கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

நன்றி

நான் ஸ்டாராகி எழுதத் தொடங்கு முன் பெரிதாக எந்த ஐடியாவும் கைவசம் இல்லை என்ற போதிலும் எப்படியோ இது வரை எழுதி விட்டேன் ,அழுதும் போது பல சிந்தனைகளைத் தூண்டி பல தலைப்புகளை குறித்து வைத்தேன் ஆனால் நேரம் இன்மையால் எழுத முடிய வில்லை.

இந்த வாரம் நான் வேலை பார்க்கும் வேலையில் இருந்து மாறுகிறதால் இந்த வாரம் தான்
கடைசி வாரம் .பல வேலைகளிலும் பேர் வெல் லஞ்சுகளலாலும் ,டின்னர் தண்ணி பார்டிகளாலும்
அவ்வுளவாக எழுத முடியவில்லை .அதற்காக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் எழுத நினைத்த தலைப்புகளில் ஒன்று ,தாய் வழி சமூகமும் நாயர் தறவாடும் .இதை பற்றி யாராவது தெரிந்தால் எழுதலாம் .நானும் எழுத முயற்சிக்கிறேன் .நான் கிற்க்கிய கவிதைகளில் ஒன்றையும் சந்தடி சாக்கில் உள்ளே நுழைத்து விட்டேன் ,கவிதை எழுதுவதில் பயிற்சியின் முக்கியத்தை ஒவ்வொரு நல்லக் கவிதையை படிக்கும் போது உணர்வேன் . வாழ்க்கையில் ஒரு நல்ல கவிதையை எழுத ஆசை உண்டு ,அதை விட கவிதை போல்
வாழ்க்கை அமைய ஆசையும் உண்டு.பார்ப்போம்.

நான் வேலை பார்க்கும் Networking/Security field பற்றி எழுதலாம் என்று இருந்தேன் ,முடியவில்லை.எவ்வுளவு பேருக்கு ஆர்வம் இருக்கும் என்று தெரியவில்லை . மட்டுமல்லாமல் டீச்சர் போல் எழுதுவது கடினம் நான் ஒரு மோசமான ஆசிரியர் வேறு, இன்னொன்று பொழுது போக்கான still photography மற்றும் Nikon கேமரா பற்றி ,அதுவும் முடியவில்லை.எல்லாமே சீரியசான பதிவுகளாகி விட்டது .

Google Analystics இன் படி எழுதியப் பதிவுகளில் அதிகமாய் படிக்கப் பட்டது அமெரிக்காவின் அடிவருடியும் ,கன்னட பிரசாத் ,இந்து என்னும் அடையாளம் போன்ற பதிவுகள் . நான் நன்றாக வந்திருப்பதாய் கருதியது தேடலைப் பற்றியப் பதிவும் ,இழப்பின் வலிக்கான மருந்தும் தான் .உங்களின் கருத்து என்ன

எனக்கு பின்னூட்டம் இட்டு நம்பிக்கை ஊட்டிய வஜ்ரா,தமிழ் நதி, சிவா,மாசிலா,நிர்மல்,உஷா,துளசி,பொன்ஸ் ,முத்துக் குமரன்,அப்துல் குத்தூஸ்,சின்னக் குட்டி ,திரு,தருமி,வடுவூர் குமார்,மதுரா,கார்த்திக் பிரபு,கிஷோர்,எழில் ,ஜிராஜுதீன்,அரவிந்தன் நீலகண்டன்,இந்து,டெஸ்ட்,பொறுக்கி,குறும்பன், சீனு மற்றும் அனானியாக வந்து கருத்து சொன்னவர்களுக்கும் என் நன்றி.


It Does n't Matter whether your Loving is Spritual or Sensual
what Matters is that it leads you to LOVE itself
-Mavlana Jalal Al-Din Rumi

4 Comments:

At March 04, 2007 10:05 AM , Blogger மாசிலா said...

உங்களது வருத்தம் புரிகிறது கூத்தாடி. இவ்வளவு பெரிய பொறுப்புமிக்க நட்சத்திர பதிவராகி, கிடைத்த மரியாதைக்கு தகுந்தாற்போல் பதிவுகள் இட முடியாமல் போனதைப்பற்றிதானே.

என்ன செய்தோம், எவ்வளவு செய்தோம் என்பதைவிட நம்மால் முடிந்தவரை சிறப்பாக செய்தோமா என்பதே கேள்வி. இந்த கேள்விக்கு நாமேதான் பதில் சொல்லிக் கொள்ள முடியும்.

நன்றி வணக்கம்.

 

At March 04, 2007 11:44 AM , Blogger சோமி said...

தொடர்ந்து நல்ல விடயங்களை எழுத வாழ்த்துக்கள்.

 

At March 04, 2007 6:01 PM , Blogger Machi said...

//நான் வேலை பார்க்கும் Networking/Security field பற்றி எழுதலாம் என்று இருந்தேன் ,முடியவில்லை.எவ்வுளவு பேருக்கு ஆர்வம் இருக்கும் என்று தெரியவில்லை . மட்டுமல்லாமல் டீச்சர் போல் எழுதுவது கடினம் நான் ஒரு மோசமான ஆசிரியர் வேறு, இன்னொன்று பொழுது போக்கான still photography மற்றும் Nikon கேமரா பற்றி ,அதுவும் முடியவில்லை.எல்லாமே சீரியசான பதிவுகளாகி விட்டது .
//
Networking/Security field , still photography மற்றும் Nikon பற்றி நீங்கள் கட்டாயம் பதிவு போட வேண்டும்.
தமிழ் பதிவுலகில் இது போன்ற பதிவுகள் இல்லை என்றே சொல்லலாம்.

 

At March 04, 2007 7:01 PM , Blogger தமிழ்நதி said...

முடிந்துவிட்டதா... ம்... இந்த வாரம் யார் ம்ம்ம்மாட்டிக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home