சார்ந்த பெண்களை சார்ந்தவர்களை பற்றிய குறிப்புகள் இல்லாமல் ஒன்றையும் பார்க்க முடியாது.அதிகாரத்திற்கும் பணத்திற்கும் உடல் சுகம் கொடுக்கும் பெண்கள் இல்லாத உலகம் சாத்தியமில்லை என்பதை வரலாறு திரும்ப திரும்ப காட்டுகிறது .
ஆயினும் இத் தொழிலை பெரும்பான்மை யான நாடுகளில்பாலியல் தொழில் சட்ட விரோதமானதாகவே வைத்துள்ளது . இந்தியாவில் சட்ட விரோதமானது என்றாலும் பாம்பே ரெட் லைட் ஏரியாவில் கண்டு கொள்ள மாட்டார்கள் . எல்லா இடங்களிலும் பெரு நகரம் ,சிறு நகரங்களில் அதிகாரத்திலுள்ளவர்களின் தொடர்பு வைத்திருப்பவர்கள் போலிஸ் துணையுடனும் , சில சமயம் மறைவாகவும் அமோகமா தொழில் நடந்து கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் மாட்டிய கன்னட பிரசாத் என்னும் உயர் தர தொழில் தரகன் மாட்டியது பல கிளு கிளுப்பானத் தொடர்களை பத்திரிகை ஊடகங்கள் ஆரம்ப்பிக்க உதவியாகவும், நாம் அவர்களின் கிசு கிசு பாணியிலான நடிகைகளின் தொடர்புகளை படித்து நம்முடைய அறிவு கூர்மையைத் தீட்டிக் கொள்ளஉதவியதற்கு போலிஸாருக்கு நன்றி கூறவே வேண்டும்.

கன்னட பிரசாத் பெரும் தொழில் அதிபர்களுக்கும் பெரும் பண முதலைகளுக்கும் பத்திரிகைப் பாஷையில் அழகிகளையும் நடிகைகளையும் கொடுத்து வந்தான் என்பதே பெரும் குற்றச்சாட்டு. இதை ஒரு கார்ப்பரேட் அளவுக்கு பண்ணி வந்தானாம் ,சென்னை விபச்சார போலிஸ் காலம் காலமாக இவனுக்கு சேவகம் செய்து வந்தார்களாம் . நியாயமாய் பார்த்தால் இந்த அதிகாரத்தில் இருக்கும் நபர்களின் போட்டாக்கள் தான் முதல் பக்கத்தில்வர வேண்டும் ,ஆனால் பிடி பட்ட துணை நடிகைகளின் போட்டாக்களை தந்து விட்டு சாதித்த பெருமையுடன்பேட்டி கொடுக்கும் போலிஸ் காரர்களைப் பார்த்தால் எரிச்சலே வரும் .

உடலை விற்கும் எந்த ஒரு பெண்ணிற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? நேர்மையாகப் பார்த்தால் பாலியல் தொழிலாளர்கள் எவ்வுளவோ மேல் . காசு வாங்கியதற்கு அவர்கள் வேலையை யாவதுசெய்கிறார்கள் , இவர்கள் கடமையை விட்டு விட்டு மாமா வேலை பார்க்கும் இவர்களே கேவலமானவர்கள்.

இந்த விவகாரத்தில் இதை இவ்வுளவு பெரிய விசயமாக ஆக்கியிருக்கவே வேண்டாம் ,யாரோ பணம் நிறைய உள்ள முதலைகள் செய்து கொள்ளும் அசிங்கம் நமக்குத் கிசு கிசு பாணியில் தெரிந்ததில் சமூகத்திற்கு என்ன நன்மை. அப்படியே பெரிய மனிதர்களின் முகமூடிகளை கிழிக்க வேண்டும் எனில் தெளிவாகவே ஒரு அறிக்கை போலிஸால் குடுத்திருக்கப் பட வேண்டும் . அது முடியாது இவ்வுளவு நாள் படியளந்த படியளந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் பெயர்களை எப்படிச் சொல்ல முடியும், அதற்கு ஆண்மையும் முதுகெலும்பும் உள்ள போலிஸும் ஆட்சியாளர்களும் வேண்டும்.

மீசையும் , எளியவனிடம் வீரம் காட்டுவதும் ஆண்மையில்லை . சட்டம் கடமையை செய்யும் என்ற கேலிக் கூத்தை கேட்பதற்கே எரிச்சலாக வருகிறது.
விபச்சாரத்திற்காக கைது செய்யப்பட்டு டிவிக்களிலும் பத்திரிகைகளிலும் போட்டோ போடப்பட்ட எந்த நடிகை தண்டிக்கப் பட்டார்கள் ? கோர்டில் தகுந்த ஆதாரம் இல்லாததால் விடிவிக்கவேப் பட்டனர். சரி அப்படி அவர்கள் குற்றம் செய்யாதவராக இருந்தால் அவர் அசிங்கப் படுத்தப்பட்டதற்கு அதனைச் செய்த அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் என்ன தண்டனை ? அவர்களை தவறாக கேஸ் போட்டதற்காக கோர்டுகள் தண்டிக்க வேண்டும் , ஆனால் கோர்டுகளே ஏதாவது லூஸுக்கள் ஸ்ரீ தேவி என் பொண்டாட்டின்னு கேஸ் போட்டால் சம்மன் கொடுத்து அப்படியாவது நடிகைகள் நம்ம கோர்ட்டுக்கு வந்து நாமளும் பேப்பரில் வரமாட்டோமா என்று ஏங்கி நிற்கும் நீதி தேவதைகள் தான் நம் நீதிக் கூடங்களில் இருக்கிறார்கள் என்னும் போது என்ன சொல்ல ?

Any way , கிளு கிளு கதையை ஜுவியில் கொஞ்ச நாள் படிக்கலாம் ,வாழ்க கன்னட பிரசாத் .

Labels: ,